புதன், 30 செப்டம்பர், 2009

தேர்தலில் நிற்க தகுதிகள், உத்தரமேரூர் கல்வெட்டு

செங்கற்பட்டு மாவட்டம் உத்தரமேரூரிலுள்ள முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டொன்று குடவோலைத் தேர்தல் முறையைப்பற்றி மிகத் தெளிவாக விளக்குகிறது. ஊர்க்குழுவில் நிற்பவர்க்குறிய தகுதிகளையும், தேர்தல் விதிமுறைகளையும் அக்கல்வெட்டில் காணலாம். ஊர்க்குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்க தகுதிகள்:- 1. கால்காணி நிலத்துக்கு மேல் அரைக்காணி நிலத்தை உடையவர். 2. தனக்கு உரிமையுள்ள மனையில் வாழ்பவர். 3. 35 வயதுக்கு மேல் 75 வயதுக்குட்பட்டவர். 4. வேத சாத்திரங்களை கற்று பிராமணியத்தில் வல்லவர். 5. வேதாகம விருத்திகளை ஓதுவிக்கும் பயிற்சியை பெற்றவர். 6. அரைக்கால் காணி நிலமுடையவராக இருந்தாலும், நான்கு பாடியத்திலும் ஒரு பாடியத்தை முழுமையாகக் கற்றுணர்ந்தவர். 7. ஆட்சி செய்யும் வல்லமை பெற்றவர். 8. ஒழுக்கமும் குலப்பண்பும் உடையவர். 9. நன்னெறியில் பொருளீட்டிய உள்ளத்தூய்மையும் நற்பண்பும் உடையவர். 10. மூவாண்டிற்குள் ஊர்ச்சபை வாரிய உறுப்பினராக இல்லாதவர். இத்தகைய தகுதிகளை குறைவின்றி பெற்றவர்களை குடும்பு மக்கள் தேர்வு செய்து அவர்களின் பெயர்களை தனித்தனி ஓலைகளில் எழுதி, அவ்வோலைகளை குடத்தினுள் இடுவர். உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் பொதுமக்கள் அனைவரின் முன்பாக விபரம் தெரியாத சிறுவனை அழைத்து அக்குடத்திலிருந்து ஒரு குடும்பிற்குறிய ஓலைக்கட்டை எடுத்து அவிழ்த்து வேறொரு குடத்திலிட்டுக் குலுக்கி அதிலிருந்து ஒரு ஓலையை எடுத்து கணக்கன் நடுவர் கையில் கொடுப்பான், அந்த ஓலையில் உள்ள பெயரே கிராமச் சபை உறுப்பினர் பட்டியலில் இடம்பெற்றது.

தமிழனின் தத்துவங்கள்

மெக்கானிக்கல் இன்ஜீனியர் மெக்கானிக் ஆகலாம். ஆனா சாப்ட்வேர் இன்ஜீனியர் சாப்ட்வேர் ஆக முடியாது.பாக்கு மரத்துல பாக்கு இருக்கும். தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்.. ஆனா பனை மரத்துல பனை இருக்குமா?சனிக்கிழமையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு நாள்.. ஆனால் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து சனிக்கிழமை வரை..?சைக்கிள்ல போனா 'சைக்கிளி'ங்க.. அப்ப டிரெயின்ல போனா டிரெயினிங்கா..?டீ கப்புல டீ இருக்கலாம்.. ஆனால் வோல்ர்டு கப்புல வோர்ல்டு இருக்க முடியாது.எவ்ளோ காசு கொடுத்து பிளேன்ல போனாலும் ஜன்னலைத் திறந்து வேடிக்கை பார்க்க முடியாது..'கீபோர்ட்ல' 'கீ ' இருக்கும்.. ஆனால் மதர் போர்ட்ல 'மதர்' இருக்க முடியுமா?பிரஷ்ஷை வைச்சு பல்லை கிளீன் பண்ணலாம்.. ஆனா பல்லை வைச்சு பிரஷ்ஷை கிளீன் பண்ண முடியுமா?பேண்ட் போட்டு முட்டி போட முடியும். ஆனா முட்டி போட்டுட்டு பேண்ட் போட முடியுமா?இன்பாக்ஸ்ல இலை பார்க்க முடியும். ஆனால் மேட்ச் பாக்ஸ்ல மேட்ச் பார்க்க முடியுமா?இருக்குறப்ப என்னதான் காம்ப்ளான், போர்ன்விட்டா குடிச்சாலும், செத்தப்புறம் எல்லாருக்கும் பால்தான்..சவுத் இண்டியால நார்த்தாங்காய் கிடைக்கும்.. ஆனால் நார்த் இண்டியால சவுத்தாங்காய் கிடைக்குமா?