சனி, 19 செப்டம்பர், 2009

மனிதனுக்கு நிம்மதி அளிப்பது தூக்கம். இதனை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?

ஜோதிடத்தைப் பொறுத்தவரை 12ஆம் இடம் சயன (உறக்கம்) ஸ்தானம். பழங்கால ஜோதிட நூல்களில் இதைப் பற்றி சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக சுக்கிரன் 12இல் இருந்தால் அதிநவீன வசதிகளுடன் கூடிய படுக்கையறையில், ரம்பை, மேனகை, ஊர்வசி போன்ற பெண்களுடன் அவர் உறங்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.

சந்திரன் 12இல் இருந்தால் வாசனைத் திரவியங்கள் சூழ்ந்த அறையில், இலவம்பஞ்சணையில் அந்த ஜாதகர் உறங்குவார். அதேபோல் அவர் உண்ணும் உணவும் தரமிக்கதாகவே இருக்கும்.

பொதுவாக 12க்கு உரிய கிரகம் சிறப்பாக இருந்தாலும் படுத்த உடனே தூக்கம் வரும். ஒருவேளை 12இல் சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகர் தனது கையை தலைக்கு கொடுத்து, காலைக் குறுக்கிக் கொண்டு உறங்குவார். நிம்மதியான, ஆழ்ந்த உறக்கம் கிடைக்காது.

பொதுவாக ரயில்வே பாதைக்கு அருகேயுள்ள வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு இதுபோன்ற கிரக அமைப்பு பெரும்பாலும் காணப்படும். அவர்கள் உயர்ரக கட்டில், பஞ்சணையில் தூங்கினாலும் நிம்மதியான தூக்கம் வராது.

ராகு 12இல் இருந்தால் பாம்பு உள்ளிட்ட கொடிய ஊர்வனங்கள் உலாவக் கூடிய இடத்தில் அந்த ஜாதகர் உறங்க நேரிடும். மேலும் 6க்கு உரியவன் 12இல் இருந்து 12க்கு உரியவனுடன் சனி சேர்ந்தால் அந்த ஜாதகர் கொடிய பாம்புகள் சூழ்ந்த இடத்தில் அல்லது மரத்தில் தூங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. குரு 12இல் மறைந்தால் அரசுக்கு சொந்தமான இடங்கள், கட்டிடங்கள், கோயில்களில் அந்த ஜாதகர் உறங்குவார்.

ஒரு சிலருக்கு 12க்கு உரிய கிரகம் 12ஆம் இடத்திலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும். அவர்களுக்கு நிம்மதியான, நிலையான உறக்கம் கிடைக்கும். இப்போதும் நாம் ஒரு சிலரைப் பற்றிக் குறிப்பிடும் போது, “என்ன வேலையாக இருந்தாலும் இரவு 9 மணிக்கு அவர் தூங்கி விடுவார்; அதேபோல் எவ்வளவு அசதியாக இருந்தாலும் காலை 5 மணிக்கு எழுந்து விடுவார்” என்று கூறுவோம். அவர்களுடைய ஜாதகத்தில் 12க்கு உரியவர், 12இல் ஆட்சி பெற்றிருப்பார்.

மேலும் ஒரு சிலர் இரவு எத்தனை மணிக்கு படுத்தாலும், அதிகாலையிலேயே எழுந்துவிடும் தன்மை உடையவர்களாக இருப்பர். அவர்களுக்கு லக்னாதிபதி சிறப்பாக இருப்பதே காரணம். ஒரு சிலருக்கு 12இல் செவ்வாய் இருந்தால் கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்குவார். இவர்களுக்கு வேறு எங்கு படுத்தாலும் தூக்கம் வராது.

லக்னாதிபதியும், 6க்கு உரியவரும் சேர்ந்திருந்தால் கோழித் தூக்கம்தான் கிடைக்கும். இதுபோன்ற அமைப்பை உடையவர்கள் தூக்கத்தில் சிறு சப்தம் கேட்டாலும் உடனடியாக விழித்துக் கொள்வர். மீண்டும் தூக்கம் பிடிப்பது குதிரைக் கொம்பாக இருக்கும்.

இதேபோல் லக்னாதிபதியுடன், 6, 12க்கு உரியவர்கள் சேர்ந்திருந்தால் கனவுத் தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். இதனால் அவருக்கு நிம்மதியான தூக்கம் இருக்காது.

கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?


அவர்கள் கடும் கோபத்துடன் இருந்தார்கள். வெட்டப் பட்ட பசுமாட்டின் தலையைக் கோயில் வாசலில் எறிந்து தங்கள் மிரட்டலின் தீவிரத்தை வெளிப்படுத்தினார்கள் - “இந்தப் பகுதியில் கோயிலேயே இருக்கக் கூடாது” என்ற மிரட்டல். ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தினர் ஜும்மா நமாஸ் முடிந்தவுடன் மதவெறி கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர். அவர்கள் தலைவரான ஹாஜி சொன்னார் - “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்”.

உடனடியாக அரசு கோயில் கட்டும் வேலைகளை நிறுத்துமாறு ஆணையிட்டது.

கோயிலை எதிர்க்கக் காரணம்? ”மலேசியா இன்சைடர்” இதழில் செய்தியாளர் ஷாஜ்வான் முஸ்தபா கமால் எழுதுகிறார் - “செக்‌ஷன் 23 பகுதி வாசிகளான மலாய் முஸ்லீம் எதிர்ப்பாளர்கள், இந்தப் பகுதிகள் இந்துக் கோயில் அமைவதை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் இங்கு ரத்த ஆறு ஓடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். 90% மலாய் முஸ்லிம்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் இந்துக் கோயில் கட்டப் படுவது அவர்கள் உணர்வுகளை மதிக்காமல் செய்யப் படும் செயல் என்றும் கோயிலில் நடக்கும் விஷயங்கள் அவர்களது வாழ்க்கையில் தொந்தரவு ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறினர். ’கோயிலில் இருந்து வரும் சத்தங்கள் எஙக்ள் தொழுகையைத் தொந்தரவு செய்யும், எங்களால் முழுமையான, ஒழுங்கான முஸ்லிம்களாக வாழ முடியாத நிலை ஏற்படும்’ என்றும் அவர்கள் முறையிட்டனர்.”

“மலேஷியா ட்ரூலி ஏஷியா” (Malaysia-truly Asia) என்று தன்னைப் பற்றிப் பெருமை பீற்றிக் கொண்டு , பெரும்பான்மையினராக இந்துக்களைக் கொண்ட இந்திய சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்க விளம்பரம் செய்யும் நாட்டின் லட்சணம் இது !


Courtesy: The Malaysian Insider

இந்துப் பணம் வேண்டும், அதை வரவேற்போம், ஆனால் அவர்களது மதத்தை அவமதிப்போம்! - இதுதான் கல்வியறிவு பெற்ற, பணம் படைத்த, நவீன முகம் கொண்ட முஸ்லிம்-பெரும்பான்மை நாடாகத் தன்னைக் காட்டிக் கொள்கிற இந்த நாட்டின் “ட்ரூலி ஏஷியா” செய்தியின் சாராம்சம்.

ஆனால் மலேசிய அரசே திட்டமிட்டு இந்துக்களை நசுக்குகிற இந்த அப்பட்டமான அராஜகததை எதிர்த்து உலகின் மிகப் பெரிய இந்துப் பெரும்பான்மை தேசத்திலிருந்து ஏதாவது எதிர்ப்பு வந்ததோ?

டென்மார்க் முகமது நபி கார்ட்டூன்களையும், கனடா இளைஞர்கள் செய்யும் மத அவதூறுகளையும் பற்றி இந்தியாவில் அங்கலாய்ப்பவர்கள் மலேசியாவிலும், மற்ற இடங்களிலும் இந்துக்கள் மீது தொடர்ந்து நடக்கும் அடக்குமுறைகள் விஷயத்தில் மொத்தமாக மௌன விரதம் பூண்டு விடுகிறார்கள்!

இம்ரான் ஹஷ்மியின் பச்சைப் பொய்களை தார்மீக ஆர்வத்துடன் ஊதிப் பெருக்கும் ஊடகங்களுக்கு, வெட்டப் பட்ட பசுமாட்டுத் தலையைக் காட்டி இந்துக்கள் மிரட்டப் படும் உண்மைத் தகவல் ஒரு சின்ன செய்தி கூட அல்ல! கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை, காட்மாண்டு முதல் ஜெட்டா வரை ஏன் எல்லா இடங்களிலும் கொத்துக் கொத்தாக இந்துக்கள் படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர் என்று பிரைம்டைம் அல்லாத நேரத்தில் ஒரு சின்ன உரையாடல் நடத்தக் கூட அவைகளுக்குத் தோன்றுவதில்லை.

அரசியல் சட்டத்தின் படி தன்னை இந்து நாடாக சமீபகாலம் வரை அறிவித்திருந்த ஒரு நாடு, தனது தேசத் தலைவரான மன்னரின் அரண்மனை முன்பு அந்த நாட்டின் மிகப் பெரிய மசூதியைக் கட்ட அனுமதி அளித்திருந்தது; மதமாற்றங்களையும் அனுமதித்திருந்தது. ஆயினும் மதச்சார்பின்மை பிரகடன கோலாகலங்களுடன் அதன் வீழ்ச்சி துல்லியமாகத் திட்டமிட்டு நிகழ்த்தப் பட்டது.. இப்போது நாம் பசுபதிநாதர் ஆலயத்தின் இந்து பூசாரிகள் வெறித்தனமாக அடித்துத் தாக்கப் படுவதையும் காண வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த அறுபதாண்டுகளாக, “இந்துக்களாக” இந்துக்களின் அரசியல் சக்தியும், பெருமிதமும் தொடர்ச்சியாக வீழ்ந்து வருகின்றது. இந்துக்களை ’அறுவடை செய்தல்’ அமோகமாக நடந்துவருகிறது என்று ஒரு சாரார் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் தான் அதைப் பற்றி அலசவேண்டியும் இருக்கிறது.

ஒரு பறவைப் பார்வையாக, உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள் - இது எப்படி நிகழ்ந்தது? ஏன் நிகழ்ந்தது? தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், காபூல் முதல் ராவல்பிண்டி வரை, கராச்சி முதல் லாஹூர் வரை ஒவ்வொரு இடத்திலிருந்தும் இந்துக்கள் துரத்தப் பட்டிருக்கிறார்கள். முதலில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தீர்மானித்து, ஜின்னாவின் நேரடித் தாக்குதல் (direction action) படுகொலைகளால் பெரும் பீதியடைந்திருந்த காந்தி உள்ளிட்ட தலைவர்களால் ஒப்புக் கொள்ளப் பட்ட தேசப் பிரிவினையின் காரணமாக. பிரிவினைக்குப் பின்னும் இந்துக்கள் காஷ்மீரில் மிகக் குரூரமான இன ஒழிப்புக்கு ஆளானார்கள். ஐந்து லட்சம் இந்துக்கள் தங்கள் முன்னோர்களின் புராதன பூமியையும், வீடுகளையும், கோயில்களையும், சோலைகளையும், ஏன் தங்கள் உலகமாயிருந்த வாழ்க்கை முழுவதையுமே விட்டு விட்டு ஓடும் நிலைக்குத் தள்ளப் பட்டார்கள்.

புதிதாக உருவான பாகிஸ்தானில் வாழலாம் என்று தீர்மானித்த இந்துக்கள் தினந்தோறும் அவமதிப்பைச் சகிக்க வேண்டி, வேலைவாய்ப்புகளும் அரசியல் உரிமைகளும் முற்றிலுமாக மறுக்கப் பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறார்கள்.


Pakistani Hindu Bheel community show photos of girls who have been kidnapped and converted

அவர்களது பெண்கள் வன்புணர்வுக்கு ஆளாகிறார்கள், பலவந்தமாகத் தூக்கிச் செல்லப் படுகிறார்கள். அவர்களது கோயில்கள் இடிக்கப் படுகின்றன, பண்டிகைகள் தடை செய்யப் படுகின்றன, மயான பூமி கூட மறுக்கப் படுகிறது. இந்து அமெரிக்க ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் 2008ம் ஆண்டிற்கான இந்து மனித உரிமைகள் பற்றிய அறிக்கையின் முன்னுரை கூறுகிறது - “பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் கூட, வருடத்தின் முதல் ஆறு மாதங்களிலேயே கொலை, வன்புணர்வு, கோயில் இடிப்புகள் என்று 270 சம்பவங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. பாகிஸ்தானில் பெருமளவில் இந்துக்களைக் கொத்தடிமைகளாகப் பிடித்தல், இந்துப் பெண்களைக் கடத்தி பலவந்தமாக இஸ்லாமுக்கு மதமாற்றுதல் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்துக்களின் மீதான வன்முறை கலந்த அடக்குமுறைக்காக உலக அளவில் மலேசியா கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. முதல்முறையாக ரஷ்யாவும் இந்துக்களுக்கெதிரான செயல்பாடுகளுக்காக பட்டியலில் இடம் பெறுகிறது. 1947ல் பங்களாதேஷ் மக்கள் தொகையில் 30 சதவீதமாக இருந்த இந்துக்கள், இன்று 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளனர். 1991ல், 2 கோடி இந்துக்கள் பங்களாதேஷிலிருந்து “மறைந்து விட்டதாக” அந்த நாட்டின் சென்சஸ் சொல்லிற்று.”

அவர்கள் இப்பேர்ப் பட்ட குரூரங்களுக்கு ஆட்படுத்தப் படுவதற்கு ஒரே காரணம் அவர்கள் இந்துக்களாக இருப்பது. அவர்களது இந்துத் தன்மை, அதாவது இந்துத்துவம் (Hinduness). அது தான், அது மட்டுமே தான் ஐயா. பன்முக வாழ்க்கையைக் கற்றுத் தரும் இந்துத்துவம். ஜனநாயகத்தை சாத்தியமாக்கி, நிலைநிறுத்தும் இந்துத்துவம். கற்பனைக்குக் கூட எட்டாத அளவில் தனிமனித சுதந்திரத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் தரும் இந்துத்துவம்!


இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் இலங்கை, சவுதி அரேபியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், பூடான், ஃபிஜித் தீவுகள், மலேசியா, மேற்கிந்தியத் தீவுகள் (டிரினிடாட் & டொபாகோ) ஆகிய நாடுகளில் இந்துக்கள் மீதான அத்துமீறல்கள் பற்றிய பல விவரங்களை அந்த அறிக்கை அளிக்கிறது. இதில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் அடக்கம். இன அழிப்புகள், பெண்களுக்கெதிரான வன்முறைகள், படுகொலைகள், கோயில் அழிப்புக்கள், அரசியல்-சமூக புறக்கணிப்புக்கள், வாக்குரிமை பறிப்புக்கள், பாரபட்சமான நடத்தை மற்றும் பலவந்தமான மதமாற்றங்கள் உள்ளிட்ட எல்லாவிதமான அத்துமீறல்களுக்கும் மேற்குறிப்பிட்ட நாடுகளில் உள்ள இந்து சமூகங்கள் ஆட்படுத்தப் படுகின்றன. மிகச் சோகம் தரும் விஷயம்.

ஆனால் அதை விட சோகம் தரும் விஷயம் இந்துக்களின் காயங்களையும், வலிகளையும் காண்பிப்பதற்குக் கூட இடம் இல்லை என்பது தான். இந்து-அல்லாதவராக இருந்தால் தான் ஊடகங்களின் விசாரிப்பையும், கவனிப்பையும் பெறமுடியும் என்ற நிலை உள்ளது.

காலவெள்ளத்தின் ஓட்டத்தில் மானுட சுதந்திரத்தையும், பன்முகத் தன்மையையும் காப்பாற்றி வரும் மத வரையறைகளைக் கடந்த பழம்பெரும் அறநெறி, தர்மவழி, உலகெங்கும் அரசு அதிகாரங்களும், வெறுப்பியல் பிரசாகரர்களும் தொடுக்கும் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் மட்டுமல்ல; அதன் காயங்கள் கூட பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன; இதற்கு என்ன காரணம்? அதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

லட்சுமி நிவாசம் செய்யும் மிட்டல்களும், அம்பானிகளும் கோடிக்கணக்கில் செல்வம் கொழிக்கும் இந்துக்கள். ஆயினும் அவர்கள் இந்து நோக்கத்திற்கும், நலன்களுக்கும் உதவக் கூடும் என்ற எண்ணம் அவர்களே உட்பட யாருக்கும் தோன்றுவதில்லை. இங்கு ஒரு ஷாருக்கான் தனது மத உணர்வை நெஞ்சில் சுமக்க முடியும், ஈராக்கில் முஸ்லிம்கள் சாவது குறித்து தன் வேதனையை வெளிப்படுத்த முடியும், அது பாராட்டுக்குரிய விஷயமாகிறது! ஆனால் ஒரு சச்சினோ, அமிதாப் பச்சனோ வடகிழக்கு இந்தியாவிலோ அல்லது வேறெங்கோ இந்துக்கள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதல்கள் குறித்து ஆதங்கமும் வருத்தமும் தெரிவித்து கேட்டிருக்கிறீர்களா? அது இங்கே நிகழக் கூடுமா? எப்படி நிகழும்? தங்களது மதச்சார்பின்மைக்கு பங்கம் வரும் என்றல்லவா அவர்கள் முதலில் யோசிப்பார்கள்!

