web counter
மதுரையில் இருந்து ஆ.வேல்முருகன்......
"கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும், காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன."
சனி, 26 நவம்பர், 2011
வியாழன், 19 நவம்பர், 2009
காசியில் நிகழும் அதிசியத்திற்கு காரணம் ?

சமீபத்தில் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் வாரணாசி (காசி) யை பற்றி செய்தி தொகுப்பு வெளியிட்டனர். இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது என்றாலும் இது பற்றி நான் ஏற்கனவே அறிந்திருந்ததால் இந்நிகழ்ச்சி பெரிதளவில் என்னை பாதிக்கவில்லை. இதை
விட அதிர்ச்சி தரும் தகவல்களை இணையத்தில் கொடுத்துள்ளனர் அதுவும் படங்களுடன்.
அகோரிகளின் உணவு பழக்கங்கள், அவர்கள் போதையில் மிதப்பது போன்றவைகள் ஏற்கனவே மிகப்பெரிய தகவல்களாக இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
அங்கு பின்பற்றப்படும் வாழ்க்கை முறைகள் இதுபற்றி பலவிதமான சர்ச்சைகள் ஆன்மீக மற்றும் பகுத்தறிவுவாதிகளால் எழுப்ப்பட்டாலும் அது இப்பொழுதய விவாதப் பொருளாக நான் கருதவில்லை.
காசி ஒரு உலக சுடுகாடு, அங்கு 1 நிமிடத்திற்கு ஒரு சவம் எரிக்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு 1000 த்திற்கு மேற்பட்ட சவங்கள் எரியூட்டப்படுகின்றது மற்றும் மாயான காட்டில் இருக்கும் நெருப்பு என்றுமே அனைவதில்லை. இவையனைத்தும் அங்கு வழக்கமான ஒன்று தான் அனைவரும் அறிநத்தே.
அஙுகு எங்கும் நிகழாத என்னை ஆச்சாரியப்படுத்திய சில
விசயங்களையே பற்றியே ஆராய்ந்து கொண்டிருந்தேன் ஆனால் அது பற்றி அத்தொலைக்காட்சியில் தெளிவு படுத்தவில்லை. ஒரு வேலை இந்த பதிவு தெளிவுபடுத்துமானால் அது அனைவருக்கும் நலமே.
நான் இணையத்தில் தேடிய அதிசயத்தக்க விசயங்கள்
காசியில் (அதிகப்படியான ) பிணங்கள எரிக்கப்படும் பொழுது, பிணவாடைகள் வீசுவதில்லை ஏன்? (நான் போகவில்லை அதுபற்றி அரிதியிட்டு கூறமுடியாது பொதுவாகஅனைத்து தரப்பினரும் கூறுகின்றனர், தொலைக்காட்சியினரும் இதையே ஆமோதித்தனர்)
காசியில் பூக்கள் மணப்பதில்லை ஏன்?
காசியில் உள்ள கங்கையாற்றில் குறிப்பாக மணிகர்ணிகா காட் எனும் பகுதிகாளாகட்டும், காசயின் பிற பகுதிகளாகட்டும் என்னதான் அசுத்தங்கள் ஏற்படுத்தினாலும் அந்நீர் கெடுவதில்லை. அது ஏன்? (அங்கு வாழ்கின்ற் மக்களால் கூறப்படுவது)
மாடுகள் முட்டுவதில்லை அது ஏன்?
(குறிப்பு இது இங்குள்ள கோவில்களிலும் பல மாடுகள் முட்டுவதில்லை ஆனால் அங்கு எந்த இடத்திலும் முட்டுவதில்லை எனப்படுகின்றது)
பல்லி ஒலிப்பதில்லை ஏன்?
கருடன் பறப்பதில்லை ஏன்?
இதற்கான அறிவியல்காரணங்களை தேடுகின்றேன் கிடைக்கவில்லை.ஒரு வேளை சீதோஷ்ண நிலை காரணமாக இருக்குமோ? அல்லது அந்த சவங்களின் மீதுபோற்றப்படும் மஞ்சள் துணிகள் காரணமாக இருக்குமா?
கங்கையில் தூய்மைக்கேடு நிறைந்திருந்திருந்தாலும் அது ஒடும் பிராவகத்தினால் அவை மறைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு்.
ஆனால் செப்பு குவளையில் பிடித்து வைக்கப்படும
கங்கைத் தண்ணீர் (பிணங்கள் எரிக்கும் இடத்திலிருந்து எடுத்தாலும்) பல மாதங்கள்ஆனாலும், ஏன் பல ஆண்டுகள்ஆனாலும், கெடுவதில்லை, என்பதற்கான காரணம் தெரியவில்லை.
ஒரு வேளை செப்பு குவளையில் வைக்கப்படும் அனைத்து (பிற ந்திகளிலிருந்து எடுத்த) தண்ணீரும் கெடாமல் இருக்குமா?
அதற்கு இல்லை என்றே பலரும் பதில் கூறுகின்றனர். பிற இடங்களில் இருந்தோ அல்லது பிற ஆறுகளிலிருந்தோ தண்ணீர் பிடித்து வைத்தால் ஒரு வாரத்தில் கெட்டு விடும் என்றே பதில் வருகின்றது. அது நமக்கும் தெரியும்.
அப்படியென்றால் கங்கை நீரில் கலந்திருப்பது என்ன?
இது பற்றி அத்தொலைக்காட்சியில் வெளியிடுவார்களா? என்று ஆவலுடன் எதிர் பார்த்தேன் ஆனால் அதை பற்றி ஒன்றையும் காணோம்.
மேற்கூறிய நிகழ்விற்கான புராணக் கதைகளின் காரணங்கள் ஒரளவுக்கு தெரியும். (அங்கு எரிக்கப்படும் பிணங்களின் வாடை வராமல் இருப்பதற்கான காரணத்தை தவிர, அதற்கான புராண கதைகளில் உள்ள
காரணமும் இருக்கும்.) ஆனால் அது இங்குத் தேவையில்லை. இதற்கான அறிவியல் காரணங்களேத் தேவை.
சமீபத்தில் சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாடு வாரியம் கங்கை நீரில் பி ஒ டிஅதாவது ஆக்சிஜன்அளவு அந்நீரில் மிகவும் குறைவாக இருப்பாதாக ஒரு
தகவலை வெளியிட்டுள்ளது. அப்படியிருக்க இந்த நீரை பருகினால் நோய்கள் அண்டாது என்றே பலரும் நம்புகின்றனர். ஒரு ஆங்கில ஆய்வாளர் இதை ஆராய்ந்ததில் இதில் மாசு எதுவும்
இல்லை என்று கூறியிருப்பதாக பிறர் சொல்ல அறிந்தேன். அது உண்மையா?
இது விஞ்ஞானத்தை மீறிய செயலாக இருக்குமா? அல்லது இன்னும் கண்டுபிடிக்கவில்லையா? அல்லது கண்டு பிடித்ததை
இன்னும் வெளியிடவில்லையா? ஒரு வேளை இந்தப் பதிவின் மூலம் கிடைக்கப்பெற்றால் .....................? பின்னூட்டத்தின் மூலம் எதிர்பார்க்கின்றேன்.
அமெரிக்க நாட்டில் ஆன்மீக முழக்கம்

சுவாமி விவேகானந்தர் பாரத தேசம் முழுவதும் சுற்றித் திரிந்து மக்கள் மத்தியில் ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார்.
