வெள்ளி, 31 ஜூலை, 2009

தியானம் செய்ய உகந்த நேரம் எது?


எண்ணித்துணிக கருமம் - ஒரு செயலைச் செய்வதற்கு முன் நன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள். முடிவெடுத்த பின் அதுபற்றி யோசித்துப் பயன் இல்லை என்பதை விளக்குவதாக இந்த முதுமொழி அமைந்துள்ளது.சிலருக்கு ஒருசில முடிவுகளை எடுப்பதில் மிகுந்த குழப்பம் காணப்படும். இப்படிச் செய்யலாமா? அல்லது வேறு எப்படி இதனைக் கையாளலாம்? என்பன போன்ற பல ஆயிரம் கேள்விகள் மனதில் எழும். இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படுவது மனித இயல்புதான். இதனால் ஒன்றும் யாரும் தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டியதில்லை.மனித வாழ்க்கையில் உறுதியான முடிவெடுக்க முடியாத மனோநிலைக்கு மிக முக்கிய காரணம் மனத்தில் ஏற்படும் சலனங்கள் அல்லது சஞ்சலங்கள் என்று கூறலாம். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி, அமைதியான சலனமற்ற நிலையைப் பெறுவதற்குத் தேவை தியானம். தியானம் மேற்கொள்ளத் தகுந்த நேரம், எளிய முறையிலான தியானத்தை கடைபிடிப்பது எப்படி? என்று பார்ப்போம்.எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்கள் தாங்கள் சார்ந்த அல்லது அதிகம் வழிபடக்கூடிய கடவுளிடத்தில் பக்தி கொண்டவர்களாக இருப்பார்களேயானால், கடவுளை நினைத்து தினந்தோறும் குறைந்தது 15 நிமிட நேரமாவது தியானம் மேற்கொள்ளலாம்.பெருகிவிட்ட அறிவியல் சாதனங்களுக்கு இடையேயும், போக்குவரத்து இரைச்சல்களுக்கு இடையேயும் அன்றாடம் பயணித்து, பல்வேறு புதிய நபர்களை சந்தித்து அன்றாட வேலைகளை நிறைவேற்றி வருபவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படுவதில் புதிர் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொண்டு, அவற்றிலிருந்து சுமூகமாக மீள்வதுடன் சரியான ஒரு தீர்வை கொடுப்பவர்களே சாதித்து வெற்றி பெறுகிறார்கள்.தெளிவான சிந்தனையுடன் சரியான முடிவை எடுக்கத் தேவை மனோதிடம். இந்த மனோதிடத்தைப் பெறுவதற்கு மிகச்சிறந்த வழிகளில் முக்கியமானது தியானம் என்றால் மிகையில்லை.தியானத்தை எப்படிச் செய்வது? அதற்கென்று விதிமுறைகள் ஏதுமுண்டா? என்று கேட்டால் பலர் பல்வேறுபட்ட கருத்துகளை தெரிவிப்பார்கள்.அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் எளிமையான முறையில் தங்களின் குடும்பச் சூழ்நிலைக்கேற்றவாறு அமைதி ஒன்றை மட்டுமே கடைபிடித்து தியானித்தாலே போதும். வாழ்வில் பல்வேறு பலன்களை அடையலாம்.பொதுவாக தியானம் செய்வதற்கு ஏற்ற நேரமாக அதிகாலை 4.00 முதல் 5.00 மணி வரையிலான நேரத்தைத் தேர்வு செய்யலாம். இந்த வேளையைத் தான் பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள்.சிறியதாக ஒரு வெள்ளை நிறத்திலான தரைவிரிப்பை விரித்து அதன் மீது அமர்ந்து கொள்தல் வேண்டும். எதிரே ஒரு சிறிய விளக்கையோ அல்லது சிறு மெழுகுவர்த்தியையோ ஏற்றினால் உசிதம். வெண்மை நிறம் பொதுவாகவே தூய்மை, சமாதானம் என்பதைக் குறிப்பதால் பெரியோர்களான நம் முன்னோர் வெண்ணிற விரிப்பை பயன்படுத்தி வந்துள்ளனர். இல்லாவிட்டாலும் வெளிர் நிறங்களுடன் எந்த வண்ணத்திலான விரிப்பையும் அவரவர் வசதிக்கேற்ப உபயோகிக்கலாம். யோகிகள், முனிவர்கள் போன்றோர் வனங்களில் இறைவனை நோக்கி தவம் இருக்கும் போது புலித்தோல், மான்தோல் போன்ற மிருகங்களின் தோல் மீது அமர்ந்து தியானித்தனர் என்பதை புராணங்கள் வாயிலாக அறிகிறோம். ஒவ்வொரு மிருகங்களின் தோல் மீதும் அமர்ந்து தியானிப்பதால் வெவ்வேறு விதமான தியான பலன்களை அடைவதாக பரவலான கருத்து நிலவுகிறது.வீடுகளில் தியானம் செய்வதற்கு மிருகங்களின் தோல் தேவையில்லை. சாதாரணமாக அமர்ந்து உங்களுக்கு எதிரே வைக்கப்பட்டுள்ள அகல் விளக்கை நோக்கி ஒரு 5 நிமிடம் வேறு எந்த புற தடங்கல்களையும் சிந்திக்காமல் இருக்கவும். இஷ்ட தெய்வங்களையோ அல்லது ஒருநிலைப்படுத்த தேவையான சிந்தனையையோ நோக்கி கண்களை மெதுவாக மூட வேண்டும். அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் மற்ற ஒலிகள் உங்கள் சிந்தனையை பாதிக்க வாய்ப்பில்லை. ஒரு சில நிமிடங்களில் உங்களுக்குள்ளாகவே இருக்கும் ஞானத்தை, மனோரீதியிலான தத்துவத்தை உணரத் தொடங்குவீர்கள். தொடக்கத்தில் ஒரு சில தினங்களுக்கு சிந்தனை ஒருநிலைப்படத் தவறினாலும் கவலை வேண்டாம். அடுத்தடுத்த நாட்களில் இதேபான்ற நிலையைக் கடைபிடித்தால், காலப்போக்கில் சிந்தனை உங்கள் கட்டுப்பாட்டில் வரும். உங்களின் மனோதிடம் தானாகவே அதிகரிக்கத் தொடங்கும். மனத்தில் ஏற்படும் குழப்பங்களை எதிர்கொள்ளும் துணிவு பிறக்கும். 99 சதவீத பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அவற்றுக்கு கூடுமானவரை சாதகமான தீர்வுகளை நீங்கள் காண்பீர்கள் என்பது திண்ணம்.இயந்திரகதியான இவ்வுலகில் இறைநம்பிக்கையுடன் கூடிய தியானத்திற்கும் சற்றே நேரம் ஒதுக்கி இன்புறுவீர்களாக!