ஆனால் அது எப்படி என்று தான் புரியவில்லை. மதச்சார்பின்பைக்கு எப்போது பங்கம் வரும்? ஒரு மதத்தினருக்கு எதிராக இன்னொரு மதத்தினரைத் தூண்டிவிடும்போது. ஆனால் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக வாழும் தர்மத்தை, அதை உயிராகக் கொண்டு அமைந்த விலைமதிப்பற்ற உங்களது சொந்த வாழ்க்கை நெறியை முன்நிறுத்துவதும், அதைப் பாதுகாப்பதும் பெருமைக்குரிய விஷயம் அல்லவா? அது எப்போது வெட்கப் படும் விஷயம் ஆனது?

இந்து சமூகத்தின் செல்வாக்குள்ள தலைவர்களே இந்து வாழ்வுரிமையையும், நலன்களையும் கண்டுகொள்ளாமல் கைவிடுவது என்பது மிக மோசமான விஷயம். எந்த அளவுக்கு என்றால், இந்துக்களின் வலிகளையும், காயங்களையும் முன்னிறுத்தி அரசியல் ரீதியாக எடுத்துச் செல்லும் அமைப்புகளின், தலைவர்களின் மனநிலையையும் இது பாதிக்கிறது. இந்த “நவீன மதச்சார்பின்மை” தரும் அழுத்தங்கள் அவர்களது முடிவுகளிலும், நிலைப்பாடுகளிலும் தாக்கம் ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. மேலும், பொதுத் தளத்தில் சில செயல்பாடுகள் காரணமாக, இந்த பிரசினைகளை மக்களிடம் எடுத்துச் சென்று பொதுஜன ஆதரவை முடுக்கித் திரட்டுவதற்கான தார்மீக உரிமையையும், நம்பகத் தனமையையும் கூட அந்த அரசியல் தலைமைகள் இழந்து வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தெற்காசியா முழுவதும், மக்கள் தொகையிலும், அரசியல் அதிகாரத்திலும் இந்துக்கள் தொடர்ந்து தேய்ந்து வருவது பற்றிய கவலை யாருக்கும் இல்லை; அதைப் பற்றிப் பேசினால் உடனே செக்யுலரிச சாட்டையை எடுத்து விளாசுகிறார்கள். அரசியல் தலைவர்கள் இந்து உரிமைகளையும், நலன்களையும் வலியுறுத்தும் பொறுப்பை ஒரேயடியாகக் கைவிட்டு விட்டார்களோ? ஒரு அரசியல் கட்சி இந்து அடையாளத்தை முன்னிறுத்துவது என்பது போலி மதச்சார்பின்மையில் ஊறிய சமூக சக்திகளும் மற்றும் அரசு அதிகாரமும் அதைத் தீண்டத் தகாததாகக் கருத அழைப்பிதழ் விடுப்பதாகும் என்ற ஒரு கருத்தாக்கத்தை இவர்களே உருவாக்கி உலாவ விடுகிறார்கள்!

மலேசிய இந்துக்களின் இடர்ப்பாடுகள் இந்து அரசியல் அதிகார உரிமைகள் உலகெங்கும் அழிந்து வருவதற்கு ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. சோழ, பாண்டிய, ஸ்ரீவிஜய, விஜயநகர பேரரசுகளின் மகோன்னதத்திற்கும், சிவாஜியின் இந்து ராஜ்யத்திற்கும் பின்வரும் காலங்களில், மலேசியாவிலும், நேபாளத்திலும் இந்துக்கள் அடித்து நொறுக்கப் படுவதையும், அவர்களது புனித நூல்கள் ஜெட்டா விமான நிலையத்தில் கிழித்துக் குப்பைத் தொட்டியில் போடப் படுவதையும் தான் நாம் காண வேண்டுமா?

இப்போது, இந்து சமூகத்தின் அரசியல் சாராத சக்தி மையங்களும் திரண்டெழ வேண்டும். மாற்றுக் கருத்துக்கும் மதிப்பளிக்கும் பழம்பெரும் தர்ம நெறியைக் கட்டிக் காப்பதற்காக, உண்மையான இந்து அரசியல் சக்திகள் மீண்டும் விழித்தெழ அவை உதவ வேண்டும். அதுவே இப்போது செய்யவேண்டிய பணியாகும்.

மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்


அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் கவனித்திருக்கலாம்; அங்கே ஒவ்வொரு வளாகத்திலும் வாகனம் நிறுத்தும் இடங்களில் ஊனமுற்றவர்களுக்காக என்றே சிறப்பாக இடங்கள் ஒதுக்கி இருப்பார்கள். அவற்றில் வேறு யாராவது நிறுத்தினால் அபராதம் கட்டவேண்டிவரும். பொதுக் கழிவறைகள், பேருந்துகள் என்று எல்லா இடங்களிலும் அவர்களுக்குத் தனி வசதிகள் உண்டு. இதையெல்லாம் பார்த்து வியந்து இந்த அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கிறார்களே, நமது நாட்டில் இது போல இல்லையே என்று எண்ணி வருந்தியது உண்டு. ஊனமுற்றவர் என்ற சொல்லுக்கு Physically Challenged, Physically Disabled என்று கூட சொல்லாமல் இப்போது “Differently abled” என்று மாற்றுத் திறன் கொண்டோர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

நமது நாட்டில் மாற்றுத் திறன் கொண்டவர்களைப் பார்க்கும் பார்வையே வேறு. அண்மையில் நடந்த சம்பவம் இது. பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அருகில் சக்கர வண்டியில் மாற்றுத் திறன் கொண்ட ஒருவர் அமர்ந்திருந்தார். அந்த வழியாக வந்த மற்றொருவர் அவரைக் கண்டு கையிலிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை இவர் கையில் எடுத்துப் போட்டார். கையில் திடீரென்று விழுந்த காசைப் பார்த்த இவர் பொங்கி எழுந்து விட்டார். ‘அடப்பாவி, நான் ஒன்றும் பிச்சைக்காரன் இல்லை.. நானும் பஸ் ஏறத்தான் வந்தேன். வேண்டுமானால் உனக்கு பத்து ரூபாய் நான் தருகிறேன்,’ என்று கோபப்பட்டார். காசு போட்டவர் மன்னிப்பு கேட்டும் அவரால் பொறுக்க முடியவில்லை. இப்படித்தான் நமது சமூகம் மாற்றுத் திறன் கொண்டவர்களை பரிதாபத்துக்குரியவர்களாகவும், உதவி தேவைப்படுபவர்களாகவும் கருதி தமக்கு சமமான நிலை அளிக்காமல் ஒதுக்கி விடுகிறது.


நமது சமூக எதிரொலிப்பாக திரைப்படங்களிலும் மாற்றுத் திறன் கொண்டவர்களை கதையில் ஒரு சுமையாகவும், பரிதாபமாகவும், சமயத்தில் வில்லத்தனமாகவும் காட்டி ஒரு வித அருவருப்பையே ஏற்படுத்தி விடுகின்றன. இத்தகைய சூழலில் சாதாரணமாக ஊனம் உள்ளவர் ஆணாக இருந்தாலே அவர் பல இன்னல்களையும், சங்கடங்களையும், சவால்களையும் சந்திக்க நேரிடும். அதிலும் ஒரு பெண் ஊனமாக இருந்துவிட்டால் அவ்வளவுதான். அவள் சமூகத்தில் மேலும் பல சவால்களை சந்திக்க நேரிடும். அதுவும் அவளுக்கு திருமணம் என்று வரும்போது உடல் ஊனம் கூட இருக்க வேண்டாம், குள்ளமாகவோ, கருப்பாகவோ இருந்தால் கூட அதையும் ஊனமாக எண்ணி அதிக வரதட்சணை கேட்டவர்கள் உண்டு. இவையெல்லாம் பெருமளவு இப்போது மாறிக் கொண்டு வருகின்றன. இருந்த போதும், நமது சமூகத்தில் மாற்றுத் திறன் கொண்டவர்களின் வாழ்வு மலர்ப்பாதை என்று சொல்லிவிட முடியாது.

பழனி மாம்பழ கவிச்சிங்க நாவலர் என்று ஒரு பெரும்புலவர் இருந்தார். அவருக்கு கண்பார்வை கிடையாது. அவர் வெறும் கவிஞர் மட்டும் அல்ல. முருகனின் அருள் பெற்றவர். அவரை சேதுநாட்டு மன்னர்கள் ஆதரித்து வந்தனர். அந்த மன்னர்களின் அரசவைக்கு பாடி பரிசில் பெற மற்றொரு புலவர் ஒருவர் வந்தார். வந்தவர் தாம் நூறு செய்யுள்கள் இயற்றி முதன் முறையாக அரங்கேற்ற வந்திருப்பதாக அறிவித்தார். பின்னர் அவைப் புலவராக அமர்ந்திருந்த நாவலரைக் கண்ட அவர், நாவலர் கண்பார்வை அற்றவர் என்று கண்டு, அவை மங்கலமாக இல்லையே என்று குறிப்பாக நாவலரை வெளியேறுமாறு கூறி அவமதித்தார். அக்காலங்களில் ஊனத்தை அமங்கலம் என்று கருதினார்கள். இப்போது அந்த எண்ணத்தை நினைத்தால் ஒரு விதத்தில் வியப்பாகக் கூட இருக்கும்.

நாவலரும் மறைவாக விலகினார். புலவர், தான் எழுதி வந்த பாடல்களை அரங்கேற்றம் செய்து முடிக்க, நாவலர் வெளியே வந்து இவை அனைத்தும் தான் ஏற்கனவே இயற்றியது என்று கூறி அதிர வைத்தார். தன் அபாரமான ஞாபக சக்தியால் ஒரே ஒரு முறைதான் கேட்டபோதும் பிழையின்றி அந்தப் புலவர் பாடிய அத்தனை பாடல்களையும் பாடினாராம். புலவர் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு பரிசுகள் பெறாமல் திரும்பிப் போக எத்தனிக்கவும், கவிச்சிங்க நாவலர் அவரை மன்னித்து மன்னரிடம் பரிசு பெற்றுக் கொடுத்தாராம்.


மங்கலம் அமங்கலம் என்று பிரித்து வைத்திருப்பது ஒரு மனோதத்துவ மருத்துவம் என்று கண்ணதாசன் கூறுவார். சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கிடைக்கும் போது மனம் மகிழ்ந்து உடல் சிலிர்க்கும் உணர்வைப் பெறுவது போல், இந்த மங்கல வழக்குகளும் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி அளிக்கின்றன என்று சொல்வார். இதுவரையில் சரி; ஆனால் நல்ல எண்ணத்தை பின்னணியாகக் கொண்ட இது போன்ற செயல்கள் கூட காலப்போக்கில் சமூக வக்கிரங்கள் ஏற்றப்பட்டு, கணவனை இழந்த பெண்ணைக் காண்பது அமங்கலம், ஊனமுற்றவர்களைப் பார்ப்பது கூட அமங்கலம் என்று மாறியது. அந்தணர் தனியாளாக வருவதைக் காண்பதும் அமங்கலம் என்று சொல்வது உண்டு. ஆனால் இது என்னவோ இந்து மதத்துக்குண்டான இழிவு என்று சொல்வதற்கில்லை.

ஏனெனில் இந்து மதத்தில் ஊனத்தை ஒரு ஒதுக்கக்கூடிய விஷயமாகவே கருதியதில்லை. சனாதன தருமத்தை நீரூற்றி வளர்த்த பெரியவர்கள், ரிஷிகள், ஏன் சில தெய்வங்கள் கூட, உடலில் ஊனம் உடையவர்களாக இருக்கிறார்கள். கண்ணனின் கீதைக்கு நிகராக அஷ்டவக்ர கீதை என்ற புகழ்பெற்ற நூலை அருளிய அஷ்டவக்ரர் உடலில் எட்டு கோணல்களைக் கொண்டவர். நவக்ரஹங்களில் ஒரு தெய்வமான சனி பகவான் ஒரு கால் இல்லாதவர். கண்ணனைக் காதலித்த பெண்களில் ஊனமுற்ற பெண்ணும் இருந்திருக்கிறாள். ஊனமுற்றவர்களை விலக்கி வைக்காமல் சமூகத்தில் அவர்களும் எல்லோரையும் போல அவரவருக்குரிய பங்கை அளித்து வருவதையே இந்து மத இதிகாச புராணங்கள் பதிவு செய்துள்ளதை இச்சம்பவங்கள் மூலம் அறியலாம்.


பின் ஏன் ஊனத்தை அமங்கலம் என்று எண்ணக்கூடிய அளவுக்கு நேரிட்டது? இதற்குப் பின்னுள்ள சமூகப் பின்புலங்களை சற்று விரிவாகத்தான் அலச வேண்டும். கூட்டாக வாழ்வதே பழைய நாள்களில் பெரும்பான்மையாக இருந்த குடும்ப அமைப்பு. அதில் சொந்தத் தாய் தந்தையர் மட்டும் அல்லாது சின்ன தாத்தா, பெரிய அத்தை என்று தூரத்து உறவினர்களைக் கூட வைத்து சம்ரட்சிப்பது தருமம் என்றே எண்ணி வந்திருக்கிறார்கள். மாற்றுத் திறன் கொண்டவர்களும் விதிவிலக்கல்ல. அவர்களையும் அரவணைத்து குடும்பத்தில் அவருக்கு அதிக கஷ்டம் தெரியாமல் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.

ஆனால் அந்நியப் படையெடுப்புகள், சுரண்டல்கள், கொள்ளைகளினால் வளம் குன்றி தனிப்பட்ட வாழ்க்கையைத் தள்ளுவதே பெரிய கஷ்டம் என்று ஆனபின் எல்லா தருமங்களும் உதிர்ந்து போக பல குறுகிய மனப்பான்மைகளும், சுயநலமும் சேர்ந்து பல மூட நம்பிக்கைகளை வளர்த்து விட்டன. இதன் நீட்சியாகவே குழந்தைத் திருமணம், சதி போன்ற கொடும் பாதகமான செயல்கள், சமூக சுயநலங்கள் நடைமுறை ஆகி, அது பெரும்பான்மை மக்கள் பின்பற்றி வந்த இந்து மதத்தின் மீது சுமத்தப் பட்டு, பரந்த நோக்குள்ள கொள்கைகள் எவ்வளவோ இருந்தும் மூடநம்பிக்கைகளும் இந்து மதக் கொள்கைகளாகப் பரிணமித்து விட்டன.

நமது இன்றைய காலகட்டத்தில் நாம் கண்கூடாக எத்தனையோ முதியோர் இல்லங்கள் பெருகி வருவதைக் காணவில்லையா.. வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்களின் விளைவுதானே இப்படி பெற்றவர்களையே சுமையாக எண்ண வைத்திருக்கிறது. இதை யாரும் பாவம் என்று நினைக்காத சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. சில நூறு வருடங்களில் வயதான பெற்றோர்களை தள்ளி வைப்பது புனிதச் செயலாகவும் மதக் கொள்கையாகவும் கூட மாறக்கூடும். இப்படித்தான் அந்தந்த காலகட்டத்தின் சமூக மதிப்பீடுகள் மதக்கொள்கைகளாக மாறிவிடுகின்றன என்று தோன்றுகிறது. இவ்வாறே ஊனத்தையும் அமங்கலம் என்னும் எண்ணம் வந்திருக்க வேண்டும்.

இக்காலத்தில் இவை அனைத்தும் முற்றிலும் மாறா விட்டாலும் ஊனமுற்றோர் குறித்த சமூகத்தின் பார்வை பெருமளவு மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.. இப்போது அவ்வாறு அமங்கலம் என்று நினைப்பதை சாதாரணக் கருத்தாகக் கூட யாரும் நினைப்பதில்லை. இது போன்ற பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போதும் நகைப்புக்கு உரியதாகத்தான் எண்ணுவோம். இந்து மதம் இப்படி எத்தனையோ மூட நம்பிக்கைகளையும் சீர் திருத்தங்களையும் விலக்கியும் ஏற்றும் கடந்து வந்திருக்கிறது. இதில் கவனிக்கத் தக்க அம்சம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கோ ஒரு நாட்டில் யாரோ ஒருவர் செய்ததை, சொன்னதை இன்னமும் அப்படியே அமுல்படுத்தத் துடிக்கும் ஆபிரகாமிய மதங்களுடன் ஒப்பு நோக்கும்போது இந்து மதமே மாற்றத்தை ஏற்றுக் கொள்கிற முற்போக்கான மதம் என்பதில் ஐயமில்லை.


