வெள்ளி, 6 நவம்பர், 2009

வெற்றிக்கு வழி காட்டும் சிந்தனைகள்.

01. வெற்றியின் விதிகள் வகுப்பறையில் கற்பிக்கப்படுவதல்ல, வாழ்க்கையுடன் முட்டி மோதித்தான் அதைக் கற்க முடியும்.

02. எல்லாவிதமான கல்விகளும் கற்கப்பட்டாலும், ஆசிய நாட்டு பாடசாலைகளில் வெற்றியின் அறிவியல் கற்பிக்கப்படாமல் தந்திரமாக நீக்கப்பட்டுள்ளதை புரிதல் அவசியம்.

03. உலகக் கோடீஸ்வரர்களில் 80 வீதமானவர்கள் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து முன்னேறியவர்களே.

04. ஒரு புதிய சமுதாயத்தை படைக்க வேண்டுமானாலும், உங்களை நீங்களே ஒரு புதிய மனிதராகப் புத்தாக்கம் செய்ய வேண்டுமானாலும் முதலாவது தேவை வெற்றியைப்பற்றிய அறிவியலாகும்.

05. பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இலட்சிய வெறியுடன் உறங்கச் செல்பவர்களுக்கு தூக்கத்தில் வரும் கனவுகளில் தீர்வு கிடைக்கும்.

06. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் செய்யப் போகும் மாபெரும் சாதனையை கனவு காணுங்கள். அந்தத் துறையின் முன்னோடிகள் உங்களுக்கு மாலையிடக் காண்பீர்கள்.

07. எந்தத் துறையில் பணி செய்வது உங்களுக்கு இனிமையான அனுபவமாகத் தோன்றுகிறதோ அந்தத் துறையை நீங்கள் சாதிப்பதற்கான துறையாக தேர்வு செய்யுங்கள்.

08. பணம் சேர்ப்பதுதான் உங்கள் இலக்கு என்றால் எதற்காக சேர்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு உங்களிடம் தெளிவான பதில் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்காக சேர்க்கிறீர்கள் என்றால் அந்தப் பணம் தமக்கு எதற்காக கிடைக்கிறது என்ற தெளிவு அவர்களுக்கு வேண்டும். இரண்டுமே இல்லாமல் பணத்தைச் சேர்த்து எதுவுமே இல்லாமல் மடிவோரே மனதரில் அதிகம்.

09. கால் போன போக்கில் அலையும் மனதை தெளிவான திட்டமிட்டு செலுத்த முதன்மையான ஒரு திட்டம் வேண்டும்.

10. இலக்குகளை உருவாக்கத் தெரிந்தவர்கள், குறி நிர்ணயிக்கப்பட்ட ஏவுகணை போல செயற்படுகிறார்கள். நடைப்பிணமாய் வாழ்வோரில் இருந்து இவர்கள் வேறுபட்டு நிற்கிறார்கள்.

11. உங்களது முதன்மை இலக்கு பிரமாண்டமானதாக இருந்தால் அதைப் பகுதி பகுதியாக பிரித்து எழுதிக் கொள்ளுங்கள். பின் சிறிது சிறிதாக முன்னேறுங்கள்.

12. ஒருவரது எதிர்காலம் அவருடைய அன்றாட வேலை முறையால் தீர்மானிக்கப்படுகிறது.

13. எதை மேம்படுத்த வேண்டும், ஏன் மேம்படுத்த வேண்டும், எப்படி மேம்படுத்த வேண்டும், என்ன காலத்திற்குள் மேம்படுத்த வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேடி வையுங்கள்.

14. இனிப்பாக இருந்தாலும், கசப்பாக இருந்தாலும் திட்டத்தை மனதில் வைத்து முன்னேற வேண்டும்.

15. சரியாகத் திட்டமிடத் தவறும் அனைவரும் தோல்விக்காக திட்டமிடுகிறார்கள் என்பது தோல்வியின் விதிகளில் ஒன்றாக இருக்கிறது.