பச்சை மிளகாய்ல பச்சை இருக்கும்.. ஆனா கொடை மிளகாய்ல குடை இருக்குமா?லன்ச் பேக்ஸ்ல லன்ச் எடுத்திட்டுப் போகலாம்.. ஆனால் ஸ்கூல் பேக்ல ஸ்கூல எடுத்திட்டுப் போக முடியாது..மெழுக வைச்சு மெழுகுவர்த்தி செய்யலாம். ஆனால் கொசுவ வைச்சு கொசுவத்தி செய்ய முடியாது.கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வரும்.. ஆனால் கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம்தான் வரும்.மின்னலை பார்த்தா கண்ணு போயிரும்.. ஆனால் பாக்கலைன்னா மின்னலும் போயிரும்..நீ எவ்ளோ பெரிய நீச்சல்காரனா இருந்தாலும் டம்ளர் தண்ணில நீந்த முடியாது.நெய் ரோஸ்ட்ல நெய் இருக்கும்.. பேப்பர் ரோஸ்ட்ல பேப்பர் இருக்குமா?க்ரீம் பிஸ்கெட்ல கிரீம் இருக்கும்.. ஆனாநாய் பிஸ்கெட்ல நாய் இருக்குமா?சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வைச்சு எடுத்திட்டுப் போகலாம்.. ஆனா டிபன் கேரியர்ல சைக்கிள வைச்சு எடுத்திட்டுப் போக முடியாது.நீ எவ்ளோ பெரிய டான்ஸரா இருந்தாலும் உன்னோட சாவுக்கு உன்னால ஆட முடியுமா?காக்கா என்னதான் கருப்பா இருந்தாலும் அது போடுற முட்டை வெள்ளைமுட்டை என்னதான் வெள்ளையா இருந்தாலும் அதுக்குள்ள இருந்து வர்ற காக்கா கருப்புதான்..டிரெயினுக்கு டிக்கெட் வாங்கி பிளாட்பார்ம்ல உக்காரலாம்.. ஆனா பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கி டிரெயின்ல உக்கார முடியாது.சோடாவ பிரிட்ஜ்ல வைச்சா கூலிங் சோடா ஆகும்..அதையே வாஷிங் மெஷினுக்குள்ள வைச்சா வாஷிங் சோடா ஆகுமா?அயர்ன் பாக்ஸால அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸால பென்சில் பண்ண முடியாது.டிக்கெட் வாங்கிட்டு உள்ள போறது சினிமா தியேட்டர். உள்ள போயி டிக்கெட் வாங்குறது ஆபரேஷன் தியேட்டர்.சிற்பி கல்லை உளியால அடிச்சா அது கலை.. நாம சிற்பிய உளியால அடிச்சா அது கொலை..நாம எவ்ளோதான் வேகமாக நடந்தாலும் ஒரு கால் முன்னாடி போனா ஒரு கால் பின்னாடிதான் இருக்கும்..குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்துக்கலாம்.. ஆனாகுப்புற படுத்துட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது..வாயால நாயுன்னு சொல்லலாம். ஆனா நாயால வாய்ன்னு சொல்ல முடியுமா?மண்டைய மண்டைய ஆட்டுறது டிஸ்கோ. மண்டைய போட்டா ஆடுறது டப்பாங்குத்து..எத்தனால் குடிச்சா நாலு பேர் முன்னாடி ஆடலாம்.. மெத்தனால் குடிச்சா நாலு பேர் உன் முன்னாடி ஆடுவாங்க..வேலை செஞ்சாத்தான் சோறு..வேலை ரொம்ப செஞ்சா போரு..காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி.. அதுவே நம்ம மேல இருந்தா நாம சட்னி..தூங்கப் போறதுக்கு முன்னால தூங்கப் போறேன்னு சொல்லலாம்.. எந்திரிக்கப் போறதுக்கு முன்னால எந்திரிக்கப் போறேன்னு சொல்ல முடியுமா?நீங்க பைக்ல எவ்ளோதான் பாஸ்ட்டா போனாலும் உங்களையே நீங்க ஓவர்டேக் பண்ண முடியாது..கோல்டு செயினை அடகு வைச்சு சைக்கிள் வாங்கலாம்.. ஆனா சைக்கிள் செயினை அடகு வைச்சு கோல்டு வாங்க முடியாது..ஆம்பளைங்க அடிபட்டா ஆம்புலன்ஸ் வருமாம்.. அப்போ பொம்பளைங்க அடிபட்டா பொம்புலன்ஸா வரும்..?