இதற்கு நேர்மாறாக முற்போக்கு முகமூடி அணிந்த கிறிஸ்தவ மதத்தில் நடப்பதைச் சொன்னால் மேலும் நகைப்புதான் எழும். எங்கெல்லாம் ஏழை எளிய மக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் வெளிநாட்டுப் பண உதவியுடன் களமிறங்குகிற மிஷனரிகள் மாற்றுத் திறன் கொண்டவர்களையும் வைத்து ஒரு கூத்து நடத்துகிறார்கள். பிறவி ஊனம் உள்ளவர்களைக் குணப்படுத்துகிறேன், நடக்க முடியாதவர் நடப்பார், குருடர் பார்வை பெறுவார், வாய் பேச முடியாதவர் பேசுவார் என்று போலி உத்திரவாதங்களை அள்ளிவிட்டு, அப்பாவி மக்களை மிஷனரிகள் ஏமாற்றி மதம் மாற்றுகிறார்கள். சாதாரண மக்களும் இவர்கள் வலையில் விழுந்து மதம்மாறுகிறார்கள். தமது குறை தீராத போது, அந்த மக்களுக்குப் போதுமான நம்பிக்கை இல்லை என்று கூறி தப்பித்துக் கொள்ளுகிறார்கள். இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆனால் நடவடிக்கை எடுக்க முயன்றால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்பாடு என்று திரிக்கப்படும் என்று எண்ணி நடவடிக்கை எடுக்க யாரும் துணிவதில்லை.


மிராக்கிள் ஹீலிங் (Miracle Healing) என்றொரு தனி அறிவியலையே இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் குறிவைப்பது ஏழை எளியவர்கள், நோயாளிகள் மாற்றுத் திறன் கொண்டவர்கள் போன்றவர்களைத்தான். கிறிஸ்தவத்தில் இது போல ஏதாவது மிராக்கிள் — அற்புதங்கள் செய்தால்தான் செய்பவரை ‘புனிதராக’ ஏற்றுக்கொள்வார்கள். அன்னை தெரேசா இப்படி எதுவும் செய்ததாகத் தெரியாவிட்டாலும் அவருக்கு புனிதர் என மரியாதை கிடைப்பதற்காகவே, ஒருவருக்கு கருப்பை புற்று நோயை அவர் தனது அற்புத சக்தியால் குணப்படுத்தினார் என்று கதைகட்டப் பட்டது. அப்படியும் புனிதர் என்ற பட்டம் பெற குறைந்தது இரண்டு அற்புதங்களாவது செய்தாகவேண்டும் என்கிற கட்டாயத்தை கிறிஸ்தவ தலைமை விதிக்க, அப்படி இரண்டாவது அற்புதம் எதுவும் அன்னை தேரேசாவால் நடக்காமல் போனதால், ‘அர்ச்சிக்கப் பட்டவர்’ என்கிற பட்டம் மட்டுமே கிடைத்தது.

இப்படி இன்றைய நவீனமான காலத்திலும் இன்னமும் அற்புதங்கள் நிகழ்த்துவதன் மூலம் உடல் ஊனங்களைக் குணப்படுத்த முடியும் என்று கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் மிகவும் முற்போக்கான மதம் என்று எல்லோரையும் நம்ப வைக்கிறார்கள். சில நாள்கள் முன்பு ஆனந்த விகடன், சாமியார்கள் ஸ்பெசல் என்று இணைப்பிதழ் ஒன்று வெளியிட்டார்கள். கிளுகிளுப்புக்காக பலான சாமியார்கள் பற்றிச் செய்தி வந்ததே தவிர, இந்த பாதிரி சாமிகளைப் பற்றி ஒரு வரி கூட இல்லை. போலிச் சாமியார்களில் பாதிரியார்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்லர். ஆனால் விகடன் போன்ற பத்திரிகைகள் ஏனோ கண்டும் காணாமல் இருக்கின்றன.

மாற்றுத் திறன் கொண்டவர்களுக்குத் தேவை நம்முடைய இரக்கம் இல்லை. சமூகத்தில் மற்றவர்களுக்கு ஈடான மரியாதையும் இடமும்தான் அவர்களுக்குத் தேவை. அதை விடுத்து அவர்களைப் பிரித்து வைப்பதோ, சந்தையாக நினைத்து மத வியாபாரம் செய்வதோ மிகவும் கீழ்த்தரமான செயல்.

கண்ணன் என்னும் கலாசார பிரவாகம்

இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றில், தனிப்பட்ட ஒரு மனிதனோ, அல்லது சம்பவமோ மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லமுடியாது. ஆனால் கண்ணனுடைய தாக்கம் இந்திய வரலாற்றில், இலக்கியத்தில், பண்பாட்டில், கலாசாரத்தில் எல்லாவற்றிலும் இருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை கிருஷ்ணன் ஒரு மிக முக்கியமான அம்சம். கலாசார மையம். எவ்வித அறுபடுதலுமற்ற தொடர்ச்சியான ஆளுமை.

கிருஷ்ணனின் காலகட்டம்:

கிருஷ்ணன் பிறந்து சற்றேறக்குறைய 5200 ஆண்டுகள் ஆகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் தொல்லியல் நிபுணர்கள். கண்ணன் எப்படி வாழ்ந்தான் என்பதைப்பற்றி அறிவது மட்டுமல்லாமல், கண்ணனுடைய வாழ்க்கை இன்றைய வாழ்க்கைக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுவும் முக்கியம். அதற்காகவே இந்தியா முழுவதும் கண்ணனை மையப்படுத்திக் கண்காட்சிகள் நடத்தி வருகிறோம். இந்த கண்காட்சியின் முக்கியநோக்கமே கண்ணன் எப்படி என்றென்றைக்குமான ஒரு ஆளுமையாக இருக்கிறான் என்பதை உணர்த்துவதே. இந்த கண்காட்சியின் பெயர் The Glorious World of Kanna - கண்ணனின் பெருமைவாய்ந்த உலகம். இந்தக் கண்காட்சியில் கண்ணன் பிறந்து வளர்ந்த இடமான கோகுலம்,பிருந்தாவனம், துவாரகை ஆகிய இடங்களில் உள்ள திருக்கோவில்கள், அங்கு நடைபெற்ற அகழ்வாய்ச்சிகள், அப்போது கிடைத்த அரிய தகவல்கள் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லியிருக்கிறோம். அதன் மூலம் கண்ணனின் காலத்தைப் பற்றி நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.


அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வந்த சமயத்தில் பத்தாயிரத்துக்கும் அதிகமான கிரேக்கர்கள் கண்ணனை வழிபட்டார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அவை மிகவும் சுவைமிக்க ஆதாரங்கள். உதாரணத்திற்கு, மத்திய பிரதேசத்திலுள்ள் டெக்ஸ் என்னும் நகரத்தில் உள்ள ஒரு கருட ஸ்தம்பம் பற்றிச் சொல்லலாம். இந்த ஸ்தம்பத்தை உருவாக்கியவர் ஒரு கிரேக்கர். அவர் கண்ணனை ’என்னுடைய தலைவர், கடவுள் வாசுதேவ கிருஷ்ணன்’ என்று சொல்கிறார். அதேபோல் சமீபத்தில் ஆப்கானஸ்தானில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்ணன், பலராமனுடைய காசுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான் என்பது அந்த காலத்தினுடைய காந்தஹார். காந்தாரி பிறந்த இடம். காந்தாரியின் சகோதரன் சகுனி பிறந்த இடம். ஆகவே கண்ணனுடைய தாக்கம் இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ளது என்பது நமக்குத் தெரியவருகிறது.

இரண்டாவது, மஹாபாரதம் நடைபெற்ற காலகட்டம் வழியாகவும் கண்ணனின் காலத்தை நாம் யூகிக்கலாம். மஹா பாரதம் நடந்தது சுமார் 5000 ஆண்டுகள் முன்பு. துவாரகை என்பது தற்போதைய குஜராத்தில் உள்ளது. அதிலிருந்து ஏறக்குறைய ஒரு 150 கிலோ மீட்டர் டோல வீரா என்ற இடம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகத்திலேயே முழுவதுமாக ’உருவாக்கப்பட்ட ஒரு நகரம்’ என்று சொல்லலாம். உலகின் பத்து அதிசயங்களில் ஒன்றாக இதையும் சேர்த்துள்ளனர். டோல வீராவுக்கு நான் போயிருந்தபொழுது, ஏறக்குறைய 5000 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நகரம் மிக செழிப்பாக இருந்திருக்கவேண்டும் என்பதை உணர முடிந்தது. அங்கு பல்வேறு வகையாக கட்டடங்கள் இருந்திருக்கவேண்டும். உயர்வர்க்கத்தினருக்கு, நடுத்தர வர்கத்தினருக்கு, அங்காடிகளுக்கு என பல்வேறு கட்டடங்கள் இருந்திருப்பதற்கான சான்றுகளைப் பார்க்கமுடிந்தது. ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியான குடிநீர் இணைப்பு என்று, மிகவும் பிரமிப்பான வகையில் அந்த ‘உருவாக்கப்பட்ட நகரம்’ இருந்துள்ளது. இதனுடைய காலகட்டம் கிமு 3200 என்று தொல்லியலாலர்கள் கணித்துள்ளனர். அதாவது இன்றிலிருந்து கிட்டத்தட்ட 5200 ஆண்டுகளுக்கு முன்னால்!. இது ஏறக்குறைய கிருஷ்ணர் பிறந்த, வாழ்ந்த காலகட்டம்தான். ஆகவே டோல வீராவும் கண்ணனுடைய தலைநகராயிருந்திருக்கலாம், கண்ணன் சார்ந்த ஒரு இடமாயிருக்கலாம் என்று இப்போது சொல்லுகிறார்கள்.

கண்ணன் - ஒரு நேர்மறைப் பிம்பம்

கண்ணனைப்பற்றி மிகப்பிரபலமான ஒரு ஸ்லோகம் உண்டு. அது ‘கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்று சொல்லுகிறது. ஜகத்துக்கெல்லாம் குரு என்பது கண்ணனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை. ஜகத்குரு என்று சொல்லும்பொழுது நமக்கு என்ன நினைவில் தோன்றவேண்டும்? ஒரு மனிதன், 125 ஆண்டுகள் முழுமையாக, வெற்றிகரமான வாழ்க்கையை நடத்திக் காண்பிக்க முடியுமென்பதை உலகுக்கு அறிவித்தவர் கண்ணன் என்பதே. அதாவது ஒரு மனிதனுடைய ஒட்டுமொத்த தீரம். இதைப்பற்றி மேல்நாட்டு அறிஞர்கள், ’கண்ணனுடைய வரலாறு மனிதனுக்கு மனிதநேயத்துக்கு மட்டுமல்ல; மனிதனுடைய வெற்றிக்கு ஒரு சான்றாக இருக்கிறது’ என்கிறார்கள். ஏனென்றால் கண்ணன் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றார். பதினெட்டு நாள் போரையும் எதிர்கொண்டு ஆயுதமெதுவும் எடுக்காமல், ஒட்டுமொத்த போரையும் உள்வாங்கி, பாண்டவர்களின் வெற்றிக்காக திறமையான திட்டங்களையும் வியூகங்களையும் வகுத்தவர். வகுத்ததோடு மட்டுமன்றி அர்ஜுனனுக்கு சாரதியாகவும் இருந்துகொண்டு போரில் நேரிடையாகப் பங்குபெற்றவர். அதாவது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களையும் நஷ்டங்களையும் எப்படி சமாளிக்கலாம் என்பதை, கூடவே இருந்து சொல்லிக்கொடுத்த ஒரு தலைவர். ஒரு தோழர்.

அதுமட்டுமில்லாமல் இன்றைய மேலாண்மை சார்ந்த பல்வேறு நேர்மறைக் கூறுகளை நாம் கண்ணனிடம் காணமுடியும். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் அறிவுபூர்வமான தளத்தில் இருந்ததோடு, நடைமுறை வாழ்க்கையிலும் இயைந்து கிடக்கிறது. கண்ணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எங்கள் அமைப்பில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை உங்களுக்குச் சொன்னால், கண்ணன் எப்படி நம் வாழ்க்கையில் கலந்திருக்கிறான் என்பது புரியும்.

கண்ணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, தினசரி வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சினையை சமாளிக்க ஏறக்குறைய 35 சூத்திரங்களை (formula) வகுத்திருக்கிறோம். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும், அதற்கேற்ற ஒரு சூத்திரத்தைப் பயன்படுத்தமுடியும். மிக மிக எளிமையான மற்றும் நடைமுறை சாத்தியங்கள் நிறைந்த சூத்திரங்கள். அந்த அளவிற்கு கண்ணனுடைய தாக்கம் இன்றும் செல்லுபடியாகிக்கொண்டிருக்கிறது. எனவேதான் கிருஷ்ண உள்ளுணர்வு நிலை (Krishna Consciousness) பற்றி ஓயாது பேசுகிறோம்.


சில உதாரணங்களைச் சொன்னால் எப்படி கண்ணனின் வாழ்வு இன்றும் பொருந்தி வருகிறது என்பதனை உணர்ந்துகொள்ள முடியும். குருக்ஷேத்திரப் போர் நடந்தபோது பீஷ்மருக்கு திடீரென்று ஒரு ஆசை. கண்ணனின் ரௌத்ரமான, வீரமான பாவத்தைப் பார்க்க வேண்டும் என்கிறார். அது முடியாத காரியம். ஏனென்றால், கண்ணன் போரின்போது ஆயுதத்தை எடுக்கமாட்டேன் என்று சொல்லியிருக்கிறான். ஆனால் பீஷ்மர் அவ்வாறு வேண்டியது கண்ணனுக்கு தெரிந்துவிட்டது. பீஷ்மர் கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஒரு பக்தர். எனவே பக்தர் சொன்னதை கேட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் அதை எப்படி செய்வது? காத்துக்கொண்டிருக்கிறார். கால, தேச வர்தமானங்களுக்காக கண்ணன் காத்துக்கொண்டிருக்கிறார். பீஷ்மர் கேட்டது போரின் நான்காவது நாளில். கண்ணன் ஐந்தாவது நாளும் ஒன்றும் செய்யவில்லை. ஆறாவது நாளும் ஒன்றும் செய்யவில்லை, ஏழாவது நாள் காலை. அர்ஜூனனுடைய உயிராற்றல் மிகவும் குறைவாக இருந்தது. அர்ஜுனன் சரியாக வில்லைப் பயன்படுத்திப் போர் செய்யவில்லை.

இந்த சமயத்தில் கிருஷ்ணர் என்ன செய்கிறார் என்று பாருங்கள். ‘அர்ஜுனா நீ பயனற்றவன். உனக்கு ஒன்றும் தெரியவில்லை. என்னைப் பார், நான் போய் சண்டைபோட்டு பீஷ்மரை கொல்கிறேன், நீ பேசாமல் இரு’ என்று கூறிவிட்டு வேகமாக ஓடுகிறார். ஓடும்போது கண்ணெல்லாம் சிவந்துபோய்விடுகிறது. கையில் வில்லை எடுத்துக்கொண்டு போகிறார். எந்தமாதிரியான ரூபத்தை பீஷ்மர் பார்க்க ஆசைப்பட்டாரோ அந்த ரூபத்திலேயே சென்றார் கண்ணன். உடனே அர்ஜுனன் பின்னாலேயே ஓடிவந்து அவர் காலிலே விழுந்து ’கண்ணா! நீ இதுமாதிரி செய்யாதே, ஏனென்றால் எனக்கு கெட்டபெயர் வந்துவிடும்’ என்றுகூறி, அவரை அழைத்துக்கொண்டு போகிறான். அர்ஜுனனின் தேகத்தில் ஒரு புத்துணர்ச்சியும் வேகமும் வந்துவிடுகிறது. இதுவும் கண்ணனின் செயலே. இது ஒரு புறம் இருக்க, கண்ணன் உடனே பீஷ்மர் விரும்பிய ரூபத்தைக் காட்டிவிடவில்லை.அந்த நேரத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தார். மேலாண்மை இயக்குநர் ஒருவர், தனக்குக் கீழே வேலை செய்யும் ஒருவரின் மேல் ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றால்கூட உடனே எடுக்கக்கூடாது. தக்க சமயத்திற்காக காத்துக்கொண்டிருக்க வேண்டும். எந்த சமயத்தில் நடவடிக்கை எடுத்தால் தனது நிறுவனத்துக்குக் கெடுதல் வராதோ அப்போதுதான் செயல்படுத்தவேண்டும். கண்ணன் எந்தக் காலத்தில் இருந்து எந்தக் காலத்துக்கு அனாசாயமாகத் தாவுகிறான் என்பதைப் பாருங்கள்.