தியானம் செய்வது எப்படி?


பசுமையான மரங்கள் நிறைந்த மலைப்பகுதி....விலங்குகள் அற்ற வனப்பிரதேசமான அங்கே அடிவாரத்தில் ஒரு குகை..தியானத்திற்காக அங்கே மூன்று ஞானிகள் உட்கார்ந்திருந்தனர்.மூவரும் குகையின் வாயிலை நோக்கி அமர்ந்திருந்தார்கள்.குகையின் வெளிப்பகுதியில் குதிரையின் குழம்படி ஓசை கெட்டது...சராலென... ஒரு குதிரையில் பயணித்த மனிதன் குகையைக் கடந்தான்...மூன்று ஞானிகளும் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்..பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...மூன்று ஞானியரில் ஒருவர் கூறினார்...”அந்த குதிரை வெள்ளை என நினைக்கிறேன்...”அங்கே பூரண அமைதி...பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...இரண்டாவதாக இருந்த ஞானி கூறினார் .. “இல்லை இல்லை.. அந்த குதிரை கருப்பு நிறம் தான்.. ”அங்கே பூரண அமைதி...பன்னிரெண்டு வருடங்கள் கழித்து...மூன்றாம் ஞானி கூறினார்... “ இப்படி இடைவிடாமல் பேசினீர்கள் என்றால் எப்படி தியானம் செய்வது ? நான் இருக்க வா போகவா?”


என்றார்..---------------------------ஓம்-----------------------------------------------தியானம் என்பது கண்கள் மூடி அமர்ந்திருப்பதில்லை; மனம் மூடி அமர்ந்திருப்பது என பலருக்கு தெரிவதில்லை.மெளனம் எனும் பெருவெளியில் உன்னதமான சக்தியின் மேல் பயணிப்பது தியானம் என கூறி ஒரு மொழியின் சிதறுண்ட எழுத்துக்களால் தியானத்தின் தன்மையை சிதைக்க முயல விரும்பவில்லை.தினமும் பல மணி நேரம் தியானம் செய்கிறேன்.... தியானத்தில் இருக்கும் பொழுது எனக்கு ஒரு காட்சி புலப்பட்டது என பலர் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன். நீங்களும் கேள்விப்படலாம்.தியானம் செய்யும் ஒருவன் நேரத்தை நோக்கியும், ஒரு காட்சியாலும் கவனிக்கப்பட்டால் அங்கே அவனுக்கு விழிப்பு நிலை உண்டு என அர்த்தம். அது தியானம் ஆகுமா?தியானத்தில் மன எண்ணங்களே இல்லை என கூறுபவர்கள் உண்டு. மன எண்ணமே இல்லை என்பதை பார்த்தவர் யார்? மன எண்ணம் இல்லை என்பதே ஒரு எண்ணம் தானே?தியானம் என்றால் தியானம் + தியானிக்கபடுவது+தியானி இவர்கள் அனைவரும் ஒன்றாக இருப்பது என்றார்கள் ஞானிகள்.தியானம் எப்பொழுது செய்யவேண்டும்? அந்த வார்த்தையிலேயே இருக்கிறது விடை. “யா” எனும் எழுத்தை எடுத்து விடுங்கள்.

கடவுள் எங்கே இருக்கிறார்?, கடவுள் எங்கே இருக்கிறார்?