ரயில்வே ஸ்டேஷன்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்கும்.. ஆனா போலீஸ் ஸ்டேஷன்ல ரயில்வே ஸ்டேஷன் இருக்குமா?பாய்ஸன் பத்து நாள் ஆனாலும் பாயாஸம் ஆக முடியாது. ஆனாபாயாஸம் பத்து நாள் ஆனா பாய்ஸன் ஆயிரும்..ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கும்.. ஆனா ஆயிரம் யானைக நினைச்சாலும் ஒரு எறும்பைக்கூட கடிக்க முடியாது..புயலால கரையைக் கடக்க முடியும்.. ஆனா கரையால புயலைக் கரைக்க முடியுமா?செல்லுல பேலன்ஸ் இல்லேன்னா கால் பண்ண முடியாது. ஆனா மனுஷனுக்கு கால் இல்லேன்னா பேலன்ஸ் பண்ண முடியாது..நீ என்னதான் காஸ்ட்லி மொபைல் வைச்சிருந்தாலும் அதுல எவ்ளோதான் ரீசார்ஜ் பண்ணினாலும் உன்னால உனக்கே கால் பண்ண முடியாது..என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும் அதால மீன் குழம்புல நீந்த முடியாது..இன்னிக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனா நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?என்னதான் நாய் நன்றி உள்ளதா இருந்தாலும் அதால நன்றின்னு வாயால சொல்ல முடியாது..என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும் அதால அவிச்ச முட்டை போட முடியுமா?நாய்க்கு நால் கால் இருந்தாலும் அதால கால் மேல் கால் போட்டு உக்கார முடியாது.அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம். பால் கொட்டினா வேற பால் வாங்கலாம். ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியுமா?Files-ன்னா உக்காந்து பாக்கணும்.. Piles-ன்னா பாத்து உக்காரணும்..நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.. ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம். காலேஜ் டெஸ்ட்ல் பிட் அடிக்கலாம். ஆனா பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியாது..ஆயிரம்தான் இருந்தாலும் ஆயிரத்தி ஒண்ணுதான் பெரிசு..என்னதான் அஹிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்திய சுட்டுதான் சாப்பிடணும்..நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிரடிச்சா திரும்பி அடிக்க முடியாது..காசு இருந்தா கால் டாக்ஸி. காசு இல்லேன்னா கால்தான் டாக்ஸி..பல்லு வலின்னா பல்ல பிடுங்கலாம்.. ஆனா கண்ணு வலின்னா கண்ண பிடுங்க முடியுமா?இட்லிப் பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்க சாப்பிட முடியுமா?என்னதான் உக்காந்து சாப்பிடற அளவுக்குச் சொத்து இருந்தாலும் பாஸ்ட்புட் கடைக்குப் போனா நின்னுதான் சாப்பிடணும்..கொஞ்சம் பணம் கொடுத்து குடை வாங்கலாம்.. எவ்ளோ பணம் குடுத்தாலும் மழையை வாங்க முடியுமா?தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்துக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம் என்னன்னா..?என்னால ஒரு புல் அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொன்னா அது தன்னம்பிக்கை.. என்னால மட்டும்தான் புல் அடிச்சிட்டா ஸ்டெடியா நிக்க முடியும்னு சொன்னா அது தலைக்கனம்.

எதற்கும் அஞ்சாதே, எதனையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே : ஸ்ரீ அரவிந்தர்!

