செவ்வாய், 29 செப்டம்பர், 2009

மறுபிறப்பு விஞ்ஞானபூர்வமானதுதான் என்பதை நிரூபிக்கும் புத்தகங்கள்


மறுபிறப்பு,பித்ருதர்ப்பணம் பற்றி மேல்நாட்டினர் ஆராய்ந்து அந்த ஆய்வுகுறிப்புகளை தொகுத்து அவை அனைத்தும் நிஜம்தான் என்பதை புத்தகங்களாக வெளியிட்டுள்ளனர்.அந்த புத்தகங்களின் பெயர்கள்:1.The World Beyond2.The Wonder of Transmigration of Souls.குறிப்பு:அரபுப்பாலைவனத்தில் பிறந்த அனைத்து மதங்களும் மறுபிறப்பு என்பது கிடையாது எனக்கூறுகின்றன.இந்நிலையில் அதே மதத்தைச்சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வுப்புத்தகங்கள் தான் இவை.இதை எழுதியது யார் ? என்பது இதுவரை கிடைக்கவில்லை.அப்படி கிடைத்தால் உடனே இந்த வலைப்பூ புதுப்பிக்கப்படும்.மற்ற மதங்களைப்பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் கூறுவது என்ன? என்ற தலைப்பில் இந்த மாத(ஜீலை 2009)த்திலேயே வலைப்பூ ஒன்று நமது ஆன்மீகக்கடலில் எழுதியுள்ளேன்.அதை மீண்டும் ஒரு முறை படிக்கவும்.

மகாபாரதமும் நிஜமே! ஆதாரங்களுடன்


ராமரால் கட்டப்பட்ட சேது பாலம் எப்படி 17,50,000 ஆண்டுகளாக இராமேசுவரம் அருகில் உள்ளதோ அதேபோல மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் வாழ்ந்த அரசாண்ட துவாரகாபுரியும் 5200 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறது.கலியுகம் துவங்கி இப்போது 5100 ஆண்டுகளாகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.இந்த வலைப்பூவிற்கான படங்கள் http://www.deshgujarat.com/ என்ற தளத்திலிருந்து பெறப்பட்டுள்ளன.இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.அந்தபுத்தகத்தின் பெயர் The Lost City of Dwarka.புராண அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிப்பட்டுள்ளது.இது மகாபாரதக்கதை நிஜத்தில் நிகழ்ந்த நிகழ்வு என்பதை துவாரகை இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது.கி.மு.1500 ஆம் ஆண்டுவாக்கில் தற்போதைய துவாரகை மற்றும் அதன் அருகில் உள்ள பெட் துவாரகை ஆகிய பகுதிகளில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறது.கடற்கரையிலிருந்து சுமார் அரை மைல் தூரம் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம் இருந்திருக்கிறது.ஒவ்வொன்றும் 18 மீட்டர் அகலமுள்ள இரண்டு பிரதான சாலைகள்,ஒன்றுக்கொன்ரு தொடர்புடைய ஆறு குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்டமான கட்டடத் தொகுப்புகளைக் கொண்டு துவாரகை விளங்கியிருக்கிறது.அந்நகரின் சுவர்கல் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைவாய்ந்ததாக இருக்கின்றன.கடலில் மூழ்கிய இந்நகரம், வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது.இப்படி விரிவாக்கமான பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப்படுகிறது.இந்த தீவுப்பகுதி கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்யபாமா மற்றும் ஜாம்பவதிக்கான பொழுதுபோக்குதலமாகவும் அமைந்திருக்கிறது.மேலும் தென்னிந்தியாவின் ஒகமதி என்ற இடம் வரையிலும், கிழக்கு இந்தியாவில் பிந்தாரா பகுதியில் ‘பிந்த்ரா-தாரகா’என்ற இடத்தில் துர்வாசரின் குடில் இருந்ததாக மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.துவாரகையின் நிர்மாணம் பிரமிப்பூட்டக்கூடியது.மேற்குக் கடலிலிருந்து நிலம் பெறப்பட்டு நகரம் திட்டமிடுக் கட்டப்பட்டுள்ளது.இது கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது.த்வாரமதி,குசஸ்தலை என்றும் துவாரகை அழைக்கப்படது.எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஆறு பகுதிகள்,குடியிருப்புகள்,வியாபார ஸ்தலங்கள்,அகன்ற சாலைகள்,பொது இடங்கள், ‘சுதர்மா சபா’ என்ற பொதுக்கூட்ட அரங்கம் மற்றும் அழகான துறைமுகம் ஆகியவற்றைக்கொண்டு விளங்கியது துவாரகை.மகாபாரதயுத்தம் முடிந்து 36 ஆண்டுகள் கழித்து துவாரகையைக் கடல் கொண்டது.இதை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர், யாதவர்களை ப்ரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு(தற்போதைய சோம்நாத்) அழைத்துச் சென்று காத்தார்.இந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பல் மூலமாக எல்லோரும் சென்று பார்ப்பதற்கு இந்திய கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.நன்றி:ஆன்மீகப்பலன் மாத இதழ் செப்டம்பர் 2007 பக்கம் 4முதல் 7 வரை.எனது ஆன்மீகக்கடல் வலைப்பூ வாசகர்களே !!!ராமாயணமும் உண்மை.மகாபாரதமும் உண்மை.இருந்தும் ஏன் எய்ட்ஸைப் பரப்பும் அமெரிக்கக் கலாச்சாரத்தை நாம் பின்பற்ற வேண்டும்.இந்து என்பதில் பெருமை கொள்வோம்.நமது இந்து தர்மத்தை உலகம் முழுக்கப்பரப்புவோம்.

