செயல் புரிபவனாகச் சிறந்து விளங்குவது எப்படி என்ற கேள்விக்கு தைத்திரீய உபநிடதத்தில் உள்ள சில மந்திரங்கள் சில குறிப்புகளைத் தருகின்றன.
ச்ரத்தா ஏவ சிர:
------------------
முதன்மையானது,அக்கறை.செய்யும் செயலை மதித்தல்;நேசித்தல்(சிர: என்றால் தலை.ச்ரத்தா என்பது ஈடுபாடு,அக்கறை). சிறப்பாகச் செயல் புரிய வேண்டுமெனில் செய்கின்ற செயலை வெறுப்புடன் செய்யக்கூடாது; தயக்கத்துடன் செய்யக் கூடாது;அரை மனதுடன் செய்யக்கூடாது.எல்லாச் செயல்களும் நாமே தேர்ந்தெடுத்துச் செய்பவை அல்ல.சில செயல்களை நாம் தேர்ந்தெடுத்துச் செய்கிறோம்.சில செயல்கள் நாம் ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்கேற்ப செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஒரு குடும்பத்தலைவனாக,ஒரு அலுவலக ஊழியனாக,ஒரு பொறுப்புள்ள குடிமகனாகப் பல செயல்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வாறு எந்தச்செயல் செய்தாலும் அதன் மீது விருப்பம் இருக்க வேண்டும்;குறைந்த பட்சம் வெறுப்பாவது இல்லாமல் இருக்க வேண்டும்."என் தலையெழுத்து,என் போதாதகாலம்" என்றெல்லாம் குறை கூறிக்கொண்டே எந்தச் செயலையும் செய்யக்கூடாது. செயலை விரும்பக் கற்றுக் கொள்ள வேண்டும்.நாம் செய்யும் செயல்களை விரும்பக் கற்றுக்கொண்டால், அச்செயலைச் செய்வதே நமக்கு மகிழ்ச்சியைத்தரும். ஒரு முறை அலுவலகத்தில் என்னைப் பார்க்க வந்த ஒரு நண்பர் என் செயல்பாடுகளைப் பார்த்து விட்டுக் கூறினார்"நான் நினைக்கிறேன்,நீங்கள் உங்கள் வேலையை மிகவும் நேசிக்கிறீர்கள் என்று".நான் சொன்னேன்"ஆம்,நண்பரே, அவ்வாறு நேசிப்பதால்தான் என்னால் சிறப்பாகச் செயலாற்ற முடிகிறது".எனவே முதன்மையானது செய்யும் செயலிடம் விருப்பம்,மரியாதை,ஈடுபாடு,அக்கறை.
ருதம் தக்ஷிண:பக்ஷ:
---------------------------
அடுத்தது செய்யும் செயல் பற்றிய அறிவு.செய்ய வேண்டிய செயலைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.எதைச் செய்ய வேண்டும்,எப்படிச் செய்ய வேண்டும்,ஏன் செய்ய வேண்டும்,எங்கு செய்ய வேண்டும்,எப்போது செய்ய வேண்டும் என்பவற்றை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும், 'ருதம்' என்பதற்குச் செய்கின்ற செயலைப்பற்றிய சரியான அறிவு எனப் பொருள் கொள்ளவேண்டும்."யதா சாஸ்திரம்,ததா கர்தவ்யம் ஞானம்" என்கிறார் ஆதி சங்கரர்.விதிகள் என்ன சொல்கின்றனவோ,அதை அப்படியே செய்ய வேண்டும். இரவில் ஒருவர் சுப்ரபாதம் படித்தால் அவரைப் பற்றி என்ன சொல்வது? தேர்வுக்குச் செல்லும் மாணவன் நன்கு படித்துவிட்டுச் செல்லவேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு ஆசிரியர்,இருபது ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்,இன்றும் வகுப்புக்குச் செல்லும் முன் தயார் செய்து கொண்டுதான் செல்கிறார்.(ஈடுபாடு+அறிவு).ஒரு செயலில் ஒரு தவறு செய்தால் அதிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் அத்தவறைச் செய்யாமல் இருக்க வேண்டும்.அதுவே செயல் முன்னேற்றத்துக்கான வழி.
செயல்கள் மட்டுமன்று.வாழ்வில் நாம் ஏற்கும் ஒவ்வொரு பாத்தி்ரமுமே பல விதமான செயல்பாடுகள் உடையதாகிறது.ஒருவரே,மகனாய்,கணவனாய், சகோதரனாய்,தந்தையாய் பல நிலைப்பாடுகளில் செயல் புரிய வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் திறம்படச் செய்ய,அது பற்றி முழுமையான அறிவு தேவை.
ஸத்யம் உத்தர:பக்ஷ:
--------------------------
செய்யும் செயல் பற்றி முழுமையாக அறிந்த பின் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
" யதா சாஸ்திரம் ததா கர்தவ்யம் ஞானம்
யதா ஞானம் ததா அனுஷ்டானம்."