அமெரிக்க நாட்டில் சிகாகோ நகரில் சர்வ சமய மகா சபையொன்று நடக்க இருக்கும் செய்தி சுவாமி விவேகானந்தரின் செவிக்கு எட்டியது. சர்வ சமய மகா சபையில் எப்படியாவது பங்கு பெற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அமெரிக்கா செல்வதற்கு தேவையான பணஉதவி அவருக்கு எளிதாகக் கிட்டவில்லை. உதவி செய்வதற்காக முன்வந்த சிலரும் பின்வாங்கி விட்டனர்.
சுவாமி விவேகானந்தர் எதோ சிந்தனையுடன் பாரத நாட்டின் புனித தலங்களில் ஒன்றான இராமேசுவரத்துக்குச் சென்றார். அங்கிருந்து கன்னியாகுமரிக்குச் சென்ற சுவாமி விவேகானந்தர் அங்கே கடல் நடுவே இருந்த ஒர் பாறையின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் தியானம் செய்தார்.
கன்னியாகுமரிலிருந்து சென்னை சென்ற சவாமி விவேகானந்தரை ஆன்மீகப் பற்றுடைய அன்பர்கள் பெருவாரியாகத் திரண்டு அன்புடன் வரவேற்று உபசரித்தனர். அமெரிக்காவுக்குச் செல்ல பணம் திரட்டி அளித்தனர்.
இலங்கை, சீனா, ஜப்பான் வழியாகப் பயணம் செய்து 1893-ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30-ஆம் தேதி அமெரிக்காவை அடைந்தபோது அங்கே பல கடுமையான சோதனைகளுக்கு அவர் இலக்காக நேர்ந்தது. அங்கே சர்வ சமய மகா சபை நடக்கும் காலத்தை மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போட்டு விட்டார்கள். மகா சபையில் கலந்து கொள்வதற்கு ஏதாவதொரு ஆன்மீக சங்கம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.
ஏறத்தாழ மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்குவதற்கான பொருளாதார வசதி சுவாமியிடம் இல்லை. தவிர அவரை மகாசபைக்கு பரிந்துரை செய்ய யாரை அணுக முடியும் ?
சோதனைகளையெல்லாம் கடந்து இறைவன் அருளால் விவேகானந்தர் சர்வ சமய மாநாட்டில் கலந்து கொள்வதற்கான அனுமதியைப் பெற்றார்.
சர்வ சமய மகாசபை என்று கூறப்பட்டாலும் அது கிறிஸ்தவ சமயப் பிரசார நோக்கத்துடனேயே இயங்கியதை விவேகாந்தர் விளங்கிக் கொண்டார்.
மகாசபைக் கூட்டம் தொடங்கப் பெற்றது. மகா சபையில் உரையாற்றியவர்களில் பெரும்பாலோர் உலகத்திலேயே தலைசிறந்த மதம் கிறிஸ்தவ மதந்தான் என்றும் மற்ற உலக மதங்கள் அத்தனையுமே போலிகள் என்பது போன்றும் பேசினார்கள்.
பேச வாய்ப்பளிக்கப்பட்டபோது சுவாமி விவேகானந்தர் சிங்கம் போலக் கம்பீரமாக எழுந்தார்.
மேலை நாடுகளில் எந்த சபையில் உரையாற்றுவதாக இருந்தாலும் சீமான்களே-சீமாட்டிகளே (லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்) என விளித்துத்தான் பேச்சைத் துவக்குவது வழக்கம்.
ஆனால் சுவாமி விவேகானந்தர் தமது குரலை உயர்த்திக் கம்பீரமாக அமெரிக்க சகோதரிகளே சகோதர்களே .. .. .. எனத் தமது பேச்சைத் துவக்கினார்.
சபையிலே குழுமியிருந்த ஆறாயிரம் அமெரிக்க மக்கள் தங்களைச் சகோதரிகளாக, சகோதர்களாக சகோதர பாசத்துடன் சுவாமிகள், விளிப்பது அவர்களின் உணர்வுகளைத் தொட்டு அசைத்தது. அவர்கள் நீண்ட நேரம் கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
உலகத்திலேயே மிகவும் தொன்மை வாய்ந்த சந்தியாசிகளின் சார்பில் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தொன்மை வாய்ந்த மதத்தின் சார்பில் நன்றி கூறுகிறேன். இவ்வாறு அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் தமது பேச்சைத் தொடர்ந்து அனைத்தையும் உள்ளடக்கிய பரந்து விரிந்த இந்து தர்மத்தைப் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, சமீப காலத்தில் அறிந்து கொண்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் வேதாந்த தத்துவத்தின் எதிரொலி போன்று தோன்றுகிறது. இவ்வளவு உயர்ந்த வேதாந்த தத்துவம் முதல் மிகவும் கீழ்நிலையில் உள்ள பலதரப்பட்ட புராணங்களை உடைய உருவ வழிபாடு வரை, பௌத்தர்களின் உலகாயதக் கொள்கைகளுக்கும் இந்து சமயத்தில் இடமுண்டு .. .. ..
சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தில் போதிந்திருக்கும் கருத்துக்கள் இன்றைய விஞ்ஞான யுகத்துக்கும் எவ்வாறு பொருந்தும் என்பதைக் தர்க்க ரீதியாக விளக்கினார். இந்து தர்மம் இந்திய எல்லைகளைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கமே வழி காண்பிக்கும் வல்லமை கொண்டது என்பதை உணர்த்தினார்.
அமெரிக்காவில் தமது பணிகளை முடித்துக் கொண்ட சுவாமி விவேகானந்தர் பல மேலை நாடுகளின் அழைப்பை ஏற்று அங்கெல்லாம் சென்று சொற்பொழிவாற்றி உலகப் புகழை அள்ளியவாறு 1897-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் தாயகத்தின் மண்ணை வந்து மிதித்தார். இங்கே நாம் பெருமைப்படக் கூடியது என்னவென்றால் அவர் தமது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்து சேர்ந்த இடம் நமது தமிழகந்தான்.
பாம்பனிலிருந்து இராமேசுவரம், இராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை நகர் வந்தடையும் வரை மக்களின் வரவேற்பினை ஏற்றுச் சொற்பொழிவுகளாற்றினார்.
சென்னை நகரத்தில்தான் சுவாமிஜிக்கு நண்பர்களும், பக்தர்களும் அதிகம். இங்கே சுவாமிஜிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் இதுவரை சென்னை நகரம் கண்டிராத அளவுக்கு மக்கள் கூட்டம் திரண்டது.
இதற்கு மேல் சுவாமி விவேகானந்திரின் வாழ்க்கையைப் பற்றி நாம் தனியாகத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது ? சுவாமிஜி தேசத்தோடு ஒன்றிப் போய்விட்டார். மக்களின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்துவிட்டார். அவர் அமரத்துவம் அடையும்வரை ஆன்மீக ரீதியாக, சமுதாய நோக்குடன் மனித நேயம் தவழ, தேசபக்தி மிளிர சுவாமிஜி ஆற்றிய தொண்டுதானே அவருடைய வாழ்க்கை வரலாறு.
