"கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும், காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன."
சனி, 1 ஆகஸ்ட், 2009
மனம் என்பது ஆன்மாவா?
மனம் என்பது ஆன்மாவா? ***************************** மனம்: ******* முதலில் இந்தியச் சிந்தனை மரபில் மனம் என்றால் என்ன என்று பார்க்கலாம். நம் முன்னோர் மனதை உள்ளுறுப்பு (அந்தக்கரணம்) என்று கூறினார்கள். எப்படி மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும் வெளியுறுப்புகளோ, இவற்றிலிருந்து வரும் அனுபவ ங்களைப் பெறும் மனமும் ஓர் உறுப்பே. அது ஆறாவது உறுப்பு. ஆனால் மனத்தை 'ஸ்விட்ச் ஆ·ப்' செய்துவிட்டால், மற்ற உறுப்புக ளின் அனுபவங்களை நாம் பெறுவதில்லை. உதாரணமாக, நாம் தீவி ரமாக யோசிக்கும்போது, நமக்கு இசை கேட்பதில்லை, பூவின் மணம் தெரிவதில்லை என்பது போல. எனவே இந்த ஆறாவது உறுப்பு இல்லாவிட்டால் மற்ற ஐந்து உறுப்புகளின் செயல்கள் பலனளிக்கா. மனம்தான் இவற்றின் ஓட்டுநர். இதன் பொருள் என்னவென்றால், எவ்வாறு ஐம்புலன்களும் உடலின் உறுப்புகளோ, அவ்வாறே மனமும் ஆறாவது 'உள்' உறுப்பு. அவ்வளவுதான். 'இந்த உடல்தான் நான்' என்ற எண்ணம் இருக்கும்வரை ஞானம் வாய்க்காது. மனமும் உடல்தான் என்றபின், மனமும் நானல்ல. ஆனால் ஐந்து பொறிகளின் வழியே மனம் வெளிநோக்கிப் பாய்ந்து கொண்டே இருக்கிறது. வெளிநோக்கிப் பாயும் மனம் இறைவனை அடையாது. அதாவது ஞானத்தை அடையாது. மனத்தை உள்நோக் கித் திருப்ப வேண்டும். மேற்கத்திய விஞ்ஞானத்தில் மனம் அறிவு இரண்டும் ஒன்றுதான். எல்லாமே மூளையில் இருப்பவைதாம். அதாவது, புலன்களின் உணர் வுகளுக்கான சமிக்ஞைகளைப் பெறுவது மூளைதான். ஒவ்வொரு வகை உணர் வுக்கும் மூளையில் ஒவ்வொரு மையம் இருக்கிறது என்பார்கள். இந்தியச் சிந்தனையில் மனத்தை மூன்றாகப் பிரித்தார்கள்: 1. சித்தம்: (Mind) உணர்வுகளின் தொகுதியான பகுதி. 2. புத்தி: (Intellect) அறிவு. 3. அகங்காரம்: (Ego) ஆணவம். 'நான்', 'என்னுடையது' என்று எ ண்ணவைப்பது. மனம் என்பது எண்ணங்களின் தொகுதி. எண்ணங்கள் இல்லையேல் மனம் இல்லை. இந்த மனம்தான் நாம் எது இல்லையோ அதை யெல்லாம் நான் என்று நினைக்க வைக்கிறது. பாரதியின் ஞான ரதம் படித்தீர்களானால் 'சத்தியலோகத்துக்குள் நுழையவேண்டுமென்றால் மனத்தோடு நுழையமுடியாது' என்று அவருடன் வரும் கந்தர்வன் சொல்லுவான். 