எனக்கு ஒரு செயலை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரியும்,ஆனால் செய்ய மாட்டேன் என்ற நிலை இருக்கக்கூடாது.அறிவுக்கும்,செயலுக்கும் இடையே பிளவு இருக்கக் கூடாது என்பதையே ஸத்யம் என்ற சொல் உணர்த்துகிறது.ஒரு செயல் பற்றிய நம் முழுமையான அறிவைப் பயன்படுத்தி அச் செயலைச் செய்யும்போது செம்மையாகச் செய்து விட்டோம் என்ற திருப்தி கிடைக்கிறது.எனவே மூன்றாவது,அறிந்தவற்றைச் செயல் படுத்துவது.
யோக ஆத்மா
-----------------
யோக என்பதற்கு இங்கே பொருள் ஒருமுகப்படுத்துதல்(concentration,focus).நாம் தியானத்தில் இருக்கும்போது நம் மனம் ஒருமுகப்படுகிறது. அதைப்போல, செயலைத் தியானமாகப் பாவித்துமனதை ஒரு முகப்படுத்திச் செய்யும்போது செயல் செம்மையாக முடிக்கப்படுகிறது.இயந்திரம் போல் செயலாற்றினால் செய்த செயலையே திரு்ம்பச் செய்ய நேரிடும்.அலுவலகம் சென்றால் நம் சிந்தனை அங்கு செய்கின்ற செயல்களின் மீதுதான் இருக்க வேண்டும். அவ்வாறின்றி, விட்டைப்பற்றி நினைத்துக் கொண்டிருந்தால் செயல் எவ்வாறு செம்மையாக முடியும்?எனவே,நமது கடமைகளைச் செய்யும்போது,"கருமமே கண்ணாயினார்"என்பது போல,மனதை ஒரு முகப்படுத்திச் செய்ய வேண்டும்.
மஹ:புச்சம் ப்ரதிஷ்டா.
----------------------------
" நான் செய்யும் ஒவ்வொரு செயலுமெவ்வளவு அதிகமான மனிதர்களுக்குப் பயன் படுகிறதோ அவ்வளவு பயன் படட்டும்"என்று எண்ண வேண்டும். கென்னடி சொன்னார்"இந்த நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்காதே,நான் இந்த நாட்டுக்கு என்ன செய்தேன் என்று கேள்"எனவே நமது பார்வையை விரிவடையச் செய்ய வேண்டும்.நமக்குக் கிடைக்கும் பயனை விட,அச் செயலால் மற்றவர்கள் எவ்வறு பயனடைகிறார்கள் என்பதை நினைக்க வேண்டும்.
ஆக, ஐந்து விதிகளாவன:-செயலை விரும்பு,அது பற்றி முழுமையாய் அறிந்து கொள்,செயல்படுத்து,ஒருமுகமாய் செயலாற்று,பார்வையை விரிவாக்கு.
இவையே தைத்திரீய உபநிடதம் சொல்லும் செய்தி.
(ஆதாரம்:பரம பூஜ்யஸ்ரீ ஸ்வாமி பரமார்த்தானந்தா அவர்களின் உரை)
"கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும், காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன."
செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009
பக்தி
ஒரு நாள் ஞானியாரிடம் ஒருவன் கேட்டான்"சாமி,சிலர் கடவுளுக்காக பெரிய யாகம் எல்லாம் பண்றாங்க;நெறைய செலவு செய்யறாங்க.சிலர் ஒடம்பை வருத்தித் தவம் எல்லாம் செய்யறாங்க.;வெயில்,மழை,காத்து எதையும் பாக்கிறதில்லை.சிலர் ஏகாதசி,க்ருத்திகை,ஷஷ்டி,சனிக்கிழமை,வியாழக்கிழமை இப்படிப் பல நாட்கள் பட்டினி இருந்து கடவுளை வணங்குறாங்க.சிலர் கோவில் கோவிலாப் போயி வணங்கறாங்க.அங்கப்பிரதக்ஷிணம் செய்யறாங்க.என்னை மாதிரிச் சிலர் எதுவுமே செய்யாம வெறுமனே கும்பிடுறோம்.இறைவன் அருள் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக் கிடைக்குமா?"
ஞானி புன்முறுவலுடன் சொன்னார்"எதைச் செய்தாலும் உள் மனதில் மிகுந்த அன்போடு செய்ய வேண்டும்.இறைவனிடத்துக் காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கி அன்போடு அகம் குழைந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.உடலை எவ்வளவு வருத்தினாலும்,உண்மையான அன்பு இல்லையெனில் பலன் இல்லை.நான் உங்களுக்கு கண்ணப்ப நாயனார்,சபரி ஆகியோர் பற்றிக் கூறியிருக்கிறேன் அல்லவா.அது போன்ற அன்பு வேண்டும்".
ஞானி மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்
"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தவொண் ணாதே"--(திருமூலர்)

திங்கள், 3 ஆகஸ்ட், 2009
மயக்கம் ஏற்படுதல்
மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.
தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு
சோர்வு
வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
தோல் வெளுத்துக் காணப்படுதல்.
மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது
முன்புறமாக சாய வேண்டும்
தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள் வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது
பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.
இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.

காந்திஜியின் உயில் என்ன சொல்கிறது?
காந்தியின் பொருட்கள் ஏலம் விடப்படும் நிலையில், அவர் கைப்பட எழுதிய உயிலில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை நவ ஜீவன் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
மகாத்மா காந்தி தனது கைப்பட எழுதியு அந்த உயில், கடந்த 1940-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி எழுதப்பட்டுள்ளது.
அதாவது, "எனது பொருள்களை சொந்தம் கொண்டாடுவதற்கான சட்டப்பூர்வ உரிமை நவ ஜீவன் அறக்கட்டளைக்கு மட்டுமே உண்டு" என்று உயிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எனக்கு சொத்து இருப்பதாக நான் நினைக்கவில்லை. இருந்தாலும், நமது சமூக வழக்கப்படியோ அல்லது சட்டத் தேவைக்காகவோ எனக்குச் சொந்தமான அசையும், அசையா பொருள்கள், நான் எழுதிய புத்தகங்கள் அல்லது இனி எழுதவிருக்கும் புத்தகங்கள் - அது அச்சிடப்பட்டிருந்தாலும் அச்சிடப்படாமல் இருந்தாலும் அவை யாவும் நவ ஜீவன் அறக்கட்டளைக்கே சொந்தம்" என்று உயிலில் அவர் குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.
பியார் லால் நாயர், கிஷோர்லால் ஜி மாஷ்ருவாலா ஆகிய இருவரும் சாட்சிகளாக கையெழுத்திட்டுள்ளனர்.
நவஜீவன் அறக்கட்டளை 1929-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி காந்தியால் நிறுவப்பட்டது.
காந்தியின் பொருள்கள் தங்களுக்கே சொந்தம் என்று நவஜீவன் அறக்கட்டளை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தப் பொருள்களை சட்டப்படி விலை கொடுத்து வாங்க வழியே இல்லை. சட்டவிரோதமாகவே எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றும் தனது மனுவில் அறக்கட்டளை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புள்ளி வெச்சு, கோடு போடு…
2009 ஏப்ரல் 30
by bseshadriஅறிவியலோ, பொறியியலோ, நிறையப் பரிசோதனைகள் செய்யவேண்டியிருக்கும். ஏதாவது கோட்பாடு ஒன்றை முன்வைப்பிர்கள். பின் சோதனை மூலம் சில பண்புகளை அளப்பீர்கள். அவற்றை அட்டவணை ஆக்குவீர்கள். பின்பு? ஒரு கிராப் தாளில் புள்ளிகளை வரைவீர்கள்.
இப்படித்தான் ஒரு கிராப் தாளில் சில புள்ளிகளை வைத்து, அவற்றை இணைக்கும் நேர்கோட்டை என் மனைவி வரைந்துகொண்டிருந்தார். அவர் இப்போது எம்.எஸ்சி இயல்பியல், அஞ்சல்வழிக் கல்வி பயின்று வருகிறார். இப்போது பிராக்டிகல் வகுப்புகள் நடக்கின்றன.
எட்டிப் பார்த்தேன். வருத்தத்துடன் பதில் வந்தது. “ஆன்சர் சரியா வரலை…”
தாளில் புள்ளிகள் அங்கும் இங்குமாக விரவிக் கிடக்க, இவர் குத்துமதிப்பாக ஒரு கோட்டை வரைந்து, அதன் சாய்மானத்தை (slope) கணக்கிட்டு, பிறகு அந்த எண்ணை ஒரு சமன்பாட்டில் செலுத்தி விடை கண்டுபிடிக்கவேண்டும். சோதனை, ஒரு பெர்ஸ்பெக்ஸ் பிளாஸ்டிக் தகட்டின் யங்ஸ் மாடுலஸையும் பாய்ஸான்ஸ் ரேஷியோவையும் கண்டுபிடிப்பது.
“இந்தப் புள்ளிகளுக்குப் பொருந்துமாறு ஏன் ஒரு நேர்கோட்டை fit செய்யக்கூடாது?” என்றேன்.
“அப்படியென்றால்?”
“நமக்குத் தேவை நேர்கோடு. ஆனால் எந்தக் கோட்டை வரைந்தாலும் அதில் அத்தனை புள்ளிகளும் உட்காரப் போவதில்லை. எனவே ஒரு குறிப்பிட்ட கோட்டை நாம் தேர்ந்தெடுக்கவேண்டும். எந்தப் புள்ளியும் அந்தக் கோட்டிலிருந்து மிக அதிகத் தொலைவில் இருந்துவிடக் கூடாது. அதாவது, அந்தப் புள்ளிகள் இந்தக் கோட்டிலிருந்து எவ்வளவு விலகியுள்ளதோ அந்த தூரங்களின் வர்க்கத்தைக் கூட்டி அதை minimise செய்யவேண்டும். கிடைக்கும் பதில்தான் நமக்குத் தேவையான கோடு…”
அவருக்குப் புரியவில்லை. இதை அவர் முன்னே பின்னே கேட்டிருந்ததே இல்லையாம். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது இளநிலை மாணவர்கள் அனைவருக்குமே சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமே?
