"கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும், காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன."
சனி, 31 அக்டோபர், 2009
செவ்வாய், 27 அக்டோபர், 2009
24 வார்த்தைகளில் காயத்ரீ மந்திரம்
வால்மீகி ராமாயணத்தில் 24,000 சுலோகங்கள் உள்ளன. இவற்றில் ஆயிரம் சுலோகங்களுக்கு ஒரு வார்த்தை தேர்ந்தெடுத்து 24 வார்த்தைகளால் காயத்ரீ மந்திரம் உருவாக்கப்பட்டது என்றும் கருதப்படுகிறது. காயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையருள் வழங்கும் ஒவ்வொரு சக்தி உண்டு.
ஓம் பூர்ப்புவ ஸ்ஸீவ தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ் தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத்
இதுவே காயத்ரீ மந்திரம். இந்த காயத்ரீ மந்திரத்தில் முதல் வரியான ஓம் பூர்ப்புவஸ்ஸீவ-இதில் ஓம் என்பது பிரணவம் ஆகும். பூர்ப்புவஸ்ஸீவ என்பது பூலோகம், புவர்லோகம், சொர்க்கலோகம் ஆகும். தத் எனும் இரண்டாவது வரியிலிருந்து ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருளும், சக்தியும் உண்டு.
தத்- என்ற சொல் தபினி என்ற அம்பிகையைக் குறிக்கிறது. வெற்றியைத் தருபவள்.
ச- என்ற எழுத்து சாமுண்டியை குறிக்கும். இவள் வீரத்தையும், வலிமையையும் அளிப்பாள்.
வி- என்ற எழுத்து விஸ்வா என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் நல்ல பலன்களைத் தருவாள்.
துர்-என்ற சொல் துஷ்டி என்ற சக்தியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு தருவாள்.
வ-என்ற எழுத்து வரதாம்பிகையைக் குறிக்கும். இவள் யோகத்தினைக் கொடுப்பாள்.
ரே - என்ற எழுத்து ரேவதியைக் குறிக்கிறது. இவள் திருமணம் நடத்தி வைக்கவும், தம்பதியருக்குள் அன்பை உருவாக்கும் தேவியாவாள்.
ணி- எழுத்து சூக்ஷ்மா என்ற அம்பிகை ஆவாள். செல்வம் வழங்குவாள்
யம்- ஞானாம்பிகையைக் குறிக்கும். அழகை அளிப்பாள்.
பர்- கார்கவியைக் குறிக்கும். இவள் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறாள்.
கோ- கோமதி ஆவாள். இவள் நல்ல அறிவையும், ஞானத்தையும் தருவாள்.
தே- தேவிகாவைக் குறிக்கும். இவள் தீய சக்திகளை அழிப்பாள்
வ- வராகியைக் குறிக்கும். தவயோகம் தருவாள்.
ஸ்ய- சின்ஹனியைக் குறிக்கும். இருப்பதை காக்கும் சக்தி படைத்தவள்.
தீ- தியானாம்பிகையைக் குறிக்கும். இவள் நீண்ட ஆயுளைக் கொடுப்பவள்.
ம - மர்யாதா என்ற அம்பிகை ஆவாள். இவள் புலனடக்கம் அளிப்பாள்.
ஹி- ஸ்புட நாயகியைக் குறிக்கிறது. எடுத்த காரியத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவள்.
தி- மேதா அம்பிகையைக் குறிக்கிறது. இவள் வருங்காலத்தை உணர்த்துவாள்
யோ- யோகமாயா ஆவாள். விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவாள்.
யோன- யோனியைக் குறிக்கும். உணவு உற்பத்தியையும், விவசாய விருத்தியையும் கவனிப்பாள்.
நஹ்- தாரணியைக் குறிக்கிறது. இவள் சுக வாழ்வு அளிப்பாள்.
ப்ர்- ப்ரபவா என்ற அம்பிகை ஆவாள். குறிக்கோளை அடைய உதவுவாள்.
சோ- ஊஷ்மா தேவியைக் குறிக்கும். இவள் அச்சத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பாள்.
த்- த்ரஷ்யா என்ற அம்பிகை ஆவாள். இவள் நல்லறிவு, விவேகம் தருவாள்.
யாத்- நிரஞ்சனா தேவியைக் குறிக்கும். இவள் தொண்டு செய்யும் மனதை தருவாள்.
ஆவணித் திங்கள் 14ம் நாள் காயத்ரீ ஜெபத்திற்கு தகுந்த நாள். அன்று இந்த மகத்தான மந்திரத்தை ஜபித்து அனைவரும் பலன் பெறலாம்

ஓம் மந்திரம்

ஓம் மந்திரம்
அ - தூல உடலையும், தூல பிரபஞ்சத்தையும்
உ - சூட்சும உடலையும் , சூட்சும உலகையும்
ம - காரண அதிசூட்சும உடலையும் , சூட்சும
உலகையும் வெளிபடுத்துகின்றது.
இம் மூன்றும் இணையும் போது ஓங்கார மந்திரமாய் உலக உற்பத்தியின் அடிப்படை யினையும் இறையையும் அடையும் அறியும் விழிப்பை உணர்வில் உருவாக்குகிறது.
உடலியலின் ஜீவ சக்தியையும் உயிரியலின் பிராண சக்தியையும் மனவியலின் ஞான யுக்தியால் இணைக்கும் யோக சக்தியை நமக்கு அருளியவர் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியாவார் .
மனதிற்கு யோக சூத்திரமும் (அட்டாங்க யோக நெறி) வாக்கிற்கு சப்தத்திற்கு ஒலி இலக்கணமாய் வியாகரண பாஷ்யமும் , உடலுக்கு சரகம் என்ற ஆயுர்வேத சாஸ்திர நூலையும் (திரிகரண சுத்தி) அருளியுள்ளார்.
பிரணவ மந்திரம்

(ஓம் எனும் ஓங்காரம்)
ஓம் எனும் ஓங்காரத்தின் சிறப்பினைச் சொல்ல ஒரு பதிவு போதாது.
ஆயிரக்கணக்கான பதிவுகள் வெளியிட்டாலும் ஓங்காரத்தின் பெருமை அளவிட முடியாதது.
இருந்தாலும் இந்த கலியுகத்தில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் அது மனிதர்களால் எற்றுகொள்ளதக்கதாக இருக்கிறது.
அவ்வாறே மேலை நாட்டு அறிவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் ஓங்காரத்தையும் சோதனைக்கு எடுத்துக் கொண்டனர்.
அதன் விளைவு மற்றும் முடிவுகள் இவ்வாறு வந்தன.
டாக்டர் ஹெர்பெர்ட் பென்சன் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் வெளிவந்தவை.
பாஸ்பனில் நடந்த மருத்துவர் மாநாட்டில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரை.
ஓம் என்ற ஒலியினை (பிரணவ மந்திரத்தை) மன ஒருமையுடன்
திரும்பத் திரும்ப கூறும்போது மன அலைகளின் வேக மாற்றத்தில் ஏற்படும் பலன் (விளைவு) விலை உயர்ந்த மாத்திரைகள் ஏற்படுத்தும் பலனை விட அதிகமாக கொடுக்கிறது.
எய்ட்ஸ் நோயினைப் பரவ விடாமல் தடுக்கிறது.
குழந்தையில்லாதவர்களுக்கு மலட்டுத் தன்மையினை நீக்கி (கருப்பதியம்) உண்டாக்க உதவி செய்கிறது.
RELAXATION RESPONSE எனப் பெயரிட்டு கூறுவது.
மந்திரங்கள் மற்றும் பிரார்த்தனைகளால் ஏற்படும் மாறுதல்கள்
மூச்சின் வேகம் குறைகிறது.
மன அலை அதிர்வை குறைக்கிறது.
மன ஓய்வு வருவதால் அறுவை சிகிச்சை அவசியத்தையும் படிப்படியாக குறைந்து மருந்து எடுத்துக் கொள்வதைக் குறைக்கிறது.. 36 சதவிகிதத்தினர் மருத்துவ மனைக்குச் செல்வது தவிர்க்கப் படுகிறது.
( ஆதாரம் -ஹிந்து நாளிதழ், 7/12/1995)
ஓங்காரம் ஒலிக்கட்டும் . சுயம் (ஆன்மா) வெளித்தோன்றட்டும்.
சிவபுராணம்
தொல்லை யிரும்பிறவி சூழுந் தளைநீக்கி
அல்லலறத் தானந்த மாக்கியதே எல்லை
மருமா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன்
திருவாசக மென்னுந் தேன்

நமச்சிவாய வாழ்க நாதன்றாள் வாழ்க
இமைப்பொழுது மென் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமனிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க
வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க
ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
தேசனடி போற்றி சிவன் சேவடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி
மாயப்பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநந் தேவனடிபோற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன் என் சிந்தையுள் நின்றவதனால்
அவனருளாலே அவன்றாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரானந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனியான்
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை இலாதானே நின் பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
பல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்மிருகமாகிப் பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்
சொல்லா நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா வெனவோங்கி ஆழ்ந்தகன்ற ஙண்ணியனே

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தி னேரியாய் சேயாய் நணியானே
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்ற
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் றன்னை
மறைந்திட முடிய மாய விருளை
அறம்பாவ மென்னும் அறங்கயிற்றாற் பட்டி
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரு மொன்பது வாயில் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையை செய்ய
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக்
கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருக
நலந்தானிலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ராமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுக்கும் பாரிக்கு மாரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங் கெட
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதா ருள்ளத் தொளிக்கும் மொளியானே
நீரா யுரக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பரக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமானே
ஆதியனே அந்தம் நடுவாகிஅ யல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெஞ்ஞானத்தாற் கொண்டுனர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொழியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொழியாய் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வௌ;வேறே வந்தறிவாந்
தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ருமுதே யுடையானே
வேற்ற விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனேம் மையா அரனேயோ வென்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே யோவென்று
சொல்லற் கரியானை சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்
பல்லோரு மேத்தப் பணிந்து