ஓம் மந்திரத்தின் விஞ்ஞான விளக்கம்


ஓம்- ஒரு அறிவியல் பூர்வமான நிரூபணம்

அடிப்படைக் குரல் ஒலிகள் மண்ணிலோ ஏதாவது ஒரு திரவத்திலோ அதிர்வடையச்செய்யும்போது, அவை சில அமைப்புக்களை உண்டாக்கும்.இந்த அமைப்பு இயல் அலையியல் (Cymatics) எனப்படும்.

இதனைக் கண்டறிந்து உலகிற்கு உணர்த்தியவர் சுவிஸ்நாட்டின் அறிஞர் டாக்டர் ஹான்ஸ்ஜென்னி(1904 முதல் 1972 வரை).ஒலியின் ஒவ்வொரு அதிர்வும் ஒரு தனித்த அமைப்புடையது.இயற்கை மூலம் இவை திரும்பத் திரும்ப நிகழ்கின்றன.

படைப்பின் அடிப்படை ஒலி ஓம் ஆகும்.

இப்பிரபஞ்சத்தில் எல்லாப் பொருளும் சக்தி அதிர்வால் ஆனவை.ஒவ்வொரு பொருளும் தனக்கென்று தனித்த அதிர்வெண்ணில் அதிர்கிறது.அதிரும் சக்தியை ஒளியாகக் காணலாம்.

இது மனிதர்களையும் உள்ளடக்கியது.நாம் எல்லோரும் அதிரும் ஒளி சக்தியே!!!

பிரபஞ்சத்திலும் பூமியிலும் சில புள்ளிகளில் குவிகிறது.இப்புள்ளிகளை அதிர்புள்ளிகள்(Vortex)என்பர்.

ஹான்ஸ்ஜென்னி ஓம்கார ஒலியை மணலில் அதிரச்செய்தார்.அவ்வாறு செய்த போது ஸ்ரீசக்கரவடிவத்தில் படல் கிடைத்தது.எனவே,ஓம் என்ற பிரணவ ஒலியின் வரிவடிவம்(ஸ்தூல வடிவம்)ஸ்ரீசக்கரம்.

ஆச்சரியமாக இருக்கிறதா?நமது ஆன்மீகம் எவ்வளவு அறிவியல் தன்மைகொண்டது என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம்।

இறைவனது சித்தம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்வது எப்படி?

அதை அறிவதில்லை, உணர்கிறோம். அவ்வாறு உணர வேண்டுமானால் எல்லாத் தடைகளும் மறைந்து போகும் அளவுக்கு அவ்வளவு தீவிரமாக, அவ்வளவு நேர்மையுடன் சங்கற்பிக்க வேண்டும். உன்னிடம் விருப்பு வெருப்பு, ஆசை, ஒரு கவர்ச்சி இவையெல்லாம் இருந்தால் அவை உனக்கும் உண்மைக்கும் இடையே திரையாக அமைந்து விடுகின்றன. ஆகவே, உன்னுடைய முதல் வேலை உன்னுடைய உணர்வின் இயக்கங்களையெல்லாம் ஆளவும், கட்டுப்படுத்தவும், திருத்தவும், அவ்வாறு மாற்ற முடியாதவைகளை களைந்துவிடவும் நீ முயல வேண்டும். முடிவில் எல்லாம் உண்மையின் பூரணமான, நிரந்தரமான வெளிப்பாடாக ஆகிவிட வேண்டும்.

இவ்வாறு ஆக வேண்டும் என்று ஒரு தரம் சங்கற்பித்தால் மட்டும் போதாது, ஏனெனில் நீ அடிக்கடி அவ்வாறு சங்கற்பிக்கத் தவறிவிடுவாய்.

இடைவிடாத நெருப்பைப் போல ஜீவனில் எரிந்து கொண்டிருக்கும் ஆர்வம் வேண்டும், உன்னிடம் ஒரு விருப்பு, ஓர் ஆசை, ஒரு கவர்ச்சி தோன்றும் ஒவ்வொரு தடவையும் அதை இந்த நெருப்பில் எறிய வேண்டும். இதை நீ விடாது செய்து வந்தால் உன்னுடைய சாதாரண உணர்வில் மெய்யுணர்வின் ஒரு மெல்லிய ஒளிக்கற்றை பாயத் தொடங்குவதை காண்பாய். முதலில் அது மங்கலாகவும் விருப்புகள், ஆசைகள், கவர்ச்சிகள் ஆகியவற்றின் இரைச்சல்களுக்குப் பின்னால் வெகு தொலைவிலும் இருக்கும். நீ இவற்றிற்கெல்லாம் பின்னால் சென்று பூரண அமைதியுடன், அநேகமாக மோனமாகவே இருக்கும் அந்த உண்மையான உணர்வைக் கண்டுபிடிக்க வேண்டும்.