தூய்மையான கொழுந்து விட்டு எரிகின்ற தேசப் பற்றும், பாரத மக்களிடம் அன்பும், சுவாமிஜியின் சேவையின் முக்கிய அம்சமாக இருந்தன. மதங்கள் பெயரால் மோதல்கள், ஜாதிப் பிரிவினைகள், சமூகப் பிரிவனைகள் போன்றவை நிறைந்த பாரத தேசத்தில் ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழந்தவர் சுவாமி மிரட்டிச் சமுதாய வாழ்க்கையைச் சீரழிக்கும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எளிதாகத் தீரவு காண அவர் நமக்கென விட்டுச் சென்றிருக்கும் அறிவுரைகளும், போதனைகளும் மட்டுமே உதவி செய்ய முடியும்.
காமராஜரின் சீரிய சிந்தனைகள்

காமராஜரின் சீரிய சிந்தனைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெறியுடன் செம்மையாய் வாழ வழிவகுக்கும் வித்த்தில் அமைந்துள்ளன. அவரது சிந்தனையில் உதித்த சீரிய கருத்துக்களை இப்போது காண்போம்.
பொறுமையைக் கடைப்பிடியுங்கள்
இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் பலர் மக்களிடம் உங்களுக்கு நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.
தேவையான செயல்களைக்கூட செய்ய மறுக்கிறார்கள். அவசரப்பட்டு சில செயல்களைச்செய்து அவமானத்திலும் அமுங்கிப் போகிறார்கள். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாக சில அரசியல் தலைவர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.
“பதறும் காரியம் சிதறும்” என்பார்கள். திட்டமிடாமல் அவசரப்பட்டு செய்யப்படும் செயல்கள் முடிவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும், மேலும் அவமானங்களை உருவாக்கும்.
இதனை உணர்ந்த பெருந்தலைவர் காமராஜர் நிதானமாகச் செயல்படுவதற்கு எளிய வழியாக “ஆகட்டும் பார்க்கலாம்” என்னும் வார்த்தைகளை உபயோகித்து வந்தார்.
எந்தக் காலத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பெருந்தலைவரின் சிந்தனையாகும்.
வீண் வம்புக்கு விலகிவிடுங்கள்
நம்மீது குறை சொல்பவர்களைக் கண்டால் நமக்கு எரிச்சல் வரும். நம்மீது வேண்டுமென்றே குறை சொன்னால் எரிச்சலோடு கோபமும் சேர்ந்து வரும். சில வேளைகளில் மற்றவர்கள் வீண் வம்பு செய்து நம்மைச் சண்டைக்கு இழுப்பார்கள்.
இதனால் நிலைகுலைந்து நிதானம் இழந்து செயல்படவும் வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான காலகட்டங்களில் பிரச்சினை கொடுப்பவரை விட்டு விலகி இருப்பது விவேகமான செயல் ஆகும்.
வீணாக வம்புக்கு வந்தாலும் அவர்களோடு சண்டையிடாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது.
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தமிழக இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த நேரம் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் பலர் குமரிஅனந்தன் அவர்களுக்கு உரிய மரியாதை தர வில்லை. பல்வேறு வித்த்திலும் அவரைத் தொந்தரவு செய்தார்கள்.
குமரி அனந்தன் சமாளித்துப் பார்த்தார். முடியவில்லை. பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்ட குமரிஅனந்தன், முடிவில் பெருந்தலைவர் காமராஜரிடம் சொன்னார்: மூத்த தலைவர்கள் தனக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்” என்பதைச்சொன்னால் காமராஜர் கண்டிப்பாக அவர்களை அழைத்துக் கண்டித்து, திருத்துவார் என எதிர்பார்த்தார் குமரிஅனந்தன்.
காமராஜர் நீ போகிற இடத்தில் ஒரு பெரிய பாறை இருக்குதுன்னா என்ன செய்வே? அதை அசைத்து தள்ளி வச்சிட்டாப் போவே! இல்லைன்னா அதைச் சுற்றித்தானே போவாய். அதைப் போல் சுற்றிப்போயேன் என்று சொன்னார். பெருந்தலைவரின் சீரிய வழிகாட்டல் கேட்ட குமரி அனந்தன் அமைதியாகிவிட்டார்.
வீணாக வம்புச்சண்டைக்கு இழுப்பவர்களை விட்டு விலகிவிடு என்பது கர்மவீர்ர் காமராஜரின் அன்புக் கட்டளை ஆகும்.
படிக்கும் போது அரசியல் வேண்டாம்
அரசியல் என்பது அறிவுள்ளவர்களைக் கூட சில வேளைகளில் அழித்துவிடும். அதுவும் மாணவப் பருவத்தில் குறிப்பாக இளம்பருவத்தில் அரசியலில் மாணவர்கள் ஈடுபடும் போது உணர்ச்சிகள் மேலோங்கி இருப்பதால் படிப்பு பாழாக வாய்ப்புள்ளது. கவனம் சிதறிவிடுவதால் படிப்பில் அக்கறை இல்லாமல் கோஷ்டி சேர்ந்து படிப்பை நிறுத்திக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
மாணவர்கள் தம்மோடு இருந்தால் அரசியலில் தனிபலம் கிடைக்கும் என்று இளம் இரத்தங்ளைத் தனது கட்சியின் வளர்ச்சிக்காக உரமாக்கிச் செயல்படுபவர்களும் உண்டு. ஆனால் காமராஜர் அரசியல் தலைவராக இருந்தாலும் மாணவர்கள் எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்பதைத்தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்.
ஒருமுறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டுப் பிரச்சனைகளைச் சந்தித்திருந்தனர். அவர்கள் அப்போது முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசரைக் காண்ச் சென்னை சென்றார்கள். அவர்களிடம் காமராஜர்.
படிக்கும்போது மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம்; படிப்பை முடித்த பின்பு எந்த அரசியலில் வேண்டுமானாலும் ஈடுபடுங்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் அவர்கள் பிரச்சனைக்குத்தீர்வு ஏற்பட உதவினார்.
படிக்கும்போது அரசியல் வேண்டாம் என்பது படிக்காத மேதையின் பண்புள்ள சிந்தனையாகும்.
உழைத்து வாழ வேண்டும்
இப்போதெல்லாம் உழைக்காமல் பிழைக்க வேண்டும் என்பதைச் சிலர் மனதில் கொண்டு சும்மா இருக்கிறார்கள். உடலுழைப்பு செய்யவும் தயாராக இல்லை. மூளை உழைப்புக்கும் தயாராக இல்லை. எனவே சோம்பலுடன் திரியும் கூட்டம் அதிகமாகிவிட்டது. ஒருநாடு வளர்ச்சிப் பெற வேண்டுமானால் அந்த நாட்டின் மக்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
ஒருமுறை ஆவடியில் காங்கிரஸ் மாநாடு சிறப்பாக நடந்தது. மாநாட்டில் ஜவஹர்லால் நேருவும், கலந்து கொண்டார். மாநாட்டில் கலந்து கொண்ட பெருந்தலைவர் காமராஜர் “கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்மச் சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை.
காந்திஜி காட்டிய வழியில் சமதர்மச் சமுதாயத்தை அமைப்போம்” எனப்பேசி மக்களின் மனதில் இடம்பெற்றார்.
உழைத்து வாழ வேண்டும் என்பது உத்தமர் காமராஜரின் சத்திய மொழியாகும்.