பஞ்ச புராணம்
தேவாரங்கள்
(1)
மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே.
(2)
அன்னம் பாலிக்கும் தில்லைச்சிற்றம் பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம் பாலிக்கும் ஆறு கண்டின்புற
இன்னம் பாலிக்கும்மோ இப் பிறவியே
(3)
காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்பது
வேதம் நான்கினும் மெய்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே
(4)
பொன்னார் மேனியனே புலித்தோலையரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
(5)
சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கினும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில்பலி கொண்டுழல்வார்
உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய்
அலர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீராட்டான துறை அம்மானே
திருவாசகம்
(6)
பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்து நீ பாவியேனுடைய
ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது நீயே
(7)
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருகிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குத்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
ஏங்கெழுந் தருளுவ தினியே
திருவிசைப்பா
(8)
ஓளிவளர் விளக்கே யுலப்பிலா வொன்றே
உணர்வுசூள் கடந்ததோருணர்வே
தெளிவளர் பளிங்கின் திரண் மணிக்குன்றே
சித்தத்துட் தித்திக்கும் தேனே
அளிவளருள்ளத் தானந்தக் கனியே
அம்பல மாடரங் காக
தெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
(9)
கற்றவர் விழுங்குங் கற்பக கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கை
செற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனை
திருவீழி மிழலை வீற்றிருந்த
கொற்றவன் தன்னை கண்டுகண்டுள்ளம்
குளிர என் கண் குளிர்தனவே
திருப்புராணம்
(10)
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி
ஏவருந் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி
திருப்புகழ்
(11)
ஏறுமயிலேறி விளையாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே
மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே

பரந்த மனப்பான்மையே ஹிந்துத்துவம்!
உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை; ஆனால் இன்றும் வாழ்ந்து வருகிற இந்த நாட்டுத்தன்மை எந்த நாடும் பின்பற்றத்தக்க சிறப்பான தன்மை. அது ஹிந்துஸ்தானத்துத் தன்மை - அதாவது ஹிந்துத் தன்மை - அதாவது ஹிந்துத்துவம்.
இதன் சிறப்புகள் பல; ஆண் - பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை ஆண்டவனுக்குச் சமமாகக் கருதல் போன்ற பலவற்றையும் சொல்லலாம்.
ஒரு கூட்டத்தில் என்னைப் பேச அழைத்து மனிதநேயம் குறித்து பேசச் சொன்னார்கள். ஒருக்கால் "குறுகிய' ஹிந்துத்துவா குறித்து பேசிவிடுவேனோ என அஞ்சி பரந்த கருத்துடைய மனிதநேயம் குறித்து பேசட்டும் என நினைத்திருக்கலாம்.
""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்'' எனப் பாடியவர் நமது தாயுமானவ சுவாமிகள். "சர்வே ஜனா சுகினோ பவந்து' எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் குரல் கொடுத்தால் உலகமே ஒரு குடும்பம் அதாவது வசுதைவ குடும்பகம் என மறு குரல் வந்ததும் இந்த நாட்டில்தான். இவைகள் எல்லாம் இந்த நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள்.
இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை. நான் எழுதியது பிடிக்கவில்லை; ஆனாலும் எதையும் படித்துத்தொலைப்பது என்கின்ற பழக்கதோஷத்தால் இதையும் சகித்துக்கொண்டு படித்துத் தொலைக்கிறீர்கள். இது சகிப்புத்தன்மை. இந்த தேசத்தின் தன்மை அதுவல்ல, ""கட்டுரை நன்றாக இருக்கிறது; தொடர்ந்து எழுதுங்கள்'' என சொல்பவர்களது தன்மை சகிப்புத்தன்மை அல்ல; ரசிப்புத்தன்மை; எதையும் வரவேற்கும் தன்மை. காரணம் உயர்ந்த கருத்துகள் எல்லா திசையிலிருந்தும் நம்மை வந்து அடையட்டும் என்கின்ற கருத்து ரிக் வேதத்திலேயே உள்ளது.
ஆகாயத்திலிருந்து பொழியும் நீர், நதிகள் வழியாகப் பாய்ந்தோடி கடலில் கலப்பதுபோல எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றினாலும் அது ஒரே பரம்பொருளையே அடைகிறது என உபநிஷத்துகள் சொல்கின்றன.
எம்மதமும் சம்மதம் எனச் சொன்னவனே ஹிந்துதான். நமது பிரார்த்தனை எல்லாம் "லோகா சமஸ்தா சுகினோ பவந்து' (உலகம் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழக்கடவது!) என உலகம் வாழவே பிரார்த்தனை.
இத்தனை உயர்ந்த கருத்துகளை, பரந்த கருத்துகளை உலகின் எந்த நாட்டு அறிஞராவது சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே! எனவே மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்பதே மனித நேயம் என்றால் அதைத்தானே இந்த நாட்டின் பண்பாடும் சொல்கிறது. இந்த நாட்டின் தன்மையே அதுதான்.
எனவே ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை.
ஒரு புறாவுக்காக இரங்கி தனது சதையையே அறுத்துத் தந்த சிபி சக்ரவர்த்திக்கு சமமான மன்னன் உலகில் எங்கேனும் உண்டா? ஒரு பசுவுக்காகத் தனது உயிரையே தர முனைந்த திலீபன் போல எங்கேனும் உண்டா? ஒரு பசு தன் கன்றை இழந்த சோகத்தை உணர்ந்து தனது மகனை தேர்க்காலில் இட முனைந்தது எந்த நாட்டில்? பாம்புக்கு கூட பால் வார்க்கும் சமுதாயம் இந்நாட்டு சமுதாயம்தானே? எறும்புக்கும் உணவு இட வேண்டும் என்பதற்காகவே கோலமிடத் தொடங்கிய மக்கள் நம் மக்கள்தானே? ஒரு கொடி படர தனது தேரையே தந்த பாரி போல வேறு யார் உண்டு வெளி உலகில்? பசுமையான புல்வெளி மீது காளை பாய்ந்து சென்றபோது தானே மிதிபடுவதுபோல் உணர்ந்து அலறிய சிறீராமகிருஷ்ணர் வாழ்ந்தது எந்த நாட்டில்?
அமெரிக்க நாட்டிலிருந்து வந்து நம் நாட்டை ஆராய்வதற்கு வந்த சிலரிடம் ""எங்கள் நாட்டில் உங்களை எது வியக்க வைத்தது?'' எனக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இதுதான்.
நாற்சந்தியில் வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்திருந்தன. பச்சை விளக்கு எரிந்தும் வாகனங்கள் நகரவில்லை. காரணம் நாய்க்குட்டி ஒன்று அப்போதுதான் சாலையைக் கடந்தது.
""அது கடந்து போவதற்காகவா இத்தனை வாகனங்கள் பொறுமை காத்தன. அமெரிக்க நாட்டில் நசுக்கிவிட்டு போய்விடுவார்கள்'' என்றனர் அவர்கள்.
பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கும். வேகமாக வண்டி ஓட்டும்போது சடக்கென வண்டியை நிறுத்த ஓட்டுநர் எத்தனித்தபோது வண்டி குலுங்கும். காரணம் இருட்டில் சாலையில் திடீரென ஒரு கீரியோ, பாம்போ குறுக்கே ஓடும். இதைப் பார்த்து ஓட்டுநர் நிறுத்த முனைந்தது அனிச்சைச் செயல். அதாவது ரத்தத்தோடு கலந்துவிட்ட உணர்வு. அதற்குப் பெயர்தான் இந்தியப் பண்பாடு!
எனவே எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு. மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்தும் இந்த நாட்டின் பண்பாடோடு மனித நேயத்தை ஒப்பிட்டால் மனிதநேயம் என்பதே குறுகிய மனப்பான்மை!
இந்த நாட்டின் தனித்தன்மை-பண்பாடு-மண்வாசனை-ஆன்மநேயம் என்கின்ற உயர்ந்த கருத்து. எனவே இந்த நாட்டு மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற தன்மை குறித்தும், பரந்த மனப்பான்மை குறித்தும் உபதேசம் செய்ய முயல்வது நெல் விளைவிக்கும் விவசாயிக்கே அரிசி விற்பதற்குச் சமமாகும்.
இந்த நாட்டில் வாழ்ந்த மக்களுக்கு இந்தத் தன்மை இருந்ததால்தான் புதிதாக வெளியிலிருந்து ஒரு மதம் வந்தபோது அதை வரவேற்றார்கள். தங்க இடம் தந்தார்கள். வழிபடுவதற்கு, அவர்கள் மதத்து ஆலயம் அமைக்க நிலமும் தந்தார்கள். கட்டுவதற்கு பொருள் உதவியும் தந்தார்கள்.
நமது பரந்த மனப்பான்மையே நமக்குப் பலவீனமாக ஆனது. நம்மவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆட்சியாளர்கள் துணையுடன் வேகமாகப் பரப்பப்பட்டது. அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் நடைபெற்றது.
மதம் மாறினால் என்ன? ஹிந்துப் பண்பாடுதான் எம்மதமும் சம்மதம் எனச் சொல்கிறதே எனக் கேட்கலாம். உண்மையில் மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றம் என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.
ஓர் உதாரணம் குறிப்பிடுகிறேன் - மார்கழி மாதம் வந்துவிட்டால் தெருவின் இருபுறமும் உள்ள வீடுகளின் முன்பு மகளிர் மகிழ்ச்சியுடன் கோலமிடுவார்கள். அந்தத் தெருவிலேயே சிறப்பாகக் கோலமிடும் பெண்மணி மங்களம்தான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
ஆனால் அந்த ஆண்டு மங்களம் டீச்சர் மார்கழி மாதம் கோலமிடவேயில்லை. சில நாள்களாகவே அவர் வீட்டு வாசலில் கோலமிடப்படுவதில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டு அம்மையார் காரணம் கேட்டார். மங்களம் சொன்ன பதில் - ""இனிமேல் நான் வீட்டு வாசலில் கோலமே இடமாட்டேன். காரணம் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டேன். என் பெயரும் மங்களம் இல்லை''.
அடுத்த வீட்டு அம்மையாருக்கு அதிர்ச்சி - ""மதம் மாறிப் போனா கோலம் போடக்கூடாதென்று எவடீ சொன்னா?'' என்றாரே பார்க்கலாம்.
அடுத்த வீட்டு அம்மையாருக்கு பண்பாடு என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது. மதம் மாறிய மங்களத்துக்கு அது மரத்துவிட்டது. கோலம் இடுவது இந்த நாட்டின் பண்பாடு. அது எல்லா மதத்துக்கும் பொது.
கோலம் இடுவது மட்டுமல்ல; வளையல் அணிவது; திலகம் இடுவது; மருதாணி வைப்பது; வாயிலிலே வாழைமரம், குருத்தோலை தோரணம், குத்து விளக்கு என பண்பாட்டின் சின்னங்களாக பல உள்ளன. இவை போய்விடுகின்றன. பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் எவரும் மத மாற்றத்தை எதிர்க்கவே செய்வார்கள்.
திருச்சியிலே ஒரு வீடு. உச்சிப்பிள்ளையாரே குலதெய்வம். வீட்டின் பூஜை அறையில் பிரதானமாக விநாயகர் படம் பெரிதாக அலங்கரிக்கும். அந்த வீட்டின் மூத்த மகன் அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிந்தான். ஒரு அய்யப்பன் படத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தான். மலர் இடும்போது விநாயகருக்கும் ஒரு மாலை, அய்யப்பனுக்கும் மாலை. சரணம் விளிக்கும்போது கன்னி மூல மகா கணபதிக்கும் சரணம். அய்யப்ப சாஸ்தாவுக்கும் சரணம். இரு படங்களுக்கும் தீபாராதனை.
அடுத்தவன் ஆதிபராசக்தி வழிபாட்டுக்கு மாறினான். செவ்வாடை அணிந்தான். சக்தியை அம்மா பங்காரு அடிகள் பூஜிப்பதுபோல ஒரு படத்தை மாட்டினான். மாலையில் 3 படங்களுக்கும் மாலை. சக்தி கணேசா, சக்தி அய்யப்பா, சக்தி அம்மா என மூவருக்கும் வழிபாடு. மூன்று படத்துக்கும் தீபாராதனை.
மூன்றாமவன் இளையவன். நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் ஒரு கான்வென்டில் சேர்த்தனர். நல்ல படிப்பு எனறால் ஆங்கிலத்தில் பேசுகின்றபடி படிக்க வேண்டும் என்கின்ற கற்பனை. வீட்டில் தங்கிப் படித்தால் கெட்டுவிடுவான் (தமிழ் பேசி கெட்டுவிடுவான்) என்பதற்காக விடுதியில் தங்கிப் படிப்பு.
படித்து முடித்து அவன் வீடு திரும்பும்போது கழுத்திலே சிலுவை. கையிலே ஏசுநாதர் படம். தனது அறையிலேயே வைத்து தனி வழிபாடு. பெயரும் ஏதோ அன்னிய நாட்டுப் பெயராக மாற்றிக்கொண்டு விட்டான்.
மதமாற்றம் என்பது வழிபாடு மாற்றம் என்றால் பெயர் மாறுவானேன்? பெற்றோர்களும் முன்னோர்களும் வழிபட்ட தெய்வத்தை மதிக்கின்ற பரந்த மனப்பான்மை மறந்து போனதேன்? இந்த தேசத்தின் பண்பாட்டின் அடிப்படையே பரந்த மனப்பான்மை என்றால் அது மதம் மாறியவருக்கு மறந்து போவதேன்?
எனவே பண்பாட்டைக் காக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மதமாற்றத்தை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