சிசுபால வதத்தின்போதும் கண்ணனிடம் நாம் ஒரு அரிய பாடத்தைப் பெறமுடியும். அவன் நூறுமுறை மட்டுமே தீயமொழி பேசமுடியும். அதைத் தாண்டினால், உடனே அவனைக் கொல்வேன் என்றான் கண்ணன். எவ்வெப்பொழுதெல்லாம் சிசுபாலன் கண்ணனைப்பற்றித் தீயமொழி பேசுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனுடைய விரல் உயராது. அதாவது அதெல்லாம் எண்ணிக்கையில் வராது. நீ இடைப்பையன் என்பான் அவன். பேசாமல் நின்றுகொண்டிருப்பான் கண்ணன். நீ மாமாவை கொன்ற பாதகன் என்று சொல்வான். அப்போதும் பேசாமல் இருப்பார் கிருஷ்ணர். ஆனால் இதே சிசுபாலன் பீஷ்மரைப் பற்றி சொன்னவுடனேயே விரல் உயரும். தன்னைப்பற்றி என்ன சொன்னாலும் கண்ணனுக்கு கவலை இல்லை. தனக்கு பிடித்தமானவர்கள், தன்னுடைய சிஷ்யர்களைப் பற்றி சொன்னால் தாங்கமாட்டான். இதை நாம் இன்றைக்கும் பொருத்திப் பார்த்துக்கொள்ளமுடியும். ஒரு மேலாண்மை இயக்குநர் (எம்.டி.) தன்னை நேரடியாக எது சொன்னாலும் கவலைப்படக்கூடாது. நீ என்ன திட்டினாலும் எனக்கு கவலை இல்லை என்று இருக்கவேண்டும். ஏனென்றால் அவர் அதையெல்லாம் கடந்துவந்துவிட்டவர். ஆனால் தனது நிறுவனத்துக்கு நேர்மையாக வேலை செய்பவன் மீது யாரேனும் அவதூறு சொன்னால் அமைதியாக இருக்கக்கூடாது. மீண்டும் கண்ணனின் காலம் கடந்த பாய்ச்சல்.

இப்படி கண்ணனின் வாழ்க்கை முழுவதிலும் இருந்து நாம் இன்றைக்குத் தேவையான நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளமுடியும். கண்ணன் இந்தியக் கலாசாரத்தின் மையம் மட்டுமல்ல, எக்காலத்துக்கும் பொருந்திவரக்கூடிய நிகரற்ற ஓர் ஆளுமை.

1947, ஆகஸ்ட் 15 - முதல் சுதந்திர தினத்தன்று. . .


இந்திய சுதந்திர தினத்தன்று எங்கள் குடும்பம் லால்குடியில் இருந்தது. எங்கள் தந்தையார் திரு ராமலிங்கம் அவர்கள் திருச்சி மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தார். நான் பத்தாவது வகுப்பில் இருந்தேன். (அன்றைய ஐந்தாவது பார்ம்). ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்தே நாங்கள் இந்தத் திருநாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் மாமா திரு. சிட்டி சுந்தர்ராஜன் அப்போது வானொலி ஆசிரியராக, திருச்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

திராவிடக் கழகம் அப்போது திருச்சி மாவட்டத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது.

சாதாரணமாக மேடைப் பேச்சாளர்கள் அடுக்கு மொழியில் பிராமணர்களை, வட இந்தியர்களை, ஹிந்தி மொழியை, மற்றும் இதிகாசங்களை இயன்ற வரை சாடிக்கொண்டிருந்த நேரம். எங்கள் வகுப்பாசிரியரும் தலைமை ஆசிரியரும் கூட திராவிடக் கழக அனுதாபிகள். அப்போது அக்கட்சி இன்னும் இரண்டாகப் பிரியவில்லை. ஆனாலும் அப்போதே உட்கட்சிப் பூசல்கள் இருந்தன. அவர்களுள் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதா கூடாதா என்ற ஒரு அபிப்ராய பேதம் இருந்தது. அந்த நிலையில் மாணவர் சங்கத்துத் தேர்வுகள் நடக்க இருந்தன. நான் என்னையே ஒரு வேட்பாளனாக அறிவித்துக் கொண்டேன் எனக்கும் சில தோழர்கள் இருந்தனர். அப்போது திராவிடக் கழகத்தின் மூலம் ஒரு மாணவன் நிறுத்தப்பட்டான். அவனுக்கு எதிராக நான் போட்டியிட்ட போது அது ஒரு பிராமாணர், பிராமணல்லாதார் போட்டியாகவே ஆகிவிட்டது. ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் மறைமுகமாக அம்மாணவனுக்கு ஆதரவு அளித்தனர். முடிவு? சொல்ல வேண்டுமா? அப்பையனே தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது!

நான் விட வில்லை தொடர்ந்து “செந்நாப்போதார் செந்தமிழ்ச் சங்கம்” என்ற ஒரு சங்கத்தை அமைத்து அதற்கு ஆரம்ப விழாவிற்கு எங்கள் தலைமை ஆசிரியரையே அழைத்திருந்தேன். சில நாள்களில் எங்கள் சங்கம் நல்ல வரவேற்பைப் பெற்றது! தலைமை ஆசிரியரே எங்கள் சங்கத்திற்கு ஆதரவை அளிக்க ஆரம்பித்தார்.

ஆகஸ்டு இரண்டாவது வார ஆரம்பத்தில் நான் காலணா போஸ்டு கார்டுகள் இருபதோ முப்பதோ வாங்கி எல்லாவற்றிலும இடது மேல்மூலையில் சிறிய இந்திய கொடிச் சின்னத்தை ஒட்டி, கலர் மையில்


“ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”

என்றெழுதி அதன் முடிவில் சி. சுப்பிரமணி பாரதியார் என்றும் குறிப்பிட்டு சொந்தக்காரர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்பி வைத்தேன். எங்கள் ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்ததில் அவர்கள் பெருமை அடைந்தனர். முதல் நாளன்றே எங்கள் சங்கத்தின் சார்பில் ஒரு கூட்டம் கூட்டி, விழாவைக் கொண்டாடினோம். அன்றே எங்கள் தாயார் இனிப்புகள் செய்து நண்பர்களுக்கும் வழங்கத் தந்தார்.

சுதந்திர தினத்தன்று, மாலை திருச்சி சென்றிருந்தேன். அங்கு சிட்டி அவர்கள் குடியிருந்த, ஆனை கட்டி மைதானத்து வேதமாணிக்கம் ஸ்டோர்ஸில் சிட்டி தலைமையில் ஒரு சிறப்புக் கூட்டம். பல நண்பர்கள் வந்திருந்தனர்.



சுதந்திர தினத்தை ஒட்டி மணிமண்டபத்திலும் ஒரு கூட்டம் நடந்ததாக நினைவு; மதுரை மணி அய்யர் பாட்டுக் கச்சேரியுடன். அப்போது தலைசிறந்த எழுத்தாளர்களான ந. பிச்சமூர்த்தி, சாலிவாஹனன், திருலோக சீதாராம் போன்றவர்களை சிட்டி மாமாவுடன் சந்தித்துள்ளேன். அவர்களெல்லாம் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகையில் மெய் சிலிர்க்கும்.

இரவில் திருச்சி ஜங்ஷனுக்கு எல்லோரும் சென்றோம். அங்கு மின்சார பல்புகளால் அலங்கரிக்கப்பட்ட கொடியுருவம் மின்னிக் கொண்டு திகழ்ந்தது இன்னும் பசுமையாக மனதில் உள்ளது. ‘சுதந்திர இந்தியாவில் மாணவர்கள் பணி’ என்ற தலைப்பில் எங்கள் சங்கத்தில் ஒரு கூட்டம் போட்டோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஊரில் பலகூட்டங்கள் நடந்தன. சின்ன அண்ணாமலை பேசியதுகூட நினைவில் உள்ளது.

தீவிர உற்சாகத்துடன் நாங்கள் எதிர் கொண்ட சுதந்திர இந்தியாவை இவ்வளவு சீக்கிரத்தில் அரசியல்வாதிகள் குப்பைமேடாக ஆக்கிவிடுவார்கள் என்று அப்போது எங்களுக்குத் தோன்றியதேயில்லை!

புராதன இலங்கை சரித்திரம்

புராதன இலங்கை

தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் அதி பூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது. இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம். இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். இந்த உண்மையை வெளிப்படுத:துவதே இந் நூலின் நோக்கமாகும்.

புத்தூரில் பிரசித்த நொத்தாசிசாக விளங்கிய உயர் திரு. வ. நாதர் ஏன்பவரால் வெளியிடப்பட்டுள்ள அகத்தியர் இலங்கை என்னும் நூலில் இந்த உண்மை தெளிவாக்கப்பட்;டுள்ளது. இந்த நூலை மதுரையில் வாழ்ந்த உயர்திரு கந்தசாமிச் செட்டியரே தமக்கு வழங்கியதாக திரு. நாதர் அவர்கள் தமது பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.'அகத்தியா இலங்கை என்னும் இந்த நூலை உசாத்துணை நூலாகக் கொண்டு புராதன இலங்கை என்னும் இநதப் பக்கம் வெளிவருகின்றது.

இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள், இலங்கை முழுவதும் தங்களுக்கே உரியதென்றும் தமிழர்கள் கூலிவேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து இங்கு கொண்டு வரப்பட்டவர்கள் என்றும் பொய்யான கதைகளைச் சிங்களப் பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரஞ் செய்து அதன் மூலம் சிங்கள இனவெறியை அவர்களுக்கு ஊட்டி இலங்கையில் உள்ள தமிழர்களை அடக்கி ஒடுக்கி அழித்து விடத் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர். இவ்வாறான பொய்ப்பிரசாரத்தின் மூலம் இலங்கைத் தமிழர்களை அழித்து ஒழிப்பதைத் தவிர்க்கவும் இலங்கை வாழும் தமிழர்களுக்குச் சிங்களவர்களிலும் பார்க்க உரிமை கூடுதலாக உண்டு என்பதை எமது மக்கள் ஆதாரபூர்வமாக அறிய வைப்பதற்கும் இது போன்ற பக்கங்கள் வெளிவருவது மிக மிக அவசியமாகும். இந்த அவசியத்தை உணர்ந்தே இந்தச் சிறிய இணைய பக்கத்தையும் வெளியிட முன்வந்துள்ளேன். எனவே இந்த இணையப் பக்கத்தை ஈழத்தமிழ் மக்களாகிய நாங்கள் விழிப்படைவோமாகுக... எழுச்சியடைவோமாகுக.



--------------------------------------------------------------------------------

தோற்றுவாய்

அகத்திய முனிவர் இலங்கையின் பூர்விகம் பற்றி இராமனுக்குச் சொல்லுகின்ற பாங்கிலே இதன் மூல நூல் அமைந்தமையால் அதற்கு ஷஅகத்தியர் இலங்கை" எனப் பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் தமிழர் கண்டம் என்பதாகும். இதுவே பிற்காலத்தில் தமிழகம் என அழைக்கப்பட்டது.. மிகப் புராதன காலத்தில் தமிழகத்தில் வாழ்தவர்கள் தமிழர்கள் மட்டுமே. ஆட்சி புரிந்த அரசர்கள் தமிழர். அவர்களது நெறி சைவநெறி. மொழி தமிழ். அக்காலத்திலுருந்தே தமிழர்கள் மிக முன்னேற்றமுள்ளவர்களாக விளங்கினார்கள். கமத்தொழில், கைத்தொழில் இரண்டையுமே இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தார்கள்.

அரசர்களோ நீதி வழுவா நெறிமுறையில் ஆட்சி புரிந்தனர்.மக்களும் தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஓக்கல், தான் என்னும் ழும்பலமும் ஓம்பி வாழ்ந்து வாந்தனர். பிராமணர்கள், அரசர்கள், வைசியர் எனப்படும் வர்த்தகர்கள், வேளாண்மக்கள் எனப்படும் கமக்காரர் ஆகியோர் தம்தம்க்குரிய கடமைகளின்றும் வழுவாது ஒழுகிவந்தனர். அரசனது ஆணைகள் இவற்றுக்கு வழிவகுப்பதாய் அமைந்திருந்தன. இதன் பலனாக மாதம் மூன்று மழை பெய்தது. நீர்வளம் பெருகியது. நிலவளமும் பெருகியது.. அதைதியும் நிலவியது. உணவு உடை உறையுள் ஆகிய மனிதனின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. பசியால் மெலிபடைபவர்களோ, பிணியால் நலிவடைபவர்களோ மிக மிக அரிதாகவே காணப்பட்டனர். இத்தகையதோர் ஒப்பற்ற சமுதாயம் நிலவிய தமிழகத்தை அவ்வப்போது ஆட்சி புரிந்த தமிழரசர்கள் உருவாகினர்ர்கள்.

இவ்வாறு தமிழகத்தைச் சிறப்பாக ஆட்சி புரிந்த அரசர்களுள் மனு என்னும் அரசனும் ஒருவனாவன். இவன் தமிழன். இந்த மனு அரசனுக்கு தமிழர் வரலாற்றில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் நெப்போலியன் போர்ன்பாட் என்பவனால் உருவாக்கப்பட்ட சட்டவாக்கங்கள், பிற்காலத்திலும் இக்காலத்திலும் எழுந்த சட்டவாக்கங்களுக்கு எவ்வாறு அடித்தளமாக அமைந்தனவோ அது போலவே புராதன காலத்தில் மனு அரசன் எழுதிய சட்டவாக்கமும் அவனைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் சட்டவாக்கங்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது எனலாம்.

மனுதர்ம சாத்திர நூலும் இவ்வகையில் உருவானதே எனலாம். இந்த மனுசக்கரவர்த்தியானவன் தானுருவாக்கிய நீதி நெறியின் படியே ஆட்சியும் புரிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதி வேறுபாடு காட்டுதல் போன்ற அநாகரிகமான சட்டங்கள் அவனது நீதிநூலில் இடம் பெறவில்லை என்பதும், ஆனால் சுயநலவாதிகளும் சாதியின் பெயரால் தம்மைப் பெரியவர்களாகக் காட்டிக் கொண்டவர்களும் அதனால் தம்மை வளர்த்துக் கொண்டவர்களுமே இந்த அநாகரிகமான சட்டத்தை இந் நூலில் புகுத்தி இந் நூலுக்கு இழுக்குத் தேட முற்பட்டனர். இந்த உண்மையை நாம் உணர்ந்து தெளிவு பெற வேண்டும். இந்த மனு சக்கரவர்த்தி தமிழகத்தை நாற்பத்து நான்கு வருடங்கள் ஆட்சி புரிந்தான்.

இந்த மனுசக்கரவர்த்திக்கு 'சமன்" என்னும் புத்திரனும் 'ஈழம்" என்னும புத்திரியும் பிறந்தார்கள். மனுவின் பின் தமிழகம் இந்த இருவராலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தது;. தென்னகத்தை மகனாகிய சமனும், அவனது சந்ததியினரும், வடபாகத்தை மகளாகிய ஈழமும் அவளது சந்ததியினரும் ஆண்டு வந்தனர். மனுவின் மகளாகிய ஈழம் என்பவளுக்கு குமரி என்று வேறு பெயரும் உண்டு. குமரி என்று அழைக்கப்பட்ட இந்த மனுவின் மகள் ஆட்சி புரிந்த பகுதி குமரிக் கண்டம் எனப்பட்டது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரி;ந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இந்த நான்கு மண்டலங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாகவே இருந்தன. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட ஈழ மண்டலத்தை ஏனைய மூன்று மண்டலங்களிருந்து பிரித்து விட்;டன.

எனினும் ஈழமண்டலமாகிய இலங்iயில் தமிழரே வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில்தான் தமிழலரல்லாதோர் இங்கு வந்து குடியேறினர் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. வரலாற்றுக்காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்கள் இலங்கையில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் நாகரீக வளர்ச்சி பெற்றவர்களுமான ஓர் இனமாக வாழ்ந்து வந்தனர்.

தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. பிற்காலத்தில் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டது. இக்கடல் கோல்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் பல தமிழ் சங்க மண்டபங்கள், அவைகளில் இருந்த இலக்கண இலக்கிய நூல்கள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது;. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது......மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.

விஜயன் இலங்கையில் காலடி வைத்த பின்பே இலங்கையில் சிங்கள இனம் தோன்றியது. இந்த விஜயன் யார் ? இவன் இலங்கைக்கு எவ்வாறு வந்தான் என்பன ? பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.......



--------------------------------------------------------------------------------

சிங்கள இனத்தின் தோற்றம்

வட இந்தியாவில் "லாலா" என்று ஒரு நாடு அதனைச் சிங்கபாகு என்பவன் ஆட்சி புரிந்தான். இவனது தந்தை சிங்கன் என்பவன் ஆவான். சிங்கனைப் பற்றிய பலவித புனை கதைகள் உண்டு. மிருக இராசவாகிய சிங்கமே இவன் என்பது அவற்றுள் ஒன்று. சிங்கத்தில் இருந:து வந்த சந்ததியினரே சிங்களவர் என்றும் சொல்லப்படுகின்றது. இதனாலேயே சிங்கள மக்களின் தேசியக்கொடி சிங்கமாக இருக்கினறதென்றும் சொல்வாரும் உளர். இவையெல்லாம் ஆதாரமற்ற வெறும் ஐதிகங்களே என இவற்றை இவ்வளவில் விட்டு விடுவோம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிங்கபாக ஆசியவம்சத்தை சார்ந்தவன். வடஇந்தியாவில் இமயமலை அடிவாரம் வரை ஒரு காலத்தில் திராவிட இனம் வாழ்ந்து வந்தது என்றும் அந்தத் திராவிடரைத் துரத்திவிட்டு வந்து குடியேறிய நாடோடி மக்களே ஆசியராவர். இவர்கள் மெல்லிய சிவந்த மேனியைக் கொண்டிருந்தனர்.இந்த ஆசியர்கள் ஒரு காலத்தில் இமயபமைப்ப வடக்தே நாடோடிகளாய் கூட்டங் கூட்டமாய் குதிரைகளில் சவாரி செய்து அலைந்து திரிந்தவர்களாவர்.