கடவுள் எங்கே இருக்கிறார்?நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்."நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?""நிச்சயமாக ஐயா..""கடவுள் நல்லவரா?""ஆம் ஐயா.""கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?""ஆம்.""எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?"(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)"உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?""ஆம் ஐயா..""சாத்தா‎ன் நல்லவரா?""‏இல்லை.""எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?""கடவுளிடமிருந்துதா‎ன்.""சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?""ஆம்.""அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?"(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?"......"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?"......."ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?""ஆம் ஐயா..""நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் ‏ இல்லை' என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?""ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.""ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே.." ஆசிரியர் பெருமூச்செறிகிறார். (‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)"ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?""நிச்சயமாக உள்ளது.""அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?""நிச்சயமாக.""இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை."(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)"ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). "வெப்பம் ‏இல்லை" என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது." (குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)"சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?""ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.""நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?""சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?""ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.""பிழை?? விளக்கிக் கூற முடியுமா?""ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள். அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎஼br />?். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் "வாழ்வு இனி இல்லை" என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏ "சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?""”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்." பேராசிரியர் பதிலுரைத்தார்."உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?"(பேராசிரியர் த‎ன் தலையை 'இல்லை' என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)"அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே 'ஒருவகையா‎ன' அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?"(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)"இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?"(வகுப்பறை 'கொல்'லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)"யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?""அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று." "மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?"(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)"நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!""அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை."இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.இது ஒரு உண்மைச் சம்பவம். ‏ இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்? வேறு யாருமல்ல.நமது மு‎ன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.



விஞ்ஞானி கார்ல் சகன் வியந்த ஹிந்து மதம் கூறும் பிரபஞ்சத்தின் வயது!

உலகின் பெரும் மதங்களில் ஹிந்து மதம் ஒன்றே ஒன்றுதான் பிரம்மாண்டமான முடிவில்லாத பிரபஞ்சம் உருவாகி பிரளயகாலத்தில் அழிந்து மீண்டும் உருவாவது என்ற கொள்கையைக் கொண்டுள்ளதுஉலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு!பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும்.இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிஹாஸ புராணங்களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும் ஹிந்து இதிஹாஸ புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் சௌகரியத்தை ஏற்படுத்தியது. ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்!ஹிந்து இலக்கியத்தில் சங்கம், பத்மம் போன்ற மிகப்பெரும் இலக்கத்தைச் சுட்டிக் காட்டும் வார்த்தைகள் உள்ளன. மஹாபாரதத்தில் பெரிய எண்களைக் குறிக்கும் சொற்கள் வரிசையாக உள்ளன:அயுதம் என்றால் பதினாயிரத்தைக் குறிக்கும்.ப்ரயுதம் என்றால் பத்து லட்சத்தைக் குறிக்கும்.சங்கு என்றால் பத்துலட்சம் கோடியைக் குறிக்கும்.பத்மம் என்றால் நூறு கோடியைக் குறிக்கும்.அற்புதம் என்றால் பத்துக் கோடியைக் குறிக்கும்.கர்வம் என்றால் ஆயிரம் கோடியைக் குறிக்கும்.சங்கம் என்றால் லட்சம் கோடியைக் குறிக்கும்.நிகர்வம் என்றால் பதினாயிரம் கோடியைக் குறிக்கும்.மஹாபத்மம் என்றால் நூறுலட்சம் கோடியைக் குறிக்கும்.மத்யம் என்றால் பதினாயிரம் லட்சம் கோடியைக் குறிக்கும்.பரார்த்தம் என்றால் லட்சம் லட்சம் கோடியைக் குறிக்கும்!இப்படி பிரம்மாண்டமான எண்கள் சாதாரணமாகக் குறிப்பிடப்படுகின்றன. இப்படிப்பட்ட பெரிய இலக்கங்கள் ஹிந்து மத இலக்கியத்திலும் ஹிந்து வாழ்க்கை முறையிலும் மட்டுமே உள்ளன.கார்ல் சகன் அதிசயித்த விஷயம் ஹிந்து புராணங்களில் உள்ள யுகம், கல்பம் ஆகியவற்றை பற்றிய தீர்மானமான கருத்துக்கள் பற்றிவை! முடிவில்லாது சுழற்சி முறையில் தோன்றி (பிரளய காலத்தில்) அழியும் பிரபஞ்சம் பற்றிய கருத்து அவரை வியக்க வைத்தது.இதைக் கண்டு அதிசயித்து அறிவியல் ரீதியாக பிரபஞ்சத்தின் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்து அவர் கூறினார்:- "உலகின் பெரும் மதங்களில் ஹிந்து மதம் ஒன்றே ஒன்றுதான் பிரம்மாண்டமான முடிவில்லாத பிரபஞ்சம் உருவாகி பிரளயகாலத்தில் அழிந்து மீண்டும் உருவாவது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. நவீன பிரபஞ்சம் பற்றிய அறிவியல் கருத்துடன் கால அளவீடுகளில் ஒத்துப் போகும் ஒரே மதம் இதுதான். நமது சாதாரண இரவு பகலில் ஆரம்பித்து பிரம்மாவின் இரவு பகல் பற்றி - 864 கோடி வருடங்களைப் பற்றி - அது பேசுகிறது. பூமி, சூரியன் வயதையும் தாண்டி 'பிக் பேங்' தோன்றியதிலிருந்து பாதி அளவு காலத்தைப் பற்றி மட்டும் அல்ல, இன்னும் எல்லையற்ற காலத்தைப் பற்றியும் அது கூறுகிறது"எல்லா பழைய நாகரிகங்களும் அழிந்து பட்டுள்ள நிலையில் ஹிந்து நாகரிகம் மட்டும் ஜீவனுள்ளதாக இருப்பதை அறிந்த அவர் உடனே இந்தியா வர ஆசைப்பட்டார்! பிரபஞ்சம் பற்றிய தன்னுடைய அறிவியல் தொடருக்கு சரியான ஆரம்பம் இந்தியாவில் கிடைக்கும் என்று அவர் நம்பினார். உடனே இந்திய பயணத்தை மேற்கொண்டார். இந்தியாவில் அவர் அடைந்த ஆச்சரியங்கள் எத்தனையோ! காஸ்மாஸ் தொடரில் ஹிந்து மதத்தில் பிரபஞ்ச ரகசியத்தை விளக்கும் (சிதம்பர) நடராஜரைக் காண்பித்து பிரபஞ்சம் பற்றி அவர் விளக்கினார். கார்ல் சகன் அடிக்கடி பில்லியன் அண்ட் பில்லியன்ஸ் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி! பில்லியன்ஸ் அண்ட் பில்லியன்ஸ் என்றால் கோடானு கோடி) என்ற தொடரால் பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையைக் கூறுவார். ஆகவே அவரை பில்லியன்ஸ் அண்ட் பில்லியன்ஸ் என்ற தொடரைச் சொல்லி கேலி செய்வார்கள். எல்லையற்ற பிரபஞ்சம் பற்றி அவர் குறிப்பிட்ட விஞ்ஞானக் கருத்துக்கள் ஹிந்து மதக் கருத்துகளுடன் ஒத்துப் போகி‎ன்ற‎ன. பிரபஞ்சம் எல்லையற்றது; விரிந்து கொண்டே போகிறது; பிரளய காலத்தில் சுருங்கும் கோடானு கோடி கிரகங்கள், நட்சத்திரங்களின் கணக்கிற்கு எல்லையே இல்லை - போ‎ன்ற பல கருத்துக்களி‎ல் ஒற்றுமை காணப்படுகி‎வது வியக்க வைக்கிறது.