வீரமுடன் வாழுங்கள்
“நோயினால் மடிந்தவர்களைவிட பயத்தினால் இறந்தவர்களே அதிகம்” என்பார்கள். எதற்கெடுத்தாலும் நாளும் பயந்து வாழுகின்ற மக்கள் உண்டு.
“அஞ்சி அஞ்சி சாவார் - அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே”
என பாட்டுக்கொரு புலவர் பாரதியார் தெளிவாக நாட்டு மக்களின் நிலையை அன்றேபடம் பிடித்துக் காட்டினார். “கோழையாய் வாழ்வதைவிட வீரனாகச் சாவதே மேல்” என்பது நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் கருத்தாகும்.
நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். நாட்டுக்காக - விடுதலைக்காக, பாடுபட்ட நல்லவர்கள் வாழ்ந்த நம் நாட்டில், காமராஜர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்தது.
1949ஆம் ஆண்டு திருச்சியில் ஒருபொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது சிலர் குழப்பம் உண்டாக்க வெடிகளை வீசினார்கள்.
மேடை அருகே வெடி வெடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.
உடனே காமராஜர் “கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க நினைப்பவர்கள் இது மாதிரி வெடிப்பதில் பலனில்லை. வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும். வீரப்பரம்பரையிலே வந்தவர்கள் வியாதியில் கஷ்டப்பட்டு இறந்தார்கள் என்பது பெருமை கிடையாது” என அஞ்சாது உரையாற்றினார். கூட்டம் அமைதியானது.
வீரமுடன் வாழ்வதே விவேகமான செயலாகும் என்பது “பாரதரத்னா” காமராஜரின் சீரிய சிந்தனையாகும்.
எளிமையோடு இருங்கள்
எளிமையைக் கடைப்பிடிப்பதன்மூலம் சிறப்பான வாழ்க்கை வாழலாம் என்பதைக்கர்மவீர்ர் காமராஜர் அடிக்கடி உணர்த்தி வந்தார். முதலமைச்சராகப் பணி யாற்றிய காமராஜர் ஒருமுறை மதுரை விருந்தினர் மாளிகையில் தங்க நேரிட்டது.
மின்சாரக் கோளாறு காரணமாக அப்போது மின்விளக்குகள் விருந்தினர் மாளிகையில் ஒளி வீசவில்லை. ரிப்பேர் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள். அப்போது காமராஜர் “நான் படுக்க வேண்டும். எனவே அறையினுள் இருக்கும் கட்டிலை எடுத்து வந்து அந்த வேப்பமரத்தின் கீழ் வையுங்கள்” என்றார்.
வேப்பமரத்தின் கீழ் கட்டிலைக் கொண்டுவந்தார்கள். காமராஜர் கட்டிலில் படுத்துக்கொண்டார். அப்போது காமராஜரின் அருகில் காவலுக்காக ஒரு போலீஸ்காரர் நின்றார். அந்தப்போலீஸ் கார்ரைப் பார்த்த காமராஜர் “நீங்கள் ஏன் இங்கு நிற்கிறீர்கள். நீங்கள் போய் படுங்கள். என்னை யாரும் தூக்கிச் செல்ல மாட்டார்கள்” என்று கூறி அனுப்பி வைத்துவிட்டார்.
தனது காவலுக்கு பல்வேறு படைகளோடு உலா வரும் அரசியல்வாதிகள் மத்தியில் காமராஜர் வித்தியாச மானவராக திகழ்ந்தார்.
சட்டத்தை மதித்திடுங்கள்
முதலமைச்சராகப் பெருந்தலைவர் காமராஜர் பதவியில் இருந்த நேரம் ஒருநாள் இரவு கூட்டத்தில் கலந்துகொண்டு தனது வீட்டுக்குக்காரில் திரும்பினார்.
சென்னையில் ஒரு வழிப்பாடை ஒன்றில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் கார் செல்ல அனுமதி இல்லை. எனவே உடனே காமராஜர் காரை நிறுத்தச் சொன்னார்.
“ஏன் கார் செல்ல அனுமதியில்லாத பாதையில் செல்கிறார்? காரைத்திருப்பு” என டிரைவரிடனம் கண்டிப்புடன் சொன்னார். “ஐயா, இந்த ராத்திரி நேரத்தில் போக்குவரத்து ரொம்ப குறைவாகத்தானே இருக்குது. இந்தப்பாதை வழியே போனால் சீக்கிரம் வீட்டுக்குப் போய்விடலாம்” என்றார் டிரைவர்.
“இரவு நேரமென்றால் எப்படி வேண்டுமானாலும் போகலாமா? கூட்டம் இல்லை என்று இப்போது போனால் இது எப்போதும் பழக்கமாகிவிடும்.
சட்டத்தை இயற்றும் நாமே சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றால் மற்றவர்கள் சட்டத்தை எப்படி கடைப்பிடிப்பார்கள். முதலமைச்சர் என்றால் எப்படியும் போகலாமா?” என டிரைவரிடம் கூறிவிட்டு ஒழுங்கான பாதையில் செல்லுமாறு கட்டளையிட்டார்.
“சட்டம் இருந்தால் அதனை யாராக இருந்தாலும் மதித்து நடக்க வேண்டும்” என்பது காமராஜரின் எண்ணமாகும்.
ஒற்றுமையோடு வாழுங்கள்
கருத்து வேறுபாட்டினால் ஒருவருக்கொருவர் சண்டைப்போடுவது நல்லதல்ல. ஒற்றுமையுடன் வாழ்வதே சிறந்தது. முன்னேற விரும்புகிறவர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். என்பதை வலியுறுத்தினார் காமராஜர். 1960ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில்பேஇய கமராஜர்,
“குறுகிய உணர்ச்சிகளில் மனதைப் பறிகொடுத்துச் சண்டைப்போடக்கூடாது. இருப்பவர்கள் வேண்டுமானால் தாராளமாகச்சண்டைப்போட்ட்டும்; பணக்காரர்களுக்கு வேறு வேலையில்லை யென்றால் அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளட்டும். எங்களை விட்டுவிடுங்கள், நாங்கள் எல்லோரும் ஒரே இனம், அதாவது பட்டினிப் பட்டாளம்: எங்களைச் சண்டைக்குக் கூப்பிடாதீர்கள்.
வடக்கிலிருந்தாலும், தெற்கிலிருந்தாலும், தமிழன் என்றாலும் வங்காளி என்றாலும் ஏழைகள் எல்லோரும் ஒரே இனம்தான். நமக்குச்ச்ணைட் போட நேரமில்லை. நான் முன்னேற விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டார்.
“ஒற்றுமையே முன்னேற்றத்திற்கு அசைக முடியாத நம்பிக்கை அடித்தளம்” என்பது காமராஜரின் வாக்கு.
உழைப்புக்கு ஏற்ற கூலி கேளுங்கள்
காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் “உழுபவனுக்கே நிலம் சொந்த்ம்” என ஓங்கி குரல் கொடுத்தார்கள். வர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார். காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்பவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் “நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்.” என்றார் கூட்டம் அமைதியானது. எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்துடன் இருந்தனர்.
‘உழுபவனுக்குநிலம் சொந்தம்’ என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் ‘கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்’ என்றுசொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?
பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் ‘தனக்கே அரிசி சொந்தம்’ என்று சொல்லிவிட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?
வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். கடைசியில் சோறு சொந்தம்’ ன்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.
“உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் எனபதுதான் நல்லது” என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர் இந்தச் சம்பவம் காமராஜர் முதலமைச்சராகப் பணியாற்றிபோது சிவகிரியில் நடந்தது ஆகும்.
“உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது” எனப்து காமராஜரின் கருத்து ஆகும்.
லஞ்சம் வாங்காதீர்
ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரும், எழுத்தாளர் சாவியும் ஊட்டியில் சந்தித்தார்கள். முதலமைச்சராக இருந்த காமராஜர், எழுத்தாளர் சாவியை அருகில் அழைத்து “ஊட்டி ஏரியை சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையில் அழகு படுத்தணமுமாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என நான் வந்து பார்க்க வேண்டுமாம். வாருங்கள் படகில் போய்வருவோம்” என்றார்.
படகு சவாரி செய்யும்போதே “ஊட்டினா.. அது பணக்கார்ர்களுக்கு மட்டும் உரிய இடம் என்ற நிலை இருக்கக்கூடாது. அதை ஏழைகளும் அனுபவிக்க வேண்டும். இந்த ஏரியைச்சுற்றி நிறைய மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு நடுவே சின்ன காட்டேஜ்கள் கட்டி குறைந்த வாடைக்குக் கொடுக்க வேண்டும். சமையலுக்கு பாத்திரங்கள் கூட அரசாங்கமே கொடுத்திடனும். வாடையாக பத்து ரூபாய்க்கு மேல் வசூலிக்கக்கூடாது.
ஆனால் படுபாவிங்க இங்கே மரத்தைக்கூட வெட்டிவிடுகிறார்கள். மரத்தை வெட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. சட்டம் இருந்த என்ன பலன்? கலெக்டரைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போட்டுவிட்டால்பதும் ‘வெட்டிக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லிவிடுவார்ள் என்ற மிகவும் வருத்தத்தோடு காமராஜர் சொல்லிக்கொண்டே போனார்.
படகு போய்க்கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் “அதோ அங்கே பாருங்கள் இப்போதுதானே இதைப்பற்றிச் சொன்னேன்” என்றார் காமராஜர்.
அங்கே பார்த்தால்… ஒருபெரிய மரம் வெட்டப்பட்டு சாய்ந்து கிடந்தது. கலெக்டருக்கு நல்ல சாப்பாடு கிடைத்துவிட்டதாக நினைத்தாராம் எழுத்தாளர் சாவி.
அரசப் பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கிவிட்டு தகாத செயல்களுக்கு துணை போக்க்கூடாது” என்பது காமராஜரின் கொள்கையாகும்.
ஏழைகளுக்கு உதவிடுங்கள்
முதல்வராக இருந்தபோது பெருந்தலைவர் காமராஜர், சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நிறைய ஊர்களில கதர் துண்டுகள் போர்த்தி மரியாதை செய்தார்கள். நிறைய துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தீவிர தொண்டர், “இவ்வளவு துண்டுகளையும் வைத்து காமராஜர் இனி என்ன செய்வார்? நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப்போகிறார்” என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்து தனக்கு வைத்துக்கொண்டார்.
கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்ததும் அந்த தொண்டரைக் காமராஜர் அழைத்து “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றார். அந்தத் தொண்டர் அதிர்ந்து நின்றார். “ஒரு சாதாரண துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்து தலைவர் கேட்டுவிட்டாரே” என மனம் வருந்தினார்.
“தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால் இந்த துண்டை நாம் தொடக்கூடாது. ஏனென்றால்..இதெல்லாம் சென்னையில் உள்ள பாலமந்திர் என்ற ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்கக் கூடியதாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகவே இந்த ஏற்பாடு” என்றார் காமராஜர்.
“ஏழைகளுக்கு உதவிடுங்கள்” என்ற கருத்தை அழகாக விளக்கினார் காமராஜர்.
பசுவை மட்டும் வழிபாட்டுக்குரியதாக கருதுவது ஏன்?

எட்டிக்காயும் இறைவன் படைப்பே. எள்ளும் அவன் படைப்பே. அன்னாசிப்பழமும் அரளிக்காயும் அவன் படைப்பே. இருந்தாலும், எள்ளும் அன்னாசிப் பழமும் மனிதருக்கு ஏற்றதாக இருப்பது போல எட்டிக்காயும், அரளிக்காயும் இன்னும் பலவும் இல்லை.
அருவி நீரும், ஆற்று நீரும், கிணற்று நீரும், கடல் நீரும், குளத்து நீரும், நீர் தான் என்றாலும், எல்லா நீரும் அனைத்து மனிதர்க்கும் ஒரே அளவிலும், எப்பொழுதும் எல்லாத் தேவைகளுக்கும் பயன் படுவதாக அமையவில்லை.
தொன்றுதொட்டு மனித இனம் தான் கண்டவற்றில், சிலவற்றையே மிக்க பயன் அளிப்பதாக அனுபவித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே, அவற்றை போற்றி பாராட்டி தெய்வமாகவும் வழிபட்டு வந்திருக்கின்றது..
மரங்களில் வாழையையும், தென்னையையும், வேம்பையும், நம்மிடம் நன்றி பாராட்டுவதில் நாயையும் போற்றுவது போல, பசுவையே எல்லா இனங்களுக்கும் மேலாக வணங்கி, அட்சய பாத்திரமாக வற்றா ஊற்றாக போற்றி வருகிறது.
வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் இந்து மதம் அளித்து வந்திருக்கிறது.
பசுவை வெறுமனே மாடு என்று அழைக்காமல், பசுத்தாய், கோமாதா என்று வழங்கி வந்திருக்கிறது.
பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே மிருகம் பசு மட்டுமே.
3. ஐக்கிய ஸ்வரூபம் கோமாதா
எல்லாமே இறை வடிவம் என்றாலும், நாம் தொன்றுதொட்டு, சிலவற்றிலேயே, சில வடிவங்களிலேயே, அனைத்து குணங்களின் ஐக்கியத்தை உணர்ந்திருக்கிறோம்.
அர்த்த நாரீஸ்வரரில் சிவ-சக்தி ஐக்கியத்தையும்,
சங்கர நாராயணரில் சிவ-விஷ்ணு ஐக்கியத்தையும்,
லக்ஷ்மி நாராயணரில் விஷ்ணு-லக்ஷ்மி ஐக்கியத்தையும்,
நரசிம்மரில் மனித-மிருக ஐக்கியத்தையும்,
தாணுமாலயனில் ஹரி-ஹர-ப்ரும்ம ஐக்கியத்தையும்,
கணபதியில் யானை-தேவர்கள் ஐக்கியத்தையும்,
ஏகபாத த்ரிமூர்த்தியில் மூவரின் இணைவையும் காண்கிறோம்.
பலவற்றுள் ஐக்கியப்பாடு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் எல்லாமே சர்வ குண ஐக்கிய வடிவமே. யாவுமே நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒவ்வொரு வகை அளவு கலவை வடிவமே.
ஆணும் பெண்ணும் வித்தியாசமாக தோன்றினாலும், இரு பாலாருமே 45 'X' 'Y' க்ரோமசோம்களின் கூட்டே. இவற்றில் ('X' 'Y' - ல்)ஒன்று கூடினால் ஆண் என்றும், மற்றொன்று கூடினால் பெண் என்றும் கூறுகிறோம்.