16. ஆங்கிலப் பேரறிஞர் ஜேம்ஸ் போஸ்வெல்ஸ் 1763ம் ஆண்டு அக்டோபர் 13 ம் திகதி எழுதிய கடிதம் திட்டமிடலின் அவசியத்தை உணர்வு பூர்வமாக வலியுறுத்துகிறது.
அருமையான இதயமும், ஒளிமயமான உடலும் கொண்ட மனிதன் நீ. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக நீ சோம்பேறியாகவும், சோர்வாகவும், முட்டாள்தனமாகவும், மகிழ்ச்சியின்றியும் காணப்படுகிறாய்.
இருண்ட ஆண்டுகள் இன்றோடு முடியட்டும், உன்னை ஆற்றல் மிக்க மனிதனாக மாற்ற இப்போதே முடிவு செய்துகொள். உனது பின்னடைவுக்குக் காரணம், உன்னிடம் ஒரு தெளிவான திட்டம் இல்லாததே என்பதை உணர்ந்து கொள். அறிவுபூர்வமான திட்டத்தை உருவாக்கிக் கொண்டு தயாராகு. நடைமுறைக்கு செல்லும் போது உனது திட்டம் விரிவாக்கம் பெறலாம். ஆனால் மனம் போன போக்கில் செல்வதையும், திட்டமின்றி செயற்படுவதையும் இப்பொழுதே நிறுத்திவிடு. இந்த உறுதி மொழயை இப்போதே எடுத்துக் கொள்ளுங்கள்.

17. பலூன் விற்ற வெள்ளை அமெரிக்கரிடம் ஒரு கறுப்பின சிறுவன் ஐயா கறுப்பு பலூன்களும் மேலே பறக்குமா என்று கேட்டான். அதற்கு அவர் தம்பி பறப்பிற்கும் நிறத்திற்கும் தொடர்பில்லை உள்ளே இருப்பதுதான் பறப்பை தீர்மானிக்கிறது என்றார். உடனே கறுப்பு பலூனை வேண்டி பறக்க விட்ட சிறுவனே மாட்டின் லூதர் கிங். ஆகவே உனக்குள்ளே இருக்கும் சரக்கை அதிகரித்தால் நீயும் உயரப்பறக்கலாம். நீ கீழே கிடப்படதற்கு பறக்கும் சரக்கு இன்மையே காரணம் என்பதை உணர்.

18. உங்களிடம் எவ்வளவு அழகு, பணம், அதிகாரம் இருந்தாலும், உலகம் உங்கள் செயலை வைத்தே உங்களை எடை போடுகிறது. உங்கள் மனதிற்குள் இருக்கும் உழைப்பற்ற உயர்வான சுய மதிப்பீடு மக்களிடம் உங்களைப்பற்றிய உயர்வை உருவாகாது.

19. நம்மில் பலரும் நம்மைப்பற்றி குறைவாக மதிப்பிடக் காரணம், சிறுவயதிலேயே நம்மிடம் விதைக்கப்படும் எதிர்மறையான நம்பிக்கைகள், மதிப்பீடுகள், கண்ணோட்டங்கள் என்பவைதான்.

20. இருபது வயதில் பிணமாகி எழுபது வயதில் புதைக்கப்பட்டான் என்று கருதத்தக்க சுவாரஸ்யமற்ற வாழ்க்கை வேண்டுமா அல்லது சவால்களை எதிர் கொள்ளும் சாதனை வாழ்க்கை வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும்.

21. விரும்பும் தகுதியை பெறுவதற்கு அது ஏற்கெனவே இருப்பது போல நடிப்பதும் ஒரு வழி என்று உளவியல் கூறுகிறது. நீங்கள் எந்தளவு சமூக அந்தஸ்த்து பெற விரும்புகிறீர்களோ அது வந்துவிட்டதாக நினைத்து நடவுங்கள்.

22. உங்கள் மனத்திரையை தொலைக்காட்சி திரையாகவும், பெருவிரலை ரிமோட் கன்ரோலை அமத்தும் கருவியாகவும் கருதி சரியான காட்சிகளை மனத்திரையில் விழுத்துங்கள்.

23. இலட்சியத்துடன் இணைக்கப்படாத உழைப்பு மெய் வருந்தக் கூலி தருமேயல்லாது சிறப்பான பலன்களை அள்ளித்தராது.

24. ஒரு பணியை தொலை நோக்குடன் அணுகத் தெரியாதவருக்கு அதில் முழுமையான ஈடுபாடு இருக்காது.

25. உங்களது உழைப்பு சரியான விளைவை தரவேண்டுமானால் ஒரு பணியை தொடங்க முன்பாகவே, அதனை உங்கள் மனதிற்குள் பயிற்சி செய்து நிறைவேற்றுவது ஒரு சிறந்த யுக்தி.

இதயம் சில உண்மைகள்!


இதயம் சில உண்மைகள்!


1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை - நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும் (எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.


2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .



5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் ...நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).



8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.




9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.



10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.

11. ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயம்.




12. நாய்களுக்குத்தான் மிக பெரிய இதயம் அதன் உடல் அமைப்புடன் ஒப்பிடும்போது.