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்-1

சிறப்புப் பாயிரம்
செந்தமிழ்க்கு வாய்த்ததிருச் செந்திற் பதிவாழுங்கந்தனுக்குப் பிள்ளைக் கவிசெய்தான் - அந்தோதிருமாது சேர்மார்பன் தேர்பாகற் கன்புதருமால் பகழிக்கூத் தன்.
திருமாது = இலக்குமிமால் = அழகு, பெருமை
இலக்குமியைத் தன் மார்பில் சுமந்திருக்கும் திருமாலே, அருச்சுனனுக்குத் தன் அன்பை ஈந்து தேர் ஓட்டிய பெருமாளே! பகழிக்கூத்தனாகிய நான், திருச் செந்தூரில் வாழும் செந்தமிழுக்கு வாய்த்த கந்தப்பெருமானுக்குப் பிள்ளைத் தமிழ் எழுதியுள்ளேன்.
அவையடக்கம்
அத்தனையும் புன்சொல்லே யானாலும் பாவேந்தர்எந்தனையுங் கண்டுமகிழ்ந் தெய்துவார் - முத்திபுரக்குமரன் தந்த கந்தன் பூணணிமுந் நான்குகரக்குமரன் பிள்ளைக் கவி.
புன்சொல் = எளிய சொல்அத்தனையும் = முழுமையும்முத்திபுரக்குமரன் தந்த = முத்திதரும் அரன் தந்த
முத்திதரும் அரன் பெற்றவன் கந்தன்; அணிகலன்கள் பூண்ட பன்னிருகரத்தையுடையவன் குமரன். இத்தகைய குமரன்மீது யான் எழுதிய பிள்ளைத் தமிழ் முழுமையும் எளிமையான சொற்களாயிருப்பினும், பாவேந்தர்கள் என்னை எள்ளிநகையாது கண்டு மகிழ்வர்.
நூற்பயன்
மருநாள் மலர்ப்பொழில் உடுத்ததட மெங்கும் அலைவாய்கொழித் தெறியுமுத்தைவண்டலிடும் எக்கர்புடை சூழ்திருச் செந்தில்வருமயில்வா கனக்கடவுளெங்
மரு = மணம்நாள் மலர்ப்பொழில் = அன்றலர்ந்த பூக்களையுடைய சோலைதடம் = தடாகம், குளம்; இங்கே கடல் எனக் கொள்ளல் வேண்டும்.வண்டல் இடும் = மகளிர் விளையாடும்எக்கர் = மணல்மேடுவாகனம் = ஊர்தி
மணம்வீசும் அன்றலர்ந்த பூக்களையுடைய சோலையை உடுத்த அலைவீசும் கடல்; அலையினால் அடித்துக் கரையில் எறியப்பட்ட முத்துக்கள் பதிக்கப்பட்ட மகளிர் விளையாடும் மணல்மேடு; இவ்வாறிருக்கும் இடமே, மயில் வாகனத்தில் வரும் எங்கள் கடவுள் முருகப் பெருமான் இருக்குமிடம்.
குருநாதன் ஒரு தெய்வ யானைதன் பாகன்குறக்கொடிக் குந்தழைசிறைக்கோழிக் கொடிக்குங் குமார கம்பீரன்குறும்பிறை முடிக்கும்பிரான்
தெய்வ யானைதன் பாகன் = தெய்வயானையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளவன்.குறக்கொடி = குறக்குலத்தில் பிறந்த வள்ளியம்மைகுறும்பிறை = மூன்றாம் பிறைச் சந்திரன்தழை = தளிர்சிறை = அழகுள்ளவள்
அவன் யார்? குருநாதன். அப்பனாகிய அரனுக்கே பிரணவத்திற்குப் பொருள் சொல்லிய குருநாதன். தெய்வயானையையும், குறக்குலத்தில் பிறந்த தளிர் பருவத்து அழகுடைய வள்ளியம்மையையும் தன் பக்கத்தில் வைத்துள்ளவன்.கோழிக்கொடி உடையோன்; அவன் குமாரன்; பீடுடையவன்; மூன்றாம் பிறைச் சந்திரனைச் சூடியவன்; எப்பொருட்கும் இறையோன்.
இருநாழி நெற்கொண்டு முப்பத்தி ரண்டறமும்எங்குமுட் டாதளக்கும்இறைவிதிரு முலையமுத முண்டுஞா னம்பெருகும்எம்பிரான் இனிய பிள்ளைத்
நாழி = நான்கு உழக்கு அளவுஅறம் = தரும வகைகள்முட்டாது = குறையாவண்ணம்
எட்டு உழக்கு நெல்லைக்கொண்டு முப்பத்தி இரண்டு வகை அறமும் எங்கும் குறைவுறாவண்ணம் படி அளக்கும் அன்னை உமையவளின் திருமுலைப்பாலுண்டு(ஞானப்பால்) அதனால் ஞானம் எப்பொழுதும் பெருகும் எம்பிரானின் இனிய பிள்ளைத்தமிழ்.
திருநாமம் எழுதுவார் கற்பார் படிப்பார்செகம்பொது அறப்புரந்துதேவாதி தேவரும் பரவுசா யுச்சியம்சிவபதத் தெய்துவாரே.
நாமம் = பெயர்பொது அறப்புரந்து = தனக்கே உரிமையானதாய்க் காத்துபரவு = துதிசாயுச்சியம் = இறையோடு இரண்டறக் கலப்பது.
உலகைத் தனக்கே உரிமையானதாய்க் காத்துவரும் குமரனின் திருநாமத்தை எழுதுபவர், கற்பவர், படிப்பவர் யாவரும், தேவாதி தேவரும் துதித்து வேண்டும் சாயுச்சிய பதவியாம் சிவபதம் எய்துவார்கள்.

'திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்'

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்-முகவுரை
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்*********************************************பிள்ளைத்தமிழ் இருவகையாம்.
இவையாவன: ஆண்பற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்.
பிள்ளைத்தமிழில் காப்பு முதல் அம்புலிப்பருவம் ஈறாக ஏழு பருவங்களும் இருபாலருக்கும் ஒன்றே.
மற்ற மூன்று பருவங்கள் வேறுபடும்.
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் - சிற்றில், சிறுபறை, சிறுதேர்பெண்பாற் பிள்ளைத்தமிழ் - அம்மானை, நீராடல், ஊசல்
பிள்ளைப்பருவம் களங்கமற்ற நல்லெண்ணத்தையும் அவ்வெண்ணத்தின் வழியே களங்கமில்லா தூய அன்பையும் விளைவிப்பதாம். இவ்வரிய குணங்களைப் பெற விரும்புவோர் உள்ளத்தைப் பிள்ளத்தமிழ்ப் பாட்டுக்களில் செலுத்தல்வேண்டும்.
பருவங்கள்:
காப்புப் பருவம் - இரண்டாம் மாதத்தில் பிள்ளையைக் காக்கவெனத் திருமால், சிவபெருமான், உமையவள், கணபதி, கலைமகள், அரிகரபுத்திரன், பகவதி, ஆதித்தன், முப்பத்துமுக்கோடி தேவர்கள் ஆகியோர்மீது பாடப்படுவது.
செங்கீரைப்பருவம் - செங்கீரை ஆடும் பருவம். ஐந்தாம் திங்களில், ஒரு காலை மடக்கி, ஒருகாலை நீட்டி, இரு கைகளையும் நிலத்தில் ஊன்றித் தலை நிமிர்த்தி, முகமாட்டும் பருவம்.
தாலப்பருவம் - ஏழாம் திங்களில் தாலாட்டைக் கேட்கும் பருவம். தாலாட்டு எனில் ஒருவகை நாவசைப்பு. தாலாட்டுதான் தால் எனக் குறுகியது.
சப்பாணிப்பருவம் - ஒன்பதாம் திங்களில், இரு கைகளையும் ஒருங்கு சேர்த்துக் கைகொட்டும் பருவம்.
முத்தப்பருவம் - பதினோராம் திங்களில் தாய்தந்தையர் தங்களுக்கு முத்தம் தருமாறு இறைஞ்சும் பருவம்.
வருகைப்பருவம் - பதின்மூன்றாந் திங்களில், நடக்க முயலும் குழந்தையைத் தம்பால் நடந்துவருமாறு பெற்றோர் வேண்டுதல்.
அம்புலிப்பருவம் - பதினைந்தாம் திங்களில், குழந்தையுடன் விளையாட அம்புலியை அழைக்கும் பருவம்.
சிற்றிற் பருவம் - பதினேழாம் திங்களில், சிறுமியர் சிறுவீடு கட்டி விளையாட அதனைச் சிறுவர்கள் தம் காலால் அழிக்கும் பருவம்.
சிறுபறப் பருவம் - பத்தொன்பதாம் திங்களில், குழந்தை சிறுபறை கொட்டி விளையாடும் பருவம்.
சிறுதேர்ப் பருவம் - இருபத்தொன்றாம் திங்களில், சிறுதேர் உருட்டி விளையாடும் பருவம்.
இந்நுலின் ஆசிரியர் பகழிக்கூத்தர். செம்பிநாட்டைச் சேர்ந்த சன்னாசிக் கிராமத்தில் வைணவ குலத்தில் பிறந்தவர். தந்தை பெயர் தர்ப்பாதனர்.பகழிக்கூத்தர் கடும் வயிற்று வலியில் துடிக்கும்பொழுது, திருச்செந்தூர் முருகனை நோக்கி, “வலி தீர்; பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்” என்றாராம்.
அப்பன் அருளால் வலி தீர்ந்தது. கூத்தரும் முருகன் சந்நிதியில், புலவர்கள், அடியார்கள், முக்காணிகள் எனப்படும் திரிசுந்தரர்கள் கூடியுள்ள அவையில் இப்பிள்ளைத் தமிழைப் பாடினார். அவையோ, கூத்தரைப் பெருமைப்படுத்தாது விட்டுவிட்டது. கூத்தரும் பெரிதுபடுத்தாது, தன்னிருப்பிடமேகித் தன் வேலைகளைக் கவனிக்கலானார்.
அவையோருக்குக் கூத்தரின் பெருமையுணர்த்த, முருகன் தன் மார்பில் அணிந்திருந்த மாணிக்கப் பதக்கத்தை இரவில் கூத்தரின் படுக்கையில் விட்டுச் சென்றுவிட்டார். விடியலில் மாணிக்கப் பதக்கத்தைத் தேடி, அது கூத்தரிடம் உள்ளதெனத் தெரிந்து, தங்கள் தவறுணர்ந்து அவை கூத்தரைப் பெருமைப்படுத்தியது. சரித்திரம் இவ்வளவுதான் கிட்டியது.
இனி பிள்ளைத்தமிழ்…