இவர்களுக்கு நிரந்தரமான வதிவிடங்களோ நிலங்களோ இருக்கவில்லை. இவாகள் அடிக்கடி கைபர்கணவாய் வழியாகத் திடீர் திடீரென இமய மலையின் தென்பகுதிக்குள் நுழைந்து அங்கு வாழ்ந்து வந்த திராவிட மக்களுக்குத் தொல்லை கொடுக்கு அவர்களுது பொருட்களையும் உணவுப்பண்டங்களையும் மந்தைகளையும் அபகரித்து சென்று அதன் மூலம் வாழ்க்கையை நடாத்தி வந்தவர்கள். இவர்களது தொல்லை பொறுக்க முடியாமலே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிடமக்கள் மெது மெதுவாகத் தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். ஆரியர் திராவிட மக்களைத் துரத்தி விட்டு அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் வந்து குடியேறினர். தம்மை ஆரியர் எனக்கூறி சிங்களவரும் இதனைத்தான் இங்கு செய்கின்றனர். இந்த அநாகரீகமான மக்களே ஆரியர்.

இத்தகைய ஆரிய வம்சத்தைச் சார்ந்தவன்தான் சிங்கபாகு ஆவான். அவனின் மைந்தனே விஜயன் ஆவான்.விஜயனின் சந்ததியினரே சிங்களவர்கள். எனவே சிங்களவரும் ஆரியர்களே. தமிழர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வகையிலேதான் இலங்கையில் வாழ்கின்ற ஆரியர்களாகிய சிங்களவர்களுக்கும் திராவிடர்களாகிய தமிழர்களுக்கும் ஒத்துப் போவதில்லை என்பது புலனாகின்றது.

சிங்கபாகுவின் மைந்தனாகிய விஜயன் இனவரசனாக இருந்த பொழுது அவனுக்கு எழுநூறு பேர் தோழர்கள் இருந்தார்களாம். விஜயன் இழவரசனாக இருந்தமையால் அவனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. அதனாலே அவனுக்கு எழுநூறு பேர் தோழராயினர். இந்த விஜயனும் இந்த தோழர்களும் நினைத்தவற்றையேல்லாம் செய்தார்கள். நாகரீக சமுதாயத்திற்கு ஒவ்வாத காரியங்களை எல்லாம் இவர்கள் மிகமிக விருப்பமாகச் செய்தார்கள்.

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என ஆள்வாரிலி மாடுகளாகத் திரிந்தார்கள். தட்டிக் கேட்க யாரும் இல்லை. தந்தை சிங்கபாகுதான் தட்டி கேட்க வேண்டியவன். அவனாலும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவன் அந்த நாட்டின் அரசனாக இருந்தமையினால் அந்த நாட்டின் மக்களின் நன்மைக்காகத் தன் மகனேன்றும் பராது அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாடுகடத்த விரும்பினான். அவர்கள் அனைவரையும் ஒரு பாய் கப்பலில் ஏற்றி வங்கக் கடலில் அலையவிட்டான். அக்கப்பல் காற்றினால் அள்ளுண்டு அவர்களைக் கொணடு வற்து எனது ஈழத்திருநாட்டில் மாந்தை நகரில் ஒதுக்கிவிட்டது.

வந்தாரை வரவேற்று உபசரிக்கும் தமிழர்களின் பண்பாட்டுக்கமைய வந்தாரை வாழவைத்தாள் ஒருத்தி. அவள்தான் இலங்கையில் அந்நாள் அரசி குவேனி என்பாள். அவள் ஒரு தமிழ் அரசி, அவள் வந்தவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தாள். விஜயனின் அழகில் மயங்கி தன்னையே கொடுத்து விட்டாள். அத்தோடு இலங்கையில் தமிழர்க்கு இருந்த இறைமையையும் கூடவே தரைவார்த்துக் கொடுத்து விட்டாள். இத் தொடர்பினால் விஜயன் இலங்கையின் இலங்கையின் ஆட்சியுரிமையை இலகுவில் பெற்றுக் கொண்டுவிட்டான். ஆட்சியுரிமையை தந்திரமாக கைப்பற்றிக் கொண்ட விஜயன் தன் காரியம் முடிந்ததும், தனது அதிகாரதுக்கு உதவிய மனைவி குவேனியையும் பிள்ளைகளையும் அடித்து துரத்திவிட்டான்.

குவேனியைத் துரத்திய பின் இவனும் இவனது தோழர்கள் ஏழுநூறு பேரும் பாண்டிய நாட்டிலுள்ள நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அழகுடையவர் ஆகிய தமிழ்ப்பெண்களை வரவழைத்துத் திரமணஞ் செய்த கொண்டனர். இவர்களது சந்ததியினரே இன்று இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர் ஆவர். இம்மட்டில் இவர்கள் நின்று விட வில்லை. அன்று அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருந்த விஜயனும் அவனது தோழர்களினது சந்ததியினரும் ஏற்கனவே இங்கு வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களோடு திருமணம் செய்து கலந்து கொண்டனர்.

இவர்களது சந்ததியாரும் சிங்களவராயினர். இவ்வகையிலும் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராகப்பட்டனர். இவ்வாறு தமது தனித்துவத்தையும் பண்பாட்டையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறிய தமிழர்களே தமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ற்து வருகின்ற உண்மையான தமிழர்களுக்கு எதிராகத் கிளம்பி இலங்கை சிங்களவருக்கு மாத்திரமே உரியதென்று விதண்டாவாதம் பேசுகின்றனர். கூப்பாடு போடுகின்றனர். எஞ்சிய தமிழர்களையும் சிங்களவர் ஆக்க முனைகின்றனர். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள். இலங்கையின் சுதேசிகள் தமிழர்கள். விஜயன் வழி வந்தவர்கள் அந்நியர். பரதேசிகள். இத்தகையோர் இலங்கைக்குத் தாம் மாத்திரமே உரிமையுடையோம் என்றும், தமிழர்களுக்கு எவ்வித உரிமை இல்லை என்றும், சிங்களப் பொது மக்களிடையே பிரச்சாரஞ் செய்து வருகின்றனர். தமிழர்கள், சிங்களவர்கள் பகைவர்கள் என இள உள்ளங்களில்லாம் அழுத்தமாக உறையும்படி பிரசாரம் செய்கின்றனர். துட்டகைமுனுவின் தாயாகிய விகாரமகாதேவியும் இதனையே செய்தாள். இதனால்தான் துட்டகைமுனு தமிழருக் கெதிராகக் கிளர்ந்து எழுந்தான்.

தமிழர் படையுடன் நேர் நின்று யுத்தம் புரிய முடியாத துட்டகைமுனு கபட நாடகமாடி மனுநீதி தவறாது செவ்வனே ஆட்சி புரி;ந்த தமிழரசனாகிய எல்லாளனைக் கொன்றான். இளைஞனாகிய துட்டகைமுனு கிழவனாக இருந்த எல்லாளனைத் தனிப் போருக்கு அழைத்துப் போர்புரியும் வேளை எல்லாளனது பட்டத்து யானை போரில் கால் தடுக்கி விழ ஈட்டியால் குத்திக் கொன்றான். இத்தகைய வாரலாற்று உண்மையை இன்றைய எம் நிலைகளோடு ஒப்பிட்டு நோக்கிச் செயற்பட வேண்டியது ஈழத்தமிழராகிய எம் கடனாகும்.



--------------------------------------------------------------------------------

பரதன் என்னும் தமிழ் அரசன்

குமரியின் சந்ததியில் தோன்றிய தமிழ் அரசர்களுள் பரதனும் ஒருவன். இந்தப் பரதன் குமரிகண்;டத்தை நாற்பது வருடங்களாக ஆட்சி புரிந்தான். ஒரு தாயானவள் தனது பிள்ளைகளை எல்வளவு கரிசனையுடனும் அன்புடனும் பராமரிப்பாளோ அது போலவே பரதனும் தனது குடிமக்களையும் பராமரித்தான். இதனால் அவனது குடிமக்கள் அவளை மிகவும் நேசித்தார்கள். அது மாத்திரமன்றி இக் குமரிகண்டமானது பரதனது திறமையான ஆட்சி முறையினால் பலவகைகளிலும் சிறப்புற்று விளங்கிற்று. இக்காரணங்களினால் அவன் ஆட்சி புரிந்த நிலப்பரப்பாகிய குமரிக் கண்டமே பரதகண்டமென வழங்கப்பட்லாயிற்று.

இப்பரத கண்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அந்நி நாட்டினர் பலவாறு அழைத்தனர் அவை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர்;, கந்தருவர், வானரர் என்பனவாகும். இராமாயணத்தில் தமிழர்களை வானரர் (குரங்குகள்) என்றும் இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர். அனுமான் சுக்கிரீவன் வாலி போன்ற பலம் பொருந்திய திறமைமிக்க போராளிகளை குரங்குகளின் அரசர்கள் என்றும் இலங்கையை ஆண்ட ஒப்புயர்வற்ற சிறந்த அரசனாகிய இராவணன் தமிழன் என்ற காரணத்தால் அவனையும் அவனது இனத்தினரையும், நரமாமிசம் புசிக்கின்ற இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர். உண்மை அவ்வாறு அன்று. இராமன் இலக்குமணன் போன்ற திராவிடர்கள் (தமிழர்கள்) பலசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் சித்துக்களில் வல்லவர்களாவும் விளங்கினர் என்பதே உண்மை.

உண்மையில் இவர்கள் அவர்கள் குறிப்பிடுவது போன்று குரங்குகளோ, இராட்சதர்களோ அல்லர். சிறப்புற்று விளங்கிய தமிழர்களோயாவர். இவ்வாறு அநிநியர்களால் பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்ட போதிலும் எல்லோரும் சமத்துவம் உடைய தமிழர்களோயாவர்.

அன்று வாழ்ந்த தமிழ் மக்கள் தம்மிடையே உயர்வு தாழ்வு காட்டுவதில்லை. ஒருவருடைய பிறப்பினைக் கொண்டு அவரின் உயர்வு தாழ்வுகளைக் கணிக்காது அவரவரின் சிறப்பினைக் கொண்டே, செயற்பாடுகளைக் கொண்டே கணித்தனர்;. 'இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்"என்னும் ஒளவை வாசகஙகளும் இவ்வகையில் எழுந்தனவே. செயற்கரினவற்றைச் செய்பவர்கள் பெரியோர் என்னும் செயறகரயன செய்ய முடியாதவர்கள் சிறியோர் என்றும் வள்ளுவன் வாய்மொழியும் இதனையே தெளிவுபடுத்துகின்றது.



--------------------------------------------------------------------------------

தமிழ் கூறும் நல்லுலகம்

மனித இனம் முதன் முதலாக தோன்றிய இடம் குமரிக் கண்டம் என்று அறியக்கிடக்கின்றது. இந்தக் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி தமிழ் என்றும் அவர்களிடமிருந்தே எனைய இனத்தவர்கள் சீர்திருத்ததைக் கற்றுக் கொண்டனர் என்றும் கூறுவர்; அக்காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் அவற்றில் அவர்கள் வல்லவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. அவையாவன.

வீடு கட்டுதல், கோயில் கட்டுதல், சிற்ப வேலை செய்தல், குளம் வெட்டுதல், நூல் நூற்றல், சிலை செய்தல், குடைசெய்தல், கோயில் த்தேர், போர்த்தேர், வாயுத்தேர்;, அக்கினித்தேர், ஆகாயவிமானம், கப்பல், முதலியன செய்தல், ஆகாயமார்க்கமாகச் செல்லுதல், பாடசாலை, வைத்தியசாலை தமிழ்ச்சங்கம் முதலியன அமைத்தல், இலக்கியம், இலக்கணம், வானசாத்திரம், நீதி சாத்திரம், தொலைவிலுணர்தல், கடவுள் வணக்கம், தவம், கற்பு, விரதம், வியாபாரம், பஞ்சாயம், நீதிமன்றம், குடியாரசாட்சி, தெரிவுச்சீட்டு, கணிதம், சோதிடம், கூடுவிட்டுக் கூடுபாய்தல், ஒரு மனிதன் போல் தேகம் எடுத்தல், ஆகாய யுத்தம், கடல் யுத்தம் முதவியவற்றை நன்றாக அறிந்திருதார்கள். தமிழ் மொழியில் மிகவும் சிறந்த இலக்கிய நூல்களும் இலக்கண நூல்களும் கணித நூல்களும், தமிழ் வேதங்களும் தமிழ் சரித்திர நூல்களும் இன்னும் பல சிறந்த நூல்களும் ஆரம்பத்திலேயே இருந்தன.

பாண்டிநாடு சோழநாடு, சேரநாடு முதலிய தமிழ் நாடுகளில் உள்ள தமிழர் முற்காலத்தில் இலங்கையில் பிறந்து வாழ்ந்தபடியால் இலங்கை அந்த நாடுகளின் தமிழருக்குச் சொந்தம். இலங்கை மலைவளமுடைய நாடாக இருந்தமையால் போதிய மழை பொழிந்து பல ஆறுகள் பாய்கின்ற ஆற்று வளமுடையதாக விளங்கியமையால் செழிப்பான தேசமாக விளங்கியது. பெருமளவு நெல் விளைவிக்கப்பட்டது.

அத்துடன் பொன், முத்து இரத்தினம், சங்கு ஆகியவையும் அதிகம் காணப்பட்டன. இவ்வாறு சிறப்பாக விளங்கிய இலங்கையில் முற்காலத்தில் வாழ்ந்;;;த தமிழர்கள் மிகவும் செல்வந்தராயிருந்தனர். இதனால் ஏனைய நாடுகளில் வாழ்ந்த தமிழர்கள் இலங்கையில்; வசிக்க மிகவிரும்பினார்கள்.

இடவசதியற்ற பொழுதெல்லாம் அவர்கள் இலங்கையில் வந்து குடியேறிக் கொண்டே வந்தார்கள். இலங்கைத் தமிழர் பாண்டியநாடு முதலிய மற்றைய தமிழ் நாடுகளின் தமிழரோடும் அதிபூர்வ காலந்தொடங்கி இன்றுவரைக்கும் ஆலயதரிசனம், தீர்த்தமாடுதல், கல்வி பிறப்பு இறப்புச் சம்பந்தமான கொண்டாட்டங்கள், திருவிழா, கலியாணம் மற்றுவிவாகம் முகலிய வைபவங்களைக் கொண்டாடிக் கொண்டும், போக்குவரவு பண்ணிக் கொண்டும் வருகிறார்கள். பாண்டியநாடு முதலிய தமிழ்த் தேசங்களின் தமிழர்கள் திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம், நகுலேஸ்வரம், கதிர்காமம் முன்னேசுவரம் முதலிய சைவாலயங்களைத் தரிசிப்பதற்கும் தீர்த்தமாடுவதற்கும் விவாகத்திற்கும் இலங்கைக்குப் போக்குவரவு செய்து கொண்டேயிருக்கின்றார்கள்.

சுரரை ஆண்ட அரசன் சுரேந்திரன். அசுரரை ஆண்ட அரசன் அசுரேந்திரன். இதனால் சயம்பனுக்கு அசுரேந்திரன் என்னும் வேறொரு பெரும் இடப்பட்டது. தமிழரசனாகிய இச்சயம்பன் இலங்கையை முப்பத்து மூன்று வருடங்களாக ஆண்டிருந்தான். சயம்பனுக்குப் பின்பு அவனுடைய மருமகனாகிய யாளிமுகன் என்னும் தமிழன் அரசனாகி பத்து வருடங்கள் ஆட்சி புரிந்து இறந்தான். இவனுக்கு பின்பு பல தமிழரசர்கள் நெடுங்காலமாக இலங்கையை ஆண்டனர். இவர்களது ஆட்சிக் காலத்தில் திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை கலியாணி முதலிய நகரங்கள் தலைநகரங்களாக விளங்கின.

யாளிமுகனுக்குப்பின் ஏதி என்னும் தமிழரசன் முருகபுரத்தைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை முழுவதையும் ஆண்டான். முருகபுரம் என்னும் நகரில் முருகன் என்னும் தமிழ்ச்சேனாததிபதியின் வீரர்களில் ஒருவனாகிய விசயன் என்பவன் மாணிக்கங்கையில் முருகேசுவரம் என்னும் முருகனாலயத்தைக் கட்டுவித்தான். முருகேசுரத்துக்கு, கதிர்காமம், கதிர்வேலன்மலை, கார்த்திகேயபுரம், ஏமகூடம், மாணிக்கநகர்., கந்தவேள்கோயில் என்னும் மறுபெயர்களும் உண்டு.