“இதை Microsoft Excel-லேயே செய்துவிடலாமே” என்றேன். செய்தும் காட்டினேன்.
கீழ்க்கண்ட அட்டவணையை எடுத்துக்கொள்ளுங்கள்:
x y
1.1 5
2.2 10
3.3 15
4.4 20
5.5 25
இதை Excel அழகான படமாக ஆக்கித் தந்துவிடும். ஒரு நேர்கோட்டை பொருத்து (fit) என்று அதனிடம் சொன்னால், செய்வதோடு மட்டுமல்லாமல், அதற்கான சமன்பாட்டையும் நமக்குக் கொடுத்துவிடும். $$y = 4.5455 x$$
ஆனால் கீழ்க்கண்ட அட்டவணையை எடுத்துக்கொள்ளுங்கள்.
x y
நுண்புழை இயக்கம் (Capillary Action)
விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிர்களுக்குமே உயிர்வாழ நீர் தேவை. ஆனால் விலங்குகள் நீர் எங்கே உள்ளது என்று தேடி அலையக்கூடியவை. ஆனால் தாவரங்கள் அப்படியா?
தாவரங்கள் ஓரிடத்தில் நிலை பெற்று நிற்கும் என்று நமக்குத் தெரியும். நம் தோட்டத்தில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு நாம் நீர் பாய்ச்சுகிறோம். ஆற்றோரம் அல்லது குளத்தோரம் உள்ள தாவரங்கள் நீர் கிடைக்கும் இடம் நோக்கி தங்கள் வேர்களைக் கொண்டுசெல்லும்.
ஆனால், நீர் கிடைக்கும் இடத்துக்கு வேர் சென்றுவிட்டால் மட்டும் போதுமா? வேர் என்பது நீரை உறிஞ்சிக்கொள்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் இது சரியல்ல. நீர் என்பதுதான் வேர் மூலமாக தன்னை மேல்நோக்கிக் கொண்டுசெல்கிறது!
விலங்குகள் பலவற்றுக்கும் ‘இதயம்’ என்ற உறுப்பு உள்ளது. இந்த இதயம், ஒரு பம்ப் போல உடலின் பல பாகங்களுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. ஆனால், தாவரங்களுக்கு இதயம் போன்ற பம்ப் ஏதும் கிடையாது. அதனால், தாவரங்களால் நீரை அடியிலிருந்து ‘பம்ப்’ செய்து மேலே கொண்டுபோக முடியாது. புவி ஈர்ப்பு விசை, நீரை கீழ்நோக்கி இழுத்துக்கொண்டே இருக்கும். ஆனால், அதைமீறி நீர் ஒரு மரத்தின், செடியின் மேல் பகுதிகளுக்கு எப்படிச் செல்கிறது?
‘நுண்புழை இயக்கம்’ என்று ஒரு கருத்து உண்டு. நுண்புழை என்றால், மெல்லிய, மயிரளவு அகலம் மட்டுமே உள்ள ஒரு குழாய். பள்ளிக்கூடங்களில் சோதனைச் சாலையில் இதனை நீங்கள் பார்த்திருக்கலாம். நீர் உள்ள பாத்திரத்தில் இந்த நுண்புழையைச் செருகுங்கள். பாத்திரத்தில் உள்ள நீர் மட்டத்துக்கு மேலாக இந்தக் குழாயில் நீர் ஏறும். அகலமான குழாயைச் செருகினால், நீர் மட்டம் மிகக் குறைவாகத்தான் ஏறும். மெல்லியதாக இருக்கும்போதுதான் இப்படி நீர், ஈர்ப்பு விசையை எதிர்த்துக்கொண்டு மேல் நோக்கிச் செல்லும்.
இதனால்தான், தாவரங்கள் மிக நுண்ணிய இழைகளாக தங்களது வேர்களை உருவாக்குகின்றன. இந்த வேர்களும் எங்கெல்லாமோ போய் நீரைத் தேடுகின்றன. நீர் கிடைத்துவிட்டால், இந்த நுண்புழை இயக்கம் காரணமாக, எந்த பம்பின் உதவியும் இல்லாமலேயே, நீர் மேல் நோக்கி உறிஞ்சப்படுகிறது.