உண்மையான உணர்வுடன் தொடர்பு கொண்டிருப்பவர்கள் எல்லா வாய்ப்புகளையும் ஒரே நேரத்தில் பார்க்கிறார்கள். தேவையானால் வேண்டுமென்றே எல்லாவற்றிலும் அதிகக் கடினமானவற்றை அவர்கள் தேர்ந்தெடுக்கவும் கூடும். ஆனால் இந்தக் கட்டத்தை அடைய நீ இன்னும் நெடுஞ்தொலைவு செல்ல வேண்டும்.

சாந்தி... அமைதி... நிம்மதி... மோனம்...


மனத்தில் தெளிவும் உறுதியும், உள்ளத்தில் இறைவனை நோக்கிய உணர்ச்சித் தூண்டுதல் இவையே யோகத்தின் முதல் இரண்டு கருவிகளாகும்‌; சாந்தி, தூய்மை, அமைதி (கீழ்த்தரக் கிளர்ச்சிகளை அடக்குவதுடன்) இவையே அமைக்க வேண்டிய முதல் அடிப்படை. சாதனையின் தொடக்கத்தில் இதைப் பெறுவதே அதிபெளதிக உலகங்களை அல்லது அகக் காட்சிகளைக் காணுதுல், குரல்களைக் கேட்டல், சக்திகள் பெறுதல் இவற்றைக் காட்டிலும் அதிக முக்கியமானது. தூய்மை செய்தலும், அமைதியும் யோகத்தில் முதல் தேவைகளாகும். இவையின்றி (பிற உலகங்களைக் காணல், அகக் காட்சிகள், நாதங்கள் போன்ற) ஏராளமான அனுபவங்கள் ஒருவனுக்கு இருக்கலாம்.

ஆனால், தூய்மையடையாத, கலங்கிய உணர்வில் இவ்வனுபவங்கள் ஏற்படும்போது அவை பொதுவாக கலப்பும் குழப்பமும் நிறைந்தவைகளாகவே இருக்கும்.

ஸ்ரீஅரவிந்தர்

"Peace, Calm, Quiet, Silence" ஆகிய சொற்கள் நுட்பமான பொருள் வேறுபாடு உடையன. அவைகளை விளக்குவது கடினம்.

Peace - சாந்தி
Calm - அமைதி
Quiet - நிம்மதி
Silence -மோனம்

துருதுருப்பும் கலக்கமும் இல்லாத நிலைதான் நிம்மதி. எந்தத் தொல்லைகளும் பாதிக்காத அசையாத தெளிந்த நிலையே அமைதி. இது நிம்மதியை விட எதிர்மறைத்தன்மை குறைந்தது.

சாந்தி இன்னும் அதிக தெளிவான நிலை. அதில் நிலைபெற்ற இசைவுடன் கூடிய ஓய்வும் விடுதலையும் உணரப்படுகிறது.

மோனத்தில் மன, பிராண இயக்கங்களே இரா. அல்லது மேற்பரப்பிலுள்ள எந்த இயக்கமும் உள்ளே செல்லவோ மாற்றவோ முடியாது. பெரும் நிசப்தமாயிருக்கும்.

**

நிம்மதியை இழந்துவிடாதே; சிறிது காலத்திற்கு அது வெற்று நிம்மதியாயிருந்தாலும் பரவாயில்லை. உணர்வு ஒரு பாத்திரம் போன்றது. அதிலுள்ள கலப்புகளை அல்லது வேண்டாத பொருட்களை அடிக்கடி காலி பண்ண வேண்டும். அதைப் புதிய, உண்மையான, சரியான, தூய பண்டங்களால் நிரப்புமுன் சிறிது காலம் காலியாக வைத்திருப்பது அவசியம். கவனமாயிருக்க வேண்டிய ஒரே விஷயம்: பாத்திரத்தை மீண்டும் பழைய மண்டியால் நிரப்புவதைத் தவிர்க்க வேண்டும். இதற்கிடையில், பொறுமையோடிருந்து உன்னை மேல்நோக்கித் திற; அமைதியைக் கெடுக்கக் கூடிய அதிக ஆவல் இல்லாமல், மோனத்தினுள் சாந்தி வருவதற்கு, நிம்மதியாக, நிலையாக அழை; சாந்தி வந்து நிலைத்தபின் ஆனந்தத்தையும் தெய்வ சாந்நித்யத்தையும் அழை.

முதலில் ஏதோ எதிர்மறைப் பொருள் போல தோன்றினும், அமைதியைப் பெறுவது மிகக் கடினம். ஆகவே, அதை அடைவதைப் பெரிய முன்னேற்றமாகவே கருத வேண்டும்.

உண்மையில் அமைதி எதிர்மறைப் பொருளன்று. சத்-புருஷனின் இயல்பே அதுதான்; அதுவே தெய்வ உணர்வின் ஆக்கமான அடிப்படை. வேறு எதற்காக ஆர்வமுற்று அடைந்த போதிலும் இதைக் காக்க வேண்டும். ஞானமும், சக்தியும், ஆனந்தமுமே வந்தாலும் அமைதி அடிப்படை இல்லையென்றால் அவை இங்கே தங்க முடியாமல் போய்விடும். சத் - புருஷனின் தெய்வீகத் தூய்மையும், சாந்தியும் நிரந்தரமாக இங்கு நிலை நாட்டப்படும் வரை அவை காத்திருக்க வேண்டியதாகும்.