ஓம்


ஓங்காரம் - ஓம்
ஓங்காரம் - ஓம்********************ஓம் எனும் மந்திரம் இறைவனுடன் உயிரினங்களை ஒன்றச் செய்யும் குணமுள்ளதால்தான் பிரணவம் என அழைக்கப்படுகிறது.ஓம் என்பது ஒரே எழுத்து (ஏகாட்சரம்). அதில் அ, உ, ம எனும் மூன்று ஒலிகளும் இணைந்துள்ளன. இந்த அகார, உகார, மகாரங்களை மாத்திரைகள் என அழைப்பதும் உண்டு.
அ - சூரியன்உ - சந்திரன்ம - அக்கினி
“ஓம்” எனும் பிரணவத்தில் மேற்கண்ட ஒலிகளோடு இம்மூன்று ஒளிகளும் இணைந்திருக்கின்றன.இந்த பிரணவமாம் சுய வடிவில் இருந்துதான் எல்லா ஒலி, ஒளிகளும் உண்டாயின.
அ - சூரியன் - பருவுடல் (ஸ்தூலம்) - பெண் - இருக்கு வேதம் - கார்ஹபத்யாக்கினி - ஹரஸ்வம் - பாதம் - புத்தி - ரஜோ குணம் - சிவப்பு நிறம் - பூரகம் - நாதம் - கிரியா சக்தி - பிராஹ்மணி - பிரம்மா - சென்றகாலம் - ஜீவாத்மா - விராடபுருடன்
உ - சந்திரன் - நுண்ணுடல்(சூட்சுமம்) - ஆண் - யஜுர் வேதம் - தக்ஷிணாக்கினி - தீர்க்கம் - நாபி - மனம் - சத்வ குணம் - கபில நிறம் - கும்பகம் - பிந்து - இச்சா சக்தி - வைஷ்ணவி - விட்டுணு - நிகழ் காலம் - அந்தராத்மா - ஹிரண்யகர்ப்பன்
ம - அக்கினி - காரண உடல் (இலிங்க உடல்)- அலி - சாம வேதம் - ஆகவனீயாக்கினி - ப்லுதம் - சிரம் - அகங்காரம் - தமோ குணம் - கருப்பு - இரேசகம் - கலை - ஞான சக்தி - ரெளவுத்திரீ - உருத்திரன் - வருங்காலம் - கூடஸ்தன் - ஈசுவரன்
மேற்கூறியவை அந்தந்த மாத்திரைகளில் அடங்குவதால் அவையெல்லாம் பிரணவத்துள் அடக்கம்.