இதென்ன பெரிய விஷயம்? எந்த திரவமும் இப்படித்தானே இயங்கும், இதில் நீருக்கென்ன சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம். நீர் அளவுக்கு எந்த திரவமும் இப்படியான நுண்புழை இயக்கம் கொண்டதல்ல. சொல்லப்போனால் பாதரசம் போன்ற திரவம் முற்றிலும் நேர் எதிராக வேலை செய்யும். ஒரு நுண்புழையை பாதரசம் உள்ள பாத்திரத்தில் செருகினால், அந்தக் குழாயில் பாதரசத்தின் மட்டம் குறைவானதாக இருக்கும்.
தாவரங்கள் உயிர்வாழ பாதரசம்தான் தேவை என்றால், தாவரங்களின் கதி அம்பேல்தான்!
from → இயற்பியல்

சனி, 1 ஆகஸ்ட், 2009
மனம் என்பது ஆன்மாவா?
மனம் என்பது ஆன்மாவா? ***************************** மனம்: ******* முதலில் இந்தியச் சிந்தனை மரபில் மனம் என்றால் என்ன என்று பார்க்கலாம். நம் முன்னோர் மனதை உள்ளுறுப்பு (அந்தக்கரணம்) என்று கூறினார்கள். எப்படி மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும் வெளியுறுப்புகளோ, இவற்றிலிருந்து வரும் அனுபவ ங்களைப் பெறும் மனமும் ஓர் உறுப்பே. அது ஆறாவது உறுப்பு. ஆனால் மனத்தை 'ஸ்விட்ச் ஆ·ப்' செய்துவிட்டால், மற்ற உறுப்புக ளின் அனுபவங்களை நாம் பெறுவதில்லை. உதாரணமாக, நாம் தீவி ரமாக யோசிக்கும்போது, நமக்கு இசை கேட்பதில்லை, பூவின் மணம் தெரிவதில்லை என்பது போல. எனவே இந்த ஆறாவது உறுப்பு இல்லாவிட்டால் மற்ற ஐந்து உறுப்புகளின் செயல்கள் பலனளிக்கா. மனம்தான் இவற்றின் ஓட்டுநர். இதன் பொருள் என்னவென்றால், எவ்வாறு ஐம்புலன்களும் உடலின் உறுப்புகளோ, அவ்வாறே மனமும் ஆறாவது 'உள்' உறுப்பு. அவ்வளவுதான். 'இந்த உடல்தான் நான்' என்ற எண்ணம் இருக்கும்வரை ஞானம் வாய்க்காது. மனமும் உடல்தான் என்றபின், மனமும் நானல்ல. ஆனால் ஐந்து பொறிகளின் வழியே மனம் வெளிநோக்கிப் பாய்ந்து கொண்டே இருக்கிறது. வெளிநோக்கிப் பாயும் மனம் இறைவனை அடையாது. அதாவது ஞானத்தை அடையாது. மனத்தை உள்நோக் கித் திருப்ப வேண்டும். மேற்கத்திய விஞ்ஞானத்தில் மனம் அறிவு இரண்டும் ஒன்றுதான். எல்லாமே மூளையில் இருப்பவைதாம். அதாவது, புலன்களின் உணர் வுகளுக்கான சமிக்ஞைகளைப் பெறுவது மூளைதான். ஒவ்வொரு வகை உணர் வுக்கும் மூளையில் ஒவ்வொரு மையம் இருக்கிறது என்பார்கள். இந்தியச் சிந்தனையில் மனத்தை மூன்றாகப் பிரித்தார்கள்: 1. சித்தம்: (Mind) உணர்வுகளின் தொகுதியான பகுதி. 2. புத்தி: (Intellect) அறிவு. 3. அகங்காரம்: (Ego) ஆணவம். 'நான்', 'என்னுடையது' என்று எ ண்ணவைப்பது. மனம் என்பது எண்ணங்களின் தொகுதி. எண்ணங்கள் இல்லையேல் மனம் இல்லை. இந்த மனம்தான் நாம் எது இல்லையோ அதை யெல்லாம் நான் என்று நினைக்க வைக்கிறது. பாரதியின் ஞான ரதம் படித்தீர்களானால் 'சத்தியலோகத்துக்குள் நுழையவேண்டுமென்றால் மனத்தோடு நுழையமுடியாது' என்று அவருடன் வரும் கந்தர்வன் சொல்லுவான். 'உங்களுக்கெல்லாம் சிந்திக்காமல் இருப்பது எவ்வளவு கடினமோ, எனக்குச் சிந்திப்பது அவ்வளவு கடினம்' என்று ஒருமுறை ரமண பக வான் கூறினார். ஞானிகளுக்குத் தமக்கென்று ஒரு மனம் கிடையாது. எனவேதான் அவர்களுக்கு உயர்வு-தாழ்வு, விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம் என்பது போன்ற இருமைகள் கிடையாது. மனம் நம் உடலின் உள்ளே இருந்துகொண்டு உடலை ஆட்டிப்படைக்கும் ஒரு சூக்குமப் பொருள். மனம் அசைந்தால் உடல் முழுதும் அசைகிறது. மனம் ஒடுங்கினால், நம் உடலையும் மறந்து, நாம் இன்ன இடத்தில் இருக்கிறோம், இன்னதுதான் செய்கிறோம் என்னும் நினைவின்றி சுழுத்தி அவத்தையில் அழுந்தி விடுகிறோம். மனம் அடங்க, அதனால் மனோவாயுவும் அடங்க பிரேதா அவத்தைக்குப் போய்விடுவோம். இவைகளால் மனமே சலனத்துக்குக் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. மனம் ஒருவனுக்கு