பரிணாமக் கிளையில் பாலூட்டிகளின் நகர்வு
இந்த அண்டவெளியை அண்ணார்ந்து பார்க்கும் ஒவ்வொரு முறையும் நம்மை விடாமல் ஆச்சர்யமும், வியப்பும் ஒருங்கே தனது கூட்டுக்குள் அடைக்கலம் புக வைத்து இந்த இயற்கையின் முன்னால் நம் இருப்பின் ரகசியத்தை அறிய ஆவலுடையவனாக மாற்றி புத்துயிர் ஊட்டுகிறது என்றால் அது மிகையாகுமா?
அண்டவெளியில் மிதந்தவாரே நம்மையெல்லாம் ஒரு சக பயணியாக இந்த பூமி எங்கோ அழைத்துச் செல்கிறதே! அதனிடையே பலப்பல பரிணாம விந்தைகளையும் தன்னிடத்தில் நிகழ்த்தியவாரே! நினைக்கும் பொழுதே ஆச்சர்யம் முழுதுமாக என்னை விழுங்கிவிடுகிறது. இந்தப் பூமி நமது சூரியனை மையமாக வைத்து தன்னைத்தானே உருவாக்கிக் கொண்டு சுழல ஆரம்பித்து சுமார் 4.5 பில்லியன் வருடங்கள் நகர்ந்துவிட்டதாம்.
தன்னை இன்னமும் உருவாக்கிக் கொண்டு தன்னுள் இருக்கும் விசயங்களையும் செதுக்கியவாறு தனது இருப்பை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அப்படியான கால நகர்வில் எப்படி இதனைப் போல கேள்வி கேட்கும் ஒரு ஜந்துவையும் இந்த ஆச்சர்யப் பூமி உருவாக்கிக் கொண்டது? சற்றே உள் நுழைந்துதான் பார்ப்போமே!
இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பழமை வாய்ந்த பாக்டீரியாவிற்கு நாமெல்லாம் நன்றியுடையவர்களாக இருக்க கடமைபெற்றுள்ளோம் என்கிறார்கள். காரணம் இதே பூமியில் 4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒன்றுமேயற்ற நிலையில் வெறும் கரியமிலவாயுவும், நைட்ரஜனும் மட்டுமே நிரம்பி இருந்த காலத்தில் பாக்டீரியாக்கள்தான் இன்றிருக்கும் பிராணவாயுவை சிருஷ்டிக்க உதவியவர்கள் என்கிறார்கள். கோடானு கோடி வருடங்கள் இடையறாது அளவுக்கு மிஞ்சிய கரியமிலவாயுவை உள்ளிழுத்து, பிராணவாயுவை வெளித்தள்ளியிருக்கிறார்கள் இந்தப் பாக்டீரியாக்கள், எனைப் போன்றவர்கள் நாளை வருவார்களென்று அறியாமலேயே!

அப்படியாக காலமும் நகர்ந்து சென்ற நிலையில், பூமியின் மாபெரும் காலக் கட்டங்களில் நிகழ்ந்த சுற்றுப்புறச் சூழல் மற்றும் தாவர வகைகளைக் கொண்டு பரிணாமம் பல சிக்கலான சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்களுக்கிடையே, பல ஜீவ ராசிகளை சிருஷ்டிக்க உதவியவாரே சூரியனின் தோற்றமும், மறைவுமாக சுத்தியிருக்கிறது நம் ஒரே வீடான பூமி. அந்த சிருஷ்டிப்பின் ஒரு கிளையில் சுமாருக்கு 265 (பெர்மியன் கால இறுதியில்) மில்லியன் வருடங்களைப் போலத்தான் நாம் உருவாவதற்கான முதல் பாலூட்டியும் உருவாகியிருக்கிறது.
அதே காலகட்டத்தில்தான், டைனோசார்கள் பூமியை உண்டு இல்லையென்று ஆக்கிக் கொண்டிருந்த காலகட்டமாகவும் இருந்திருக்கிறது. பல்கிப் பெருகிப்போன பல வகை டைனோசர்களாக, அதனில் பறப்பன வகையையும் உள்ளடக்கியவாறு செழித்து வாழ்ந்திருக்கிறது. அதன் ஆளுமை சிறப்பித்திருக்குமளவில் முதலில் தோன்றிய பாலூட்டிகள் தன்னினத்தைச் சுருக்கி, சிறியளவில் (2-3 செ.மீட்டரளவே), கிடைக்கும் புழு பூச்சிகளை உண்டு, இரவினில் மட்டுமே வெளிக்கிளம்பும் உயிரினங்களாக பூமிப் பொந்துகளில் அடைக்கலம் கொண்டு தன் நாளுக்கான நாளை எதிர்பார்த்தவாறே அக் காலக் கட்டத்தை நகர்த்தியிருக்கின்றன.
ஜுராசிக் காலக் கட்டத்தின் இறுதி நிலை அதாவது 150 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரைக்குமே ஒரு 10 வகையான பாலூட்டி இனங்களே இருந்ததாக அறியப்படுகிறது. இந் நிலையில்தான் “K-T பேரழிவு” என்றழைக்கப்படும் மாபெரும் பூமி உயிரின துடைத்தெடுப்பு நடந்தேறியதாம், இயற்கையின் சீற்றத்தால். அதனில் கிட்டத்தட்ட எல்லா வகை டைனோசார்களும் பறப்பனவை தவிர்த்து அழிந்தொழிந்திருக்கிறது.

இதனோடு பிழைத்துக் கிடந்த பத்து வகை பாலூட்டிகளில் ஒரு ஐந்து பாலூட்டிவகைகளும் அழிந்துவிட்டிருக்கிறது.
இப்பொழுது பூமி வீடு இரண்டாம் வகை உயிரின ஆளுமைக்கு தயாராக இருந்த கால கட்டம். இந்தப் பேரவிழிற்கு பின்பு, கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு, சுமார் 15 மில்லியன் ஆண்டுகளுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 78 குடும்ப வகைகளாக பாலூட்டிகள் சீற்றம் கொண்டு பல்கிப் பெருக ஆரம்பித்துவிட்டது.
பேலியோசீன் காலக் கட்டத்தில் (65~58 மில்லியன்) ஓரளவிற்கு வால்/வாலில்லாக் குரங்குகள் உருவாவதற்கான மூதாதை வகை குரங்கினங்களும் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் இது முழுமையை அடைந்தது யியொசீன் காலகட்டமான 58~40 மில்லியன் வருடங்களுக்கு இடையேதான். அந்தக் காலக் கட்டதிலேயே இன்று காணப்படும் ஏறக்குறைய 4260 வகையான பாலூட்டிகளின் மூதாதை இனங்களும் அன்றே மூலமாக செதுக்கப்பட்டு விட்டன.
ஆனால், ஏழு மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை நம்முடைய (வால்/வாலற்றக் குரங்கு) இன ஆட்கள் நான்கு கால்களாலும் நடக்கும் நிலையிலேயேதான் இருந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகே இரண்டு கால்களாலும் எழுந்து நின்று நடக்கும் வாலற்ற குரங்கினமாக முன்னேற்றமடைந்திருக்கிறது.
இந்நிலையில் எப்பொழுதும் போலவே காலச் சக்கரம் சுழன்று பூமி தனது பயணத்தில் புதிது புதிதாக விசயங்களைப் நிகழ்த்திக்கொண்டே வரும் நிலையில் மூன்று மில்லியன் வருடங்களுக்கு பின்பாகவே மனிதனை ஒட்டிய நம் மூதாதையர்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களிடத்தே இருந்து இப்போதுதான் ஒரு மில்லியன் வருடத்திற்கும் குறைவான காலகட்டத்தில் நாம் செதுக்கப்பட்டு, நீக்கமற எங்கும் நிறைந்த நிலையில், நாம் மட்டுமே இருப்போமென்ற டைனோசார்களின் உண்டு இல்லை நிலையை ஏற்கெனவே எட்ட வைத்ததைப் போன்றே - இந்த குறுகிய கால கட்டத்தில் நம்மையும் முன்னேற வைத்து பரிணாம ஏணியின் உச்சத்தில் வைத்து அழகு பார்க்கிறது இந்த ஆச்சர்யப் பூமி என்ற இயற்கை!

ஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்
இந்திய மருத்துவ முறைகளான சித்தா,ஆயுர்வேதம்,யுனானி ஆகிய மூன்றிலும் ஒரே மூலிகைகளே வேறு வேறு பெயர்களில் அமைக்கப்படுகின்றது.
சுக்கு,மிளகு,திப்பிலி,மஞ்சள்,புளி,துளசி,பெருங்காயம்,ஆடாதொடை,பூண்டு,எள், கரிசலாங்கண்ணி இவை எல்லாமே மூலிகைகள் தாம்.
1.சுக்கு,மிளகு,திப்பிலி
இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.
2.இஞ்சி
தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.
3.புளி
சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.
4.துளசி
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.
5.பேரிக்காய், காரட்
இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.
6.நன்னாரி
உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.
7.சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.
8.சோம்பு
உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.
9.சுரைக்காய்,பூசணிக்காய்
இவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
10.விளாம்பழம்
வயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.
11.அமுக்கிரா கிழங்கு
இதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.
12.கரிசலாங்கண்ணி கீரை,கீழாநெல்லி
கல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்கமும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும்.கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.
கிராம்பு, ஏலக்காய், அதிமதுரம்,வசாகா,குப்பைமேனி போன்றவையும் மூலிகைகள்தாம்.
ஆயுர்வேத மருத்துவர்கள் மூலம் இந்த மூலிகைகளைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது

நலம் தரும் பழங்கள்
பழங்களில் இரும்பு சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற "அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், பல வகையான வைட்டமின்களும் உள்ளன. பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
1. ஆப்பிள் - ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். ஆப்பிள் ஜுஸ் குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கை குணமாக்கும்.
2. ஆரஞ்சு - எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடலாம். ரஞ்சு உடலுக்கு புத்துணர்ச்சியும் வலுவும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
3. திராட்சை - சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணமாக்கும் . ஒரு "வுன்ஸ் திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர சிறு நீர் தாரைகளில் உண்டாகும் கல் கரைந்துவிடும்.
4. மாதுளை - இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு நல்லது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி நிறைய உள்ளது.
5. அன்னாசி - "அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன் படுகிறது. உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
6. சப்போட்டா - இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளது. சப்போட்டாவுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.
7. பப்பாளி - பப்பாளி பழத்தை துண்டுகள் ஆக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் "ஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். தாய்ப்பால் சுரக்க பப்பாளி பயன்படும்.

திங்கள், 26 அக்டோபர், 2009
நேர்முகத் தேர்வுக்கான ஆலோசனைகள்

நமது திறன்களை நேரடியாக பிரதிபலித்து காட்டுவது நேர்முகத் தேர்வு. எழுத்துத் தேர்வில் அனைவருக்கும் அனுபவம் இருந்தாலும் நேர்முகத்தேர்வு சற்று வித்தியாசமானது. நேர்முகத் தேர்வில் வெல்வதற்கான நுணுக்கங்களை சில இங்கே
'பேசுங்கள்' உங்களைப் பற்றி தெரிந்து கொள்கின்றேன் என்பதை நேர்முகத் தேர்வுக்கான ஒருவகை விளக்கம் என்று கூறலாம். உயர்கல்விக்கு மாணவ, மாணவியரை தேர்வு செய்யவும், வேலை நாடுனர்களை தேர்வு செய்யவும் எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு நடைமுறை பரவலாக இருந்து வருகின்றது.
பன்முகத் திறன்களை மதிப்பீடு செய்து அவற்றின் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்தால்தான் அளிக்கப்பட்ட பணியினை திறம்பட செய்ய முடியும். இந்த கருத்தின் அடிப்படையில்தான் சில பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தும் நடைமுறை உள்ளது.
உதாரணமாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) பணிவாய்ப்புகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும்போது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவற்றை நடத்துகின்றது. சாதாரணமாக எழுத்தர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், சுருக்கெழுத்து தட்டச்சர் போன்ற பணிக் காலியிடங்களை நிரப்புவதற்கு வெறும் எழுத்துத் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணை வழங்கப்படுகின்றது. தொகுதி 2, தொகுதி 1 போன்ற தேர்வுகளுக்கு கல்வித் தகுதி குறைந்தபட்சம் பட்டப்படிப்பு என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தொகுதி 1 தேர்வின்போது மூன்று நிலைகள் உள்ளது. முதலில் முதல்நிலைத் தேர்வு (கொள்குறி வகை), இரண்டாவது கட்டமாக முதன்மைத் தேர்வு (விரிவாக விடையளித்தல்) என்ற வகையில் நடைபெறுகிறது. மூன்றாம் நிலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தொகுதி 1 மூலம் தேர்வு செய்யப்படுபவர்கள் அரசு இதழ் பதிவு பெற்ற அலுவலர்களாக பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவதால் பொறுப்பு மிக்க தலைமைப் பண்புடைய, முடிவெடுத்து செயல்படும் திறன்களை உடையவர்களை இனங்கண்டு தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
தேர்வு முறைகள்:
ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளுக்கு சமீபத்தில் எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளிவந்து நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கும் சூழலில், நேர்முகத் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கு சில ஆலோசனைகள் இக்கட்டுரையில் தரப்படுகின்றது.
எழுத்துத் தேர்வு என்பது கற்றறிந்தவற்றை கேள்விக்கேற்ப சரியாக எழுத்து மூலம் விடையளிப்பதைக் கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றது. நேர்முகத் தேர்வு என்பது வாய்மொழியாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது பதில் அளிப்பவரின் ஆளுமைத்திறன், புரிதல், பதில் அளிக்கும் பாங்கு, நடை, உடை, பாவனை ஆகியவற்றை மதிப்பீடு செய்ய உதவுகின்றது.
நேர்முகத் தேர்வை நடத்தும் குழுவில் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் இடம் பெறுவர். ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழு நேர்முகத் தேர்வு நடத்தும்போது தேர்வாணைய உறுப்பினர்கள், நிரப்பப்பட இருக்கக்கூடிய பணிகள் சம்பந்தபட்ட துறைத் தலைவர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள், வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொள்வர். நேர்முகத் தேர்வுக் குழுவில் இருப்பவர்கள் மிகுந்த அனுபவம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
அடிப்படை விஷயங்கள்:
உங்களது பெயர், பெற்றோரின் பெயர்கள், ஊர், கல்வித்தகுதி, விரும்பும் பணி, பிற தகுதிகள் ஆகியவற்றை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருப்பீர்கள். அதன் அடிப் படையில் கேள்விகள் முதலில் அமையும். உங்களது பெயருக்கான காரணம், நீங்கள் வசிக்கும்பகுதி அல்லது மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். பெற்றோர்கள் வகிக்கும் பொறுப்பு போன்றவற்றை தெரிவிக்க வேண்டும். படித்த பாடத்திலிருந்து அடிப்படையாக சில கேள்விகளை எதிர்பார்க்கலாம். அதற்கு தயார் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வு செய்த துறை மற்றும் பணி குறித்த அடிப்படை விவரங்கள் மற்றும் அப்பணியை தேர்வு செய்யும் காணரங்கள் குறித்து வினா எழுப்பினால் விளக்கம் அளிக்க தயாராக இருக்க வேண்டும். ஏற்கனவே ஏதாவது ஒரு பணியில் இருந்து கொண்டு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வந்திருந்தால் அப்பணி சார்ந்த விபரங்கள் மற்றும் தொகுதி2-ல் அடங்கிய பணியை தேர்வு செய்யும் காரணத்தை கேட்டால் கூறுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.