'உங்களுக்கெல்லாம் சிந்திக்காமல் இருப்பது எவ்வளவு கடினமோ, எனக்குச் சிந்திப்பது அவ்வளவு கடினம்' என்று ஒருமுறை ரமண பக வான் கூறினார். ஞானிகளுக்குத் தமக்கென்று ஒரு மனம் கிடையாது. எனவேதான் அவர்களுக்கு உயர்வு-தாழ்வு, விருப்பு-வெறுப்பு, சுகம்-துக்கம் என்பது போன்ற இருமைகள் கிடையாது. மனம் நம் உடலின் உள்ளே இருந்துகொண்டு உடலை ஆட்டிப்படைக்கும் ஒரு சூக்குமப் பொருள். மனம் அசைந்தால் உடல் முழுதும் அசைகிறது. மனம் ஒடுங்கினால், நம் உடலையும் மறந்து, நாம் இன்ன இடத்தில் இருக்கிறோம், இன்னதுதான் செய்கிறோம் என்னும் நினைவின்றி சுழுத்தி அவத்தையில் அழுந்தி விடுகிறோம். மனம் அடங்க, அதனால் மனோவாயுவும் அடங்க பிரேதா அவத்தைக்குப் போய்விடுவோம். இவைகளால் மனமே சலனத்துக்குக் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. மனம் ஒருவனுக்கு வயப்பட்டால், அவன் யோகம், ஞானம் எதும் செய்யத் தேவையில்லை. பெரியோர்களெல்லாம் தம் மனத்தை வயப்படுத்தவே தவம் முதலிய முயற்சிகளைக் கையாண்டனர். எத்தகைய யோக ஞானங்களும் ஒருநிலைப்பட்ட சித்தமில்லையேல் பலன் தராது. நமது ஞான வினை என்னும் முக்கலை ஒன்றித்தலும் முற்றுப் பெறும் வரை மனிதனுக்கு பரிசுத்தம் இன்றியமையாத ஒன்று. ஆதலால், மனத்தை வயப்படுத்த முயலவேண்டுமே அல்லாது மனத்தை முற்றிலும் அடக்க முயலக் கூடாது. ஏனெனில், மனம் அடங்கிவிட்டால் ஒரு காரியமும் நடைபெறாது. மனம் சுத்த மனம், அசுத்த மனம் என இரு வகை. காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம் என்பவைகளில் விருப்பமுள்ள மனம் அசுத்த மனம். மேற்கூறியவைகளில் வெறுப்படைந்து ஒளிவீசுவது சுத்த மனம். இதைத்தான் "அறிவு" என்கிறோம். மனம்தான் இவ்வுலகில் காணப்படும் நிலையில்லாப் பொருட்களை அடையும்படி செய்து மனிதனைத் தாழ்த்துகிறது. இதே மனம்தான், இவைகள் நிலையற்றவை என்று அறிவால் உணர்த்தி வெறுப்பூட்டி, ஆன்ம ஞானத்தைப் பெறவைத்து உயர்த்துகிறது. மனத்தினால் செய்யப்பட்ட தொழிலே தொழிலாகும்; மனத்தினால் விடுபட்டதே விடுபட்டதாகும். மனம் நசித்தால் சனன மரணமென்னும் பெரிய காடு நாசமாகும். மன மயக்கம் என்னும் வித்தால் மாயா மலம் என்னும் கொடிய நச்சு மரம் பற்பல துன்பம் என்னும் கிளைகளுடன் செழித்து வளரும். ஆசைப்பட்ட பொருட்கள் அனைத்தையும் விரும்பாமல் நீங்கியவர்களே மனமென்னும் வாசியை வென்றவர்கள். ஏனெனில், தீனியாசை, யோனியாசை ஆகிய இரண்டினில் யோனியாசையைச் சிலகாலம் வரை ஒத்திப் போட்டாலும், தீனியாசையை நீங்கி இருத்தல் கடினம். மருந்து உண்ணும்போது பத்தியம் இருக்கும்போதுதான் தெரியும் அதன் இன்னல். வைராக்கிய ஞானம் இல்லாதவர்கள், மானிடத் தோல் பொத்திய