வயப்பட்டால், அவன் யோகம், ஞானம் எதும் செய்யத் தேவையில்லை. பெரியோர்களெல்லாம் தம் மனத்தை வயப்படுத்தவே தவம் முதலிய முயற்சிகளைக் கையாண்டனர். எத்தகைய யோக ஞானங்களும் ஒருநிலைப்பட்ட சித்தமில்லையேல் பலன் தராது. நமது ஞான வினை என்னும் முக்கலை ஒன்றித்தலும் முற்றுப் பெறும் வரை மனிதனுக்கு பரிசுத்தம் இன்றியமையாத ஒன்று. ஆதலால், மனத்தை வயப்படுத்த முயலவேண்டுமே அல்லாது மனத்தை முற்றிலும் அடக்க முயலக் கூடாது. ஏனெனில், மனம் அடங்கிவிட்டால் ஒரு காரியமும் நடைபெறாது. மனம் சுத்த மனம், அசுத்த மனம் என இரு வகை. காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம் என்பவைகளில் விருப்பமுள்ள மனம் அசுத்த மனம். மேற்கூறியவைகளில் வெறுப்படைந்து ஒளிவீசுவது சுத்த மனம். இதைத்தான் "அறிவு" என்கிறோம். மனம்தான் இவ்வுலகில் காணப்படும் நிலையில்லாப் பொருட்களை அடையும்படி செய்து மனிதனைத் தாழ்த்துகிறது. இதே மனம்தான், இவைகள் நிலையற்றவை என்று அறிவால் உணர்த்தி வெறுப்பூட்டி, ஆன்ம ஞானத்தைப் பெறவைத்து உயர்த்துகிறது. மனத்தினால் செய்யப்பட்ட தொழிலே தொழிலாகும்; மனத்தினால் விடுபட்டதே விடுபட்டதாகும். மனம் நசித்தால் சனன மரணமென்னும் பெரிய காடு நாசமாகும். மன மயக்கம் என்னும் வித்தால் மாயா மலம் என்னும் கொடிய நச்சு மரம் பற்பல துன்பம் என்னும் கிளைகளுடன் செழித்து வளரும். ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தையும் விரும்பாமல் நீங்கியவர்களே மனமென்னும் வாசியை வென்றவர்கள். ஏனெனில், தீனியாசை, யோனியாசை ஆகிய இரண்டினில் யோனியாசையைச் சிலகாலம் வரை ஒத்திப் போட்டாலும், தீனியாசையை நீங்கி இருத்தல் கடினம். மருந்து உண்ணும்போது பத்தியம் இருக்கும்போதுதான் தெரியும் அதன் இன்னல். வைராக்கிய ஞானம் இல்லாதவர்கள், மானிடத் தோல் பொத்திய விலங்கிற்குச் சமம். நான் என்னும் அகங்காரத்தைத் தொலைக்காதவரை உண்மையான ஞானோதயம் கிட்டாது. ஞானோதயமாகாவிட்டால் பிரபஞ்சம் தோன்றும். அப்போது பிரும்மம்(பெருமம்) தோன்றாது. காற்றாடி போல் சுழலும் மனம் வயப்பட்டால்தான் அகந்தை நீங்கும். அகந்தையுள்ளவர் முத்தியை விரும்புதல் இருளைத் துணையாகக்கொண்டு சூரியனைப் பார்க்க முயன்றதுபோலாம். திருக்குறள் *************** யானென தென்னுஞ் செறுக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும். இவ்வுலகத்தோரால் இனிமை எனக் கருதும் யாவும் எப்பொழுது எட்டிக்காய்போல் கசக்கிறதோ அப்பொழுதுதான் மனம் வயப்பட்டுள்ளது. திரண்ட மேகக்கூட்டம் பேய்க்காற்றால் எப்படிச் சிதறி ஓடிச் சூனியமாகி விடுதல்போல் கற்பனையால் மனம் நசிக்கும். நிறைவு - குறைவு, பெரிது - சிறிது நீங்கிய சமபக்குவத்தால் ஆனந்தத்தைத் தரும் பிரமபதம் சதாநித்தியமாகும். வெப்பமானது அக்கினியியிலிருந்து நீங்காமல் இருப்பதுபோல், தாழ்வைத்தரும் சஞ்சலம் மனதை விட்டு நீங்குவது மிகவும் கடினம். சலிக்கும் மனமே உலகமாம். மனம் எப்பொருளைப்பற்றி சதா சிந்திக்குமோ அப்பொருள் சித்திக்கும். எப்பொருளையும் மேன்மையாகப் பாவிக்க மேன்மையும், கேவலமாக நினைக்க கேவலத்தைத் தருவதாகவும் அமையும். ஆகவே, சகலத்துக்கும் மனமே காரணம். ஆகையால்தான் இவ்வளவு எழுதவேண்டி உள்ளது. "கைஸா நிய்யத் அய்ஸா பரக்கத்" எண்ணம் அப்படியோ அப்படியே வாழ்வு. அதாவது "எண்ணம்போல் வாழ்வு". ஆன்மா: ********* ஆன்மா ஆதியந்தமில்லாதது. அதுவே சீவனாகிய சிவன். சீவனை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்தவியலாது. மனம் விழிப்பு நிலையில் மட்டுமே இயங்கும். ஆன்மா மேல்நோக்கிச் சென்றுகொண்டே இருக்கும். மனம் சலனத்தால் அலைபாயும் (குளத்தில் கல்லெறிந்தால் அலைகள் கிளம்புமாப்போல்). சீவன் இல்லாத உடலில் மனம் இயங்காது. ஆனால் மனம் உறங்கும்பொழுது சீவன் ஓடிக்கொண்டுதான் இருக்கும். ஆக மனமும் ஆன்மாவாகிய சீவனும் வேறு வேறு.