13. ஒட்டகசிவிங்கியின் இதயத்தின் எடை சுமார் 12.5 கிலோகிராம்கள். ஏனென்றால் அவை தனது கழுத்தின் உயரத்தையும் உடலையும் சமபடுத்திகொள்ளதான்.

இதயம் செயல்படும் முறை


நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந் தமனி என்று பெயர்.

இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதேபோல், உடல் திசுக்களில் சேரும் அசுத்தங்களும், கரியமில வாயுவும் (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து சேரும்.

இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள், வலது இடது எனப்பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையீரலுக்குச் செல்கின்றன. அங்கு, உள் இழுக்கப்பட்ட மூச்சுக்காற்றில் உள்ள ஆக்ஸிஜன் வாயுவால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. வெளி விடும் மூச்சுக் காற்றின் மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட ரத்தம், இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையால், பெருந்தமனி மூலம் மீண்டும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது இப்படி இதயம் சுருங்கி விரியும் ஒவ்வொரு முறையும் உடல் முழுவதும் ரத்தம் பரவுகிறது.

இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது ?
நமது உடலில் உறுப்புகளில் பெரும்பா லானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதவாது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கி னால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும்.

ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது? இதயம் ‘துடிக்கவில்லை’ என்றால் அசுத்த ரத்தம் தூய்மையாகாது. உடல் திசுக்களுக்கு, சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போது மான சத்து கிடைக்காமல் திசுக்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே இறந்துகோகும்.

இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டி ருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது.

இதயத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஏன்?
இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், காது, கால், கை போன்ற உறுப்புகளைப்போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரி-ரசாயன சுரப்பு நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்து கின்றன.

இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.

ஹார்மோன் செயல்பாடுகள் :

அட்ரீனலின் - இந்த ஹார்மோன், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். பயம் மற்றும் உணர்ச்சிவசப்படும்போது, ரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கும்.

தைராக்ஸின் - இந்த ஹார்மோன், இளம் வயதில் உடல் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு வளர்சிதை மாற்றங்களை இது கட்டுப் படுத்துகிறது. இந்த ஹார்மோனால்கூட இதயத் துடிப்பு அதிகரிக்கும்.

பிற காரணங்கள் :
சிரைக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு வரும் ரத்தத்தின் அளவைப் பொறுத்தும், ரத்தஅழுத்தத்தைப் பொறுத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்க வோ, குறைக்கவோ செய்யும்.

இதயத் துடிப்பு எவ்வாறு ஏற்படுகிறது ?
இதயத்தின் இயக்கத்தைப் போலவே, இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவதில் நரம்பு மண்டலம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மூளை மற்றும் தண்டுவடத்தில் இருந்து வரும்
நரம்புகள் இதயத்தில் வியாபித்திருக்கும். இவை, இதயத்தின் வலது பக்க மேல் அறையில் ந.அ. மின் குமிழில் (ந.அ. சர்க்ங்-நண்ய்ர்-அற்ழ்ண்ஹப் சர்க்ங்) குவிந் திருக்கும். இதில் இருந்து தொடர்ந்து மின் னோட்டம் ஏற்படும். இந்த மின்னோட்டம், அருகில் இருக்கும் (மின் குமிழ்) மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் மையமாக அமைந்துள்ள மின் குமிழிக்குப் பரவும். அங்கிருந்து பிரியும் நரம்பிழைகள் மூலமாக வலது மற்றும் இடது கீழ் அறைக்கு மின்னோட்டம் பரவும். இதனால் இதயத் துடிப்பு ஏற்படுகிறது.

அதாவது, இதயத் தசைகள் சுருங்கி விரிகின்றன. அதில் உள்ள வால்வுகள் மூடித் திறக்கின்றன. இவ்வாறு மின்னோட்டத்தை ஏற்ப டுத்தக்கூடிய மின் குமிழ் மற்றும் மின்னோட்ட இழைகளில் கோளாறுகள் ஏற்பட்டால், இதயத் துடிப்பு குறையும் அல்லது அதிகரிக்கும் அல்லது சீரில்லாமல் துடிக்கும்.

சாதாரணமாக, ந.அ மின் குமிழ் எத்தனை முறை இதயத்தில் மின்னோட்டத்தைப் பாய்ச்சுகிறதோ அத்தனை முறை இதயத்துடிப்பு இருக்கும். இது சராசரியாக நிமிடத்துக்கு 72 முறையாக இருக்கும். அதாவது, இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

இதயத் துடிப்புக்கும், நாடித் துடிப்புக்கும் என்ன தொடர்பு ?
இதயத் துடிப்பு என்பது இதய இயங்கும் போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும் போது பெருந்தமனியின் ரத்த ஒட்டம் ஏற்பட்டு ரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்ப டுவதே நாடித் துடிப்பு.. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும்.