சாரணர்படை, தேசிய சேவைப்பணி, என்.சி.சி., செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுப்புற சூழல் குழுமம், சமூகப் பணிகள் போன்ற ஏதாவது செயல்பாடுகளில் ஈடுபட்ட அனுபவத்தைக் குறிப்பிட்டால் அவை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். விளையாட்டு, பொழுது போக்கு அம்சங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தால் அவை பற்றிய கேள்விகளையும் எதிர்பார்க்கலாம்.
செய்திகள், புள்ளிவிவரங்கள்
அன்றாட நிகழ்வுகள், தமிழக அளவில், இந்திய அளவில், உலகளவில் என்று முக்கியத்துவம் வாய்ந்தவற்றைப் பற்றி தகவல் சேகரித்து நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பன்றிக் காய்ச்சல், சட்டமன்ற இடைத் தேர்தல் என்று அன்றாட நிகழ்வுகள் குறித்த தகவல்களை குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வெளியீடான தமிழரசு மாத இதழில் அரசின் திட்டங்கள், அரசின் மூலம் அளிக்கப்படும் விருதுகள், இதர செயல்பாடுகள், திட்ட விளக்கங்கள் பற்றி அதிகாரப்பூர்வமான செய்திகள், பல்வேறு அரசுத்துறை சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் நடைமுறைப்படுத்துதல் பற்றி செய்திகள் வெளிவரும். அவற்றில் முக்கியமானவற்றை குறிப்பெடுத்து தேவைக்கு பயன்படுத்தலாம். நடப்புச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி மூலம் அறிந்து கொள்ளலாம்.
பாடம் சார்ந்த அடிப்படைக் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையிலும் ஆதார நூல்களிலிருந்து குறிப்புக்கள் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இணைய தளத்தின் மூலமும் அரசுத் துறை சார்ந்த விவரங்கள் மற்றும் தேவையான தகவல்களை சேகரிக்கலாம்.
பயிற்சி பெறுங்கள்
எழுத்துத் தேர்வு என்பதில் அனைவருக்கும் பரிச்சயம் இருக்கும். ஆனால் நேர்முகத் தேர்வு என்பது பலருக்கு புதிய அனுபவமாக இருக்கும். ஆகவே மாதிரி நேர்முகத் தேர்வுகளை ஏற்பாடு செய்து கலந்து கொண்டு தனது குறை நிறைகளை அறிந்து அவற்றை சரிசெய்து கொள்ளலாம். "அறையில் ஆடினால்தான் அம்பலத்தில் ஆட முடியும்'' என்பது போல பலமுறை மாதிரித் தேர்வுகளை ஏற்பாடு செய்து கலந்து கொண்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் பயிற்சியை மேற்கொண்டால், தயக்கமின்றி இயல்பாக நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள முடியும்.
நேர்முகத் தேர்வில் கேள்விகள் எத்தகைய தன்மை வாய்ந்தவையாக அமையும் என்பதை ஓரளவு கணிக்கலாம். இருந்தபோதும் ஒவ்வொரு முறையும் நேர்முகத் தேர்வின் போக்கு சிறிதளவு மாறுபடுவதற்கும் வாய்ப்பிருக்கும். ஆகவே கலந்து கொண்டவர்களின் அனுபவத்தைப் பெற்று அதற்கேற்ப தயார் செய்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் தங்களைப் பற்றிய தகவல்களை அளித்து கேள்விகளாக கேட்கும்படி கூறலாம். அவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்து பழகும்போது நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது ஓரளவு எளிதாகிவிடும்.
நேர்முகத் தேர்வுக்கு செல்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முன்கூட்டியே செய்துவிட வேண்டும். பயணத்திற்கான முன்பதிவு, அணியும் உடைகளை ஒழுங்கு செய்து கொள்ளுதல், உரிய சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ளுதல் போன்றவையும் முக்கியமானவையாகும். நேர்முகத் தேர்வு நடக்கும் அறையில் நுழையும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், முடிந்து வெளியில் செல்லும்போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து தயார்படுத்தி கொண்டால் தடுமாற்றம் ஏற்படாது.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் சிறப்பாக எதிர்கொண்டால் வெற்றி வாய்ப்பை உறுதி செய்து கொள்ளலாம். இட ஒதுக்கீடு, வெளிப்படையான தேர்வுமுறை, நடுநிலையான மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் தேர்வுமுறை அமைந்துள்ளதால் சமுதாயத்தில் பொருளாதார, சமூக ரீதியாக பின் தங்கியவர்களும் பணிவாய்ப்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இளைஞர்களிடம் உருவாகி உள்ளது.
உங்களது உழைப்பு, திறமை ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்து முறையான பயிற்சியை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்.
மகிழ்ச்சி என்பது என்ன?
குழந்தை தத்தித்தத்தி நடைபழகுவதைக் காணும் பெற்றோர் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
* கண்ட கண்ட பெண்களின் பின்னால் சுற்றித் திரிவது சிலருக்கு மகிழ்ச்சி. அவள் அவனை திரும்பிப் பார்த்தால் இன்னும் சந்தோஷம்.
* துணைக்கு ஆளின்றி வருபவர்களை கண்டால் திருடனுக்கு மகிழ்ச்சி.
இப்படி பலருக்கு பலவித மகிழ்ச்சி.
உண்மையில் மகிழ்ச்சி என்பது என்ன? அதன் இலக்கணந்தான் என்ன?
மகிழ்ச்சிக்கென்று தனி இலக்கணம் கூற முடியாது. அது மனித மனத்தின் ஒருவகை உணர்ச்சி, அவ்வளவுதான். அந்த மனதில் அவரவர் நிலைக்கும், சக்திக்கும், இயல்புக்கும் ஏற்றபடி ஏற்படும் உணர்ச்சி அலைகள் தான் மகிழ்ச்சி எனும் பெயர் பெறுகின்றன. அந்த மனநிலைதான் நாமும், மற்றவர்களும் விரும்புவதாக இருக்கிறது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது நம்மை விரும்புகிறோம், மற்றவர்களையும் விரும்புகிறோம். எல்லாமே நமக்கு சந்தோஷம் தருபவையாக இருக்கின்றன.
ஒருவருடைய மனம் எத்தகைய பயிற்சியைப் பெற்றுள்ளது என்பதைப் பொறுத்தே அவருடைய மனம் இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவிக்கிறது. இதனால்தான் ஒருவருக்கு இன்பமாகத் தோன்றும் ஒன்று மற்றொருவருக்குத் துன்பமாகத் தோன்றுகிறது. தித்திக்கும் இனிப்பைக்கூட வெறுப்பவர்கள் இருக்கின்றனர். எனவே மகிழ்ச்சி என்பது ஒரு மனப்பழக்கம் தான்.
மனம் பொதுவாக புறமனம், ஆழ்மனம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இந்த மனம்தான் மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைகிறது. அதாவது மனதின் ஒருவித அனுபவம்தான் மகிழ்ச்சி எனப்படுகிறது. அதுபோலவே, மகிழ்ச்சிக்கு நேர் எதிரான துயரமும் மனதின் ஒரு அனுபவம்தான். இன்பத்தையும், துன்பத்தையும் மனம்தான் அனுபவிக்கிறது.
இன்பத்துக்கும், துன்பத்துக்கும் பொதுவாக இரண்டு வகையான காரணங்கள் உள்ளன. ஒன்று புறக்காரணம் மற்றது அகக்காரணம். புறக்காரணங்களால் ஏற்படும் இன்பத்துக்கும், துன்பத்துக்கும் மனதின் எதிர்பார்ப்புகளும், லட்சியங்களும்தான் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் கழித் தால் நம் ஆயுள் முழுவதையும் மகிழ்ச்சியுடன் கழித்து விட முடியும். நம்முடைய மனதில்தான் மகிழ்ச்சி புதையுண்டு கிடக்கிறது. நாம் அதை வெளியே கொண்டு வர வேண்டும். நம்முடைய மனத்தின் ஆற்றல் அளவிட முடியாதது. அதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆழமான சுரங்கத்தில் அதிக கவனத்துடன் தோண்டும் போது தங்கம் கிடைப்பது போல், நம்முடைய மனமாகிய சுரங்கத்தில் ஆழமாகத் தேடினால் மகிழ்ச்சி என்னும் நவரத்தினங்கள் ஏராளமாகக் கிடைக்கும்.
மனத்தில் உண்டாகும் மகிழ்ச்சியான எண்ணங்களால் உடல் அழகு பெறும். தைரியமும், மகிழ்ச்சியான எண்ணங்களும் உடலுக்கு வலுவைத் தருகின்றன. நம்முடைய உள்ளத்தில் மகிழ்ச்சியும், நல்லெண்ணமும், சாந்தமும் குடி கொண்டால் உடலின் ஆரோக்கியமும், திடமும் அதிகரிக்கும். மகிழ்ச்சியான மனதையும், பரிசுத்தமான எண்ணங்களையும் கொண்டிருந்தால் நாமும் இன்பமாக வாழ முடியும். நம்முடைய மனதில் மகிழ்ச்சியான காட்சிகளைக் கண்டு வந்தால் நம்முடைய வாழ்க்கையிலும் விரைவிலேயே மகிழ்ச்சி நிச்சயம்.