விலங்கிற்குச் சமம். நான் என்னும் அகங்காரத்தைத் தொலைக்காதவரை உண்மையான ஞானோதயம் கிட்டாது. ஞானோதயமாகாவிட்டால் பிரபஞ்சம் தோன்றும். அப்போது பிரும்மம்(பெருமம்) தோன்றாது. காற்றாடி போல் சுழலும் மனம் வயப்பட்டால்தான் அகந்தை நீங்கும். அகந்தையுள்ளவர் முத்தியை விரும்புதல் இருளைத் துணையாகக்கொண்டு சூரியனைப் பார்க்க முயன்றதுபோலாம். திருக்குறள் *************** யானென தென்னுஞ் செறுக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும். இவ்வுலகத்தோரால் இனிமை எனக் கருதும் யாவும் எப்பொழுது எட்டிக்காய்போல் கசக்கிறதோ அப்பொழுதுதான் மனம் வயப்பட்டுள்ளது. திரண்ட மேகக்கூட்டம் பேய்க்காற்றால் எப்படிச் சிதறி ஓடிச் சூனியமாகி விடுதல்போல் கற்பனையால் மனம் நசிக்கும். நிறைவு - குறைவு, பெரிது - சிறிது நீங்கிய சமபக்குவத்தால் ஆனந்தத்தைத் தரும் பிரமபதம் சதாநித்தியமாகும். வெப்பமானது அக்கினியியிலிருந்து நீங்காமல் இருப்பதுபோல், தாழ்வைத்தரும் சஞ்சலம் மனதை விட்டு நீங்குவது மிகவும் கடினம். சலிக்கும் மனமே உலகமாம். மனம் எப்பொருளைப்பற்றி சதா சிந்திக்குமோ அப்பொருள் சித்திக்கும். எப்பொருளையும் மேன்மையாகப் பாவிக்க மேன்மையும், கேவலமாக நினைக்க கேவலத்தைத் தருவதாகவும் அமையும். ஆகவே, சகலத்துக்கும் மனமே காரணம். ஆகையால்தான் இவ்வளவு எழுதவேண்டி உள்ளது. "கைஸா நிய்யத் அய்ஸா பரக்கத்" எண்ணம் அப்படியோ அப்படியே வாழ்வு. அதாவது "எண்ணம்போல் வாழ்வு". ஆன்மா: ********* ஆன்மா ஆதியந்தமில்லாதது. அதுவே சீவனாகிய சிவன். சீவனை எந்த சக்தியாலும் கட்டுப்படுத்தவியலாது. மனம் விழிப்பு நிலையில் மட்டுமே இயங்கும். ஆன்மா மேல்நோக்கிச் சென்றுகொண்டே இருக்கும். மனம் சலனத்தால் அலைபாயும் (குளத்தில் கல்லெறிந்தால் அலைகள் கிளம்புமாப்போல்). சீவன் இல்லாத உடலில் மனம் இயங்காது. ஆனால் மனம் உறங்கும்பொழுது சீவன் ஓடிக்கொண்டுதான் இருக்கும். ஆக மனமும் ஆன்மாவாகிய சீவனும் வேறு வேறு.
மாண்டூக்கிய உபநிஷதம்
இது அதர்வண வேதத்தை சார்ந்ததாகும். இவ்வுபநிஷத்தின் ரிஷி மண்டூக ரூபியான வருண பகவான். மாண்டூக்கிய உபநிஷதம் எல்லா உபநிஷதங்களையுன் விட சிறியது. ஆனால், இதற்கு ஆதிசங்கரருடைய பரமகுருவான ஸ்ரீ கௌடபாதாசாரியார், காரிகை என்னும் விரிவுரையை எழுதியுள்ளதால் மிகவும் பெருமை வாய்ந்தது.
கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தும் 'ஓம்' காரமே. எது காலங்களைக் கடந்து அப்பால் நிற்கிறதோ அதுவும் ஓம்காரமே.