இதயத் துடிப்பு எப்போது அதிகமாகும் ?
இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால்அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்
களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.

உடற்பயிற்சி செய்யப்போகும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும்இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைக்கக் விடும்.

இதயத் துடிப்பு எப்போது குறையும் ?
தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும்.

ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90 க்கும் அதிகமான அளவில் இருக்கும். அப்படி 90 க்கு மேல் இருந்தால் அதை மிகை இதயத் துடிப்பு என்றும் 60க்குக் குறைவாக இருந்தால் குறை இதயத் துடிப்பு என்றும் சொல்வார்கள்.

உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத் துடிப்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் கோப்பை ஐந்து முறை வென்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜான் போர்க்குக்கு சாதாரண மாகவே இதயம் நிமிடத்துக்கு 38 முறைதான் துடிக்குமாம்.

மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இது பொருந்தும், யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். அதுவே, கானாரி என்ற பறவைக்கு இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000முறை துடிக்குமாம்.

இதயத்தின் அமைப்பு
இதயம், விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுரை, வெளிப் புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் நீர் இருக்கும். இது, இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத்
திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும்.

இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள் ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு வென்ட்ரிகிள் அறைகளை, கீழ்ப்புற இதயத் துடிப்புச் சுவரும் பிரிக்கின்றன.

இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேலே இரண்டு, கீழே இரண்டு. மேலே இருக்கும்
அறைகள் ‘இடது ஆரிக்கிள்’, ‘வலது ஆரிக்கிள் ‘என்றும் கீழே இருக்கும் அறைகள் ‘இடது வென்ட்ரிகிள்’, ‘வலது வென்ட்ரிகிள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

இதய வால்வுகள் :
இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து ரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும்.
அப்படி தள்ளப்படும் ரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில் திரும்பு வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் ரத்தம், மீண்டும் வராமல் தடுக்க இதய அறைகளில் நிலைய வால்வுகள் உள்ளன. வலது
ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு மூவிதழ் வால்வு என்றும், இடது ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு ஈரிதழ் வால்வு என்றும் பெயர்.

வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘மூவிதழ் வால்வு’ தடுக்கிறது. அதேபோல், இடது ஆரிக்கிள் அறையில் இருந்து இடது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘ஈரிதழ் வால்வு’ தடுக்கிறது.

வலது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, அதிக அறையில் இருந்த ரத்தம் நுரையீரல் தமனியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல் பிறைச்சந்திர வால்வு என்று பெயர். அதேபோல், இடது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, பெருந்தமனியில் செல்லும் ரத்தம் திரும்பிவரமால் தடுக்கும் வால்வுக்கு ‘பெருந்தமனி பிறைச்சந்திர வால்வு’ என்று பெயர்.

இதயத்துக்கும் ரத்தம் தேவை :
உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான சக்தி, ஆக்ஸிஜன் போன்றவை அவசியம். அதற்குத் தான் இதயத்துக்கே ரத்தத்தைத் தரும் ரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை மூலம், இதயம் தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த ரத்தக் குழாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான் ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது.

இதயம் சுருங்கும்போது, உடலின் பல்வேறு பகுதி களுக்கும் ரத்தம் செல்கிறது. ஆனால், இதயம் விரிவடையும்போது தான் இதயத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்கிறது.இதய ஒலிகள் :
இதயம் சுருங்கி விரியும்போது, அதில் உள்ள வால்வுகள் மூடித் திறப்பதன் மூலம், முறையாக உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் நுரையீர லுக்கும் ரத்தம் செல்கிறது. இந்த நிகழ்வு நடை பெறும்போது உருவாவதுதான் இதய ஒலிகள் இத்தகைய ஒலிகளை நம் காதுகளால் சாதாரண மாகக் கேட்க முடியாது. அதற்குத்தான்
மருத்து வர்கள் பயன்படுத்தும் ‘ஸ்டெதாஸ்கோப்’ என்ற கருவி உள்ளது.

இதயத்தில் ஏற்படும் இதய ஒலிகள் மொத்தம் நான்கு. அவை, முதலாவது ஒலி, இரண்டாவது ஒலி, மூன்றாவது ஒலி, நான்காவது ஒலி என்று அழைக்கப்படுகின்றன. ஸ்டெதாஸ் கோப் கருவியைப் பயன்படுத்தி னாலும்கூட, மருத்துவர் களால் இந்த நான்கு ஒலிகளையும் ஒரே நேரத்தில் கேட்க முடியாது. அவர்களால், முதலாவது மற்றும் இரண்டாவது ஒலிகளைத் தான் கேட்க முடியும்

முதலாவது ஒலி :
இதய மேல் அறைகளில் இருந்து கீழ் அறைகளுக்கு ரத்தம் வந்த பிறகு, கீழ் அறை களான இரண்டு வென்ட்ரிக்கிள் அறைகளும் சுருங்கத் தொடங்கும். அப்போது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக்கொள்ளும்.

இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படுவதுதான் முதல் ஒலி.
மூவிதழ் வால்வும், ஈரிதழ் வால்வும் மிகக் குறைந்த கால இடைவேளையில் மூடிக் கொள்ளும். இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படு வதுதான் முதல் ஒலி.

முதல் ஒலியின் அளவு பல்வேறு காரணங்களி னால் மாறுபடக்கூடியது. அதாவது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகளின் அமைப்பு, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பின் தன்மை ஆகிய வற்றைப் பொறுத்து முதல் ஒலியின் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.

இரண்டாவது ஒலி :
கீழ் அறைகள் இரண்டும் சுருங்கிய பிறகு, பருந் தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வழியாக ரத்தம் வெளியேறிய பிறகு, இதயத்துக்குள் மீண்டும் வந்த ரத்தம் கீழ் அறைகளுக்கு வராமல் தடுக்க பெருந்தமனி வால்வும், நுரையீரல் பெருந்தமனி வால்வும் மூடிக்கொள்ளும். அப் போது ஏற்படுவதுதான் இரண்டாவது ஒலி. இதயத்தின் அடிப்பகுதியில் இந்த ஒலி நன்றாகக் கேட்கும்.

ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது,இந்த இரண்டாவது ஒலியின் அளவு அதிகமாக இருக்கும். பெருந்தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வால்வுகளில் கால்சியம் படிந்து இறுகி, அவை சரியாகச் செயல்படாமல் போகும் போது ஒலியின் அளவு குறைவாக இருக்கும்

மூன்றாவது ஒலி :
இதய கீழ் அறைகள் விரிவடைந்திருக்கும்
போது, மேல் அறையில் இருந்து ரத்தம் பாயும்போது ஏற்படுவதுதான் மூன்றாவது ஒலி. இது, மிகவும் மெல்லிய ஒலியாகும். இரண்டாவது ஒலியைத் தொடர்ந்து 0.15 விநாடிக்குப் பிறகு இது ஏற்படும். சிறுவர், சிறுமியர், இளம் வயதினர், கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு இந்த மூன்றவது ஒலி ஏற்படும். இதயம் செயலிழப்பு, இதயத் தசை நோய் போன்றவை இருந்தாலும் இந்த ஒலி கேட்கும்.

முதல் இரண்டு ஒலிகளோடு இந்த மூன்றா வது ஒலியும் சேர்ந்து கேட்கும்போது, குதிரை ஓடும் போது ஏற்படும் சத்தத்தைப்போல் இருக்கும்.

நான்காவது ஒலி :
மூன்றாவது ஒலியைப்போல் இதுவும் மூன்றாவது மெல்லியதாகும். வென்ட்ரிகிள்
அறை விறைத்த நிலையில், மேல் அறைகள் அதிகமாகச் சுருங்கி கீழ் அறைகளுக்கு ரத்தத்தைத் தள்ளும்போது (அற்ழ்ண்ஹப் இர்ய்ற்ழ்ஹஸ்ரீற்ண்ர்ய்) இந்த ஒலி ஏற்படும். இதைச் சாதாரண நிலையில் கேட்க முடியாது.

இதயத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் மட்டுமே கேட்கும். இதயம் செயலிழப்பு, இதயச் செல்கள் அழிதல், இதய கீழ் அறைகள் வீங்கி, விறைத்துப்போதல் போன்ற பிரச்னைகள் இருந்தால் இந்த ஒலி கேட்கும்.

பிற இதய ஒலிகள் :
மேலே சொன்ன நான்கு இதய ஒலிகள் தவிர, இதயத்தில் ஏதாவது நோய்கள் இருந்தால் அவற்றின் காரணமாகவும் பல்வேறு ஒலிகள் கேட்கும்.

இதய வால்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டி ருந்தால், அவற்றை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்கி விட்டு, உலோகத்தால் ஆன செயற் கை வால்வுகளைப் பொருத்துவார்கள். இந்த உலோக வால்வுகளாலும் ஒலி ஏற்படும். இதை, ஸ்டெதாஸ்கோப் உதவி இல்லாமலேயே, இதயத் துக்கு அருகே காது வைத்துக் கேட்க முடியும்