ஒவ்வொரு ஜீவ அணுவின் அடிப்படை அமைப்பான DNA, ஒரு மனிதரின் பல்லாயிரக் கணக்கான மூதாதையர்களின் குணங்களை உள்ளடக்கி இருப்பது போலவும், மிகச்சிறிய ஆலம் விதை பிரும்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போலவும், ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒருமை வடிவமாகும்.
இங்கு ஒரு முக்கியமான செய்தியை கவனிக்க வேண்டும். இந்து மதம் பசுமாட்டைத் தவிர வேறு எந்த இனமும் தெய்வசக்தியற்றது என்று கூறவில்லை.
காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங் கைகளைப் பார்த்து நுனிப்பகுதியில் மகாலக்ஷ்மியும், இடையில் சரஸ்வதியும், கணுப்பகுதியில் பார்வதியும், (முச்சக்திகளும் இருப்பதை) நினைவுபடுத்திக் கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது.
எனினும் தோட்டத்துக் கனியை அறியாமல் இருப்பதே பொது குணம் என்பதால் நாம் நம்மை அறிவதற்கு ஏதுவாக பரம்பொருளை, முதலில் பிறவற்றில் இருப்பதை உணர, பல வழிவகைகளை இந்து மதக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இவ்வடிப்படையில் தோன்றியதே கோபூஜை (பசு வழிப்பாடு).
உலகில் உள்ள கோடிக்கணக்கான கீரை, காய், கனிகளையும், தெரிந்த பின்னரே சிலவற்றை உபயோகிப்போம் என்பதில்லை.
நமக்கு நன்மை அளிப்பதாக அறிந்ததை உடனே பயன்படுத்திடுகிறோம்.
இது போல பூச்சி முதல் பிரும்மாண்டமான இனம் வரை, ஒவ்வொன்றின் தெய்வ அம்சத்தை உணரும் வரை காத்திராமல், பசுமாடு போன்று, தெய்வாம்சம் அறியப்பட்ட இனங்களை வழிபட்டு பயன் பெறுவதே அறிவுடைமை.
நன்மை அளிப்பதாக அறிந்ததை மறந்திடக் கூடாது என்றும் கிடைத்த கனியை நழுவவிடக் கூடாது என்பதற்காகவும் துவங்கப்பட்டு தொடர்வதே கோமாதா பூஜையாகும்.
எல்லோரும் தத்தம் வீட்டிலேயே, பசு வழிபாடு செய்ய இயலாதிருக்கலாம் என்றே ஒவ்வொரு ஆலயத்திலும், பசுத்தொழுவம் அமைத்து, அன்றாடமும், கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆலயத்திலும் "கோ சாலை" (பசு மடம்) இருந்தால் அருகில்வாழ் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும்.
தினமும் பசுமடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை. அதோடு, முக்கிய நாட்களில் அல்லது பல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம். ஆலயத்திற்கு மட்டுமின்றி, அருகுள்ள மக்களுக்கு மட்டுமின்றி அகிலத்திற்கே அனைத்து நன்மையும் அளிக்கும்.
கோபூஜை செய்வோம் கஷ்டங்கள் தீரப்பெருவோம்.
பசுவை வழிபடுவோம் பரம்பொருளை அறிந்திடுவோம்.
சனி, 7 நவம்பர், 2009
வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமி விரதம்

மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமி தேவியைக் குறித்துச் செய்யப்படுவதே வரலட்சுமி விரதமாகும். விஷ்ணு என்பதற்கு எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள். லக்ஷ்மம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு பகவான் தான் எங்கும் நிறைந் துள்ளதை விளக்க, உலகிலுள்ள அழகுகள் அனைத்தையும் ஒன்றாக்கி அமைத்துள்ள அடையாளமே மகாலட்சுமி ஆகும்.
ஸ்ரீ(செல்வம்), பூ(பூமி), சரஸ்வதி(கல்வி), ப்ரீதி(அன்பு), கீர்த்தி(புகழ்), சாந்தி(அமைதி), துஷ்டி(மகிழ்ச்சி), புஷ்டி(பலம்) ஆகிய எட்டு சக்திகளும் அஷ்ட லட்சுமிகள் என்று அழைக் கப்படுகிறார்கள். அஷ்ட லட்சுமிகளும் திருமாலிடம் அடைக்கலம் பெற்றிருப்பதால் அவரை லட்சுமிபதி என அழைப்பர். இந்த சக்தி களையே லட்சுமியாக உருவகித்து வழிபடுகிறார் கள். இந்த சக்திகளின் மூலமாகத்தான் கல்வி, செல்வம், ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து வரங்களும் பெறப்படுகின்றன.
சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.
பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைப்பார்கள். சிலர் சிறு மண்டபம் அமைத்து அதில் கலசம் வைத்துப் பூஜை செய்வார்கள்.
கலசத்தில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, சந்தனம், மலர் ஆகியவற்றால் அலங்கரித்து, கலசத்தின்மேல் தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜை செய்வர். ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட்ட பின்னர், அதை வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.
வரலட்சுமி விரதம் பற்றிய புராணக் கதை ஒன்றைக் காண்போம்.
பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.
அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத் தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.
தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.
விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந் ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.
அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோம்.
வெள்ளி, 6 நவம்பர், 2009
வெற்றிக்கு வழி காட்டும் சிந்தனைகள்.
01. வெற்றியின் விதிகள் வகுப்பறையில் கற்பிக்கப்படுவதல்ல, வாழ்க்கையுடன் முட்டி மோதித்தான் அதைக் கற்க முடியும்.
02. எல்லாவிதமான கல்விகளும் கற்கப்பட்டாலும், ஆசிய நாட்டு பாடசாலைகளில் வெற்றியின் அறிவியல் கற்பிக்கப்படாமல் தந்திரமாக நீக்கப்பட்டுள்ளதை புரிதல் அவசியம்.
03. உலகக் கோடீஸ்வரர்களில் 80 வீதமானவர்கள் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து முன்னேறியவர்களே.
04. ஒரு புதிய சமுதாயத்தை படைக்க வேண்டுமானாலும், உங்களை நீங்களே ஒரு புதிய மனிதராகப் புத்தாக்கம் செய்ய வேண்டுமானாலும் முதலாவது தேவை வெற்றியைப்பற்றிய அறிவியலாகும்.
05. பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இலட்சிய வெறியுடன் உறங்கச் செல்பவர்களுக்கு தூக்கத்தில் வரும் கனவுகளில் தீர்வு கிடைக்கும்.
06. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் செய்யப் போகும் மாபெரும் சாதனையை கனவு காணுங்கள். அந்தத் துறையின் முன்னோடிகள் உங்களுக்கு மாலையிடக் காண்பீர்கள்.
07. எந்தத் துறையில் பணி செய்வது உங்களுக்கு இனிமையான அனுபவமாகத் தோன்றுகிறதோ அந்தத் துறையை நீங்கள் சாதிப்பதற்கான துறையாக தேர்வு செய்யுங்கள்.
08. பணம் சேர்ப்பதுதான் உங்கள் இலக்கு என்றால் எதற்காக சேர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களிடம் தெளிவான பதில் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்காக சேர்க்கிறீர்கள் என்றால் அந்தப் பணம் தமக்கு எதற்காக கிடைக்கிறது என்ற தெளிவு அவர்களுக்கு வேண்டும். இரண்டுமே இல்லாமல் பணத்தைச் சேர்த்து எதுவுமே இல்லாமல் மடிவோரே மனதரில் அதிகம்.