எதற்கும் அஞ்சாதே, எதனையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே : ஸ்ரீ அரவிந்தர்!உனது ஆத்மாவையே அனைத்திலும் காண்; எதற்கும் அஞ்சாதே, எதையும் வெறுக்காதே, யாரையும் பகைக்காதே. உலக அரங்கில் உன் பங்கை வலிமையோடும், துணிவோடும் ஆற்றிடு. அவ்வாறே நீ உனது உண்மையான இயல்பின்படி இருப்பாய், வெற்றியானாலும், தோல்வியானாலும், சாவானாலும், சித்ரவதையானாலும் அனைத்திலும் தெய்வமாகவே இருப்பாய் - தெய்வத்திற்குத் தோல்வி ஏது? சாவு ஏது?மீண்டும் உனக்குச் சொல்கிறேன், வலிமையுடையவனும், துணிவுடையவனுமே கடவுளை அடைவான். கோழையும், பலவீனனும் கடவுளை அடைவதில்லை. வான வீதி எங்கனும் நட்சத்திரங்களைப் பரப்பி வைத்தவனும், மாலை மாலையாக ஞாயிறுகளை கோர்த்து வைத்தவனும் நீயே. இன்று என்னுள் உள்ள உனக்குச் செவி சாய்த்துக் கொண்டிருக்கின்ற நீயே, பழமையான அந்த யோகத்தின் சக்தியால், செயலற்ற மோனத்தில் நிற்கும் இச்சா சக்தியால் நீயே இவற்றைச் செய்தாய். பழமையான யோகத்தின் செல்வனே, ஏறிட்டுப் பார், நடுக்கத்தை விடு, சந்தேகத்தை ஒழி, அச்சமும், ஐயமும், கவலையும் உன்னைத் தீண்டாதொழிக. தனது மூச்சுக் காற்றால் அண்ட கோளங்களை ஆக்கவும், அழிக்கவும் வல்லவன் ஒருவன் உன்னுள் வதிகின்றான் என்பதை மறவாதே. எல்லா உயிர்களிடத்தும் தன்னையே காண்பவன் எப்படிப் பகைக்க முடியும்? அவன் எதனிடம் இருந்தும் அஞ்சியோ, கூச்சமுற்றோ ஒதுங்குவதில்லை. அவனுக்கு எதனிடத்தும் அச்சமோ, வெறுப்போ கிடையாது. அதோ எல்லா மனிதரும் வெறுத்தொதுக்கும் தொழுநோய் கொண்டவன் - ஆனால் என்னால் அவ்வாறு ஒதுக்க முடியுமோ? கடவுளன்றோ இந்த விநோத வேடம் புணைந்து சிரிக்கின்றான். உன்னை வாளால் வெட்டி வீழ்த்துவேன், குண்டுகளால் துளைத்திடுவேன், நெருப்பில் பொசுக்கிடுவேன், பீரங்கி வாயில் வைத்து கொளுத்திடுவேன் என்றா சொல்கிறாய்? நான் வெட்ட முடியாதவன், பிளக்க முடியாதவன், துளைக்க முடியாதவன், எரிக்க முடியாதவன், நான் அசைவற்றவன், நான் அணிந்துள்ள அன்னமய கோசமாம் சட்டையை மட்டுமே உன்னால் கிழிக்க முடியும் - நான் எப்பொழுதும் இருந்தது போலவே இருப்பேன். உன் மீது கோபம் கொள்ளக்கூட மாட்டேன். குழந்தை விளையாட்டில் அல்லது சிறுபிள்ளை கோபத்தில் ஆடையை கிழித்துவிட்டது என்பதற்காக கோபப்படுவார்களோ. சாதாரண மனிதர்கள் கூட நாயிலும் கழுகிலும், பாம்பிலும் தேளிலும் தங்கள் ஆன்மாவைக் காண்கின்ற, சாவை என் சகோதரனே என்றும், அழிவை என் சகோதரியே என்றும் அனைத்துக் கொள்கின்ற, அதற்கும் ஒரு படி மேலே சென்று சாவும், அழிவும் நாமன்றி வேறில்லை என்றே அழுகின்ற நாள் ஒன்று வந்தே தீரும். "சர்வ பூதேஷு ஆத்மானாம்" என்று மறை சொல்கிறதே. எனது மனைவி மடிந்துவிட்டாள் என்று அழுவேனா? அவள் எங்கே போய்விட்டாள்? அன்று அவள் உடல் எனது அணைப்பில் இருந்ததற்போலவே இன்றும் என்னுடன் மிக நெருங்கி இருக்கின்றாள். ஏனெனில் அவளது ஆத்மாவும், என்னுடைய ஆத்மாவும் ஒன்றே அன்றோ? உள்ளது ஒரே ஆத்மாவே என்ற ஞானம் வந்தபோது வேறுபாடுகளெல்லாம் பறந்துபோம். எல்லையற்ற அமைதி, அளக்க முடியாத அன்பு, கரைகாணா கருணை, முடிவற்ற சகிப்புத்தன்மை இவையெல்லாம் கடவுளைக் கண்ட தீரான்மாவின் இயல்பானத் தன்மைகளாம்.