கனவுகளும், நனவுகளும்..!

மனதில் ஆழ்ந்து போன விஷயங்களும், சம்பவங்களுமே கனவுகளாக வருகின்றன என்பதே இதுவரை உளவியல் ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் அதையும் தாண்டி நாம் காணும் கனவின் பலன்களை அறிய ஆர்வப்படுகிறோம். நாம் கண்ட கனவுகள் அனைத்துமே அதற்கேற்ற பலன்களைத் தருகிறதா என்றால், இல்லை என்பதே நிதர்சன உண்மை!
மருத்துவ உலகில் கனவைப் பற்றிய ஆய்வு எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே உள்ளது. நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.
தண்ணீர் தேங்கியிருப்பது போல் கனவு கண்டால் புதிய நண்பர்கள் நிறைய கிடைப்பார்கள். இளம் வயதினருக்கு காதலன், காதலி கிடைப்பார்கள். அப்படி கனவு காணும்போது தேங்கியிருப்பது நல்ல தண்ணீர் என்றால் பிரச்சினை விலகும். நீர் வற்றிய குளம் கனவில் வந்தால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்தது தாமதப்படும். அரசு கடன் தாமதமாகும். தடைகள் வரலாம். தண்ணீர் நிறைந்த குளத்தை கனவில் கண்டால், நீர் நிலையை கனவில் கண்டால் பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும். நன்மை நடக்கும். தாமரைப் பூவை கனவில் கண்டால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். நிறைய பணம் சேரும். கடன் தீரும். வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். குளத்தில் கால் கழுவுவது போல் கனவு கண்டால் கஷ்டம் மற்றும் நோய் நீங்கும். உற்சாகம் கூடும். நல்ல செய்திகள் வரும்.
குளத்தில் குளிப்பது போன்று கனவு கண்டால், கடவுள் அருள் நிறைய கிடைக்கும். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கியிருப்பது போல் கனவில் வந்தால், பொருளாதார வளம் ஏற்படும். சிலருக்கு அக்கம்பக்கம் தொந்தரவு ஏற்படும்.
மூதாதையர்கள் கனவில் வந்தால் அல்லது ஆசீர்வாதம் செய்தால் நன்மை பிறக்கும். பிரச்சினை இருந்தால் நல்ல முடிவு ஏற்படும். கனவில் இறந்துபோன உறவினர்கள் பேசினால், உதவிக்கு நிறைய பேர் வருவார்கள். நல்ல பெயரும், புகழும் கூடும். உறவினர்கள் உங்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டால் பணம் வரும். எதிர்பார்க்காத பணம், புகழ் குவியும். பிரிந்து போன குடும்பங்கள் ஒன்று கூடும். உறவினர்களிடையே இருந்த விரிசல் மறையும்.
மூதாதையர் உறங்குவதாக கனவு வந்தால், ஆபத்திலிருந்து தப்பி விடுவீர்கள். மூதாதையர் உங்களுக்கு சாப்பாடு பரிமாறுவதாக கனவு கண்டால், சுபச்செய்தி வந்து சேரும்.
நீங்கள் கிழிந்த உடையை உடுத்தியிருப்பதாக கனவு வந்தால், பணம் வந்து சேரும். எந்த செயலிலும் தனியாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவீர்கள். புத்தாடை அணிந்தது போல் கனவு வந்தால், பிரச்சினையில் சிக்கப் போகிறீர்கள். எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும். மன அமைதி குறையும். சம்பந்தமில்லாத குற்றச்சாட்டுகள் உங்கள் மீது சுமத்தப்படும்.
உங்களுடைய கனவில் சிங்கம் வந்து, உங்களை விரட்டினால் அரசு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும். ஆனாலும் பிரபலமானவர்கள் உதவியுடன் அந்த பிரச்சினையை சமாளிப்பீர்கள்.
கனவில் பாம்பு வந்தால் உங்களுக்கு கடவுள் துணை நிற்பார். அதிர்ஷ்டம் ஏற்படும். பெண்கள் கனவில் பாம்பு வந்தால் ஆயுள் கூடும். கடன் பிரச்சினைகள் தீர்ந்து ஒரு முடிவுக்கு வரும்.
கனவில் யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். பிரிந்த கணவன்- மனைவி இடையே உறவு ஏற்படும். இளம் தலைமுறையாக இருந்தால் திருமணம் நடக்கும்.
ஊதுபத்தி புகை வருவது போல் கனவு கண்டால் துக்கம் நீங்கும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தீயை கனவில் கண்டால் நோய் விலகும். புதிய உற்சாகம் பிறக்கும். தீயை நீங்கள் கொளுத்துவதாக கனவில் வந்தால் முன்கோபத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். நாக்கில் கவனம் தேவை. தேவையில்லாத வம்பு, வழக்குகளில் சிக்கிக் கொள்வீர்கள்.
உங்கள் கனவில் திருவிழாவை கண்டால் புதுவீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாகன யோகமும் ஏற்படும். சொத்து சேரும்.
நகைகள் வாங்குவது போல் கனவு கண்டால் புதிய தொழில் தொடங்குவீர்கள். இல்லாவிட்டால் இருக்கின்ற தொழிலில் மேன்மை உண்டாகும். நகைகளை அடகு வைப்பதுபோல் கனவு வந்தால் சொத்து விற்பனை ஆகும். நகைகள் களவு போவதுபோல் கனவு கண்டால் பண வரவு உண்டாகும். வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்வது போல் கனவு கண்டால், உல்லாசப் பயணம் மேற்கொள்வீர்கள். புகழ் அதிகரிக்கும்.
வெள்ளி, 16 அக்டோபர், 2009
உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் ??, இரத்த தானம் ??
உடல் உறுப்பு தானம் குறித்த எனது முதல் இடுகையானஇப்படியும் சிலர் : இதய தானம் குறித்த சில கேள்விகளும் பதில்களும் இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் பதிவர் தெக்கிட்டானின்உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs! இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் விளக்கமளிக்க இந்த இடுகை
உதிரக்கொடை (இரத்த தானம் ) :
ஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி பெறப்படுவது இரத்த தானம்
எத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்
சில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும்
தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
பலன் : பிணியாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம்
கண் தானம் :
ஒருவர் இறந்த பின் அவரது கண்கள் எடுக்கப்படும்.
இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
கண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
எடுக்கப்பட்ட கண்களின் விழித்திரை அடுத்த நபருக்கு பொருத்தப்படும்
தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு
ஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்
இயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்
மூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்
பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
எலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது
எடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.
தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
பலன் : பல பிணியாளர்களுக்கு
உறுப்பு தானம் :
மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்
சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல், தோல் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்
பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
பலன் : பல பிணியாளர்களுக்கு
உடல் தானம் :
இயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும்
உடல் உறவினர்களிடம் அளிக்கப்படாது
உடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்
அவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும் எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன் படும்
பலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால் பல
பிணியாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு
மூளை சாவு பற்றிய சில விபரங்கள் மருத்துவர் டெல்பின் விக்டோரியாவின் உடல் உறுப்புகள் தானம் இடுகையில் இருக்கின்றன
தமிழ் அகராதிகள்.
வீரமா முனிவர் அளித்த முதல் தமிழ் அகராதிக்குப் பிறகு வந்த பல தமிழகராதிகளும் அவற்றை அளித்த ஆசிரியர்களும் அவை வெளியான ஆண்டுகளும் இங்கே தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.
1. சதுரகராதி - வீரமா முனிவர் - 1732.2. பெப்ரியசு அகராதி - பெப்ரியசு - 1779.3. ராட்லர் தமிழ் அகராதி - பாகம் 1 - ராட்லர் - 1834.4. ராடர் தமிழ் அகராதி- பாகம் 2 - ராட்லர் - 1837.5. ராட்லர் தமிழ் அகராதி-பாகம் 3 - ராட்லர் - 1839.6. ராட்லர் தமிழ் அகராதி- பாகம் 4 - ராட்லர் - 1841.7. மானிப்பாய் அகராதி - யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர் மற்றும் சரவணமுத்துப் பிள்ளை - 1834. 8. சொற்பொருள் விளக்கம் - களத்தூர் வேதகிரி முதலியார் - 1850.9. போப்புத் தமிழ் அகராதி - ஜி.யு.போப் - 1869.10. அகராதிச் சுருக்கம் - விஜயரங்க முதலியார் - 1883.11. பேரகராதி - காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு - 1893.12. தரங்கம்பாடி அகராதி - பெரியசு அகராதியின் விரிவு - 1897.13. தமிழ்ப் பேரகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1899.14. தமிழ்ப் பேரகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1901.15. தமிழ்ச் சொல்லகராதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1904.16. சிறப்புப் பெயர் அகராதி - ஈக்காடு இரத்தினவேல் முதலியார் - 1908.17. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி - பி.ஆர். இராமநாதன் - 1909.18. அபிதானசிந்தாமணி - ஆ.சிங்காரவேலு முதலியார் - 1910.19. தமிழ்ச் சொல் அகராதி, முதல் தொகுதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1910.20. தமிழ்ச் சொல் அகராதி, இரண்டாம் தொகுதி - யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1912.21. தமிழ்ச் சொல் அகராதி, மூன்றாம் தொகுதி:- யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளை - 1923.22. தமிழ் மொழி அகராதி - காஞ்சி நாகலிங்க முனிவர் - 1911.23. இலக்கியச் சொல் அகராதி - கன்னாகம் அ. குமாரசாமி பிள்ளை - 1914-.24. மாணவர் தமிழ் அகராதி - எஸ். அனவரத விநாயகம் பிள்ளை - 1921.25. சொற்பொருள் விளக்கம் - சு.சுப்பிரமணிய சாஸ்திரி - 1924-.26. தற்காலத் தமிழ்ச் சொல் அகராதி - ச. பவானந்தம் பிள்ளை - 1925.27. இளைஞர் தமிழ்க் கையகராதி - மே.வீ. வேணுகோபாலபிள்ளை - 1928.28. ஜுபிலி தமிழ் அகராதி - எஸ். சங்கரலிங்கமுதலியார் - 1935.29. ஆனந்தவிகடன் அகராதி - ஆனந்த விகடன் பத்திரிக்கை ஆசிரியர் குழு - 1935.30. நவீன தமிழ் அகராதி - சி.கிருஷ்ணசாமி பிள்ளை - 1935.31. மதுரைத் தமிழ்ப் பேரகராதி - மதுரை இ.மா.கோபாலகிருஷ்ணக் கோனார் மற்றும் பண்டிதர் பார் - 1937.32. சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி - சுவாமி ஞானப் பிரகாசம் - 1938.33. தமிழறிஞர் அகராதி - சி. கிருஷ்ணசாமிப் பிள்ளை - 1839.34. தமிழ் அமிழ்த அகராதி - சி.கிருஷ்ணசாமிப் பிள்ளை - 1939.35. விக்டோரியா தமிழ் அகராதி - எஸ். குப்புஸ்வாமி- 1939.36. தமிழ் லெக்ஸஸிகன் - சென்னைப் பல்கலைகழகம் - 1939.37. கழகத் தமிழ் அகராதி - சேலை சகாதேவ முதலியார் மற்றும் காழி சிவகண்ணுச் சாமி பிள்ளை - 1940.38. செந்தமிழ் அகராதி - ந.சி. கந்தையாப் பிள்ளை - 1950.39. கமபர் தமிழ் அகராதி - வே. இராமச் சந்திர சர்மா - 1951.40. சுருக்கத் தமிழ் அகராதி - கலைமகள் பத்திரிக்கை - 1955.41. கோனார் தமிழ்க் கையகராதி - ஐயன் பெருமாள்க் கோனார் - 1955.42. தமிழ் இலக்கிய அகராதி - பாலூர் து. கண்ணப்ப முதலியார் - 1957.43. கழகத் தமிழ் அகராதி - கழகப் புலவர் (சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) - 1964-.44. லிஃப்கோ தமிழ் அகராதி - லிஃப்கோ புத்தக நிறுவனம் - 1969..45. தமிழ்ச் சுருக்கெழுத்து அகராதி - அனந்தநாராயணன் -1980.46. தமிழ்-அகர முதலி - மு சண்முகம் பிள்ளை - 1984-.47. செந்தமிழ் சொற்பியல் பேரகர முதலி - தேவநேயப்பாவாணர் - 1984.48. பழந்தமிழ் சொல் அகராதி - (5-தொகுதிகள்) - புலவர் த கோவேந்தன் -1985.49. திருமகள் கையகராதி - புலவர் த. கோவிந்தன் மற்றும் கீதா - 1995.50. மலேசியச் செந்தமிழ் அகராதி - டாக்டர் ஜி.பி. இலாசரஸ் - 1997.51. வசந்தா தமிழ் அகராதி - புலவரேறு அரிமதி தென்னகன் - 2000.52. நர்மதா தமிழ் அகராதி - நர்மதா பதிப்பகத்தின் புலவர் குழு -2003.