தெய்வ உணர்வின் பிற தத்துவங்களை எல்லாம் அடைய ஆர்வமுறு. ஆனால், ஆர்வம் ஆழ்ந்த அமைதியுடன் கூடியதாக இருக்கட்டும். அமைதியுடன் தீவிரம் இருக்கலாம்; பொறுமையின்மை, துருதுருப்பு, இராஜச ஆவல் கூடாது.

நிம்மதியான மனத்திலும் ஜீவனிலுமே அதிமன பேருண்மை தனது உண்மையான படைப்பை நிர்ணயிக்க முடியும்.

**

சாதனையில் ஆன்மீக அனுபவம் மனத்தளத்திலிருந்து (mental plane) தொடங்கும் - அனுபவம் உண்மையானதாகவும் சீரானதாகவும் இருக்க வேண்டியதொன்றே அவசியமானது.

மனத்தில் தெளிவும் உறுதியும், உள்ளத்தில் இறைவனை நோக்கிய உணர்ச்சித் தூண்டுதல் இவையே யோகத்தின் முதல் இரண்டு கருவிகளாகும்; சாந்தி, தூய்மை, அமைதி (கீழ்த்தரக் கிளர்ச்சிகளை அடக்குவதுடன்) இவையே அமைக்க வேண்டிய முதல் அடிப்படை. சாதனையின் தொடக்கத்தில் இதைப் பெறுவதே அதிபெளதிக உலகங்களை அல்லது அகக் காட்சிகளைக் காணுதல், குரல்களைக் கேட்டல், சக்திகள் பெறுதல் இவற்றைக் காட்டிலும் அதிக முக்கியமானது. தூய்மை செய்தலும்‌; அமைதியும் யோகத்தின் முதல் தேவைகளாகும். இவையின்றி (பிற உலகங்களைக் காணல், அகக் காட்சிகள், நாதங்கள் போன்ற) ஏராளமான அனுபவங்கள் ஒருவனுக்கு இருக்கலாம். ஆனால், தூய்மையடையாத, கலங்கிய உணர்வில் இவ்வனுபவங்கள் ஏற்படும்போது அவை பொதுவாக கலப்பும் குழப்பமும் நிறைந்தவைகளாகவே இருக்கும்.

முதலில் சாந்தியும் அமைதியும் தொடர்ச்சியாக இராமல் வருவதும் போவதுமாயிருக்கும். அவற்றை இயல்‌‌பில் படியச் செய்வதற்கு நீண்ட நாளாகும். ஆதலால், பதற்றமின்றி உன்னுள் நடப்பதைக் கொண்டு தளராது முன் செல்வது நல்லது. சாந்தி, அமைதி இவற்றிற்கு மேல் எதையாவது நீ விரும்பினால் அது உனது உள் ஜீவன் முழுமையாகத் திறப்பதாகவும் உன்னுள் வேலை செய்யும் தெய்வ சக்தியை உணர்வதாகவுமே இருக்கும். சிரத்தையுடனும் மிகத் தீவிரமாகவும் ஆனால் பதற்றமில்லாமலும் ஆர்வமுறு. அது வரும்.

இறுதியில் நீ சாதனையின் உண்மையான அடிப்படையைப் பெற்றுவிட்டாய். ஞானம், வலிமை, ஆனந்தம் முதலிய பிறவெல்லாம் வர இந்த அமைதியும், சாந்தியும், சரணமுமே தகுந்த சூழலாகும். அது நிறைவு பெறட்டும். வேலை செய்யும்போது அது இருப்பதில்லை. ஏனெனில், அது இன்னும் மனத்தளவிலேயே நிற்கிறது. மனம் இப்பொழுதுதான் மோன வரம் பெற்றிருக்கிறது. புதிய உணர்வு முற்றிலும் உருவாகி, பிராண இயல்பையும் தூல ஜீவனையும் முழு உடைமை ஆக்கிக் கொள்ளும் போது (மோனம் இப்போதுதான் பிராணனைத் தொட்டுள்ளது அல்லது அதன் மீது ஆதிக்கம் பெற்றுள்ளது, அதை இன்னும் உடைமைப்படுத்திக் கொள்ளவில்லை) இந்தக் குறை மறைந்துவிடும்.

இப்போது உன் மனத்திலுள்ள நிம்மதியான சாந்தி உணர்வு அமைதியாக மட்டுமின்றி விசாலமாகவும் இருக்க வேண்டும். நீ அதை எங்கும் உணர வேண்டும்; உன்னையும் அனைத்தையும் அதில் உணர வேண்டும்; செயலிலும் அமைதி அடிப்படையாக இருக்க இது உதவும்.

உனது உணர்வு விரிவடையும் அளவிற்கு நீ மேலிருந்து பெற முடியும். தெய்வ சக்தி மேலிருந்து இறங்கி ஆதாரத்தினுள் சாந்தியுடன் வலிமையையும் ஒளியையும் கொண்டு வர முடியும். உன்னுள் குறுகியதாயும் மட்டுப்பட்டதாயும் நீ உணர்வது உனது தூல மனம். இந்த விசால உணர்வும், ஒளியும் இறங்கிவந்து இயல்பை உடைமையாக்கிக் கொள்ளும்போதே அது விரிவடைய முடியும்.