அட்சரத்தால் இந்த ஆத்மா 'ஓம்'காரமாகும். ஓம் என்பது அ, உ, ம் என்று பகுதிகளாகும். இவையே ஜாக்ரம், சொப்பனம், சுஷ¥ப்தி முதலிய குறியீடுகளுக்கு ஈடாகின்றன. அகாரம், உகாரம், மகாரம் ஆகியவை ஓங்காரத்தின் மாத்திரைகளைக் கொடுக்கிறது. இவை மூன்றும் சேர்க்கும்விதமாக நான்காவது மாத்திரை ஒளிந்திருக்கிறது.
இரண்டற்றதாயும், சிவமாகவும், பிரபஞ்சம் லயிக்கும் இடமாகவும், விவரிக்க முடியாததாகவும் உள்ளது இந்த நாலாவது ஸ்தானம். இது ஆத்மாவின் துரீயநிலை.
ஒருவரே மூன்று வடிவில் காணப்படுகிறார். வலக்கண்ணில் விஸ்வரூபியாகவும், மனதுக்குள் ஒளி வடிவிலும், இருதய ஆகாசத்தில் பிரக்ஞையாகவும் ஒருவரே -- மூன்று விதமாக நம் உடலில் வசிக்கிறார். முறையே இவர்களுக்கு விசுவன், தைஜஸன், பிராஞ்ஞன் என்று பெயரிட்டுக் கொள்ளலாம். நான்காமவனுக்கு துரீயன் என்று வைத்துக் கொள்வோம்.
விசுவரூபன் எப்போதும் ஸ்தூலமான போகங்களை அனுபவிப்பவன். வாழ்க்கையை ரசிப்பவன்.
தைஜஸன் வாசனாமயமான சூட்சும போகங்களை அனுபவிப்பவன்.
பிராஞ்ஞன் உணர்வுகளால் ஆனந்தத்தை அனுபவிப்பவன்.
விசுவனும் தைஜஸனும் காரியங்களின் விளைவுகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். பிராஞ்ஞன் காரணத்தால் கட்டப்பட்டவன். காரியம், காரணம் இல்லாத நிலையே துரீயனின் செயல்பாடு.
பிராஞ்ஞன் எதையும் அறியாமல் ஈடுபடுபவன். துரீயன் எப்போதும் எல்லாவற்றையும் காண்பவன். ஒன்றை இன்னொன்றாகக் கொள்பவனுக்குக் கனவு உண்டாகிறது. ஆழ்பொருளை அறியாதவனுக்கு அஞ்ஞானமாகிய துயில் ஆட்கொள்கிறது.
'ஓம்' என்பதில் உள்ள அகாரம் விசுவனிடம் அழைத்துச் செல்கிறது. உகாரம் தைஜஸனுக்கு. மகாரம் பிராஞ்ஞனிடம் கொண்டு போய் விடுகிறது.
மாத்திரையில்லாத ஓங்காரத்தில் எவ்விதம் கடைத்தேறுவது? பிரணவமே பரம்; பிரணவமே பிரும்மம். பிரணவமே முடிவில்லாத பரபிரம்மமாகும்.
பிரணவத்திற்கு காரணமில்லை.
உதாரணங்கள் கொடுக்கவல்ல பிரிதொன்றுமில்லாதது.
அதற்கு அப்பால் வெளிகள் இல்லை.
காரண காரியமில்லாதது.
நாசமழிந்து போகாது.
பிரணவத்தை எவ்வாறு அடைவது? இருதயத்தில் வீற்றிருக்கும் இறைவரைக் கண்டு அறிய வேண்டும். ஞானியானவன் எங்கும் நிறைந்துள்ள பிரணவத்தை அறிந்தபின் துக்கப்படுவதேயில்லை.