“ஓம்” படத்தை உற்றுப் பாருங்கள். அத்துடன் இணைத்துள்ள படத்தையும் கவனியுங்கள். வினாயகனின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் வினாயகன் என்பது இதற்காகத்தான். வினாயகனின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.
திருமந்திரம்***********“ஓங்காரத் துள்ளே யுதித்தஐம் பூதங்கள்ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனைஓங்கார சீவ பரசிவ ரூபமே.”
ஓங்காரம் ஒலியினின்று தோன்றுவது. அதுவும் மனிதனின் தலைக்குள் தோன்றுவது. அது வெளியே அடுத்தவருக்குக் கேட்காது. வெறும் வாயால் “ஓம்” என ஒலித்தல் பயனற்றது. அதை உள்ளேற்றி அதன் அதிர்வலைகளை உணரும் நிலைதான் உன்னதமானது. அது சங்குநாதத்தை ஒத்து இருக்கும். ஓங்காரத்திலிருந்துதான் ஐம்பூதங்களும் அதன் காவலர்களான அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் அகியோரும் உண்டாயினர். இதிலிருந்துதான் இயங்குதிணை(அசரம்), நிலைத்திணை (சரம்) ஆகியவை உண்டாயின. சரமும் அசரமும் சேர்ந்து சராசரம் ஆயிற்று. சராசரமே உலகம். இவ்வுலகில் ஒருமலம், இருமலம், மும்மலம் ஆகிய மலங்களையுடைய மூவகை சீவராசிகள் தோன்றின.
“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”
நுகர்வு - துய்ப்பு; அழுந்தியறிதல் - அனுபவம்ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். என்வே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் ...

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய நமோ நமஹ:
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா சம்போ சம்போ ஷங்கரா அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் பஜே ஹம்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய தனமஷிவாய தஷிமதவாதச்சா….
அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ: ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் பஜே ஹம் ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் பஜே ஹம்
கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம் சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம் நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம் நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம் சட்சித்ப்ரமானம் ஓம் ஓம் மூலப்ரமேயம் ஓம் ஓம் அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம் அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம் கன கன கன கன கன கன கன கன ஸஹஸ கண்ட சப்தவிஹரதி டம டம டம டம டுப டுப டுப டுப சிவடபருத நாதவிஹரதி
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் பஜே ஹம் ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் பஜே ஹம் வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா சம்போ சம்போ ஷங்கரா அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம் பஜே ஹம்