ஆதாரத்தினுள் மேலிருந்து வலிமை இறங்கியபோதே உன்னை வருத்தும் தூல தாமசிகம் குறைந்து பின் மறையும்.

நிம்மதியாயிரு; பெற்ற அமைதியையும் சாந்தியையும் உறுதியாக்குவதற்கும், உணர்வை விசாலப்படுத்தி, அது தற்பொழுது கிரகித்து ஜீரணிக்க முடிந்த அளவு ஒளியையும் சக்தியையும் அதனுள் கொண்டு வருவதற்கும், உன்னைத் திறந்து, தெய்வ சக்தியை அழை.

கவனம்! அதிக ஆவல்படாதே. அது ஏற்கனவே பிராண இயல்பில் நாட்டப்பட்டுள்ள நிம்மதியையும் சமநிலையையும் குலைத்துவிடக் கூடும்.

இறுதி வெற்றியில் நம்பிக்கை வை; தெய்வ சக்தி அதன் வேலையைச் செய்வதற்கு அவகாசம் கொடு.
ஆர்வமுறு, சரியான உணர்வோடு ஒருமுனைப்படு; அப்பொழுது எவ்வளவு தடைகள் ஏற்பட்டபோதிலும் நீ கொண்ட இலட்சியத்தில் வெற்றி பெறுவது திண்ணம்.

மனத்தின் பின்னாலுள்ள சாந்தியிலும், உன்னுள் உள்ள "அதிக உண்மையான ஒன்று" என்று குறிப்பிடுகியாயே அதிலும் நீ வாழக் கற்றுக் கொண்டு அதுவே நீ என்று உணர வேண்டும். மற்றதெல்லாம் உன்னுடைய உண்மையான ஜீவன் அல்ல, மாறிக் கொண்டேயிருக்கும் மேலெழுந்தவாரியான இயக்கங்களின் கலவையே அவை, உண்மையான ஜீவன் மலரும்போது அவை போய்விடும் என்று நீ உணர வேண்டும்.

சாந்தியே உண்மையான மருந்து. கடினமான வேலை மூலம் மனத்தை வேறு திசையில் திருப்பி மறக்கடித்தல் தற்காலிகப் பயனையே தரும். ஆனால் ஜீவனின் பல்வேறு பாகங்களிடையே சமநிலை ஏற்படுவதற்கு ஓரளவு வேலை தேவை. சாந்தியைத் தலைக்கு மேலும் தலையைச் சுற்றிலும் உணர்வது முதற்படி. பின்னர் அதனுடன் நீ தொடர்பு கொண்டு, அது உன்னுள் இறங்கி, உனது மனம் உயிர் உடலை நிரப்பி, உன்னைச் சூழ்ந்து கொள்ள வேண்டும். நீ அதிலே வாழ வேண்டும். இந்தச் சாந்தியே இறைவனுடைய சாந்நித்யம் உன்னுடன் இருப்பதற்கு அடையாளம். முதலில் இந்தச் சாந்தி கிடைத்தால் மற்றவையெல்லாம் வரத் தொடங்கும்.

பேச்சில் உண்மை, எண்ணத்தில் உண்மை மிக முக்கியம். பொய்மை உன்னில் ஒரு பகுதி அன்று, அது புற‌த்‌தி‌‌ல் இருந்து வருகிறது என்று உணர முடிந்தால் அதை விலக்கி ஒதுக்குவது எளிதாயிருக்கும்.

விடாது முயற்சி செய், இன்னும் கோணலாக இருப்பவையும் நேராக்கப்படும். அதன்பிறகு, இறைவனது சாந்நித்யத்தை இடைவிடாது உணர்வாய்; நேரடியான அனுபவம் உனது நம்பிக்கை சரியானதே என்று காட்டும்.

முதலில் மனநிம்மதி, தூய்மை, அமைதி, சாந்தி, விழிப்புற்ற உணர்வு, தீவிர சக்தி, உள்ளேயும் வெளியேயும் உள்ள கஷ்டங்களைச் சந்தித்து இறுதிவரை யோகத்தைச் சாதனை செய்வதற்கு வேண்டிய வலிமையும் ஆன்மீகத் திறனும் - இவைகளுக்காக ஆர்வமுற்று, அன்னையை நோக்கிப் பிரார்த்தனை செய். உணர்வு விழித்தெழுந்து, பக்தியும் ஆர்வத் தீவிரமும் இருக்குமானால், மனம் - அது நிம்மதியாக இருக்கக் கற்றுக் கொண்டுவிட்டால் - ஞானத்தில் வளர முடியும்.

உன் எதிர்காலம் உன் கையில்! சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் கூறியவைகளை, உன் எதிர்காலம் உன் கையில் என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.

அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருப்பவற்றை தமிழ்.வெப்துனியா.காம் வாசகர்களுக்காக அளிக்கின்றோம்.

நமது நோக்கம்

இயைபுடன் முன்னேறிய மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம்.

அவன் விசாலமான இதயம், பரந்த மனம், உயர்ந்த செயல் இவற்றைப் படைத்திருக்க வேண்டும்.

உலகத்தின் துயரையும் துன்பத்தையும் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்குத் தேவை. அத்துடன் நிற்காமல், அந்த உணர்ச்சியையும் அறிவையும் செயலாக்குபவனே நமக்கு மிகவும் வேண்டப்படுபவன்.