பயை என்னும் தமிழரசகுமாரத்தியை ஏதி விவாகஞ் செய்து வித்துக்கேசன் என்னும் புத்திரனைப் பெற்றான். இவன் இருபத்தெட்டு வருடங்கள் ஆட்சி புரிந்தான். வித்துகேசன் சிவனோளிபாதத்தைத் தலைநகராக்கி, நாகதீவு முழுவதையும் ஆண்டான். முருகள் என்னும் சேனைத்தலைவன் காங்கேசன்துறையில் ஒரு சிவன்கோவிலைக் கட்டுவித்தான்.

வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை இவன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும்;;, நிலங்களையும், கொடுத்தான். மாந்தை நகருக்கு அருகில் உள்ள பாலாவியாற்றங்கரையில் திருக்கேதீசுவரம் மாயவன் ஆற்றுக்குச் சமீபத்தில் முனீசுவரம், காங்கேசனுக்கு அண்மையில் நகுலேசுவரம் ஆகிய சிவாலயங்கள் கட்டப்பட்டன.



--------------------------------------------------------------------------------

இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி

சுகேசனின் ஆட்சி

சுகேசன் தெய்வதி என்னும் அரச குமாரியை விவாகஞ் செய்து மாலியவான், மாலி என்னும் புத்திரர்களைப் பெற்றான். சுகேசனின் ஆட்சி மிகவும் மெச்சத்தக்தாக அமைந்திருந்தது. இவன் கிராமங்கள் தோறும் ஆலயங்களை அமைப்பித்தான். பல வீதிகளைப் புதிதாக உருவாக்கினான். பழைய வீதிகளைப் புதிப்பித்தான், காடுகளை அழித:து நாடுகளாக்கினான். விவசாயத்தை விருத்தியடையச் செய்தான்.

குளங்கள், கால்வாய்கள் பல வெட்டியும் புதுப்பித்தும் பயிர்ச் செய்கைக்கு உதவியளித்தான். நூல் நூற்றல், ஆடை நெய்தல் ஆகிய கைத்தொழில்களையும் விருத்தி பண்ணினான். வைத்தியரையும் வைத்திய நூல்களையும் ஆதரித்ததோடு பல வைத்தியசாலைகளிலும் நிறுவினான். பல பாடசாலைகளை அமைத்தான். பல தமிழ்ச்சங்கங்களையும் உருவாக்கினான். இவன் காலத்தில் தமிழ் மொழியில் எல்லாத் துறைகளிலும் நல்ல நல்ல நூல்கள் எழுந்தன. நீதி பரிபாலனமும் செவ்விதாய் அமைந்திருந்தது. சுகேசன் நாற்பத்தொரு வருடங்களும் ஏழுநாட்களும் ஆட்சி புரிந்த பின் தனது மூத்த புத்திரனாகிய மாலியவானை இலங்கைக்கு அரசனாக்p, காட்டுக்கு சென்றான்.

மாலியவான் ஆட்சி

தமிழ் அரசனாகிய மாலியவான் நாகதீவுக்கு அரசனாகி இலங்காபுரம் என்னும் நகரத்தை அழகாக கட்டுவித்து, அதைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை என்னும் நாகதீவை ஆண்டான். இவன் கட்டுவித்த அரண்மனைகளும் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் விலையுர்ந்த இரத்தினக் கற்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டன. இவனது முடியின் மீது பத்துக் கிரீடங்கள் அமைந்திருந்தன. இவனுடைய சிங்காசனமும் வாளும் முடியும் செங்கோலும் கட்டிலும் நவரத்தினங்களாலும் முத்துகளாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. அக்காலத் தமிழர்களில் பலர் எல்லா வசதிகளும் ஒருங்கே அமைந்த பல அடுக்கு மாளிகைகளில் வாழ்ந்தனர்.

இவனது முடியை அலங்கரித்துக் கொண்டிருந்த பத்து கிரீடங்களும் பத்து நாடுகளுக்கு இவன் அதிபதி என்பதை எடுத்து காட்டுகின்றன. இவன் இருபத்தொரு வருடங்கள் இலங்கையை மகோன்னதமாக ஆட்சி புரிந்து வந்தான். மாலியவான் இறந்த பின்பு அவனுடைய தம்பியாகிய சுமாலி என்பவன் ஆட்சி புரிந்தான். இவன் மாந்தையிலிருந்தும் இலங்காபுரத்தில் இருந்தும் அரசான்டான். சுமாலி கேதுமதியை மணந்து ஒரு மகளைப் பெற்றேடுத்தான். அவளின் பெயர் கைகேசி என்பதாகும். சூரியப் பிரகாசம் என்னும் ஆகாய விமானத்தை அவன் வைத்திருந்தான்.

சுமாலியின் ஆட்சி முன்னையவர்களது ஆட்சி போன்று அத்துனை சிறப்பாக அமையாமையால் அவனால் ஐந்தரை வருடங்களும் முன்றரை மாதங்களுமே ஆட்சி புரிய முடிந்தது. மக்கள் கிளர்ச்சி செய்து அவனை சிங்காசனத்தில் இருந்து நீக்கி விட்டனர். இவனது ஆட்சியில் வெறுப்படைந்த தமிழ்மக்கள் பாண்டி நாடு, சேரநாடு, சோழ நாடு முதலிய தமிழ் நாடுகளில் சென்று குடியேறினர். சுமாலிக்குப்பின் அரசாட்சிக்குரிய கைகேசி சிறு குழந்தையாய் இருந்த படியால் இலங்கையை ஆழ அரசனில்லாதிருந்தது. இதனால் வச்சிரவாகு என்பவன் தனக்கும் இயக்கப் பெண்ணாகிய தேவகன்னி என்பவளுக்கு பிறந்த புத்திரனாகிய வைச்சிரவணானை இலங்கைக்கு அரசனாக்கினான். வச்சிரவாணனுக்கு குபேரன் என்னும் மறு பெயரும் உண்டு.

குபேரன் ஆட்சி

குபேரன் அரசானான பின்பு அவனது தாய் வழியைச் சேர்ந்த பல இயக்க குடிகள் இலங்கையில் வந்து குடியேறினார்கள். இவர்களும் தமிழர்களே. நாகரிகத்திலும் கல்வியிலும் இயக்கர் என்னும் தமிழர் மிகவுஞ் சிறந்தவர்களாய் இருந்தார்கள். இயக்கரும் தமிழரும் பேசிய மொழி தமிழேயாகும். பண்டைக்காலத்தில் வரன் என்பவன் புலத்தியவனைப் பெற்றான். புலத்தியன் குணவதியை மணந்து வச்சிரவாகுவைப் பெற்றான். இந்த வச்சிரவாகு குபேரனுடைய தந்தையவான். இந்தக் குபேரன் இலங்கையை நீதியாக ஆண்டான். இவன் புட்பக விமானம் என்னும் ஆகாய ஊர்தியை வைத்திருந்தான்.



--------------------------------------------------------------------------------

இராவணனும் இராமாணமும்

இராவணன் வரலாற்றில் ஒரு விதமாகவும் இலக்கியத்தில் ஒரு விதமாகவும் எடுத்து காட்டப்படுகின்றான். இலக்கியத்தை ஆக்குகின்ற புலவர் தமது விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் அவ்விலக்கியத்தில் புகுத்திவிடுவது வழக்கம். கற்பனையில் கதாபத்திரங்களை அமைத்து அதில் கருத்துகளை புகுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் வரலாற்றில் நல்ல குண இயல்பு உடைய ஒருவனை இலக்கியத்தில் தீய குண இயல்பு உடையவனாக திரித்து இலக்கியம் ஆக்கும் போதுதான் சிக்கல் ஏற்படுகின்றது. வெறும் இலக்கிய இரசனையோடு இலக்கியத்தைப் படிப்பவர்களுக்கு இந்த கபடங்கள் புலப்படுவதில்லை.

அவ் இலக்கியத்தில் வருகின்ற அணிகள், நயங்கள், கற்பனைகள் இவைகளே புலப்படுகின்றன. இவ்வாறு இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள் இலக்கிய ஆசிரியர் ஒரு பாத்திரத்தை எவ்வாறு சிருட்டிக்கிறாரோ, அவ்வாறே அதனை உண்மையாக ஏற்றுக் கொள்கின்றார்கள்.

அத்தகைய நிலமைதான் எமது இராவணனுக்கும் ஏற்பட்டுள்ளது. இராமாணத்தை நன்கு சுவைத்த ஒருவரிடம் போய் இராவணன் நல்லவன் காமுகன் அல்லன் என்று கூறினால் ஏற்றுக் கொள்ளவே மாட்டார். உண்மை இதுதான். வடக்கே வாழ்ந்த ஆரியருக்கும், தெற்வே வாழ்ந்த திராவிடற்கும் இருந்த இயல்பான பகையுணர்வே இராமாயணமாகும். இராமாயண காலத்தில் எல்லா வகையிலும் திரவிடராகிய தமிழர் மேம்பட்டு விளங்கினர்.

எனவே அவர்களை அழிக்க அல்லது அடக்க நடந்த போரே இராம இராவண யுத்தமாகும். தமிழகத்தில் இயல்பாக இருந்த குறைபாடாய் பதவி ஆசை, காட்டிக்கொடுத்தல் ஆகிய குணங்களால் இவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் மோதவிட்டு இறுதியில் தாம் பயணடைந்த கதையே இராமாயணம். எனவே தமிழராகிய நாம் இராமாயணத்தை ஏற்றுக் கொள்ளவும் கூடாது. படிக்கவும் கூடாது. இராவணேஸ்வரன் என்று போற்றப்படுகின்ற சிறந்த சிவபக்தனான இராவணனை தூஷிப்பது சிவ தூஷனையாகும். இத்தகைய இராமாயணத்தை சைவக் கோவில்களிலோ, தமிழ் மக்கள் மத்தியிலோ பிரசங்கிக்க கூடாது. தமிழர் பாடநூலில் இராமாயணம் இடம்பெறலாகாது.

இராவணன் ஆட்சி

கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான்.

அழகாபுரியில் வாழ்ந்தவர்களும் இயக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். குபேரனோடு இலங்கையில் வந்து குடியேறிய தமிழர் குபேரனோடு திரும்பிப் போகாமல் இலங்கையிலேயே தங்கி விட்டனர். குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இவன் இலங்கையை பல வருடங்களாக மாற்றாரும் மெச்சும் வகையில் சிறப்பாக அரசோச்சி வந்தான். இவன் தனது மூதாதைகளில் ஒருவனான மாலியவனைப் போன்றே பத்து நாடுகளுக்கு அரசனாக முடி சூடப்பட்டான்.

இதனால் இவனை தசக்கீரிவன் என்றும் அழைத்தனர். இரமாயணத்தில் கூறுவது போன்று இவனுக்கு பத்து தலைகள் இல்லை. பத்து கிரீடங்களே அன்றி பத்து தலைகள் அன்று. இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள். இராவணன் பல துறைகளிலும் ஒப்பற்று விளங்கினான். சங்கீத துறையானாலும் சரி, போர்த் திறமையானலும் சரி, தவ வலிமையிலும் சரி, கடவுட் பக்தியிலும் சரி இவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கினான். இவற்றை விட யோக சித்திகளும் கைவரப்பட்டவனாக விளங்கினான். இதனால் இவன் தான் நினைத்த வடிவத்தை கொள்ளவும், எதிரிகளுக்கு தெரியாமல் மறைத்து நிற்கக் கூடிய பல சித்துகளில் வல்லவனாக விளங்கினான்.

யாகங்களில் மிருகங்களை பலி கொடுத்தலை இராவணனும் அவனுடைய இனத்தவர்களும் வெறுத்தார்கள். மிருக வதை அவனுடைய காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பிடிக்காது. இராவணன் சிவபூசை செய்யும் நியமம் உடையவன். ஏகபத்தினி விரதம் பூண்டவன். பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான். இம்சித்து அல்ல. இவனது பகைவர்களாகி ஆரியர்களே இவன்மீது இவ்வாறு வீண் பழி சுமத்தினர். இவனும் இவனது தாயாகிய கைகேசியும் மனைவியாகிய மண்டோதரியும் சிவபெருமான் இடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். இந்த இராவணன் ஆகியோரின் ஆட்சிக்காலம் ஈழத்தமிழரின் பொற்காலம் எனப்போற்றப் படுகின்றது.

இராம இராவண யுத்தத்தில் இராவணன் தம்பி விபீ~ணன் தமையனாகிய இராவணனை விட்டு நீங்கி இராமன் பக்கம் சேர்ந்து இராவணன் படைப்பலம் யுத்ததந்திர முறைகள், அந்தரங்கள் எல்லாவற்றையும் இராமனுக்கு காட்;டிக் கொடுத்து இராவணனின் அழிவுக்கு ஏதுவாக இருந்தான். இராவணனுக்குப் பின் இராமனுடைய அனுசரணையுடன் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டான்.

இதன் மூலம் தமிழரின் வரலாற்றில் மாபெருங் களங்கத்தை ஏற்படுத்தினான். இவன் இராமனது அருவருடியாகி, அடிமைச் சின்னமான ஆழ்வார் பெயருடன் விபீ~ண ஆழ்வாராகவே இருந்து இறந்தான். இராவணனின் வீழ்ச்சிக்குப் பின் சேர, சோழ, பாண்டி, ஈழம் ஆகிய திராவிட நாடுகள் ஆரியரின் ஆதிக்கத்திற்குப் உற்பட்டன. எனவே இந்த இராவணன் வரலாறு ஈழத்தமிழர்களாகிய எமக்கு ஒரு பெரும் எச்சரிக்கை எனக் கொள்ள வேண்டும். எமது மக்கள் விபீஷணனைப் போன்று கோடாரி காம்புகளாக மாறக்கூடாது. எல்லாத்தமிழர்களுமே இராவணனைப் போன்று தேச பக்தி உடையவர்களாகவும், வீரம் மிகுந்தவர்களாகவும், வீர சுதந்திரம் வேண்டி நிற்பவர்களாகவும் மாற வேண்டும்.

எப்பொழுது இந்நிலை எம்மிடம் உருவாகின்றதோ அன்றுதான் சுதந்திர தமிழீழத்தை அமைத்து சுதந்திர புருடர்களாக வாழ்வோம். வீபீஷணனின் ஆட்சியுடன் இலங்கையின் பூர்வீக வரலாறும் முடிகிறது எனலாம். சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடும் இலங்கை வரலாறும் விஜயனின் விஜயத்துடன் ஆரம்பிக்கின்றது.

பாண்டிய நாட்டுக் காசுகள்

முற்காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப் பரப்பு தமிழகம் என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் அது தமிழ் நாடு என்று கூறப்பட்டது. இத்தமிழ் நாடு குடபுலம், குணபுலம், தென்புலம் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதனைச் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்கள் ஆட்சி புரிந்து வந்த நிலப்பகுதிகள் முறையே சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் என்று சொல்லப்பட்டன.

பாண்டிய மண்டலம் :

பாண்டிய மண்டலம் பாண்டிய நாடு என்றும் வழங்கப்பட்டது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் பாண்டியர்கள் வரலாற்றுக் காலந்தொட்டு மேன்மையுற்றுவரும் பழம் பெரும் குடியினர். இவர்கள் தொன்றுதொட்டு இந்த நிலப்பகுதியிலே வாழ்ந்து வருகின்றனர்.

வட மொழியினரின் ஆதிகாவியம் என்று கூறும் வான்மீகி இராமாயணத்தில் பாண்டிய நாட்டுப் பழம்பெரும் தலைநகர் 'கபாடபுரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கபாடபுரம் பொன்னாலும், மணிகளாலும் அணி செய்யப்பட்ட கோட்டை வாயிலின் கதவுகளை உடையது என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கூறப்படும் வடமொழிப் புலவர் காத்தியாயனர் பாண்டியர் என்னும் மொழிக்கு இலக்கணம் கூறியுள்ளார். அசோக மன்னன் கல்வெட்டுக்களில் பாண்டியர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

பௌத்தர்களால் வரையப் பெற்ற பழம்பெரும் இலங்கையின் வரலாற்று நூலாகிய மகாவம்சம் கி.மு. 478-இல் வாழ்ந்த இலங்கை வேந்தன் விசயன், பாண்டிய நாட்டு இளவரசியை மணந்தான்; அவன் தோழர்கள் பாண்டிய நாட்டு அரசாங்க அதிகாரிகளின் பெண்மக்களை மணந்துகொண்டு பாண்டிய நாட்டுப் பெரிய மரக்கலத்தில் ஏறி வந்தார்கள் என்று கூறுகிறது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிரேக்க நாட்டினின்று சந்திர குப்தன் அரசவைக்குப் போந்த அரச தூதுவனாகிய மெகஸ்தனிஸ் பாண்டிய நாட்டின் வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளான்.