பெண்களே இல்லாத நாடு. காரணம்? (தொடர்ச்சி) சிறிய விரல்; சுண்டு விரல்

1504ம் ஆண்டு இரண்டாம் ஜூலியஸ் இத்தாலியை ஆட்சி செய்துவந்தான். சர்வ அதிகாரத்தோடு ஆட்சி செய்த இவன், கொஞ்சம் கொஞ்சமாக இரக்க குணம் படைத்த மன்னனாக மாறத் தொடங்கினான். மக்களிடம் மதிப்பும் மரியாதையும் பெறத் தொடங்கிய அவன், “நான் இப்படி திடீரென மாறக் காரணம் என்ன?” என ஆராயத் தொடங்கினான்.
இயேசு நாதரின் ஆசிர்வாதமே என தெரிந்துக் கொண்ட இவன் பைபிளை படிக்கத் தொடங்கினான். பின் படித்ததை கண்முன் நிறுத்திப்பார்க்க ஆசைப்பட்டான். அப்போதுதான் மகா சிற்பி “மைக்கேல் ஏஞ்சலோ” மனதில் தோன்றினார். உடனே அவருக்கு அழைப்பு விடுத்தான்.
“வாடிகன் நகரில் இருக்கும் மிகப்பெரிய தேவாலயமான சிஸ்டைன் மாதா கோவிலின் மேற்கூரையில் பைபிளில் உள்ள முக்கிய உயிரோட்டமான பகுதிகளை ஓவியமாக தீட்டவேண்டும் உடனே அதற்கான வேலையில் இறங்கவேண்டும்” இது அப்போது போப் ஆண்டவராக இருந்த இரண்டாம் ஜூலியின் கட்டளை.
அதற்கு மறுப்பு தெரிவித்த ஏஞ்சலோ. “நான் வெறும் சிற்பியே. ஓவியன் அல்ல. என்னால் முடியாது” என மறுப்பு தெரிவித்துவிட்டார். பதிமூன்று அடி உயரம் இறுக்கமான உருண்டு திரண்ட தசைகளுடன் டேவிட் சிலையை வடித்த உங்களால் மட்டுமே பத்தாயிரம் சதுர அடி பரப்பில் ஓவியங்களை தீட்ட முடியும்; தயவு செய்து இப்பணியை ஏற்றுக் கொள்ளுங்கள் என இரண்டாம் ஜூலியஸ் வேண்டுகோள் வைக்க மைக்கேல் ஏஞ்சலோ இக்கஷ்டமான வேலையை ஏற்றுக்கொண்டார்.
ஆதாமின் பிறப்பு, ஏவாளின் படைப்பு, உலகத்தில் மற்ற உயிர்கள் தோன்றல், மனித இனம் உருவாதல், மனித இனம் நன்மை, தீமைகளை பிரித்து அறிய பழகிக் கொண்ட விதம் என பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கும் அத்தனை பைபிள் காட்சிகளையும் ஏஞ்சலோ மிக அற்புதமாக தூரிகைகளால் படைத்த விதம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் போற்றப்பட்டது.

மின்சார விளக்குகள், நவீன பெயிண்ட்கள், முன்மாதிரி ஓவியங்கள் எதுவுமே இல்லாத அக்காலத்தில் இரவு, பகல் என்று பாராமல் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முயற்சி செய்து வரைந்த இவ்வோவியம் உலகின் தலைசிறந்த முதல் ஓவியமாக திகழ்கிறது.சிஸ்டைன் மாதாக் கோயில் கூரை முழுவதும் மனிதனின் அசைவில் ஏற்படும் மடிப்புகளை, முக மாற்றங்களை, அங்கங்களைக்கூட இவர் 340 ஓவியர்கள் மூலம் தத்ரூபமாக வரைந்திருந்தாலும் இவரது தலையாய படைப்பு என்ன தெரியுமா?
ஆதாமின் பிறப்புதான். உயிரற்ற உடம்பாக முதலில் ஆதாமை படைத்த இறைவன் பின் ஆதாமின் சுண்டு விரலை இறவன் தீண்டியதால் ஆதாம் உயிர் பெற்று எழுந்ததாகச் சொல்லும் பைபிள் காட்சியை மைக்கேல் ஏஞ்சல் ஓவியமாக தீட்டியது ஓவியர்களுக்கு வேதமாக அந்த ஓவியம் திகழ்கிறது. இறைவன் ஆதாமின் சிறிய விரலை சுண்டி உயிர்பெற வைத்தல் சிறிய விரலை நாம் சுண்டு விரல் என அழைத்து வருகிறோம்.
பெண்களே இல்லாத நாடு எது? காரணம்?

வாடிகன் நகரம்தான். ‘தி ஹோலி ஸி’ என அழைக்கப்படும் நாட்டில் பெண்களே இல்லை.
கத்தோலிக்கத்தின் தலைமையிடம் அல்லது போப்பாண்டவர்களின் இருப்பிடமாக உள்ளதால் இங்கே பெண்களே கிடையாது. குடும்பம் நடத்துவதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படாத நாடும் கூட.
0.4 ச.கி.மீ. பரப்பு கொண்ட இந்நாடு இத்தாலியின் ரோம் நகருக்குள் அமைந்துள்ளது. 1859, 1860 மற்றும் 1870ல் இத்தாலியோடு இணைக்கப்பட்ட இந்நாடு, 1929 முதல் தனி நாடாக செயல்பட்டு வருகிறது.
போப் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்நாடு, ஓவியக்கலையின் தாயகமாக இந்நாடு செயல்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்புக் காரணம் “மைக்கேல் ஏஞ்சலோ” என்னும் ஓர் சிற்பியே ஆகும்.

மனிதனால் முடியுமா?
இயற்கையின் அற்புதங்கள் அவிழும்போது ஆச்சரியம் மிகுகிறது.அந்த அற்புதங்கள் அழிவதை அறியும்போது வேதனை யில் நெஞ்சம் வேகிறது.
மனிதன் தனது சுயநலத்திற்காக இயற்கை தேவதையை சிதைக்கிறான்; வதைக்கிறான். அவனது வதைப்படலம் தொடருகிறது.
அந்த வதைப்படலத்தில் அழிந்துகொண்டிருக்கும் ஒரு அற்புத பறவையை கண்டுபிடித்து நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அது, மிகச்சிறிய உடலமைப்பு கொண்டது. ஆனால், அதன் உடலைமைப்பைப் போல இருமடங்கு நீண்ட வால் உடையது. அந்த வாலின் நுனி கரண்டியின் அகன்ற வாயைப் போல இருக்கிறது. அதனால் இதனை கரண்டி வால் பாடும் பறவை என அழைக்கின்றனர்.
ஆண் மயிலுக்கு நீண்ட தோகை இருப்பதுபோல, ஆண் பறவைக்கு மட்டுமே இந்த நீண்ட வால் இருக்குமாம். உலகில் இந்த வகைப் பறவைகள் 250 முதல் ஆயிரம்தான் இருக்கின்றனவாம்.இவை தமது வால் அசைப்பின் வேகத்தில்தான் தங்கள் ஜோடியை ஈர்க்கின்றனவாம்.
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் இவை காணப்படுகின்றன. அழிந்துவரும் இந்த அற்புதப் பறவையை பாதுகாக்க மலைப்பகுதிகளில் சரணாலயம் அமைக்க பறவை பாதுகாப்பு அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளன.
மலைச்சாரலை பணப்பயிர் விளைவிக்கும் நோக்கில் மனிதன் அழித்து வருகிறான். மலைச்சாரலையே தமது வாழ்விடமாகக் கொண்டுள்ள இந்தப் பறவைகளுக்கு வேறு புகலிடம் ஏற்படுத்தி தர மனிதனால் முடியுமா?

செவ்வாய், 13 அக்டோபர், 2009
பலம் பலவீனம் !
ஒருவருடைய பலம் எது என்றால் அவர் தனது பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே அவரது பலம் என்று சொல்ல முடியும். அரசியல் வாதிகள் - நடிகை ரகசிய தொடர்பு தெரியவந்தால் ஊருக்கே தெரிந்துவிடும். அண்மையில் மலேசிய அமைச்சர் ஒருவரின் லீலைகள் படமாக ஆக்கப்பட்டு கள்ளச் சந்தையில் சக்கைப் போடுபோடுவதாக சொல்கிறார்கள். சமூக விரோதம் என்று இல்லாமல் பொதுவில் இழிவாக நினைக்கப்படுகின்ற ஒன்றை அதாவது யாருக்கும் பாதிப்பின்றி தானே விரும்பிச் செய்யும் தனிமனித செயல்களை / அபிலாசைகளை பலவீனம் என்று சொல்ல முடியுமா ? இருந்தாலும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் அப்பழுக்கில்லாதவர்களாக இருந்தால் தான் தலைமைத்துவ தகுதி இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். மேற்சொன்ன சர்சைக்குறிய அமைச்சரை அவரது இல்லத்தினர் மன்னித்துவிட்டதாக சொல்லி இருந்தார்.பொதுவாழ்வில் உள்ளவர்களை விடுவோம், தனிப்பட்ட ஒருவர் குறித்து,ஜெயகாந்தன் கதை ஒன்றில் சின்ன வீடு வைத்திருக்கும் கணவரை கண்டித்த மகனை தாய் கண்டிக்கிறார். அது அவருக்கும் எனக்கும் உள்ள பிரச்சனை, அதையும் தாண்டி அவரை நேசிக்கிறேன், பிடிக்காவிட்டாலும் ஏற்றுக் கொள்கிறேன். என்பது போல் முடியும். அந்த கதையில் குறிப்பிட்ட ஒரு வரி ரொம்பவே யோசிக்க வைத்தது "ஒருவரை ஏற்றுக் கொள்வது என்பது அவரது பலவீனத்தையும் சேர்த்துதான்", உண்மையாக யாரையாவது நாம் நேசித்தால், ஒருவேளை அவரது பலவீனம் தெரிய வந்தால், அந்த பலவீனமும் சேர்ந்தது தான் முழுமையான அவர். அவரை வெறுப்பதற்கு அவரது பலவீனம் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்பது போல் எனக்கு புரிந்தது.நெருங்கியவர்களின் பலவீனங்கள் நமக்கு தெரியவரும் போது அப்போது அமைதியாக பெரும்தன்மையாக இருந்துவிட்டு சமயம் கிடைக்கும் போது போட்டு உடைத்து அவமானப்படுத்திவிடுவோம். இது ஏறக்குறைய எல்லோருக்கும் இருக்கும் பலவீனம் தான். இதற்கு வெட்கப்பட்டு இருக்கிறோமா ? பலம் என்பது பலவீனத்தை வெளிக்காட்டாமல் இருப்பதே. அடுத்தவர்களின் பலவீனத்தை சமயம் கிடைக்கும் போது வெளிப்படுத்துவது, தன்மீது அவர் வைத்திருக்கும் மதிப்பிற்கு எதிரான 'சந்தர்பவாதி' என்ற பலவீனம் தான்.நண்பர்களோ, உறவினர்களோ எதாவது ஒன்றில் பலவீனமாக இருந்தால் சொல்லிப் பார்க்கலாம், அவர்களால் நமக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொள்ளாது என்று நன்கு உணர்ந்திருந்து, அவர்களின் பலவீனத்தால் அவர்களை வெறுப்பது என்பது, எதையும் 'அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு பழகிக் கொள்ளாத மனக்குறை' என்ற நம்முடைய பலவீனம் தான்.புரியாதவர்கள் கை தூக்குங்கள் ! எளிமையாகச் சொல்லப் போனால்மனைவி அருகில் இருக்கும் போது மற்ற பெண்களை சைட் அடிக்கும் கணவரை பெரும்பாலும் 'கணவரின் பலவீனம்' என்று புரிந்து கொண்டுதான் மனைவியர் பெருந்தன்மையாக விட்டுவிடுகின்றனர்.
மனித உடல் பற்றிய அபூர்வ தகவல்கள்!
நமது மனித உடல்கள் பற்றிய பல தகவல்கள் தற்போதும் ஆராயப்பட்டு பல உண்மைகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் பல நமக்கு ஆச்சரியத்தையும் ஏன் அதிர்ச்சியையும் கூட ஏற்படுத்தும்.அதுபோன்று நமது உடல் பற்றிய சில தகவல்கள் இங்கே...
பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வது.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும்.
மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன.
மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.
ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.
நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.
நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது.
நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.
மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.
உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.
கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.
மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.
கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.
900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.
மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