மூளை, இதயம், செயல் இவை ஒருங்கிணைந்து செயல்படுவதே தேவை.

நம்மை மேம்படுத்துவதன் முக்கியத்துவம்

நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.

நமது உடல்கள், நமது குணங்கள், நமது அறிவு, நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது உதாரணம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஒருவர் வருகிறார். அவர் நன்கு கற்றவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது மொழி நடை அழகாக உள்ளத. அவர் ஒரு மணி நேரம் உங்களுடன் பேசுகிறார். ஆனால் சொன்னதில் பெரிதாக எதுவும் உங்கள் மனதில் பதியவில்லை.

இன்னொருவர் வருகிறார். ஒரு சில வார்த்தைகளே பேசுகிறார். அவை நன்றாக ஒழுங்குப்படுத்தப்படவும் இல்லை. ஒரு வேளை இலக்கணப் பிழைகளும் அதில் காணப்படும். ஆனால் அவர் சொன்னது பேரளவிற்கு உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.

உங்களுக்குள் பலரும் இதை அனுபவித்திருப்பீர்கள். எனவே ஒரு போதும் வார்த்தைகள் மட்டுமே மனத்தின் பதிவை உண்டாக்கி விடுவதில்லை..
சுவாமி விவேகானந்தர் கூறியவைகளை, உன் எதிர்காலம் உன் கையில் என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.

அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருப்பவற்றை தமிழ்.வெப்துனியா.காம் வாசகர்களுக்காக அளிக்கின்றோம்.

நமது நோக்கம்

இயைபுடன் முன்னேறிய மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம்.

அவன் விசாலமான இதயம், பரந்த மனம், உயர்ந்த செயல் இவற்றைப் படைத்திருக்க வேண்டும்.

உலகத்தின் துயரையும் துன்பத்தையும் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்குத் தேவை. அத்துடன் நிற்காமல், அந்த உணர்ச்சியையும் அறிவையும் செயலாக்குபவனே நமக்கு மிகவும் வேண்டப்படுபவன்.

மூளை, இதயம், செயல் இவை ஒருங்கிணைந்து செயல்படுவதே தேவை.

நம்மை மேம்படுத்துவதன் முக்கியத்துவம்

நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.

நமது உடல்கள், நமது குணங்கள், நமது அறிவு, நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இப்போது உதாரணம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஒருவர் வருகிறார். அவர் நன்கு கற்றவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது மொழி நடை அழகாக உள்ளத. அவர் ஒரு மணி நேரம் உங்களுடன் பேசுகிறார். ஆனால் சொன்னதில் பெரிதாக எதுவும் உங்கள் மனதில் பதியவில்லை.

இன்னொருவர் வருகிறார். ஒரு சில வார்த்தைகளே பேசுகிறார். அவை நன்றாக ஒழுங்குப்படுத்தப்படவும் இல்லை. ஒரு வேளை இலக்கணப் பிழைகளும் அதில் காணப்படும். ஆனால் அவர் சொன்னது பேரளவிற்கு உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.

உங்களுக்குள் பலரும் இதை அனுபவித்திருப்பீர்கள். எனவே ஒரு போதும் வார்த்தைகள் மட்டுமே மனத்தின் பதிவை உண்டாக்கி விடுவதில்லை..

ஆன்மீக மனிதனின் பரிணாமம்!

மறைபொருள் ஞானமும் ஆற்றல்களும் ஆபத்தான கவர்ச்சிகள், சிக்க வைக்கும் தடைகள் எனத் தள்ளிவிட்டு ஆன்மீக அனுபவம் ஆத்மாவின் தூய உண்மையை மட்டுமே நாடியுள்ளது. தத்துவ ஞானத்தைத் தள்ளிவிட்டு அதற்குப் பதிலாக இதயத்தின் ஆர்வத்தின் மூலம் அல்லது உள்நோக்கிய ஆன்மிக மாற்றத்தின் மூலம் இலட்சியத்தை அடைந்துள்ளது. எல்லா சமயக் கொள்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் தாழ்ந்தபடியில் உள்ளவை அல்லது ஆரம்ப அணுகுமுறை எனக்கருதி அவற்றைப் பின்னால் தள்ளிவிட்டு, இவற்றின் துணை எதையும் விரும்பாமல் ஆன்மிக மெய்மையின் தொடர்பு ஒன்றையே நாடிச் சென்றுள்ளது.

webdunia photo WD



- ஸ்ரீ அரவிந்தர்


உள் ஜீவனைத் திறக்கும் தனது முயற்சியில் இயற்கை முதன்மையாக நான்கு வழிகளைப் பின்பற்றியுள்ளது - சமயம், மறைபொருள் ஞானம் (occultism), ஆன்மகச் சிந்தனை, அக ஆன்மிக அனுபூதியும் அனுபவமும். முதல் மூன்றும் அணுகுமுறைகள், இறுதியாக வருவது முடிவான நுழைவாயில். இந்த நான்கு ஆற்றல்களும் ஒரே சமயத்தில் வேலை செய்துள்ளன, சிறிய அளவிலோ பெரிய அளவிலோ ஒன்றோடென்று தொடர்பு கொண்டும், சில சமயங்களில் அடிக்கடி மாறக்கூடிய ஒத்துழைப்புடனும், சில சமயங்களில் ஒன்றோடென்று வாதிட்டுக் கொண்டும், சில சமயங்களில் தனித்தனியே பிரிந்தும் வேலை செய்துள்ளன.