உரோம் நாட்டில் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அகஸ்டஸ் என்னும் பேரரசன் அரசவைக்குப் பாண்டியன், தன் அரசத் தூதுவரை அனுப்பி நட்பு வளர்த்து இரு நாடுகளும் அரசத் தூதுவர்களைப் பரிமாறிக் கொள்ளச் செய்தான். அதனால் இரு நாடுகளுக்குமிடையே வாணிகம் வளர்ந்தது. கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த பிளினி என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன் பழம் பாண்டியரின் வரலாற்றைக் குறிப்பிட்டுள்ளான். "பாண்டி நாடே பழம் பெரும் நாடு" என்று தேவார ஆசிரியர்கள் புகழ்மாலை சூட்டியுள்ளனர்.

நாகரிகம்

பாண்டிய நாடு கிறித்துவ ஊழி எழுவதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே நனிசிறந்த நாகரிகத்தைப் பெற்றுவிட்டது; கழகங்கள் கண்டு கருத்தோடு தமிழ்க் கருவூலத்தை வளர்த்து வந்ததது. பாண்டிய நாட்டில் மகேச சூத்திரம் என்னும் பேரிலணக்கம், களவியல் என்னும் ஐந்திணை அகநூல், அகத்தியம், முதுநாரை, முதுகுருகு, ஐந்திரம், பரதம், கூத்தநூல், இசை நுணுக்கம், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற எண்ணற்ற இலக்கியங்கள் எழுதப் பெற்றன. அஃது அறநெறிபற்றி ஆட்சி நடத்தும் அரசர்களையும், அரும் பெரும் அரசியல் அமைப்பையும் பெற்று விட்டது.

பாண்டிய நாட்டில் கலைகளும், மொழியும், எழுத்தும், செல்வமும், கைத்தொழில்களும், பயிர்த் தொழில்களும் வளம் பெற்றெழுந்தன. வணிகம் வளர்ந்தது. போக்குவரத்துச் சாதனங்கள் பெருகின. கலங்கள் கட்டப்பட்டன. யவனர்களோடு பெரும் அளவில் கடல் வாணிகம் நடைபெற்றது (1) இருமீன்கள் தீட்டிய பாண்டிய நாட்டுக் கொடிகள் பறந்த நாவாய்கள் ஆழ்கடல் தாண்டி வெளி நாடுகள் போந்து மீண்டும் வந்தன.

கோநகர் :

பாண்டிய நாட்டிற்குப் புறநகர் (துறைமுகப் பட்டினம்)கொற்கையாகவும் பின்னர், பழைய காயலாகவும் இருந்து வந்தது. அகநகர் (கோநகர்) மதுரையாக இறுதிக் காலத்தில் இருந்து வந்தது. கோநகரில் அரசர் இருந்து ஆட்சி புரிந்து வந்தார். இளவரசர் கொற்கையில் இருந்து மன்னர்க்குத் துணைபுரிந்து வந்தார். கொற்கை அருகே கடலில் ஏராளமான முத்துக்கள் கிடைத்தன. கொற்கை, முத்துக் குளிக்கும் மூதூராக விளங்கியது. கொற்கைத் துறைமுகத்தில் யவனர்கள், அரேபியர்கள் கப்பல்களும், பாண்டியர்களின் பல்வேறு வகையான படகுகளும், தோணிகளும், அம்பிகளும், நாவாய்களும் ஏராளமாக இருந்து வந்தன. யவனர்கள் பொற்காசுகளையும், பொற்கட்டிகளையும் கொடுத்து முத்து, மிளகு, சந்தனக் கட்டை முதலிய பொருள்களை வாங்கிச் சென்றனர்.

அஃக சாலை :

பாண்டியர்கள் உள்நாட்டுச் செலாவணிக்கும் அயல் நாட்டுச் செலாவணிக்கும் ஏராளமான காசுகளை வெளியிட்டு வந்தனர். பாண்டியர் அரசாங்கத்திற்குப் பொன், வெள்ளி, செம்பு ஆகிய தாதுப் பொருள்களில் காசு வெளியிடும் அஃகசாலைகள் கொற்கையிலும் மதுரையிலும் இருந்து வந்தன. காசு வெளியிடும் இடத்திற்கு அஃகசாலை என்று பெயர். காசு வெளியிடும் நிலையம் இருக்கும் தெருவிற்கு அஃகசாலைத் தெரு என்று பெயர். கொற்கையில் காசு வெளியிடும் தெருவும் நிலையமும் அழிந்துவிட்டன. ஆனால் அத்தெருவில் உள்ள பிள்ளையார் கோயில் இன்றும் இருந்து வருகிறது. அப்பிள்ளையாரை மக்கள் அஃகசாலை விநாயகர் என்று அழைத்து வருகிறார்கள். உரோமர்கள், பாண்டியர்கள் அனுமதி பெற்று மதுரையருகே குடியேறித் தங்கள் செலாவணிக்குச் செப்புச் காசுகள் வெளியிட்டிருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.

பழம் பாண்டியர்களின் காசுகள்

பாண்டியர்கள் வெளியிட்ட காசுகள் மதுரை, கொற்கை முதலிய இடங்களில் மட்டுமின்றி இலங்கையிலும் ஏராளமாகக் கிடைத்து வருகின்றன. அண்மையில் மைசூர் நாட்டுப் பகுதியில் பழம் பாண்டியர்களின் காசுகள் பல கிடைத்திருப்பதாக மைசூர் புதைபொருள் ஆராய்ச்சித் துறையினர் வெளியிட்ட ஆண்டு அறிக்கையின் மூலம் நன்கறிகின்றோம். இப்பொழுது மூவேந்தர்களின் காசுகளும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. ஆனால், இன்று கிடைத்துள்ள காசுகளில் பாண்டியர்கள் காசுகளே மிகத் தொன்மையானவை.

பாண்டியர்கள் முதன்முதலாக, கி.பி. முதல் நூற்றாண்டில் காசுகள் வெட்டியிருக்கலாம். ஆனால், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வெளியிட்ட பழம் பாண்டியர்கள் காசுகள்தான் இப்பொழுது ஏராளமாகக் கிடைத்துள்ளன (2). சேரர், சோழர் காசுகளில் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காசுகள் கிடைக்வில்லை. அண்மையில் காவிரிப்பூம்பட்டினத்தில் கரிகாலன் காசுகளைக் கண்டெடுத்தாகக் கூறப்படுகிறது. அவைகளை நான் பார்வையிட்டேன். அவை சோழர் காசுகள் என்று என்னால் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை.

அண்மையில் வடஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டியில் சில பழங் காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை சங்க காலக் காசுகள் என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டன. இவற்றில் எதையும் நான் பார்த்ததில்லை. இவை சங்க காலத்தில் உள்ள தமிழக மன்னர்கள் வெளியிட்ட காசுகளா என்று காசு ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் ஆராய்ந்து முடிவு கட்ட வேண்டும். இதைப்பற்றி அறிஞர்கள் இன்னும் முடிவு காணவில்லை.

நீண்ட சதுரக்காசுகள் :

பழம் பாண்டியர்களின் காசுகள் இப்பொழுது ஏராளமாகக் காணக்கிடக்கின்றன. அவை அனைத்தும் செம்பினால் செய்யப்பட்ட அடிகாசுகளாகும். அவை அனைத்தும் சதுரமாகவும், நீண்ட சதுரமாகவும் உள்ளன.

பெரும்பாலான காசுகளில் முன்புறம் யானை வடிவம் தீட்டப்பட்டுள்ளது. சிலவற்றில் யானையோடு அருகில் தொட்டியும், மரமும் உள்ளன. சிலவற்றில் யானையின் மேற்புறம் இருபக்கங்களிலும் மலைகளும், நடுவில் புட்பக விமானம் போன்ற உருவமும் உள்ளன. மலைகளைப் பௌத்த சைத்தியம் என்பாரும் உளர்.

பல காசுகளில் அடியில் யானை உருவமும், அதன்மேலே சிறிய உருவில் சக்கரம், சுவத்திகம், குடம், கொடி, கண்ணாடி, தொரட்டி, இணைக்கயல்கள் போன்ற அட்ட மங்கள உருவங்கள் (எட்டு மங்களச் சின்னங்கள்) உள்ளன. சிலவற்றில் 2, 3, 4 உருவங்கள் மட்டும் உள்ளன. சில காசுகளில், நந்தி, கடப்பமரம், குதிரை போன்ற உருவங்கள் தனித்தனியாகக் காணப்படுகின்றன. இக்காசுகளின் பின்புறம் மீன் சின்னம் போன்ற குறியீடுகள் காணப்படுகின்றன. இக்காசுகள் மொகஞ்சதாரோ, அரப்பா முத்திரைகளை ஒத்ததாகக் காணப்படுகின்றன.

யானை உருவம் பொறிக்கப்பட்ட பழம் பாண்டியர் காசுகள், பாண்டிய மன்னர்கள் பௌத்த நெறியைத் தழுவி இருந்த காலத்தில் வெளியிட்ட காசுகளாக இருக்கலாம் என்று எண்ணுகின்றனர். இந்தக் காசுகள், இலங்கையில் ஏராளமாகக் கிடைப்பதினின்று, இலங்கையைப் பாண்டியர்கள் வென்று அந்நாட்டின் செலாவணிக்காக வெளியிடப்பட்ட காசுகள் என்றும், இலங்கை மக்களில் பெரும்பாலோர் பௌத்த மதத்தை தழுவி இருந்ததால் அவர்களின் ஆதரவைப் பெறப் பௌத்தச் சின்னமாகிய யானை உருவம் தீட்டப் பெற்றது என்றும் கூறப்படுகிறது.

சிலர், பாண்டியர்கள் சிவநெறியைத் தழுவியிருந்த காலத்தில் இந்த யானைக் காசுகள் வெளியிடப்பட்டன என்றும், யானை உருவம் தமிழர்கள் பண்பாட்டிற்கு மாறானதன்று என்றும், சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் யானை உருவந்தீட்டப்பட்ட முத்திரைகளே இதற்கு ஏற்ற எடுத்துக்காட்டு என்றும் கூறுகிறார்கள். இந்தப் பழம் பாண்டியர்களின் நீண்ட சதுரக் காசுகள் சிறிதும் பெரிதுமாகப் பல்வேறு உருவங்களில் உள்ளன. இதில் வரிவடிவங்கள் எதுவும் இல்லை. பழம் பாண்டியர்களின் காசுகள் கி.பி. 10-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவையாம்.

இடைக்காலப் பாண்டியர் காசுகள்

இடைக்காலப் பாண்டியர்களின் காசுகள் என்று கூறப்படுபவை கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 14-ஆம் நூற்றாண்டு வரையுள்ள காசுகளாகக் கருதலாம். இக்காசுகள் பொன், வெள்ளி, செம்பு முதலிய தாதுப் பொருள்களில் உள்ளன. இவை வட்டவடிவமாக அமைந்துள்ளன. இன்று, பொற்காசுகள் சிலவே கிடைத்துள்ளன. அதில் முன்பக்கம் இரு மீன்களும் இருமருங்கினும் வலப்புறம் விளக்கும், இடப்புறம் சாமரமும், மேலே அரசகுடையும் உள்ளன. பின்புறம் தேவ நாகரி வடிவம்போல் எழுத்துக்கள் காணப்படுகின்றன; ஆனால் சரியாகப் படிக்க முடியவில்லை. வெள்ளிக் காசுகள் கிடைப்பது அரிதினும் அரிது. என்னிடம் ஒரேயொரு வெள்ளிக் காசு இருந்தது. அது கொற்கையில் கிடைத்தது. இப்பொழுது சென்னையில் உள்ள தமிழக அரசின் தொல்பொருட்காட்சிக் சாலையில் உள்ளது.

இப்பொழுது பாண்டியர்களின் வட்டவடிவமான செப்புக்காசுகள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. சோழர்களின் பெரும்பாலான காசுகளில் தேவநாகரி வரிவடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களின் பெரும்பாலான காசுகளில் தமிழ் வரிவடிவம் தீட்டப்பட்டுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். இவை பெரும்பாலும் 60 கிராம் எடைக்கு உட்பட்டவையாக இருக்கின்றன. காசுகளின் பெயர்களும், மதிப்பும் தெளிவாகக் காண முடியவில்லை. சில கல்வெட்டுக்களின்றும், செப்பேடுகளின்றும் அக்காலத்தில் ஒரு காசுக்கு என்னென்ன பண்டங்கள் எவ்வளவு பெற முடியும் என்று அறிய முடியும். சில காசுகளில் முன் தீட்டப்பட்ட உருவங்கள்மீது பாண்டியர்களின் சின்னமாகிய மீன்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இது பாண்டிய நாடு மற்றவர் ஆட்சியினின்று மீட்கப்பட்டதைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது.

பாண்டியர் காசுகளில் பெரும்பாலானவற்றில் மன்னர்களின் சொந்தப் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. விருதுப் பெயர்களே காணப்படுகின்றன.

குறிப்பாக, அவனீப சேகர கோளகன், அவனீபேந்திரன், கோதண்டராமன், கலியுகராமன், கச்சி வழங்கும் பெருமாள், சேரகுலராமன், பூதல, பூதலவீரன், எல்லாந்தலை, எல்லாந் தலையானான், சோணாடு கொண்டான், ஜெகவீர சமர கோலாகலன், கனிய வி. பெ., கோனேரி (ராயன்?) கோனேரி ராயன், புவனேகவீரன், வாளால் வழிதிறந்தான் (குளிகை) என்ற விருதுப் பெயர் பொறித்த காசுகள் காணப்படுகின்றன.


சுந்தர பாண்டியன் காசு

இஃதன்றி, மன்னர்கள் பெயர் பொறித்தவை அதாவது குலசேகரன், வேமப் பெருமாள் வீரபா, வீரபாண்டியன், சு, சுந், சுந்தரன், சுந்தரபாண்டியன் போன்ற பெயர்கள் உள்ள நாணயங்களும் உள்ளன. சுந்தரபாண்டியன், குலசேகரன் போன்ற பெயர்களுள்ள மன்னர்கள் பலர் பாண்டிய நாட்டில் இருந்து வந்ததால் இக்காசு குறிக்கும் பெயர் முதலாம் சுந்தர பாண்டியனா, இரண்டாம் சுந்தர பாண்டியனா, முதலாம் குலசேகரனா, இரண்டாம் குலசேகரனா என்று அறிய முடியாமல் இருக்கிறது.


சுந்தர பாண்டியன் காசு

மேற்கூறிய பாண்டியர்களின் காசுகள் பெரும்பாலும் ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆண்ட žமாறன் žவல்லபன் (கி.பி. 815-862) காலத்திலிருந்து, சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1175-1180). முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1190-1218), முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1216-1238), முதல் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1251-1271), சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1267-1281), முதல் மாறவர்மன் குலசேகரபாண்டியன் (கி.பி.1268-1311), மூன்றாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1303-1309) வரை ஆட்சிபுரிந்த மன்னர்கள் வெளியிட்ட காசுகளாகக் காணப்படுகின்றன.

பிற்காலப் பாண்டியர் காசுகள்

கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை ஆண்டு வந்த பாண்டியர்கள் வெளியிட்ட காசுகளைப் பிற்காலப் பாண்டியர்களின் காசுகள் என்று கூறலாம். பிற்காலப் பாண்டியர்களிற் பலர் தென்பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்து வந்தனர். பாண்டியப் பேரரசு வீழ்ந்ததும், சில பாண்டிய இளவரசர்கள் தென்பாண்டிய நாட்டில் பல இடங்களில் சிற்றரசர்கள்போல் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களில் சிலர் கொற்கையில் இருந்து ஆட்சி புரிந்து வந்ததோடு அங்குள்ள அஃகசாலையில் காசுகளும் வெளியிட்டு வந்தனர்.

கொற்கைப் பாண்டியர் காசுகள் முற்காலத்தில் மட்டுமல்ல பிற்காலத்தும் ஒரு தனித்தன்மை வாய்ந்தனவாக மிளிர்கின்றன. இவை மதுரைப் பாண்டியர் காசுகளினின்று எளிதில் வேற்றுமை காணக்கூடியனவாக இருக்கின்றன. கொற்கையில் அறிஞர் லோவந்தால் அவர்களுக்குக் கிடைத்த யானை உருவம் பொறித்த காசுகளும், நந்தி உருவம் பொறித்த காசுகளும்கூட ஒரு தனித்தன்மையுடையனவாய்க் காணப்படுகின்றன. மேலும், தாமரை மலர், ஞாயிறு, தண்பொருநை, சுவத்திகம், அன்னம், வைணவர்களின் நாமம், சிவபார்வதி உருவம் தீட்டிய காசுகளாகவும், அரச உடையில் நிற்கும் மனித உருவம், மனித உருவத்தின் அருகே கோடரி போன்ற உருவங்கள் தீட்டிய கொற்கைப் பாண்டியர்கள் காசுகளாகவும், மதுரைப் பாண்டியர்களின் காசுகளுக்கு முற்றிலும் மாறுபட்டனவாகவும் காணப்படுகின்றன.