ஞாயிறு, 11 அக்டோபர், 2009
நான் கடவுள்(அஹம் பிரஹ்மாஸ்மி)
வேதாந்த வாக்கியங்கள் நான்கு, மகா வாக்கியங்கள் என்று அழைக்கப் படுகின்றன.வேதாந்தம் என்பது வேதத்தின் அந்தம்,முடிவு.இவையே உபநிடதங்கள்.
ஐதரேய உபநிடதத்தில் காணப்படும் வாக்கியம்-”பிரஞ்ஞானம் பிரம்ம” என்பது.
பிருகதாரண்ய உபநிடதத்தில்காணப்படும் வாக்கியம்-”அஹம் பிரஹ்மாஸ்மி(பிரம்மைவாஹம் அஸ்மி)” என்பது.
சாந்தோக்கிய உபநிடதத்தில் சொல்லப்படும் வாக்கியம்-”தத்துவம் அஸி” என்பது.
மாண்டூக்ய உபநிடத்தில் வரும் வாக்கியம்-”அயமாத்மா பிரஹ்ம” என்பது.
எளிய முறையில் பொருள் சொன்னால்- 1)மெய்யுணர்வே பிரம்மம்(கடவுள்) 2)நான் கடவுள் 3)நீ அதுவாக இருக்கிறாய். 4)இந்த ஆத்மா பிரம்மன்.
இவை அனைத்தும் ஒரே பொருளையே உணர்த்துவன. நமக்குள்ளேயே கடவுள் இருப்பதை குறிக்கின்றன.
குரு சீடனுக்கு உணர்த்துகிறர்-த்வம்(நீ),தத்(அது),அஸி (இருக்கிறாய்).
இதை சீடன் உணர்ந்த நிலைதான் –அஹம் பிரஹ்மாஸ்மி.
தற்சமயம் மிகவும் பிரபலமாக இருக்கும் வாக்கியம்.
தன்னுள் இருக்கும் சிவனை உணரும்போது இந்த சீவன் சிவனாகிறான்.அதுவே அத்வைதம். இது பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்? இதோ ஒரு மீள் பதிவு- இரண்டல்ல(அத்வைதம்)
அவன் மிகவும் களைத்திருந்தான்.பல நாட்களாய் அலைந்து உடலும் தேடலுக்கு விடை கிடைக்காமல் மனமும் சோர்ந்திருந்தான்.கையில் பணமில்லாததால் இரண்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் துவண்டிருந்தான்.ஊர் ஊராய் ஒவ்வொரு கோவிலாய் இறைவனைத் தேடித் தேடி அலுத்திருந்தான்.அந்த ஊர் கோவிலில் தெய்வம் சக்தி நிறைந்தது, இந்த ஊர்க் கோவிலில் இறைவன் விசேடமானவர் என்றெல்லாம் ஒவ்வொருவர் சொல்வதையும் கேட்டு ஒவ்வொரு ஊராய் அலைந்து அவன் தேடும் கடவுளைக்காணாமல் ஏமாற்றம் அடைந்திருந்தான்.இப்போது அந்தக் கிராமத்தின் ஆள் அரவமற்ற ஆற்றங்கரைக் கோவில் வாசலில் பசியின் காரணமாக கண்கள் இருண்டு மயக்கமடைந்து கீழே விழுந்தான்.தன் முகத்தில் விழுந்த நீரின் குளிர்ச்சியில் அவன் கண் விழித்தான்.எதிரே ஒரு சிறுவன் நின்றிருந்தான்.அரையில் ஒரு துண்டு,தலையில் முண்டாசு,கையில் ஒரு கோல்.சிறுவனைப்பார்த்த அவன் முனகினான்"பசி".சிறுவன் இடுப்பில் முடிந்து வைத்திருந்த சில பழங்களை அவனிடம் நீட்டினான்.பழங்களைத்தின்று சிறிது பசியாறிய அவன் சொன்னான்"கடவுள் மாதிரி வந்து காப்பாற்றி விட்டாயப்பா".சிறுவன் கேட்டான் "என்னங்க ஆச்சு?"அவன் சொன்னான்"கடவுளைத்தேடி ஊர் ஊராய் சுற்றினேன்.காண இயலவில்லை."சிறுவன் சிரித்தான்"இப்பதான் என்னைப்பார்த்து கடவுள் மாதிரின்னு சொன்னீங்க.அப்ப எங்கிட்ட கடவுள் இருந்தா ,எல்லார் கிட்டயும் இருக்கணும்,உங்க கிட்டயும் இருக்கணும்.ஆனால் கடவுளைத்தேடி ஊரெல்லாம் அலஞ்சேனு சொல்றீங்களே.சிரிப்புதான் வருது சாமி"அவனுக்குப் பளார் என்று அறைந்தது போல் இருந்தது.கண்களை மூடித்திறந்தான்.சிறுவனைக் காணவில்லை.உண்மை உணர்ந்தான்.தான் வேறு கடவுள் வேறில்லை என்பதை உணர்ந்தான்.பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடி புலன்களைக்குவித்து உள்ளே இருக்கும் கடவுளோடு ஒன்றினான்."அஹம் ப்ரம்ஹாஸ்மி""சீவன் என்ன சிவனார் என்ன வேறில்லைசீவனார் சிவனாரைஅறிகிலர்சிவனார் சிவனாரைஅறிந்த பின்சீவனார் சிவனாயிட்டிருப்பரே"-(திருமூலர்)

அம்மாவை வணங்காது உயர்வில்லயே !
உறவுகள் அனைத்திலும் உயர்ந்த உறவு,தாய் என்ற உறவு. தாய்ப் பாசம் என்பது சன்னியாசியையும் விடுவதில்லை. தனது தாயின் மரணத்தை எண்ணிக் கலங்கி ஐந்து ஸ்லோகங்களால் தன் மன உணர்வுகளை வெளியிடுகிறார் ஜகத்குரு ஆதிசங்கரர்.நம்மையும் கலங்கச்செய்கிறார்.அந்த ஸ்லோகங்களின் தமிழாக்கம் இதோ:-+
ஸ்லோகம்-1
எனது தாயார் என்னைக் கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் தாங்கும் போது பட்ட கஷ்டத்துக்கு நான் பிரதியுபகாரம் ஏதாவது செய்திருக்கிறேனா?அது இருக்கட்டும்.பிரசவ சமயத்தில்,போக்க முடியாததும்,பொறுத்துக் கொள்ள முடியாததுமான சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் பதில் உபகாரம் செய்திருக்கிறேனா?அதுவுமிருக்கட்டும்.என்னைப் பெற்றதும்,என்னை ரட்சிக்க ருசியில்லாத பொருட்களைச் சாப்பிட்டு வாழ்ந்த என் தாய்க்கு ஏதாவது செய்திருக்கிறேனா?தனது உடலை இளைக்கச் செய்தும்,தூக்கமில்லாமலும்,எனது மலத்திலேயே படுத்து ஓராண்டு என்னை காத்த தாயாருக்கு ஏதாவது செய்திருக்கிறேனா?யாராலும் தாய்க்குப் பிரதியுபகாரம் செய்ய முடியாது.எனவே அம்மா, உனக்கு நமஸ்காரம் செய்கின்றேன்,ஏற்றுக்கொள்.
ஸ்லோகம்-2
நான் கல்வி கற்கச் சென்றிருந்த சமயம்,தன்னை மறந்து தூங்கிய தாங்கள் நான் சன்னியாசியானதுபோல் கனவு கண்டு,அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறி,அங்கிருந்த எல்லோரையும் கதறி அழச்செய்த என் அம்மா,உனக்கு நமஸ்காரம்.
ஸ்லோகம்:-3
அம்மா! நீ முக்தியடையும் சமயத்தில் கொஞ்சம் நீராவது உன் வாயில் விட்டேனா?பிறகும் ச்வதா மந்திரத்தினால் ச்ராத்தம்,தர்ப்பணமாவது செய்தேனா?உனது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உன் காதில் ஓதினேனா?அச்சமயம் எனக்குக் கிடைக்காமலும்,எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும்,சன்னியாசியானதால் எந்த வைதீகமும் கடைப் பிடிக்க முடியாது போனதால்,மனம் தவிக்கின்ற உன் மகனான என்னிடம் தயவு செய்ய வேண்டுமம்மா!உனது சரண கமலத்தைப் பிடித்து வேண்டுகிறேன்.
ஸ்லோகம்-4
அம்மா! என்னைக் காணும்போதெல்லாம் என் முத்தே கண்ணே,ராஜா, சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி,என்னிடம் கருணை, அன்பு, தயைகலந்த அமுதமான சொற்களால் என்னைச் சீராட்டி,,பாலூட்டி,தாலாட்டி வளர்த்த என் அன்னைக்கா வேகாத அரிசியை வாயிலே சமர்ப்பிப்பேன்?இதைப் பொறுக்க முடியவில்லையே! அம்மா நீயே சரண்.
ஸ்லோகம்-5
அம்மா,என்னைப் பெற்றபோது பொறுக்க முடியாத வேதனையுடன் அம்மா!அப்பா!சிவபெருமானே!கிருஷ்ணா!கோவிந்தா,ஹரே முகுந்தா என்றழைத்த வாக்கோடு கூடிய என் கருணைத் தெய்வமே!என் இரு கைகளையும் தூக்கி உனக்கு அஞ்சலி செய்து,உன்னைச் சரணடைகிறேன்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)