சமயம் அதன் சடங்குகளில், கிரியைகளில் மறைஞான அம்சங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. அது ஆன்மிகச் சிந்தனையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. சில சமயங்களில் அதிலிருந்து ஒரு சமயக் கோட்பாட்டை உருவாக்கியுள்ளது. சில சமயங்களில் அதற்கு ஆதாரமான ஆன்மிக தத்துவக் கொள்கையைப் பெற்றுள்ளது. பொதுவாக மேற்கு நாடுகள் முதலில் சொன்ன முறையையும் கிழக்கு நாடுகள் இரண்டாவது முறையையும் பின்பற்றியுள்ளன. ஆனால் ஆன்மிக அனுபவமே சமயத்தின் இறுதி இலட்சியமும் சாதனையும் ஆகும். அதுவே அதன் விண் சிகரம். ஆனால் சில சமயங்களில் சமயம் மறைபொருள் ஞானத்தைத் தடை செய்துள்ளது அல்லது மிகவும் குறைத்துள்ளது. அது தத்துவ ஞான மனத்தை வரட்டு அறிவுள்ள அந்நிய ஒன்றாக ஒதுக்கியத்தள்ளியும் இருக்கிறது. பிடிவாதமான கொள்கை, சமயப்பற்றுடைய உணர்ச்சி வேகம், நன்னடத்தை இவற்றிற்கே எல்லா முக்கியத்துவத்தையும் கொடுத்துள்ளது. ஆன்மிக அனுபூதியையும் அனுபவத்தையும் தேவையில்லாததாக ஒதுக்கியுள்ளது அல்லது மிகச்சிறிதளவே வைத்துக் கொண்டுள்ளது.

மறைபொருள் ஞானம் சில சமயங்களில் ஆன்மிக நோக்கத்தைத் தனது இலக்காக வைத்துள்ளது. மறைபொருள் ஞானத்தையும் அனுபவத்தையும் அதற்குரிய அணுகுமுறையாக வைத்துள்ளது. ஒரு வகையான மறைஞான தத்துவத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் பெரும்பாலும் அது ஆன்மிகப் பார்வையில்லாமல் மறை பொருள் ஞானம், அதைப் பழகுதல் என்னும் அளவிலேயே நின்றுவிடுகிறது, அது மாந்திரீகம் அல்லது வெறும் மாயவித்தை இவற்றை நோக்கியும் சென்றுள்ளது, வழி தவறி சூனியம் செய்வதற்குக் கூட போயிருக்கிறது.

ஆன்மிக தத்துவக் கொள்கை வழக்கமாக தனக்கு ஆதாரமாகவும் அனுபவத்திற்குரிய வழியாகவும் சமயத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. அது ஆத்மானுபூதியிலிருந்தும் அனுபவத்திலிருந்துமே தோன்றியுள்ளது அல்லது அதை அணுகும் ஒரு முறையாக தன்னை அமைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அது சமயத்தின் எல்லா உதவியையும் அல்லது எல்லாத் தடையையும் தள்ளிவிட்டு மனத்தளவிலான ஞானத்தில் திருப்தியடைந்து அல்லது அனுபவத்திற்குத் தன்னுடைய சொந்த வழியையும் சக்திவாய்ந்த சாதனை முறையையும் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தன்னுடைய சொந்த பலத்திலேயே சென்றுள்ளது.

ஆன்மிக அனுபவம் ஆரம்பப் படியாக இந்த மூன்று சாதனங்களையும் பயன்படுத்தியுள்ளது, ஆனால் தன்னுடைய சொந்த தூய பலத்தையே நம்பி அவற்றைறெல்லாம் தேவையில்லையென்று விட்டுவிடவும் செய்துள்ளது. மறைபொருள் ஞானமும் ஆற்றல்களும் ஆபத்தான கவர்ச்சிகள், சிக்க வைக்கும் தடைகள் எனத் தள்ளிவிட்டு ஆத்மாவின் தூய உண்மையை மட்டுமே நாடியுள்ளது, தத்துவ ஞானத்தைத் தள்ளிவிட்டு அதற்குப் பதிலாக இதயத்தின் ஆர்வத்தின் மூலம் அல்லது உள்நோக்கிய ஆன்மிக மாற்றத்தின் மூலம் இலட்சியத்தை அடைந்துள்ளது. எல்லா சமயக் கொள்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் தாழ்ந்தபடியில் உள்ளவை அல்லது ஆரம்ப அணுகமுறை எனக்கருதி அவற்றைப பின்னால் தள்ளிவிட்டு, இவற்றின் துணை எதையும் விரும்பாமல் ஆன்மிக மெய்மையின் தொடர்பு ஒன்றையே நாடிச் சென்றுள்ளது.

இந்த வேறுபட்ட முறைகளெல்லாம் தேவையாக இருந்தன, இயற்கையின் பரிணாம முயற்சி பரம உணர்வையும் முழுமையான ஞானத்தையும் அடைவதற்கான அவளுடைய உண்மையான வழியையும் அவளுடைய முழு வழியையும் கண்டுபிடிக்க எல்லா வழிகளையும் பரிசோதித்துப் பார்த்துள்ளது.