கந்த சஷ்டி கவசம்

காப்புதுதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்சஷ்டி கவசம் தனை.அமர ரிடர்தீர அமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறி.
நூல்சஷ்டியை நோக்கச் சரவண பவனார்சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கைகீதம் பாடக் கிண்கிணி யாடமையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்துவரவர வேலா யுதனார் வருகவருக வருக மயிலோன் வருகஇந்திரன் முதலா எண்டிசை போற்றமந்திர வடிவேல் வருக வருக!வாசவன் முருகா வருக வருகநேசக் குறமகள் நினைவோன் வருகஆறுமுகம் படைத்த ஐயா வருகநீறிடும் வேலவன் நித்தம் வருகசிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!சரவண பவனார் சடுதியில் வருகரவண பவச ர ர ர ர ர ர ரரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரிவிபச சரவண வீரா நமோநமநிபவ சரவண நிறநிற நிறெனவசுர வணப வருக வருகஅசுரர் குடிகெடுத்த ஐயா வருகஎன்னை ஆளும் இளையோன் கையில்பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்பரந்த விழிகள் பன்னிரண் டிலங்கவிரைந்தெனைக் காக்க வேலோன் வருகஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!ஆறு முகமும் அணிமுடி ஆறும்நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்ஈராறு செவியில் இலகுகுண் டலமும்ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்துநன்மணி பூண்ட நவரத்ன மாலையும்முப்பரி நூலும் முத்தணி மார்பும்செப்பழ குடைய திருவயி றூந்தியும்துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்திருவடி யதனில் சிலம்பொலி முழங்கசெககண செககண செககண செகணமொகமொக மொகமொக மொகமொக மொகெனநகநக நகநக நகநக நகெனடிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுணரரரர ரரரர ரரரர ரரரரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிடுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடுடகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகுவிந்து விந்து மயிலோன் விந்துமுந்து முந்து முருகவேள் முந்துஎன்றனை யாளும் ஏரகச் செல்வமைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்லாலா லாலா லாலா வேசமும்லீலா லீலா லீலா வினோ தனென்றுஉன் திருவடியை உறுதியென் றெண்ணும்எந்தலை வைத்துன் இணையடி காக்கஎன்னுயிர்க் குயிராம் இறைவன் காக்கபன்னிரு விழியால் பாலனைக் காக்கஅடியேன் வதனம் அழகுவேல் காக்கபொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்ககதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்கவிதிசெவி இரண்டும் வேலவர் காக்கநாசிகளி ரண்டும் நல்வேல் காக்கபேசிய வாய்தனைப் பெருவேல் காக்கமுப்பத் திருபல் முனைவேல் காக்கசெப்பிய நாவைச் செவ்வேல் காக்ககன்னமி ரண்டும் கதிர்வேல் காக்கஎன்னிளங் கழுத்தை இனியவேல் காக்கமார்பை ரத்ன வடிவேல் காக்கசேரிள முலைமார் திருவேல் காக்கவடிவே லிருதோள் வளம்பெறக் காக்கபிடரிக ளிடண்டும் பெருவேல் காக்கஅழகுடன் முதுகை அருள்வேல் காக்கபழுபதி னாறும் பருவேல் காக்கவெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்கசிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்கநாணாங் கயிற்றை நல்வேல் காக்கஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்கபிட்ட மிரண்டும் பெருவேல் காக்கபணைத் தொடை இரண்டும் பருவேல் காக்ககணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்கவட்டக் குதத்தை வல்வேல் காக்கஐவிரல் அடியினை அருள்வேல் காக்ககைகளி ரண்டும் கருணைவேல் காக்கமுன்கையி ரண்டும் முரண்வேல் காக்கபின்கையி ரண்டும் பின்னவள் இருக்கநாவில் சரஸ்வதி நற்றுணை யாகநாபிக் கமலம் நல்வேல் காக்கமுப்பால் நாடியை முனைவேல் காக்கஎப்பொழு தும்எனை எதிர்வேல் காக்கஅடியேன் வதனம் அசைவுள நேரம்கடுகவே வந்து கனகவேல் காக்கவரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்கஅரையிருள் தன்னில் அனையவேல் காக்கஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்கதாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்ககாக்க காக்க கனகவேல் காக்கநோக்க நோக்க நொடியில் நோக்கதாக்க தாக்க தடையறக் தாக்கபார்க்க பார்க்க பாவம் பொடிபடபில்லி சூனியம் பெரும்பகை அகலவல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்அல்லற் படுத்தும் அடங்கா முனியும்பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிடஇரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்தண்டியக் காரரும் சண்டாளர் களும்என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிடஆனை யடியினில் அரும்பா வைகளும்பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்பாவைக ளுடனே பலகல சத்துடன்மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்காசும் பணமும் காவுடன் சோறும்ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திடமாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிடகாலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிடஅஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிடவாய்விட் டலறி மதிகெட் டோடபடியினில் முட்ட பாசக் கயிற்றால்கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டுகட்டி உருட்டு கைகால் முறியகட்டு கட்டு கதறிடக் கட்டுமுட்டு முட்டு விழிகள் பிதுங்கிடசெக்கு செக்கு செதில் செதிலாகசொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்குகுத்து குத்து கூர்வடி வேலால்பற்று பற்று பகலவன் தணலெரிதணலெரி தணலெரி தணலது வாகவிடு விடு வேலை வெகுண்டது வோடப்புலியும் நரியும் புன்னரி நாயும்எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோடதேளும் பாம்பும் செய்யான் பூரான்கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்கஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்குகுடைச்சல் சிலந்தி குடல்விப் புருதிபக்கப் பிளவை படர்தொடை வாழைகடுவன் படுவன் கைத்தாள் சிலந்திபற்குத் தரணை பருஅரை யாப்பும்எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்நில்லா தோட நீஎனக் கருள்வாய்ஈரேழு உலகமும் எனக் குறவாகஆணும் பெண்ணும் அனைவரும் எனக்காமண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்உன்னைத் துதிக்க உன் திரு நாமம்சரவண பவனே சைலொளி பவனேதிரிபுர பவனே திகழொளி பவனேபரிபுர பவனே பவமொளி பவனேஅரிதிரு மருகா அமரா வதியைக்காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்கந்தா குகனே கதிர்வே லவனேகார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனைஇடும்பனை யழித்த இனியவேல் முருகாதனிகா சலனே சங்கரன் புதல்வாகதிர்கா மத்துறை கதிர்வேல் முருகாபழநிப் பதிவாழ் பாலகு மாராஆவினன் குடிவாழ் அழகிய வேலாசெந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயாசமரா புரிவாழ் சண்முகத் தரசேகாரார் குழலால் கலைமகள் நன்றாய்என்நா இருக்க யானுனைப் பாடஎனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்பாடினேன் ஆடினேன் பரவச மாகஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியைநேச முடன்யான் நெற்றியில் அணியபாச வினைகள் பற்றது நீங்கிஉன்பதம் பெறவே உன்னரு ளாகஅன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்மெத்தமெத் தாக வேலா யுதனார்சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்கவாழ்க வாழ்க மயிலோன் வாழ்கவாழ்க வாழ்க வடிவேல் வாழ்கவாழ்க வாழ்க மலைக்குரு வாழ்கவாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்வாழ்க வாழ்க வாரணத் துவசம்வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்கஎத்தனை குறைகள் எத்தனை பிழைகள்எத்தனை அடியேன் எத்தனை செயினும்பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமேபிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்துமைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்கந்தர் சஷ்டி கவசம் விரும்பியபாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்காலையில் மாலையில் கருத்துடன் நாளும்ஆசா ரத்துடன் அங்கந் துலக்கிநேசமுடன் ஒரு நினைவது வாகிக்கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டுஓதியே செபித்து உகந்துநீ றணியஓதியே செபித்து உகந்துநீ றணியஅஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்கந்தர்கை வேலாம் கவசத் தடியைவழியாய்க் காண மெய்யாய் விளங்கும்விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்நல்லோர் நினைவில் நடனம் புரியும்சர்வ சத்ரு சங்கா ரத்தடிஅறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்சூரபத் மாவைத் துணித்தகை யதனால்இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்தகுருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்சின்னக் குழந்தை சேவடி போற்றி!எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்மேவிய வடிவுறும் வேலவா போற்றி!தேவர்கள் சேன பதியே போற்றி!குறமகள் மனமகிழ் கோவே போற்றி!திறமிகு திவ்விய தேகா போற்றி!இடும்பா யுதனே இடும்பா போற்றி!கடம்பா போற்றி கந்தா போற்றி!வெட்சி புனையும் வேளே போற்றி!உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!சரணம் சரணம் சரவண பவஓம்சரணம் சரணம் சண்முகா சரணம்!