பிற்காலப் பாண்டியர்கள் வெளியிட்ட கொற்கைக் காசுகளில் பல வைணவச் சின்னங்கள் காணப்படுகினற்ன. எனவே, பிற்காலப் பாண்டியர்கள், வைணவர்களின் திருத்தலங்களான ஆழ்வார்திருநகரி, žர்வைகுந்தம் முதலிய ஊர்களின் அருகேயுள்ள கொற்கையில் இருந்ததால் நிலைகுலைந்த தங்கள் ஆட்சிக்குப் புத்துயிர் தருமாறு வைணவர்களாகி, திருமாலை வேண்டியிருக்கிறார்கள் என்று தெற்றெனத் தெரிகிறது. பிற்காலப் பாண்டியர்கள் பலர் வைணவப் பெயர்களைக் கொண்டிருப்பது, இதனை உறுதிப்படுத்துகின்றது.

எடுத்துக்காட்டாகச் சடைய வர்மன் அதிவீரராமபாண்டியன் (கி.பி. 1564-1604), வரதுங்கராமபாண்டியன் (கி.பி. 1588), வரகுணராம குலசேகர பாண்டியன் (கி.பி. 1631) வரண ராம பாண்டிய குலசேகரதேவ தீட்சிதர் (கி.பி. 1748) போன்ற பெயர்களைக் கூறலாம். சில பாண்டியர்கள் பிராம்ம­யத்தைத் தழுவி வேத விதிப்படி வேள்விகள் செய்தும் வந்தனர்.


வீர பாண்டியன் காசு

எடுத்துக்காட்டாக வரகுணராம குலசேகர பாண்டியன் (கி.பி. 1615), குலசேகர சோமாசியார் என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டார் (3). என்ன செய்தும் பாண்டியர்கள் ஆட்சி நிலைக்கவில்லை. žரிய நிலையில் இருந்த பாண்டியர் ஆட்சி நிலைக்கவில்லை.

žரிய நிலையில் இருந்த பாண்டியர் ஆட்சி 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தாழ்ந்த நிலையை அடையத் தொடங்கிற்று.

பாண்டிய நாட்டில் அன்னியர் ஆட்சி :

பாண்டிய நாட்டு இளவரசர்களின் அறிவின்மையால் கி.பி. 1330-ஆம் ஆண்டு முதல் 1378-ஆம் ஆண்டுவரை மதுரையில் முஸ்லிம் ஆட்சி எழுந்தது. அவர்களின் பெயரால் அரபி எழுத்துப் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.

பாண்டிய மன்னர்கள் பல தலைமுறைகளாகத் தேடிவைத்த பொன்னும், மணியும், முடியும், கொடியும், செங்கோலும், அரச கட்டிலும், பிற விலையுயர்ந்த பொருள்களும் டில்லியில் அரசாண்ட மொகலாயக் கொள்ளைக்காரர்களால் சூறையாடப்பட்டு டில்லிக்குக் கொண்டு போகப்பட்டன (4). அப்பால் விசயநகர நாயக்க மன்னர்கள் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்து வந்து, மொகலாய ஆட்சியை விரட்டிவிட்டு நாயக்கர்களின் தளபதிகள் மதுரையில் இருந்து ஆட்சி புரிந்தனர்.

நாயக்கர்கள் மதுரையிலிருந்து, "பழநி, மதுரை, விருபாசி, திருமல" என்ற தமிழ் வரி வடிவம் பொறித்த காசுகளை வெளியிட்டுள்ளனர். அப்பால் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிழக்கிந்தியக் கும்பினியார்கள் பாண்டிய நாட்டில் காசுகளை வெளியிட்டனர். அக்காசுகளில் தமிழ், ஆங்கில எழுத்துக்கள் காணப்படுகின்றன. 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாண்டிய நாட்டில் ஆங்கில ஆட்சி நன்றாகக் கால் ஊன்றிக் கொண்டு ரூபாய், அணா, பை, துட்டு என்னும் பெயர்களால் நாணயங்களை ஆங்கில எழுத்தில் வெள்ளி, செம்புத் தாதுப் பொருள்களில் வெளியிட்டனர். 1947-ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர ஆட்சி எழுந்து காசுகளை வெளியிட்டு வருகிறது.

இடைக் காலத்தில் சேது என்ற தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட காசுகள் சில பாண்டிய நாட்டிலும், ஈழ நாட்டிலும் கிடைத்தன. இதை யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்கள் வெளியிட்டிருக்கலாம் என்று நல்லூர் ஞானப் பிரகாச அடிகள் கருதுகிறார். இராமநாதபுரம் அரசர்கள் தங்கள் முன்னோர்கள்வெளியிட்ட காசுகள் என்று கூறுகிறார்கள். சர். டப்ளியூ, எலியட், சேதுக் காசுகள் பாண்டியர்கள் வெளியிட்ட காசுகளாக இருக்கலாம் என்று கருதுகிறார்.

பிற்காலப் பாண்டியர்கள் செப்புக் காசுகளை மட்டுந்தான் வெளியிட்டுள்ளனர். பிற்காலக் கொற்கைப் பாண்டியர்கள் குறைந்த மதிப்புள்ள மிகச்சிறிய அளவுள்ள செப்புக் காசுகளை வெளியிட்டிருக்கின்றனர்.

காசுகளின் பெயர்கள் :

பாண்டிய நாட்டில் நாணயங்கள் காணம், கழஞ்சு, காசு, பொன், குளிகை, பணம் என்ற பெயர்களால் வழங்கப்பட்டன. 10 பொன் கொண்டது 1 காசு. 10 காணம் கொண்டது ஒரு கழஞ்சு, 1 பொன் 1 காணம் எடையுள்ளது.

காசு ஆராய்சி இயல் (NUMISMATALOGY)

காசு ஆராய்ச்சி இயலை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தில் அறிஞர்களான சர் வால்டர் எலியட், லயனல் வில்பர்ட், ஐ.சி.எஸ்., லோவந்தால் (Rev. Lovfenthal), டாக்டர் ஜே. ஆர். ஹெண்டர்சன் போன்றவர்கள் ஆரம்பித்து வைத்தனர். சர்.டி. தேசிகாச்சாரி, திவான் பகதூர் இரங்காச்சாரி, வி. சொக்கலிங்க முதலியார் போன்றவர்கள் காசியலை வளர்க்க முன்வந்தனர். ஆனால், அடிப்படையிட்டு 80 ஆண்டுகள் ஆகியும் தமிழகத்தில் காசு ஆராய்ச்சித்துறை சிறிதும் வளரவில்லை-ஏன்? இன்று அந்த அடிப்படை கூடத் தகர்ந்துவிட்டது என்பது ஆராயத்தக்கது.

காசு ஆராய்ச்சி-ஏன்?

காசு ஆராய்ச்சி நாட்டின் கலை வளர்ச்சியை எடுத்துக்காட்டும் ஓர் அரும் பெரும்துறை. அது நாட்டின் வரிவடிவத்தின் அபிவிருத்தியை நன்கு விளக்குவதாகும். காசுகளின் அமைப்பு, அதில் காணும் சின்னங்களின் சிறப்பு மக்களின் நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும். பழங்காசுகள், எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டின் உண்மையான வரலாற்றை வரைவதற்கு உற்ற-உயரிய கருவியாக ஒளிர்கின்றன. மேலும், காசுகள் நாட்டின் அவ்வக்காலப் பொருளாதார நிலை உணர்த்தப் போதிய சான்றாகத் திகழ்கின்றன.

முடிவுரை :

தமிழர்களின் விழிப்புணர்ச்சியின் பயனாக எழுந்த உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கருத்தரங்கும், தமிழ் மக்களின் தவப்பேறாக இன்று தமிழகத்தில் துளிர்த்துள்ள தமிழர் ஆட்சியும் காசு ஆராய்ச்சித்துறை வளர்ச்சிக்கு ஆவன செய்யும் என்று நம்புகிறோம். தமிழகத்தின் வரலாற்றை விரைவில் காணநாடும் நமது தமிழக ஆட்சியினருக்குக் காசு ஆராய்ச்சி மிகமிக இன்றியமையாதது என்று நினைப்பூட்டிக் கொள்கின்றோம்.

ஆலவாய்- மதுரை மாநகரத்தின் கதை

பாண்டிய நாட்டில் சமண மதம், மக்கள் அளவில் மிகச் செல்வாக்கு மிகுந்ததாக இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டும் கல்வெட்டுக்கள் இன்று நமக்குப் புலனாகியுள்ளனன. ஐராவதம் மகாதேவன், கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இத்துறையில் அயராது செயல் பட்டிருக்கிறார்கள். *அநேகமாகப் பெரும்பான்மையான தொன்மை வாய்ந்த நாடுகளில், வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரம் ஒன்று இருக்கும். ஆனால், வரலாற்றில் அவ்வளவு முக்கியம் பெற்றிராத அந்தப் பழமையான நகருக்குப் பின்பு தோன்றிய ஒரு நகரம், பிற்காலங்களில் அதைவிடச் செல்வாக்கு மிகுந்ததாக ஆகிவிடும். போலந்தில் க்ராக்கூப் என்ற நகரம், நம் மதுரையைப் போல், போலந்தின் தொன்மைக் கலாசாரத்தை எடுத்துக் காட்டும் காலத்தின் கண்ணாடி. ஆனால் இன்று போலந்தின் வர்ஷாவா தான் நமக்குத் தெரியுமேயன்றி, க்ராக்கூபைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அதுபோல்தான், அமெரிக்காவின் வாஷிங்டன்னும், நியூயார்க்கும். லண்டன் தப்பித்தது, காரணம், லண்டனுக்கு இணையான அளவில் ஒரு பெரிய நகரம் பிரிட்டனில் உருவாகவில்லை. சென்னையை விட மிக மிகப் பழமையான நகரம் மதுரை. அதன் தொன்மை, வரலாற்றுக் காலத்துக்கு முந்தியது. தமிழ்ப் பண்பாட்டின் வரலாறுதான், மதுரையின் வரலாறும். தமிழ் இலக்கிய நூல்களில் மிக மூத்ததாக கருதப்படும் பதிற்றுப்பத்து, மதுரையைக் குறிப்பிடுகின்றது.

அதன் இன்னொரு பெயர் ஆலவாய். இந்த ஆலவாய் நகரின் வரலாற்றை, இலக்கிய, சமூக, அரசியல் பின்புலத்தில் ஆராய்ந்து, ஓர் அற்புதமான நூலை நமக்குத் தந்திருக்கிறார் நரசய்யா. மதுரையும் தமிழும் ஒரு பொருள் குறிக்க வந்த இரு சொற்கள் போல், தமிழக வரலாற்றில் பேசப்படுகின்றன. காரணம் தமிழ் மொழியைப்.பேணுவதற்காகத் தோன்றிய சங்கங்கள் பாண்டிய அரசர் ஆதரவுடன் மதுரையிலும், அதை ஒட்டிய இப்பொழுது மறைந்துவிட்ட நகரங்களிலும் தோன்றியதாக நம்பப்படுகிறது. நரசய்யா இச் செய்திகளை இலக்கிய ஆதாரங்களுடன் மிக விரிவாக இந்நூலில் ஆராய்கிறார். இதைத் தவிர, கிறித்துவ சகாப்தத்துக்கு முன்னிருந்தே, ரோமாபுரி சாம்ராஜ்யத்துக்கும் பாண்டிய நாட்டுக்குமிருந்த தொடர்பை நிறுவும் நாணயங்கள் பல இன்று கிடைத்திருக்கின்றன. பாண்டிய நாட்டில் சமண மதம், மக்கள் அளவில் மிகச் செல்வாக்கு மிகுந்ததாக இருந்தது என்பதைச் சுட்டிக் காட்டும் கல்வெட்டுக்கள் இன்று நமக்குப் புலனாகியுள்ளனன. ஐராவதம் மகாதேவன், கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இத்துறையில் அயராது செயல் பட்டிருக்கிறார்கள். நரசய்யா, மதுரையைப் பற்றிக் கிடைக்கூடிய அனைத்துத் தகவல்களையும் ஆராய்ந்த்து, கோவையாகப் பல தலைப்புகளின் கீழ் அவற்றைக் கருவூலமாக நமக்கு அளித்திருக்கிறார். 'உலக நாடுகளின் எல்லா வரலாறும், அதிகாரம் என்ற உச்சத்தை எட்டுவதற்கு நிகழும் ஏணிப்படிப் போராட்டங்கள்தாம்' என்றார் யான் காட்( ). ஷேக்ஸ்பியரின் வரலாற்று நாடகங்களை விமர்சனம் செய்யும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நரசய்யாவின் மதுரை வரலாற்றில், மத்திய நூற்றாண்டுகளிலும், பிறகும் நிகழ்கின்ற அரசியல் சம்பவங்களைப் பார்க்கும்போது, யான் காட்டின் கூற்றின் உண்மை நமக்கு உறுதியாகின்றது. தமிழக அரசர்களின் வாரிசுகள் ஆட்சி உரிமைக்காகப் போராடியதின் விளைவாக, நாடு எப்படி அயலார்களின் ஆட்சிக்கு உட்பட்டது என்பதை இவ்வரலாறு நமக்குக் கூறுகின்றது. நமது நாட்டின் தற்கால அரசியல்வாதிகளைப் பார்க்கும்போது, நாம் இன்னும் அக்கால அரசியல் சூழ்நிலையினின்றும் அதிகமாக மாறிவிடவில்லை என்று நரசய்யா கூறுவது பொருத்தமான கூற்றாகப் படுகிறது. சங்க நூற்களினின்றும் மதுரையைப் பற்றிய பல மேற்கோள்களை எடுத்துக் காட்டுகிறார் நரசய்யா. மதுரைக் காஞ்சியின் பாட்டுடைத் தலைவனாகிய ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்தான், சிலப்பதிகாரத்தில் கோவலனக் கொல்கின்ற பாண்டிய மன்னன் என்று அவர் கூறுவது பொருந்துமா என்று தெரியவில்லை. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்ற சோழ மன்னன் கரிகாற் பெருவளத்தான். சேர மன்னன் செங்குட்டுவன். மூவரும் ஒரே காலத்தவராக இருந்திருக்க முடியாது. பிற்காலத்தில் வந்த ( கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு) சேரப் புலவராகிய இளங்கோ, முன்பு சிறப்பு மிக்கிருந்த சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிப்பதற்காக இவர்களைக் குறிப்பிட்டிருக்கலாமென்று தோன்றுகிறது. தமிழ்ச் சமூகத்தைப் பற்றிய ஓர் அரிய ஆவணமாக இந்நூலை ஆக்கியிருக்கிறார் நரசய்யா. கல்வெட்டுகள், பண்டைய காசுகள், சிற்பங்கள், ஆகிய பலவற்றைத் துருவி ஆய்ந்தததின் வெளியீடு இந்நூல். 'மதுரை ஸ்தானிகர் வரலாறு' மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்தைப் பற்றி அறிவதற்கு, திருவரங்கத்துக் 'கோயில் ஒழுகு' போன்ற ஓர் அரிய நூல். சமய வழிபாட்டிலும் அதிகாரப் போட்டி இருந்திருக்கின்றது.

வட நாட்டிலிருந்து பிராமணர்கள் கோயில் நிர்வாகத்துக்காகவும், சமயச் சடங்கள் செயல்பாட்டிற்காகவும் இடை நூற்றாண்டுகளில் அழைத்து வரப்பட்டனர் என்று குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் தமிழ் நாட்டில் பிராமணர்கள் இல்லை என்று அர்த்தமில்லை. சங்க காலத்து மன்னனாகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி அவன் பெயரே குறிப்பிடுவது போல் பல யாகங்களை பிராமணர்கள் இல்லாமல் எப்படிச் செய்திருக்க முடியும்? பிராமணர்கள் வைத்திருந்த முக்கோலைக் குறிப்பிட்டுத் தொல்காப்பியச் சூத்திரம் ஒன்று இருக்கின்றது. அரிய படங்களுடன், மதுரையைப் பற்றிய பல நுணுக்கமான கலாசார, சமூக, அரசியல் செய்திகளைத் தந்திருக்கும் இந்நூலை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும். இப்புத்தகத்தை மிக மிக நேர்த்தியாக அச்சிட்டுப் பிரசுரித்துள்ளனர் பழனியப்பா பிரதர்ஸ்

இந்திரா பார்த்தசாரதி

இது ஒரு பொன்மாலை பொழுது

ஹே ஹோ ஹூம்... ல ல லா...
பொன்மாலை பொழுது...

இது ஒரு பொன்மாலை பொழுது...
வானமகள், நாணுகிறாள்...
வேறு உடை, பூணுகிறாள்...
இது ஒரு பொன்மாலை பொழுது...

ம்ம்ம்ம் ஹே ஹா ஹோ... ம்ம்ம்...

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்...
ராத்திரி வாசலில் கோலமிடும்... (2)
வானம் இரவுக்கு பாலமிடும்...
பாடும் பறவைகள் தாளமிடும்...
பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ... (இது ஒரு)

வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்... (2)
ஒரு நாள் உலகம் நீதி பெறும்...
திருநாள் நிகழும் தேதி வரும்...
கேள்விகளால், வேள்விகளை... நான் செய்தேன்... (இது ஒரு)

ஆ... ஹே ஹோ ஹா ல ல லா...
ம்ம்ம்ம் ஹே ஹோ ஹா ம்ம்ம்...

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்