மாண்டூக்கிய உபநிஷதம்
இது அதர்வண வேதத்தை சார்ந்ததாகும். இவ்வுபநிஷத்தின் ரிஷி மண்டூக ரூபியான வருண பகவான். மாண்டூக்கிய உபநிஷதம் எல்லா உபநிஷதங்களையுன் விட சிறியது. ஆனால், இதற்கு ஆதிசங்கரருடைய பரமகுருவான ஸ்ரீ கௌடபாதாசாரியார், காரிகை என்னும் விரிவுரையை எழுதியுள்ளதால் மிகவும் பெருமை வாய்ந்தது.
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் 'ஓம்' காரமே. எது காலங்களைக் கடந்து அப்பால் நிற்கிறதோ அதுவும் ஓம்காரமே.
அட்சரத்தால் இந்த ஆத்மா 'ஓம்'காரமாகும். ஓம் என்பது அ, உ, ம் என்று பகுதிகளாகும். இவையே ஜாக்ரம், சொப்பனம், சுஷ¥ப்தி முதலிய குறியீடுகளுக்கு ஈடாகின்றன. அகாரம், உகாரம், மகாரம் ஆகியவை ஓங்காரத்தின் மாத்திரைகளைக் கொடுக்கிறது. இவை மூன்றும் சேர்க்கும்விதமாக நான்காவது மாத்திரை ஒளிந்திருக்கிறது.
இரண்டற்றதாயும், சிவமாகவும், பிரபஞ்சம் லயிக்கும் இடமாகவும், விவரிக்க முடியாததாகவும் உள்ளது இந்த நாலாவது ஸ்தானம். இது ஆத்மாவின் துரீயநிலை.
ஒருவரே மூன்று வடிவில் காணப்படுகிறார். வலக்கண்ணில் விஸ்வரூபியாகவும், மனதுக்குள் ஒளி வடிவிலும், இருதய ஆகாசத்தில் பிரக்ஞையாகவும் ஒருவரே -- மூன்று விதமாக நம் உடலில் வசிக்கிறார். முறையே இவர்களுக்கு விசுவன், தைஜஸன், பிராஞ்ஞன் என்று பெயரிட்டுக் கொள்ளலாம். நான்காமவனுக்கு துரீயன் என்று வைத்துக் கொள்வோம்.
விசுவரூபன் எப்போதும் ஸ்தூலமான போகங்களை அனுபவிப்பவன். வாழ்க்கையை ரசிப்பவன்.
தைஜஸன் வாசனாமயமான சூட்சும போகங்களை அனுபவிப்பவன்.
பிராஞ்ஞன் உணர்வுகளால் ஆனந்தத்தை அனுபவிப்பவன்.
விசுவனும் தைஜஸனும் காரியங்களின் விளைவுகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். பிராஞ்ஞன் காரணத்தால் கட்டப்பட்டவன். காரியம், காரணம் இல்லாத நிலையே துரீயனின் செயல்பாடு.
பிராஞ்ஞன் எதையும் அறியாமல் ஈடுபடுபவன். துரீயன் எப்போதும் எல்லாவற்றையும் காண்பவன். ஒன்றை இன்னொன்றாகக் கொள்பவனுக்குக் கனவு உண்டாகிறது. ஆழ்பொருளை அறியாதவனுக்கு அஞ்ஞானமாகிய துயில் ஆட்கொள்கிறது.
'ஓம்' என்பதில் உள்ள அகாரம் விசுவனிடம் அழைத்துச் செல்கிறது. உகாரம் தைஜஸனுக்கு. மகாரம் பிராஞ்ஞனிடம் கொண்டு போய் விடுகிறது.