எவை வெளிப்படையாக அறிய முடியாமல் உள்ளே இருக்கிறதோ, அவை கற்பனையே. எவை வெளிப்படையாக வெளிக்காட்டுகிறதோ, அவையும் கற்பனையே. நிகழ்காலத்தில் நாம் காண்பவை அனைத்தும் உண்மை போல் காட்சியளிக்கின்றன. வேற்றுமை இந்திரிய பேதத்தில்தான் இருக்கிறது.
நள்ளிரவில் பரத்தையின் வீட்டிற்கு சென்றவன் கையில் அகப்பட்டது கயிறாகத் தோன்றியது. ஆனால், அது பாம்பு. இருட்டில் நிச்சயமில்லாததால், எவ்வண்ணம் பழுதையானது பாம்பாகவும், பாம்பு பழுதையாகவும் விகல்பமாய் எண்ணவைக்கிறது. அவ்வண்ணமே, ஆத்மாவும் விகல்ப சிந்தனை கொள்கிறது.
அத்வைத சித்தி ஏற்படுவதற்கு நிச்சய புத்தி தேவை. பாம்பா பழுதையா என்று காணவேண்டும். ஜீவன், இந்திரியங்களுக்கு எட்டாதவைகளையும் நன்கு அறியும் திறன் வரவேண்டும். அவனுக்கு மூன்று அவஸ்தைகளையும் (ஜாக்கிரம், சொர்ப்பனம், சுஷ¥ப்தி) கடந்த துரீய நிலை கிட்டும்.
ஜாக்கிரத்தைக் கடப்பதால் புற விஷயங்களை அறிய முடிகிறது.
சொர்ப்பனத்தில் விஷய வாசனைகளின் வடிவங்களை உள்ளத்தால் கருதுகிறான்.
சுஷ¥ப்தி விஷயங்களும் வடிவங்களும் இல்லாத வெற்றிடம். இருட்டிலுள்ள தீக்குச்சி போல ஞானமும் ஆனந்தமுமே கிடைக்கின்றன.
துரீயத்தில் ஜீவனின் சுயரூபத்தை உணர்கிறான்.
ஓம் என்னும் அழிவில்லா வார்த்தை இவை அனைத்தையும் ஆத்மாவில் நிறுத்தும் பரம்பொருள்.
பார்க்க முடியாததும் தொட இயலாததும் பரம்பொருள். எல்லா வேறுபாடுகளுக்கும் மேம்பட்ட நிலையிலுள்ளதும் பரம்பொருள். சிந்தனைக்கு நன்கு விளக்கிச் சொல்லவல்லது பரம்பொருள். சிந்தனையில் விளக்கிச் சொல்ல இயலாத அப்பாற்பட்ட நிலையில் உள்ளதும் பரம்பொருள்.
பரம்பொருளின் நிரூவணம் இறைவரோடு எய்தும் ஐக்கிய நிலையில்தான் இருக்கிறது. பரிணாமத்தின் முடிவு இருமையில்லாத நிலை. இரைவர் அமைதியே உருவானவர்; அன்புமயமானவர்.
நித்தியமாய் நிர்மலமாய் நிஷ்களமாய்
நிராமயமாய் நிறைவாய் நீங்காச்
சுத்தமுமாய் தூரமுமாய்ச் சமீபமுமாய்த்
துரிய நிறை சுடராய் எல்லாம்
வைத்து இருந்த தாரகமாய் ஆனந்த
மயம் ஆகி மனம் வாக்கு எட்டாச்
சித்து உருவாய் நின்ற ஒன்றைச் சுகாரம்பப்
பெருவெளியைச் சிந்தை செய்வாம்
- தாயுமான சுவாமிகள்
காண்பதற்கரியதாகவும், எளிதில் அறியக் கூடாததாகவும், பிறப்பற்றதாகவும், சமமாகவும், சுத்தமாகவும், வேற்றுமை நீங்கியதாகவும் உள்ள நிலையை எமது சக்திக்கு ஏற்றவாறு, எட்டிய வகையில் உணர்ந்தறிந்து வணங்குவோம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)