ஸ்ரீ அரவிந்தரின் Life Divine புத்தகத்திலிருந்து

தாய்மை என்பது அன்பே! வாழ்க்கை என்பதும் அன்பே!

(ஜெய்ப்பூரில் 2008 மார்ச் 7ஆம் தேதி அகில உலக அமைதியின் தொடக்கத்திற்கான பெண்கள் மாநாட்டில் அம்மா ஆற்றிய அருளுரை)

இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் நிகழும் போராட்டத்தையே இன்று நாம் காண்கிறோம். இதில் விட்டுக்கொடுக்க முன்வராத ஆண்குலம் கடந்த காலத்தின் அடையாளமாகும். மலர்ந்து மணம் வீசும் அழகிய மலரைப் போல் எதிர்காலம் இருக்க வேண்டுமானால், அனைத்துத் துறைகளிலும் ஆணும் பெண்ணும் கைகோர்த்துச் செல்ல வேண்டும். உலகின் நன்மையும், அமைதியும் நிலவ வேண்டும் என்று விரும்புபவர்கள் எதிர்காலத்தை நினைத்து வாழவேண்டும். அதேசமயம், எதிர்காலம் அழகு நிறைந்ததாக ஆக வேண்டுமெனில், இப்போது இந்த நிமிடத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு, இந்த நிகழ்காலத்தில் ஆண்-பெண் இருவரின் மனம், புத்தி ஆகியவை ஒன்றாக இணைய வேண்டும். இனியும் தாமதிக்க நேரமில்லை. காலதாமதம் செய்யச் செய்ய உலகின் நிலை மோசமாகிக் கொண்டே இருக்கும்.


FILEஆணும் பெண்ணும் இணைந்து செயல்புரிந்து, ஆரோக்கியமான அரசை நிறுவ முடியும். ஆனால் இதற்கு பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தன்மையும், திறந்த மனதுடன் கூடிய பேச்சுவார்த்தையும் அவசியமாகும். பாம்பின் விஷம் மரணத்திற்குக் காரணமாகும். ஆனால், அதே விஷத்தை மருந்தாக்கி ஒரு ஆளின் உயிரைக் காக்கலாம். அதேபோல், நம்முடைய தீய எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றினால், நம்மால் சமூகத்தைக் காக்க முடியும். அன்பு ஒன்றால் தான் தீய எண்ணங்களாகும் விஷத்தை அமிர்தமாக மாற்ற முடியும்.

அன்பு உணர்வு பொதுவாக எல்லா உயிரினங்களிடமும் காணப்படுகிறது. ஆணைப் பெண் அடையவும், பெண்ணை ஆண் அடையவும் அன்பே வழியாகும். ஆண்-பெண் இருவரும் இயற்கையை அடையவும், அதற்கும் மேலாக இப்பிரபஞ்சத்தை அடையவும் அன்பே வழியாகும். எல்லைகள் அனைத்தையும் கடந்து அன்பு பெருகும் போது, அது உலகையே அரவணைக்கும் தாய்மையாக ஆகிறது.

இவ்வுலகில் மகிமை பொருந்திய மலர் அன்பு மலராகும். மிகச்சிறிய செடியிலிருந்து மிக அழகான, மனதைக் கவரும் நிறமுள்ள, இனிய மணம் நிறைந்த மலர் இயல்பாக மலர்கிறது. இதைப்போல், மனித இதயங்களில் அன்பு மொட்டாகி, மலர்ந்து, மணம் பரப்ப வேண்டும். ஆண்-பெண் இருவரும் இந்த அன்பு மலர் தங்கள் இதயங்களில் மலர அனுமதிக்க வேண்டும்.

இரண்டு இதயங்கள் ஒன்றை ஒன்று நேசிப்பதை விட ஆழமான சக்தியோ, அழகோ வேறு எதுவும் இல்லை. மனதைக் குளிரச் செய்யும் முழு நிலவின் குளிர்ச்சியும், சூரியக் கதிர்களின் பிரகாசமும் அன்பிற்கு உண்டு. ஆனால், அன்பானது அனுமதியின்றி நம் இதயத்திற்குள் நுழையாது. இதய வாயிலில் காத்திருக்கும் அன்புக்கு அழைப்பு விடுக்க ஆண்-பெண் இருவரும் முன்வர வேண்டும். அன்பு ஒன்றால் மட்டுமே ஆண்-பெண்ணின் சிந்தனை போக்கிலும், உலகிலும் நிலையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

கணவன்-மனைவியர் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்ந்தால், இருவருக்குமிடையில் இப்போது தினமும் அதிகரித்துவரும் இடைவெளி குறையும். இதன் மூலம் சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளும் ஓரளவு தீரும். இக்காலத்தில், தம்பதிகள் பிறரை ஏமாற்றுவதற்காகவும், சமூகத்தை நம்பச் செய்வதற்காகவும், "நாங்கள் இருவரும் பரஸ்பர அன்பு மற்றும் நம்பிக்கையுடன் வாழ்கிறோம்" என்று சொல்கிறார்கள். இது அன்பாக இருப்பதாக நடிப்பதாகும். அன்பு என்பது நடிப்பதோ, கபடத்தனமோ அல்ல. அது வாழ்வாகும். அதுவே வாழ்க்கை.