மாத்திரையில்லாத ஓங்காரத்தில் எவ்விதம் கடைத்தேறுவது? பிரணவமே பரம்; பிரணவமே பிரும்மம். பிரணவமே முடிவில்லாத பரபிரம்மமாகும்.
பிரணவத்திற்கு காரணமில்லை.
உதாரணங்கள் கொடுக்கவல்ல பிரிதொன்றுமில்லாதது.
அதற்கு அப்பால் வெளிகள் இல்லை.
காரண காரியமில்லாதது.
நாசமழிந்து போகாது.
பிரணவத்தை எவ்வாறு அடைவது? இருதயத்தில் வீற்றிருக்கும் இறைவரைக் கண்டு அறிய வேண்டும். ஞானியானவன் எங்கும் நிறைந்துள்ள பிரணவத்தை அறிந்தபின் துக்கப்படுவதேயில்லை.
எவை வெளிப்படையாக அறிய முடியாமல் உள்ளே இருக்கிறதோ, அவை கற்பனையே. எவை வெளிப்படையாக வெளிக்காட்டுகிறதோ, அவையும் கற்பனையே. நிகழ்காலத்தில் நாம் காண்பவை அனைத்தும் உண்மை போல் காட்சியளிக்கின்றன. வேற்றுமை இந்திரிய பேதத்தில்தான் இருக்கிறது.
நள்ளிரவில் பரத்தையின் வீட்டிற்கு சென்றவன் கையில் அகப்பட்டது கயிறாகத் தோன்றியது. ஆனால், அது பாம்பு. இருட்டில் நிச்சயமில்லாததால், எவ்வண்ணம் பழுதையானது பாம்பாகவும், பாம்பு பழுதையாகவும் விகல்பமாய் எண்ணவைக்கிறது. அவ்வண்ணமே, ஆத்மாவும் விகல்ப சிந்தனை கொள்கிறது.
அத்வைத சித்தி ஏற்படுவதற்கு நிச்சய புத்தி தேவை. பாம்பா பழுதையா என்று காணவேண்டும். ஜீவன், இந்திரியங்களுக்கு எட்டாதவைகளையும் நன்கு அறியும் திறன் வரவேண்டும். அவனுக்கு மூன்று அவஸ்தைகளையும் (ஜாக்கிரம், சொர்ப்பனம், சுஷ¥ப்தி) கடந்த துரீய நிலை கிட்டும்.
ஜாக்கிரத்தைக் கடப்பதால் புற விஷயங்களை அறிய முடிகிறது.
சொர்ப்பனத்தில் விஷய வாசனைகளின் வடிவங்களை உள்ளத்தால் கருதுகிறான்.
சுஷ¥ப்தி விஷயங்களும் வடிவங்களும் இல்லாத வெற்றிடம். இருட்டிலுள்ள தீக்குச்சி போல ஞானமும் ஆனந்தமுமே கிடைக்கின்றன.
துரீயத்தில் ஜீவனின் சுயரூபத்தை உணர்கிறான்.
ஓம் என்னும் அழிவில்லா வார்த்தை இவை அனைத்தையும் ஆத்மாவில் நிறுத்தும் பரம்பொருள்.
பார்க்க முடியாததும் தொட இயலாததும் பரம்பொருள். எல்லா வேறுபாடுகளுக்கும் மேம்பட்ட நிலையிலுள்ளதும் பரம்பொருள். சிந்தனைக்கு நன்கு விளக்கிச் சொல்லவல்லது பரம்பொருள். சிந்தனையில் விளக்கிச் சொல்ல இயலாத அப்பாற்பட்ட நிலையில் உள்ளதும் பரம்பொருள்.
பரம்பொருளின் நிரூவணம் இறைவரோடு எய்தும் ஐக்கிய நிலையில்தான் இருக்கிறது. பரிணாமத்தின் முடிவு இருமையில்லாத நிலை. இரைவர் அமைதியே உருவானவர்; அன்புமயமானவர்.
நித்தியமாய் நிர்மலமாய் நிஷ்களமாய்
நிராமயமாய் நிறைவாய் நீங்காச்
சுத்தமுமாய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த்
துரிய நிறை சுடராய் எல்லாம்
வைத்து இருந்த தாரகமாய் ஆனந்த
மயம் ஆகி மனம் வாக்கு எட்டாச்
சித்து உருவாய் நின்ற ஒன்றைச் சுகாரம்பப்
பெருவெளியைச் சிந்தை செய்வாம்
- தாயுமான சுவாமிகள்
காண்பதற்கரியதாகவும், எளிதில் அறியக் கூடாததாகவும், பிறப்பற்றதாகவும், சமமாகவும், சுத்தமாகவும், வேற்றுமை நீங்கியதாகவும் உள்ள நிலையை எமது சக்திக்கு ஏற்றவாறு, எட்டிய வகையில் உணர்ந்தறிந்து வணங்குவோம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)