09. கால் போன போக்கில் அலையும் மனதை தெளிவான திட்டமிட்டு செலுத்த முதன்மையான ஒரு திட்டம் வேண்டும்.
10. இலக்குகளை உருவாக்கத் தெரிந்தவர்கள், குறி நிர்ணயிக்கப்பட்ட ஏவுகணை போல செயற்படுகிறார்கள். நடைப்பிணமாய் வாழ்வோரில் இருந்து இவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள்.
11. உங்களது முதன்மை இலக்கு பிரமாண்டமானதாக இருந்தால் அதைப் பகுதி பகுதியாக பிரித்து எழுதிக் கொள்ளுங்கள். பின் சிறிது சிறிதாக முன்னேறுங்கள்.
12. ஒருவரது எதிர்காலம் அவருடைய அன்றாட வேலை முறையால் தீர்மானிக்கப்படுகிறது.
13. எதை மேம்படுத்த வேண்டும், ஏன் மேம்படுத்த வேண்டும், எப்படி மேம்படுத்த வேண்டும், என்ன காலத்திற்குள் மேம்படுத்த வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேடி வையுங்கள்.
14. இனிப்பாக இருந்தாலும், கசப்பாக இருந்தாலும் திட்டத்தை மனதில் வைத்து முன்னேற வேண்டும்.
15. சரியாகத் திட்டமிடத் தவறும் அனைவரும் தோல்விக்காக திட்டமிடுகிறார்கள் என்பது தோல்வியின் விதிகளில் ஒன்றாக இருக்கிறது.
16. ஆங்கிலப் பேரறிஞர் ஜேம்ஸ் போஸ்வெல்ஸ் 1763ம் ஆண்டு அக்டோபர் 13 ம் திகதி எழுதிய கடிதம் திட்டமிடலின் அவசியத்தை உணர்வு பூர்வமாக வலியுறுத்துகிறது.
அருமையான இதயமும், ஒளிமயமான உடலும் கொண்ட மனிதன் நீ. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக நீ சோம்பேறியாகவும், சோர்வாகவும், முட்டாள்தனமாகவும், மகிழ்ச்சியின்றியும் காணப்படுகிறாய்.
இருண்ட ஆண்டுகள் இன்றோடு முடியட்டும், உன்னை ஆற்றல் மிக்க மனிதனாக மாற்ற இப்போதே முடிவு செய்துகொள். உனது பின்னடைவுக்குக் காரணம், உன்னிடம் ஒரு தெளிவான திட்டம் இல்லாததே என்பதை உணர்ந்து கொள். அறிவுபூர்வமான திட்டத்தை உருவாக்கிக் கொண்டு தயாராகு. நடைமுறைக்கு செல்லும் போது உனது திட்டம் விரிவாக்கம் பெறலாம். ஆனால் மனம் போன போக்கில் செல்வதையும், திட்டமின்றி செயற்படுவதையும் இப்பொழுதே நிறுத்திவிடு. இந்த உறுதி மொழயை இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள்.
17. பலூன் விற்ற வெள்ளை அமெரிக்கரிடம் ஒரு கறுப்பின சிறுவன் ஐயா கறுப்பு பலூன்களும் மேலே பறக்குமா என்று கேட்டான். அதற்கு அவர் தம்பி பறப்பிற்கும் நிறத்திற்கும் தொடர்பில்லை உள்ளே இருப்பதுதான் பறப்பை தீர்மானிக்கிறது என்றார். உடனே கறுப்பு பலூனை வேண்டி பறக்க விட்ட சிறுவனே மாட்டின் லூதர் கிங். ஆகவே உனக்குள்ளே இருக்கும் சரக்கை அதிகரித்தால் நீயும் உயரப்பறக்கலாம். நீ கீழே கிடப்படதற்கு பறக்கும் சரக்கு இன்மையே காரணம் என்பதை உணர்.
18. உங்களிடம் எவ்வளவு அழகு, பணம், அதிகாரம் இருந்தாலும், உலகம் உங்கள் செயலை வைத்தே உங்களை எடை போடுகிறது. உங்கள் மனதிற்குள் இருக்கும் உழைப்பற்ற உயர்வான சுய மதிப்பீடு மக்களிடம் உங்களைப்பற்றிய உயர்வை உருவாகாது.
19. நம்மில் பலரும் நம்மைப்பற்றி குறைவாக மதிப்பிடக் காரணம், சிறுவயதிலேயே நம்மிடம் விதைக்கப்படும் எதிர்மறையான நம்பிக்கைகள், மதிப்பீடுகள், கண்ணோட்டங்கள் என்பவைதான்.
20. இருபது வயதில் பிணமாகி எழுபது வயதில் புதைக்கப்பட்டான் என்று கருதத்தக்க சுவாரஸ்யமற்ற வாழ்க்கை வேண்டுமா அல்லது சவால்களை எதிர் கொள்ளும் சாதனை வாழ்க்கை வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும்.
21. விரும்பும் தகுதியை பெறுவதற்கு அது ஏற்கெனவே இருப்பது போல நடிப்பதும் ஒரு வழி என்று உளவியல் கூறுகிறது. நீங்கள் எந்தளவு சமூக அந்தஸ்த்து பெற விரும்புகிறீர்களோ அது வந்துவிட்டதாக நினைத்து நடவுங்கள்.
22. உங்கள் மனத்திரையை தொலைக்காட்சி திரையாகவும், பெருவிரலை ரிமோட் கன்ரோலை அமத்தும் கருவியாகவும் கருதி சரியான காட்சிகளை மனத்திரையில் விழுத்துங்கள்.
23. இலட்சியத்துடன் இணைக்கப்படாத உழைப்பு மெய் வருந்தக் கூலி தருமேயல்லாது சிறப்பான பலன்களை அள்ளித்தராது.
24. ஒரு பணியை தொலை நோக்குடன் அணுகத் தெரியாதவருக்கு அதில் முழுமையான ஈடுபாடு இருக்காது.
25. உங்களது உழைப்பு சரியான விளைவை தரவேண்டுமானால் ஒரு பணியை தொடங்க முன்பாகவே, அதனை உங்கள் மனதிற்குள் பயிற்சி செய்து நிறைவேற்றுவது ஒரு சிறந்த யுக்தி.
02. எல்லாவிதமான கல்விகளும் கற்கப்பட்டாலும், ஆசிய நாட்டு பாடசாலைகளில் வெற்றியின் அறிவியல் கற்பிக்கப்படாமல் தந்திரமாக நீக்கப்பட்டுள்ளதை புரிதல் அவசியம்.
03. உலகக் கோடீஸ்வரர்களில் 80 வீதமானவர்கள் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து முன்னேறியவர்களே.
04. ஒரு புதிய சமுதாயத்தை படைக்க வேண்டுமானாலும், உங்களை நீங்களே ஒரு புதிய மனிதராகப் புத்தாக்கம் செய்ய வேண்டுமானாலும் முதலாவது தேவை வெற்றியைப்பற்றிய அறிவியலாகும்.
05. பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இலட்சிய வெறியுடன் உறங்கச் செல்பவர்களுக்கு தூக்கத்தில் வரும் கனவுகளில் தீர்வு கிடைக்கும்.
06. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் செய்யப் போகும் மாபெரும் சாதனையை கனவு காணுங்கள். அந்தத் துறையின் முன்னோடிகள் உங்களுக்கு மாலையிடக் காண்பீர்கள்.
07. எந்தத் துறையில் பணி செய்வது உங்களுக்கு இனிமையான அனுபவமாகத் தோன்றுகிறதோ அந்தத் துறையை நீங்கள் சாதிப்பதற்கான துறையாக தேர்வு செய்யுங்கள்.
08. பணம் சேர்ப்பதுதான் உங்கள் இலக்கு என்றால் எதற்காக சேர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களிடம் தெளிவான பதில் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்காக சேர்க்கிறீர்கள் என்றால் அந்தப் பணம் தமக்கு எதற்காக கிடைக்கிறது என்ற தெளிவு அவர்களுக்கு வேண்டும். இரண்டுமே இல்லாமல் பணத்தைச் சேர்த்து எதுவுமே இல்லாமல் மடிவோரே மனதரில் அதிகம்.
09. கால் போன போக்கில் அலையும் மனதை தெளிவான திட்டமிட்டு செலுத்த முதன்மையான ஒரு திட்டம் வேண்டும்.
10. இலக்குகளை உருவாக்கத் தெரிந்தவர்கள், குறி நிர்ணயிக்கப்பட்ட ஏவுகணை போல செயற்படுகிறார்கள். நடைப்பிணமாய் வாழ்வோரில் இருந்து இவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள்.
11. உங்களது முதன்மை இலக்கு பிரமாண்டமானதாக இருந்தால் அதைப் பகுதி பகுதியாக பிரித்து எழுதிக் கொள்ளுங்கள். பின் சிறிது சிறிதாக முன்னேறுங்கள்.
12. ஒருவரது எதிர்காலம் அவருடைய அன்றாட வேலை முறையால் தீர்மானிக்கப்படுகிறது.
13. எதை மேம்படுத்த வேண்டும், ஏன் மேம்படுத்த வேண்டும், எப்படி மேம்படுத்த வேண்டும், என்ன காலத்திற்குள் மேம்படுத்த வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேடி வையுங்கள்.
14. இனிப்பாக இருந்தாலும், கசப்பாக இருந்தாலும் திட்டத்தை மனதில் வைத்து முன்னேற வேண்டும்.
15. சரியாகத் திட்டமிடத் தவறும் அனைவரும் தோல்விக்காக திட்டமிடுகிறார்கள் என்பது தோல்வியின் விதிகளில் ஒன்றாக இருக்கிறது.
16. ஆங்கிலப் பேரறிஞர் ஜேம்ஸ் போஸ்வெல்ஸ் 1763ம் ஆண்டு அக்டோபர் 13 ம் திகதி எழுதிய கடிதம் திட்டமிடலின் அவசியத்தை உணர்வு பூர்வமாக வலியுறுத்துகிறது.
அருமையான இதயமும், ஒளிமயமான உடலும் கொண்ட மனிதன் நீ. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக நீ சோம்பேறியாகவும், சோர்வாகவும், முட்டாள்தனமாகவும், மகிழ்ச்சியின்றியும் காணப்படுகிறாய்.
இருண்ட ஆண்டுகள் இன்றோடு முடியட்டும், உன்னை ஆற்றல் மிக்க மனிதனாக மாற்ற இப்போதே முடிவு செய்துகொள். உனது பின்னடைவுக்குக் காரணம், உன்னிடம் ஒரு தெளிவான திட்டம் இல்லாததே என்பதை உணர்ந்து கொள். அறிவுபூர்வமான திட்டத்தை உருவாக்கிக் கொண்டு தயாராகு. நடைமுறைக்கு செல்லும் போது உனது திட்டம் விரிவாக்கம் பெறலாம். ஆனால் மனம் போன போக்கில் செல்வதையும், திட்டமின்றி செயற்படுவதையும் இப்பொழுதே நிறுத்திவிடு. இந்த உறுதி மொழயை இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள்.
17. பலூன் விற்ற வெள்ளை அமெரிக்கரிடம் ஒரு கறுப்பின சிறுவன் ஐயா கறுப்பு பலூன்களும் மேலே பறக்குமா என்று கேட்டான். அதற்கு அவர் தம்பி பறப்பிற்கும் நிறத்திற்கும் தொடர்பில்லை உள்ளே இருப்பதுதான் பறப்பை தீர்மானிக்கிறது என்றார். உடனே கறுப்பு பலூனை வேண்டி பறக்க விட்ட சிறுவனே மாட்டின் லூதர் கிங். ஆகவே உனக்குள்ளே இருக்கும் சரக்கை அதிகரித்தால் நீயும் உயரப்பறக்கலாம். நீ கீழே கிடப்படதற்கு பறக்கும் சரக்கு இன்மையே காரணம் என்பதை உணர்.
18. உங்களிடம் எவ்வளவு அழகு, பணம், அதிகாரம் இருந்தாலும், உலகம் உங்கள் செயலை வைத்தே உங்களை எடை போடுகிறது. உங்கள் மனதிற்குள் இருக்கும் உழைப்பற்ற உயர்வான சுய மதிப்பீடு மக்களிடம் உங்களைப்பற்றிய உயர்வை உருவாகாது.
19. நம்மில் பலரும் நம்மைப்பற்றி குறைவாக மதிப்பிடக் காரணம், சிறுவயதிலேயே நம்மிடம் விதைக்கப்படும் எதிர்மறையான நம்பிக்கைகள், மதிப்பீடுகள், கண்ணோட்டங்கள் என்பவைதான்.
20. இருபது வயதில் பிணமாகி எழுபது வயதில் புதைக்கப்பட்டான் என்று கருதத்தக்க சுவாரஸ்யமற்ற வாழ்க்கை வேண்டுமா அல்லது சவால்களை எதிர் கொள்ளும் சாதனை வாழ்க்கை வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும்.
21. விரும்பும் தகுதியை பெறுவதற்கு அது ஏற்கெனவே இருப்பது போல நடிப்பதும் ஒரு வழி என்று உளவியல் கூறுகிறது. நீங்கள் எந்தளவு சமூக அந்தஸ்த்து பெற விரும்புகிறீர்களோ அது வந்துவிட்டதாக நினைத்து நடவுங்கள்.
22. உங்கள் மனத்திரையை தொலைக்காட்சி திரையாகவும், பெருவிரலை ரிமோட் கன்ரோலை அமத்தும் கருவியாகவும் கருதி சரியான காட்சிகளை மனத்திரையில் விழுத்துங்கள்.
23. இலட்சியத்துடன் இணைக்கப்படாத உழைப்பு மெய் வருந்தக் கூலி தருமேயல்லாது சிறப்பான பலன்களை அள்ளித்தராது.
24. ஒரு பணியை தொலை நோக்குடன் அணுகத் தெரியாதவருக்கு அதில் முழுமையான ஈடுபாடு இருக்காது.
25. உங்களது உழைப்பு சரியான விளைவை தரவேண்டுமானால் ஒரு பணியை தொடங்க முன்பாகவே, அதனை உங்கள் மனதிற்குள் பயிற்சி செய்து நிறைவேற்றுவது ஒரு சிறந்த யுக்தி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)